மொபைல் வழி இணையம்

உலக அளவில், மொபைல் போன்கள் வழி இணையத்தை அணுகுவது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாக அணுகுவதைக் காட்டிலும் அதிகமாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 
இந்த வகையில் இதுவே முதல் முறை நிகழ்வாகக் கருதப்படுகிறது. 
இணையப் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வரும் StatCounter என்னும் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. மொபைல் போன் மற்றும் டேப்ளட் மூலம் 52.3% இணையப் பயன்பாடும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாக 47,3% பயன்பாடும் தற்போது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையப் பயன்பாடு, தகவல் தொடர்பு உலகில் ஏற்படும் மாற்றங்களால், புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. 4ஜி அலைவரிசைத் தொடர்புள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையால், இணையப் பயன்பாடு உலகளாவிய அளவில் அதிகரித்துள்ளது.
 இதனால், வழக்கமாக மேற்கொள்ளப்படும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் அதன் கீ போர்ட் வழி இணைய பயன்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. போகிற போக்கில் மொபைல் போன்கள் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவது எளிதாகிப் போனது மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்களில் ஏற்படுத்தப்படும் கூடுதல் வசதிகள், இதனை அதிகரித்துள்ளன. 
எடுத்துக் காட்டாக, ஸ்மார்ட் போனிலிருந்தே, புளுடூத் இணைப்பு வழியாக, டாகுமெண்ட்களை அச்சிடும் வசதியைக் கூறலாம். முன்பு ஸ்மார்ட் போன்களில், டாகுமெண்ட்களைத் தரவிறக்கம் செய்தாலும், அவற்றை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு மாற்றிய பின்னரே, பிரிண்ட் எடுக்க இயலும். இப்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 
இது போன்ற வசதிகளே, ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் போன்ற மொபைல் சாதனங்கள் வழியாக இணையத்தை அதிகமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன.
இது இன்னொரு பரிமாணத்தையும் தந்துள்ளது. 
இணைய தளத்தினை வடிவமைப்பவர்கள், தங்கள் இணைய தளப் பக்கங்கள், மொபைல் சாதனங்களிலும் பெற்று படிக்கப்படும் வகையில் கட்டாயமாக அமைக்க வேண்டியுள்ளது. சிறிய அளவில் வர்த்தகம் மேற்கொள்பவர்கள், அத்தியாவசியப் பணி வழங்கும் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. 
மொபைல் வழியிலும் படிக்கும் வகையில், இணைய தளங்கள் ஏற்படுத்தப்பட்டால் தான், தங்களுடைய வர்த்தக, சேவை செயல்பாடு அதிக மக்களைச் சென்றடையும் என்பது தெளிவாகியுள்ளது. 
இந்தியாவில், மொபைல் சாதனங்கள் வழி இணையப் பயன்பாடு, வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 
இணைய அணுகலில், 78.05% மொபைல் போன்கள் வழியாகவும், 21.18% டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாகவும், 0.76% டேப்ளட் பி.சி.க்கள் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இன்னும் இணைய அணுகல், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாகவே அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அங்கு மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு முறையே 42% மற்றும் 44.4% ஆக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே, கூகுள், இணைய தளங்கள் மொபைல் சாதனங்களிலும் காணப்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. 
தங்களுடைய இணையப் பக்கங்கள், மொபைல் சாதனங்களில் காணப்படும் வகையில் உள்ளனவா என்பதைச் சோதனை செய்து பார்த்திட, இணையத்தில் 'Test My Site' என்னும் செயலியை இலவசமாகத் தருகிறது. 
இணையப் பக்கத்தில், இந்த வகையில் ஏதேனும் பிரச்னை இருந்தால், இந்த செயலியே அதனைச் சரி செய்து தருகிறது. 
இணையப் பயனாளர்கள் இப்போதெல்லாம், தாங்கள் நகர்ந்து கொண்டிருக்கையிலேயே, பயணத்தில் இருக்கையிலேயே, சமூக ஊடகங்களில் இணைந்து பயன்படுத்தும்போதே, இணையத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை முன்னிறுத்தியே, கூகுள் Accelerated Mobile Pages என்னும் கோட்பாட்டினைத் தந்துள்ளது. 
இதன் அடிப்படையில் AMP Project என்னும் திட்டத்தினையும் வழங்கியுள்ளது. 
இதன் மூலம், இணையப் பக்கங்களை வெளியிடுபவர்கள், தங்கள் இணையப் பக்கங்களை, மொபைல் இணையப் பக்கங்களாக மாற்றி வெளியிட முடியும். 
பேஸ்புக் நிறுவனமும், தன் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன்களையே என்றுணர்ந்தே, 'பேஸ்புக் லைட்' (Lite version) என்னும் செயலியின் மூலம் தன் இணையப் பக்கத்தினை, அனைத்து மொபைல் போன்களிலும் எளிதாகவும் விரைவாகவும் தோன்றும்படி அமைத்துள்ளது. 
குறைவான வேகம் கொண்ட இணைய இணைப்பிலும், தன் இணைய தளம் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளது. 
ஏனென்றால், இந்தியாவில் மட்டும், பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மாத அடிப்படையில், 15.5 கோடியாக உள்ளது. இவர்களில் 90% பேர், மொபைல் சாதனங்கள் வழியாகவே பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வர்த்தக நிறுவனங்களுக்கு, தென் கிழக்கு நாடுகளில், இந்தியா இப்போது அதிகமாக வாய்ப்புகள் தரும் நாடாக உள்ளது. இங்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 22 கோடியாக உள்ளது. 130 கோடி ஜனத்தொகை கொண்ட இந்த நாட்டில் வர்த்தக வாய்ப்புகள் ஏராளம் என eMarketer என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
 நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை 23% உயர்ந்துள்ளது. இதனால் தான், ரிலையன்ஸ் ஜியோ தன் 4ஜி வர்த்தகத்தில் அதிகக் கவனம் செலுத்தி, இந்தியா முழுவதும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இத்தகைய நடவடிக்கைகளும், ஸ்மார்ட் போன் விற்பனையையும், ஸ்மார்ட் போன்கள் வழி இணையப் பயன்பாட்டையும் வளர்த்து வருகின்றன.
 
===================================================================================
ன்று,
நவம்பர்-22.

  • லெபனான் விடுதலை தினம்(1943)
  • சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
  • அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
  • அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)
====================================================================================
 திருமண செலவிற்கு மட்டும் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.  
ரூ.2.5 லட்சம் வரை ஒரே தடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள" 7வழிமுறைகள்".

1,நவ.,8 ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

2,டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.

3,பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.

4,ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

5,திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

6,வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

7,வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள் கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்து கொள்ள வேண்டும்.

(பின் எதற்கு நவ.,8 ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்ற முதல் விதி ?)






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?