இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

மோடியின் குறி கறுப்புப் பணக்காரர்களே அல்ல.!

அதிர வைக்கும் மருத்துவர்கள்.
த்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
' கிராமங்களை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, இப்படியொரு செயலில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி' என 
 புள்ளிவிபரங்களோடு விவரிக்கின்றனர் சூழலியல் அமைப்பின் மருத்துவர்கள் சங்க மருத்துவர் புகழேந்தி . 
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை போதிய அளவில் வராததால், நாடு முழுவதும் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி அட்டைகளின் மூலமே நடப்பதால், பணப்புழக்கம் இல்லாமல் சிறு வணிகர்கள் அவதிப்படுகின்றனர். 
ஒவ்வொரு நாள் காலையிலும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு பெட்ரோல் பங்குகள் உள்பட யாரும் தயாராக இல்லை. 'புதிய நோட்டை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது' என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், " ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான். 
அவர்களுக்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. காரணம் அவர்கள் மோடி நண்பர்கள்,பாஜக வெற்றிக்கு உதவியவர்கள்.
இதன்பின்னணியில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன.ஆனால் அவை அனைத்தும் மக்களை ,விவசாயிகளை,சிறு வணிகர்கள்,வியாபாரிகளை பாதிக்கும் வகையிலேயே இருக்கும்.இருக்கிறது.அதுதான் மோடியின் திட்டம் .இந்தியாவை பணக்கார நாடாக மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குகிறார் மோடி.அதனால் இந்தியா இனி இருவேறு இந்தியாவாக மாறி அழிந்து ஆப்ரிக்க,தென் அமெரிக்க நாடுகளைப் போல் வறுமையில் வாட்டும்.சிலர் பில்லியனர்களாகவும் ,பிறர் ஏழைகளாக அலையவுமே மோடி அயராது உழைக்கிறார்.
அதைத்தான் அவர் தான் முதல்வராக இருந்த போது குஜராத்திலும் செய்தார்.
ஒரு புறம் முன்னேறிய பகுதியை மட்டும்  மற்றவர்கள் பார்வைக்கு காண்பித்து விட்டு 90% குஜராத் ஏழ்மையாக உள்ளதை மறைத்தார்.இதற்காகவே அவர் ஊடகங்கள்,மின்னணு கருவிகள்,சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினார்.அதை இந்தியா முழுக்க தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்.  

" மத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணங்களில் இருந்தே அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். நமது நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 86 சதவீதமாக உள்ளது. வெளியில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 5 சதவீதம் என்கின்றனர். இவர்களுக்காகத்தான் எளிய மக்களை அரசு வதைக்கிறது. 
2012-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி வரிவிதிப்பின் தலைவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பல புள்ளிவிபரங்கள் உள்ளன. அதில், இந்தியாவில் 53 சதவீத மக்களுக்கே வங்கிக் கணக்குகள் உள்ளன என்கின்றனர். 
இதில், பயன்பாட்டில் உள்ளவை 15 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 46 சதவீதம் என்பது முறைசாராத தொழில்களில் இருந்து வருகிறது. இதன்மூலம் 80 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 'புதிய ரூபாய் தாள்கள் செல்லாது' என்ற அறிவிப்பால், நாட்டின் வளர்ச்சி 2 சதவீதமாக குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது 7.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறையும் என்கின்றனர். 
நமது நாட்டில் 10 கோடி வணிக கடைகள் செயல்படுகின்றன. 
இவற்றில் 2 சதவீத கடைகள்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன. 
அதேபோல், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில், 83.3 கோடிப் பேர் கிராமத்தில் வசிக்கின்றனர். 
இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஏ.டி.எம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இவர்களின் தனிநபர் வருமானம் என்பது 40 ஆயிரத்து 772 ரூபாய் என அரசு சொல்கிறது. 
அதுவே, நகரத்தில் 37.7 கோடிப் பேர் உள்ளனர். இங்கு ஒரு லட்சம் பேருக்கு 31 ஏ.டி.எம்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் என்பது ஒரு லட்சத்து ஆயிரத்து 303 ரூபாய் ஆகும். இதில் இருந்தே கிராமப் பொருளாதாரம் எந்தளவுக்கு நலிவடையும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. 
நாட்டின் பணமாக நடக்கும் பரிவர்த்தனை 80 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 98 சதவீதமான பரிவர்த்தனைகள் பணத்தின் மூலமே நடக்கின்றன. 
இதைவிடக் கொடுமை, இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடையாள அட்டையே இல்லை என்பதுதான். இவர்கள் எந்த அடையாளத்தைக் காண்பித்து, வங்கிகள் பணம் பெறுவார்கள். 

அதேபோல், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவு 400 கோடி என்கின்றனர். இந்தத் தொகையானது மத்திய பட்ஜெட்டில் 0.025 சதவீதம்தான். 

இவற்றை ஒழிப்பதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகளை அரசு அச்சடிக்கிறது. 
மொத்த கறுப்புப் பணத்தின் அளவு 30 லட்சம் கோடி. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன. தவிர, ரியல் எஸ்டேட், நகைகள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 'வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் 3 லட்சம் கோடி ரூபாய் வந்துவிடும்' என அரசு சொல்கிறது. 
இந்தப் பணம் என்பது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை. மீண்டும் பணக்காரர்களுக்கு சலுகை செய்யும் விதமாகவே இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம் எந்தக்காலத்திலும் நமது நாட்டுக்கு வரப் போவதில்லை. மிகப் பெரிய அளவிலான திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே, ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மோடி" என்கிறார்  மருத்துவர் புகழேந்தி . 
                                                                                                                           உதவி:விகடன் தளம்.
=======================================================================================
ன்று,

நவம்பர்-25. 
  • உலக  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
  • ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)
  • சுரிநாம் விடுதலை தினம்(1975)
  • பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
=======================================================================================

   
Vijay Sankar Govindan

1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள். 

2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார் 

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. 

4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்.. 

5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன... 

6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்... 

7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்.. 

8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்... 

9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்... 

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்.. 

11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது... 

12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்... 

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்... 

14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்... 

15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்... 

16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்... 

17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்... 

18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்... 

19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்... 

20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்... 

குறிப்பு: 
இந்த பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்று பதிவு. இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை...நீங்கள் யாரையாவது கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பு அல்ல....!!😊😊😊😊