இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 5 நவம்பர், 2016

முக மூ (மோ) டிஅண்மைக் காலத்தில் பிரதமரின் உரைகள் கவலைமிக்கதாகவும், ஆர்ப்பரிப்புமிக்கதாகவும் செய்தித்தாள்களை அலங்கரித்த வண்ணம் இருக்கின்றன. 
இதைப் படித்த எவரொருவரும் உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் ஆச்ச ரியப்பட ஒன்றுமில்லை. 
அந்தளவுக்கு வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்லத் தோன்றும். ஆம், இது தான் இவரின் சொந்த முகமா? 
அல்லது முகமூடி முகமா?
அதாவது ‘தலாக்’ முறையால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்களாம்; அதை அனுமதிக்க முடியாதாம்; அதோடு பெண்சிசுக் கொலையையும் அனுமதிக்க முடியாதாம்! 
அடுத்து பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறையையும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்க முடியாதாம். இவரது பேச்சின் சாரம். எப்படி இருக்கிறதென்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைபோல் இருக்கிறது.
இவர் முதல் அமைச்சராக இருந்தபோது 2002-ல் நடந்த கலவரத்தில் முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் வயிற்றை ஒரு பெண்ணைக் கொண்டே சூலாயுதத்தால் கிழித்து, அந்த முஸ்லிம் பெண் வயிற்றில் இருந்த சிசுவையும் எடுத்து நெருப்புக்குத் தீனியாக்கியவர்களை, தாயையும் சேயையும் தீக்குப் பலியாக்கியவர்களைத் தண்டிக்காமல், உலாவ விட்ட உத்தமர்தான் இவ்வாறு பேசுகிறார். 
அதோடு அந்தக் கலவரம் முடிந்ததா? 
3ஆயிரத்திற்கும் மேலான முஸ்லிம் ஆண்,பெண்களைக் கொன்று குவித்த ஆட்சியின் முதல்வராக இருந்தவர் அல்லவா இவர்.
ஒருவேளை இவ்வண்ணம் பேச மோடியாருக்கு தகுதி இருக்குமேயானால், அன்று அவர் குறைந்தபட்சம் தனது பதவியைவிட்டு விலக முன் வந்திருந்தால் கூட, ஒரு வாதத்திற்காக இந்தப் பேச்சை ஏற்கலாம். ஆனால் அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் தான் ‘இனி எந்த முகத்தைக் கொண்டு நான் வெளிநாடு போவேன் என்றார்.
அடுத்து ஒரு பேச்சு… ‘வனப்பகுதிகளில் தொன்று தொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்கக் கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ அடப்பாவமே..! 
வன உரிமைச் சட்டம் 2006-ஐ அமலாக்காமல், வனங்களை அந்நிய கம்பெனிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு, பேசும் பேச்சைப் பாருங்கள்.
இந்தப் பெண்ணுரிமைப் ‘போராளி’யின் குருபீடம்… பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
‘ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே வேறு வர்ணங்களில் இருந்த பத்துக் கணவர்கள் இருந்து அவள் 11-வதாகப் பிராமணனை மணந்திருந்தால்கூட, 11-வதாக மணந்த பிராமணனுக்கே அவள் உரிமையானவள். மற்றவர்களுக்கு அல்ல.’
‘நிஷாதனுக்கு விதேகப் பெண்ணிடம் தோல் வேலை செய்கிற கார்வாரன் பிறக்கிறான்’
‘புற சாதிப் பெண்ணுடன் சண்டாளன் கூடிப் பெறும் பிள்ளைக்குச் சோபகன் என்று பெயர்.
 நீதியின் முன்னிலையில் மரண தண்டனைக்கு உள்ளானவன் உயிரை வாங்கும் கொலைத் தொழில் இவனுடையது’
‘பெண்ணுக்குக் கல்வி கற்கும் உரிமையில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையில்லை. பெண்ணுக்குத் திருமணம் என்பது எட்டு வயதுக்குள்ளேயே நடைபெற வேண்டும். அதற்குள் திருமணம் நடைபெறவில்லையென்றால், அவளது தந்தை ‘பாபவிமோசனத்திற்கான’ சடங்குகளைச் செய்ய வேண்டும்’
‘பெண்ணே… நீ குழந்தை பருவம் முழுவதும் அப்பன் சொல்வதைக் கேள். 
வளர்ந்து மணமானதும் கணவன் சொல்வதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்தது முதல் உன் மகன் சொல்வதைக் கேள்’ ‘பெண்ணே… உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள்’
இப்படியே போகிறது மனுநீதி. இப்படிப்பட்ட வழியில் வந்த மோடிதான் பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் அவர்களின் உரிமைக்கும் சண்டமாருதம் செய்கிறார். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாகப் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு தர்பாரில்
உள்ள மனு சிலையில் கோல்வால்கர் எழுதி வைத்துள்ளார்… ‘எல்லோரைக் காட்டிலும் மகத்தான உச்சமட்ட ஞானம் நிறைந்த முழுமுதல் மனிதகுல சட்ட நியதிகளை அளித்தவர் மனு’ என்று. அய்யா நரேந்திர மோடி அவர்களே… தாங்கள் கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் பொதுச் சிவில் சட்டம் ‘மனிதகுல சட்ட நியதிகளை அளித்த
மனு’வைக் கட்டுப்படுத்துமா? 
அல்லது மனு பொதுச் சிவில் சட்டத்தைக் கட்டுப்படுத்துமா? 
