நீலிக்கண்ணீர்

டிசம்பர் மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் நாக்பூருக்கான விமான டிக்கட்டுகள் இல்லை. 

காரணம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் மகள் திருமணத்திற்காக ஏறத்தாழ பத்தாயிரம் நபர்களை 50 விமானங்களில் அழைத்தவர நிதின் கட்காரி அனைத்து விமானங்களையும் மொத்தமாக கைப்பற்றி விட்டது தான். 

இந்த விருந்தினர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ரட்டன் டாட்டா, குமார் மங்களம் பிர்லா, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, உட்பட பல மாநில முதல்வர்களும் அடங்குவர். மேலும் பா.ஜ.க. மூத்த 
தலைவரான அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத், அமிதாப் பச்சன் மற்றும் ஹேமா மாலினி ஆகியோரும் விருந்தினர்கள் பட்டியலில் உள்ளனர். 

மோடி பா.ஜ.க வின் பணம் செல்லாது கொள்கைகளால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு தினசரி 2000 எடுக்க மக்கள் பரிதவிக்கும் வேலையில் பா.ஜ.க மத்திய அமைச்சர் வீட்டு திருமணம் இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படுவது மிகவும் கொடுமையானது,கேவலமான செயல்.

பொதுமக்கள் திருமணத்திற்காக 2.5 லட்ச ரூபாய் மட்டும் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஆனால் இதுவரை யாருமே 2.5 லட்சம் வாங்கி திருமணம் நடத்தவில்லை.நடத்தியதாக தெரியவில்லை.காரணம் பணம் கொடுக்க முடியாதக்காரணங்களை மட்டுமே பணம் பெற ரிசர்வ் வங்கி விதிகளாக வைத்துள்ளதுதான்.
மணமக்களின் ஒருவருக்குத்தான் 2.5 லட்சம்.பணம் அனைவருக்கும் ரொக்கமாகத்தான் கொடுக்கப்பட்டதாக ஒப்புதல் கடிதம்.பணம் பெற்ற நகைக்கடைக்காரர்,சமையல்காரர்,மளிகை சாமான் வழங்கியவர்,பந்தல்காரர்,மாலை வழங்கிய பூக்கடைக்காரர் மற்றும் மேளம் ,வாகனக்காரர்கள் னைவரும் தங்களுக்கு வாங்கிக்கணக்கில்லை என்று உறுதி எழுதி கையப்பமிட்டு பான் கணக்கு விபரங்களுடன் கடிதம் கொடுத்து அதை விண்ணப்பத்தில் இணைக்க  வேண்டுமாம்.
பாண் கணக்கு வைத்திருப்பவர் ,நகைக்கடைக்காரர் வங்கியில் கணக்கில்லாமல் இருப்பாரா?
முதியோர் ஓய்வூதியம் முதல் 100 நாள் வேலை திட்டம் வரை பணம் வங்கியில் செலுத்தப்படும் நிலையில் ,1000 வங்கியில் மோடி போடுவதாக கூறிய நிலையில் பிசைக்காரன் கூட வாங்கிக்கணக்கை ஆரம்பித்துள்ள இந்தியாவில் வங்கிக்கணக்கில்லாதவரை கண்டு பிடிப்பது எப்படி சாத்தியம்.
அப்படி விண்ணப்பம் கொடுத்தால் கடும் ஆய்வுக்கு பின்னர்தான் பணம் ரொக்கமாக வழங்கப்படுமாம்.
அதனால் முதலில் விண்ணப்பம் செய்தவர்கள் கூட வாரம் 24000,தினசரி 2000 என்று எடுத்தும்,தெரிந்தவர்களிடம் 10000,20000 என்று கைமாற்றாக ,காசோலை கொடுத்து ரொக்கமாக வாங்கி சீட்டு திருமணங்களை நடத்திவருகின்றனர்.
அது போன்ற இன்னல்களை சந்தித்துதான் கடன் வாங்கித்தான்   நிதின் கட்காரி மகள்  திருமணமும் இதே வரம்பிற்குள் தான் நடக்கிறதா என்துதான் இப்போது ஏடிஎம் முன் நிற்கும்  மக்கள் கேள்வி. 

