இதுதான் மோடியின் திட்டம் ..?

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு நிச்சயம் முட்டாள்தனமான ஒன்று கிடையாது.
இந்த எமர்ஜென்சியை அறிவிப்பதால் நாட்டில் மிகப் பெரிய சிக்கல்கள் உருவாகும். பல மக்கள் இறக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதெல்லாம் மோடிக்கோ, மோடியை இயக்குபவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
இதனால் கருப்புப் பணத்திற்கோ, கருப்புச் சந்தைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவின் பொருளாதாரத்தினை கிராமப் பொருளாதாரமாக சுய சார்புடையதாக இருக்கிறது. அதனை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதன் உட்சபட்ச நடவடிக்கையே இந்த தடை நடவடிக்கை.
சிறு வணிகர்கள், காய்கறி விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவரின் Transactionம் வங்கி மூலமாகத் தான் நடைபெற வேண்டும் என அறிவித்து அனைவரையும் வரிவருவாய்க்குள் தள்ளியிருக்கிறார்கள். இனி இவர்கள் எல்லோரும் Tax Payers.
நாட்டின் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு கடனை அள்ளிக் கொடுத்து, திரும்ப வாங்க முடியாமல் இருக்கும் வங்கிகளுக்கு ஏழை மக்களின் பணத்தினைக் கொண்டு அதனை நிரப்பும் முடிவே இது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.
சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.
இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.
1% கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம்.
நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.
இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.
நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.
தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.
ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.
இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரிyயும் கட்ட வேண்டும்.
இதை நாம் இன்றே உணர்ந்து போராட்டங்கள் செய்து நமது எதிப்பை காட்டவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறை திவோடு ஏந்தவேண்டியதுதான்....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?