எது எதைக் கட்டுப்படுத்தும்? 
முஸ்லிம் பெண்களுக்காகக் குடம் குடமாக அல்லது குளம் குளமாகக் கண்ணீர் வடிக்கும் பாஜக இதற்குப் பதில் அளிக்குமா? இந்து பெண்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற அடிமைத்தனங்களில் இருந்து பொதுசிவில் சட்டம் விடுதலை பெற்றுத்தருமா?
இதைத்தான் இன்றைய குடியரசுத் தலைவர் மிக நிதானத்துடன் இவ்வாறு பகிர்கிறார் போலும்… ‘இந்தியாவில் 200 மொழிகள், 1800 எழுத்து வடிவமற்ற மொழிகள், ஏழு மதங்கள் உள்ளன. இந்த வேற்றுமை இந்தியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு. 
அதனை இந்தியா கொண்டாட வேண்டுமே தவிர, இது போன்ற வேற்றுமைகளைச் செயற்கையாக ஒன்றுபடுத்த முயற்சிக்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமில்லை’.
நரேந்திர மோடியின் ஆரம்ப 11 மாத கால ஆட்சியின் லட்சணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது அகில இந்திய மாநாடும் இவ்வாறு மதிப்பிடுகிறது.
 அதை இங்கே கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அதன்பின்னான இன்றைய நாள் வரை அவரின் ஆட்சியின் லட்சணமும் இதுதான்.
‘பாஜக’ வின் தேர்தல் வெற்றியும், மோடி அரசாங்கம் பதவியேற்பும் ஒரு வலதுசாரி தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கார்ப்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்குத் தீனி போட்டுள்ளன’.
‘பாஜக அரசாங்கம் ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அறிவித்து, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது. 
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டிற்கு இருந்த வரம்பை 49சதவீதம் உயர்த்தியது. ரியல் எஸ்டேட் வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது.
இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன தாராளமயப் கொள்கைகளை மிகவும் உக்கிரமாகத் தொடர்கிறது. மத்திய பட்ஜெட் 2015-16-ல் ரூ.69 ஆயிரத்து 500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனைக்கு வழிவகுத்து உள்ளது’. (சமீபத்தில் சேலம் உருக்காலை உள்ளிட்டு 17 நவரத்தின பொதுத்துறை பங்குகளை 51 சதவீதம் தனியார் வாங்க வரம்பைத் தளர்த்தி உள்ளது)
‘இந்துத்துவா அமைப்புகள் முஸ்லிம் சிறுபான்மையினரை குறிவைத்துத் தாக்குகின்றன. 
மறு மத மாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் அச்சத்தையும், பாதுகாப்பின்மையும் தோற்றுவிக்கின்றன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறின. 
முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதாரப் பின்தங்கிய நிலைமையும், சச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட்டு வந்த ஐந்து சதவீத இடஒதுக்கீடை ரத்துச் செய்துவிட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது’.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்த சுமார் ஓராண்டில் நடந்தேறியவையே. 
ஆனால், அதன் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் மேலே உள்ளதைவிடப் பன் மடங்கு கொடுமைகள் தலைவிரித்தாடி வருகின்றன.
இதிலிருந்து மக்களைத் திசை திருப்பவே அல்லது இந்தியாவின் இதயமான மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காவி ஆட்சியை நிறுவிடவே தற்போது பொதுச் சிவில் சட்டம், தலாக், சிசுக் கொலை, பழங்குடி பாதுகாப்பு, துல்லிய தாக்குதல் எனஎல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் ராமர் கோவில் என பீடிகைப் போட்டு மக்களைத் திசை திருப்பி வருகிறது மோடியின்  பாஜக அரசு .
=======================================================================================
ன்று ,
நவமபர்-05.
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)
  • ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)
  • இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
========================================================================================
பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றி அலைந்து கொண்டிருக்கும் சில விண்கற்கள், சில நேரங்க ளில் தடம் மாறி, பூமியை நோக்கி வருவது வழக்கம். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாசா விஞ்ஞா னிகள் விண்வெளியை ஆய்வு செய்து கொண்டி ருந்தபோது, பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். 
இந்த பிரம்மாண்ட எரிகல் பூமியின் மீது விழாதுஎன்று கணிக்கப்பட்டுள் ளது. 
இருப்பினும், அதன் தடம் மாறினால் ஆபத்து என்பதால், அக்கல்லை நாசா தொடர்ந்து கண் காணித்து வருகிறது. இதற்கு, நாசாவின் உயர்தொழில்நுட்ப முறை யான ஸ்கவுட் கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது.அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகளுடன் இணைக்கப்பட்ட கருவிகள், தொடர்ந்து அந்த எரிகல்லை கண்காணித்து, அதன் நகர்வை அவ்வப்போது விஞ்ஞானிகளுக்கு தரும் வல்லமை கொண்ட வை. 
இதனால், எரிகல்லின் ஒவ்வொரு நகர்வையும் அறிந்து, அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க லாம். 
விண்ணில் தொடர்ந்து செய்து வரும் ஆய்வுகள் மூலம், இதுவரை 15ஆயிரத்திற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றி வருவதை நாசா கண்டறிந்துள் ளது. 
இவற்றில், கிட்டத் தட்ட பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 1700 விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 
இருப் பினும் அவை பல கோடி மைல் தூரத்தில் தற்போது உள்ளன.