இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 14 நவம்பர், 2016

உங்கள் பணம் உங்களுக்கில்லை...,

ரூ.500 மற்றும் 1000 தாள்கள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். இது கறுப்பு பணத்தின் மீது மோடி நடத்திய “சர்ஜிக்கல் தாக்குதல்” எனபலரும் புகழ் பாடினர். 
ஆனால் இதுசாதாரண மக்கள் மீது பெரும் இடியாக இறங்கியுள்ளது. ஏற்கெனவேகுறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். 
பல திருமணங்கள் நின்றுவிட்டன. 
இறந்தவர்களின் இறுதி காரியங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நியாயவிலை கடைகள் சூறையாடப் பட்டுள்ளன. 
ஒரு தேசிய வங்கியின்கிளையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் பா.ஜ.க.வினரும் மோடியும் மக்களை பொறுமை காக்க சொல்கின்றனர்.மக்கள் வங்கிகளுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கும் படையெடுத்தவண்ணம் உள்ளனர். மறு அறிவிப்பு வரும்வரை ஏ.டி.எம்.ல் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 2000 வரைதான் எடுக்கமுடியும். 
அப்படியிருந்தும் மக்கள் நீண்ட வரிசையில் ஏ.டி.எம். முன்பு காத்திருக்கின்றனர். எனினும் பணம் விரைவில் தீர்ந்துவிடுகிறது. 
மீண்டும் ஏ.டி.எம்.களை நிரப்பிட வங்கிகளிடம் பணம் இல்லை. மறுபுறத்தில் பாதிக்கும் அதிகமான ஏ.டி.எம்.கள் செயல்படுவதே இல்லை. மூடப்பட்டு கிடக்கின்றன.
நிலைமை எப்பொழுது மாறும்? 
எவருக்கும் தெரியவில்லை.எனினும் முதல் தடவையாக நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி நிலைமை சீராக சில வாரங்கள் ஆகலாம் என்று திருவாய் மலர்ந்தார். மக்களின் துன்பங்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கப் போகிறது எனும் அபாயச்சங்குதான் இது!
இந்நிலையில் கோவாவில் ஞாயிறன்று பேசிய பிரதமர் மோடி, இன்னும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார். அப்படியானால் இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது.ஏ.டி.எம் இயந்திரங்களின் பிரச்சனை என்ன? 
அவை ஏன் இயங்கவில்லை?
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் படி இந்தியாவில் சுமார் 2,01,861 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. ட 69 கோடி ஏ.டி.எம். அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7305கோடி பணம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் இன்றைய நிலையில் சுமார்1,00,000 (50ரூ) ஏ.டி.எம். இயந்திரங் கள்தான் செயல்படுகின்றன. ட ரூ100ரூபாய் தாள்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் ஒரு இயந்திரத்திற்கு 2,20,000 ரூபாய் மட்டுமே வைக்கப்படுகிறது.
அதாவது 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ரூ 2200 கோடி ரூபாய்நிரப்பப்படுகிறது. ஆனால் சராசரி தேவையோ ரூ 7305 கோடி!
எனவேதான் 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் காலியாகிவிடுகின்றன. ட ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 20 லட்சம் ரூபாய் நிரப்ப முடியும். 
ஆனால்2,20,000 தான் நிரப்பப்படுகிறது. 
ஏன்?
இயந்திரத்தில் ரூ1000,ரூ500 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்கள் நிரப்ப முடியும்.ஆனால் தற்பொழுது ரூ100 தாள் மட்டுமே வைக்கப்படுவதால் இயந்திரத்தில் நிரப்பப்படும் தொகை மிகப் பெரிய சரிவை காண்கிறது. ட புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை இயந்திரத்தில் வைக்க முடியவில்லை.
                                          இரண்டு கண்ணீருக்கும் இயலாமையும் மோடியும்தான் காரணம்.
ஏ.டி.எம். இயந்திரங்களை பழையநிலைக்கு சீரமைக்க வேண்டுமானால் கீழ்கண்ட மூன்று பணிகள் செய்யப்பட வேண்டும்:
அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் வெளியே எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து இரண்டு லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்களையும் புதிய 2000 ரூபாய் தாள்களை பயன்படுத்த அவைதகுதியானதுதானா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

பின்னர் 2000 ரூபாய் தாள்கள் பயன் படுத்தும் மென்பொருள் இரண்டுலட்சம் இயந்திரங்களிலும் ஏற்றப்படவேண்டும்.இதற்கு பின்னர்தான் ஏ.டி.எம். இயந்திரங்கள் பழைய நிலைக்கு சீராகும். புதியதாக ரூ500 அல்லது 1000 தாள்கள் வெளியிடப்பட்டால் அதற்கும் இந்த மென்பொருள் பணிகளை செய்தாக வேண்டும்.