மோடி 500,1000 செல்லாது என்று சொன்னதால் 6 பேர்கள் மாரடைப்பு,தற்கொலை செய்து கொண்ட காலம்  சுமார் 570 கோடி மிக ஆடம்பரமாக மதிப்பில் கர்நாடக மாநில சுரங்கத் தொழிலாளரும் 
முன்னாள் பா.ஜ.க. அமைச்சருமான ஜனார்தன ரெட்டி தனது மகள்  திருமணத்தாய் நடத்தினார்.
அதை மோடி,ரிசர்வ் வங்கி ஆளுநர்,வருமானவரி அலுவலர்கள் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தனர்.
ஏற்கனவே கிரானைட் மாபியா ,கருப்புப்பண திமிங்கலம் என்று சிறையில் இருந்த ஜனார்தன ரெட்டி 570 கோடிகளை இறைக்கையில்  அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று பாஜக கட்சி தலைவர் அமித் ஷாவோ,கருப்புப்பண ஒழிப்பு மாவீரர் மோடியோ வருமான வரி அலுவலகமோ கேள்வியே கேட்கவில்லை.
2.5 லட்சத்தில் திருமனம் நடத்த வேண்டும் என்று ஆணையிட்ட ரிசர்வ் வங்கி யும் வாயை அடைத்துக்கொண்டிருந்தது.மாறாக பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு பூக்களை மணமக்கள் மீது சொரிந்து ஆசிர்வதித்தனர்.
கொதித்துப்போன மக்களில் ஒருவர் தகவல் உரிமை சட்டம் பக்கம் போன பின்னர்,நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த பின்னரே வருமான வரி துறை  ஜனார்தன ரெட்டி வீட்டுக்கு சென்று விசாரித்து காபி குடித்து திரும்பியுள்ளனர்.
அந்த விசாரணை கூட திருமண செலவு குறித்து பட்டியல் மட்டுமே கேட்டு வந்துள்ளனர்.
ஆக மோடியின் கருப்புப்பண ஒழிப்பு அப்பாவி மக்களிடம் மட்டும்தான் அம்பானி,அதானி மற்றும் பாஜக கடசியினர்,ஆதரவாளர்கள்,அனுதாபிகள் பக்கம் துளியும் இல்லை.
இதில் தன்னை கொல்ல பலர் அலைவதாக நீலிக்கண்ணீர் வேறு.
========================================================================
பெங்களூரில், நிலம் கையகப்படுத் தும் பிரிவில், உயர் அதிகாரியாக பணியாற்றும், பீம நாயக்கிடம், கார் டிரைவராக பணியாற்றிய, ரமேஷ் கவுடா, 31, நேற்று முன் தினம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்துள்ள, 11 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பீம நாயக்கிடம், கார் டிரைவராக பணியாற்றினேன். இவர், வெவ்வேறு இடங்களில், சட்ட விரோதமாக சொத்து சம்பாதித் துள்ளார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் வாங்கியுள்ளார்.
'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திரு மணத்துக்காக,100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெள்ளையாக்கி கொடுத்தார். 
வரும், 2018ல் நடக்க வுள்ள சட்டசபை தேர்தலில், ஹெகரி பொம்மன ஹள்ளி தொகுதியில், பீம நாயக் போட்டியிடு வதற்காக, ஜனார்த்தன ரெட்டி, 100 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறினார்; இந்த விஷயங்கள் அனைத்தும், எனக்கு தெரியும். 

இதை யாரிடமாவது கூறினால், ரவுடிகளை அனுப்பி, என்னை கொலை செய்வதாக மிரட்டி யதுடன், ஊதியத்தையும் தராமல் பிடித்து வைத் துள்ளார், பீம நாயக். இந்த மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

=====================================================================================
ன்று .
டிசம்பர்-08.

  • இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)
  • சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது(1949)
  • ருமேனியா அரசியலமைப்பு தினம்
  • பனாமா அன்னையர் தினம்

=====================================================================================


"சே ..இவ்வளவு தகவல் தொழில் நுட்பக்குழுவை வைத்து பலக் கணக்குகளில் வாக்களித்தும் கடைசியில் ஆண்டு நாயகன் (Person of the Year' ) பழம் நழுவி டிரம்ப் பாலில் போய் விழுந்து விட்டதே."

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?