இது போன்ற அதிரடியை செய்கையில் அதற்கான முழு தயாராகுதலுடன் அல்லவா செய்ய வேண்டும்.அது சாதாரண மனிதருக்கு கூட தெரிந்த செய்தி.
புதிய 500,1000 அச்சிட்டிருக்க வேண்டும்.அவைகளை தயாராக எல்லா வங்கிகளுக்கும் அரசு அறிவிப்பு வந்த பின்னர் வழங்கலாம் என்று சாதாரணமாக கூறி இருக்க வேண்டும்.புதிய பணத்தாள்களை அடுக்கி வழங்குமளவு ஏ.டி .எம்.  மாற்றம் செய்யப்பட மென்பொருள் தயாரித்திருக்க வேண்டும்.
இப்படி எடுத்தேன்,கவிழ்த்தேன் என்று செயல் படுவதும் அதை மிகப்பெரும் சாதனையாக சொல்லிக்கொள்வதும் மிக அருவெறுப்பான செயல்.இதில் பாதிக்கப்பட்டது ஏழைகள் ,கூலிகள்,மாதசம்பள ஊழியர்கள் குடும்பங்கள்தாம்.
சாப்ட்வேரை எப்போது மாற்றுவார்கள்?
தற்சமயம் முதல் பணியான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முழுமையாக எடுக்கப்படவில்லை. 
இப்பணிமுடிய இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. பின்னர் இரண்டாவது பணியும் மூன்றாவது பணியும் நிறைவடைய குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதே இன்றைய நிலை! இந்தியாவில் உள்ள 2,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் 1,00,000 இயந்திரங்கள் என்.சி ஆர். எனும் நிறுவனத்துக்கு சொந்தமானவை. 
மீதமுள்ள ஏ.டி.எம். இயந்திரங்கள் அமெரிக்காவை சேர்ந்த டைபோல்டு எனும் நிறுவனத்திற்கும் ஜெர்மனியை சேந்த வின்கார் எனும் நிறுவனத்திற்கும் சொந்தமானவை.
எனவே மூன்று வெவ்வேறு தொழில்நுட்பங்களை கொண்ட இயந்திரங்களுக்கு ஒரே மாதிரியான மென்பொருள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகலாம். அப்படி ஒருநிலை உருவானால் அதற்கு தீர்வு உருவாக்கப்பட வேண்டும். 
மேலும் இப் பணியை செய்து முடிக்க ஏராளமான மென்பொருள் நிபுணர்களும் தேவை. எனவே இப்பணிகளை முடிக்க கணிசமான காலஅவகாசம் தேவை என்பது தெளிவாகிறது. இந்தியாவில் உள்ள 2,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் 65ரூ நகர்புறத்திலும் 35ரூ கிராமப்புறங்களிலும் உள்ளன.
நகர்புறத்தைவிட கிராமப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பிரச்சனையை தீர்ப்பதற்கு மேலும் கால அவகாசம் ஆகும் எனவும் கூறப் படுகிறது.
இத்தகைய சிக்கலான மற்றும் நுணுக்கமான பிரச்சனைகள் எதுவும் பரிசீலனை செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் கதையாக மோடியின் அறிவிப்பு அமைந்துவிட்டது. 
மோடியின் அறிவிப்புக்கு பொருளாதார காரணங்களைவிட அரசியல் காரணங்கள் தான் அதிகம் எனும் கருத்து வலுப் பெற்றுவருகிறது. 
                                                                                                                                            -அ.அன்வர் உசேன்
=======================================================================================
ன்று,
நவம்பர்-14.
  • கின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்
  • சர்வதேச நீரிழிவு நோய் தினம்
  • இந்திய குழந்தைகள் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
  • =======================================================================================