இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 19 டிசம்பர், 2016

மஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி? .முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களை பற்றி "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி? என்று கூறுபவர்களுக்கு சவுக்கடி.. 

கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான். 
அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள்.
 கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். 

குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார். 

அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். 
இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா? 
அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். 
ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். 
இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். 
ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன? 
சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். 

அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். 
எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்) 

இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். 
பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். 
இல்லை. 
தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? 

கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. 
நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010. மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்! 
                                                                                                                முகநூலில் B.பழனிவேல்.========================================================================================
ன்று,
 க.அன்பழகன்

டிசம்பர்-19.
  • தமிழக அரசியல் தலைவர் பேராசிரியர்  க.அன்பழகன் பிறந்த தினம்(1922)

  • முதல் இந்திய -சீன போர் துவங்கியது(1946)

  • போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)

========================================================================================
பிரபஞ்சம் விரிக்கிறதா?
அல்லது சுருங்குகிறதா ??

அண்டம் பிரபஞ்சம் என்றாலே விந்தையான ஒன்று. இது தொடர்பிலான தேடல்கள் மட்டும் எப்போதும் குறைவடைவதே இல்லை.
இத்தகைய பிரபஞ்சம் தொடர்பிலான புது ஆய்வு முடிவுகளின் படி ஈர்ப்பு விசை குறைவடைந்து சென்று அனைத்தும் மிதக்கத் தொடங்கி பின்னர் விரிவடைந்து சென்று விடும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
ஒரு வெடிப்பு நிகழும் போது அந்த வெடிப்பில் இருந்து சிதறும் பொருட்கள் வேகமாக அனைத்து பக்கங்களும் பரவி சென்று சிதறி விழுவது என்பது வெடிப்பின் போது நிகழும் ஒன்று. இப்படி சிதறி விழுவதற்கு ஈர்ப்புவிசையே காரணமாக அமைகின்றது.
அதே சமயம் ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் (அண்டத்தில்) இவ்வாறான வெடிப்பு ஏற்படுமாயின் வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் கீழே விழாது அதே சமயம் ஓர் இடத்தில் நிற்காது.
அதன் படி இடையில் குறுக்கீடு ஏற்படாவிட்டால் ஏதாவது ஒரு சக்தி (ஆற்றல், உதிர் வினை) மூலம் தடுக்கப்படாவிட்டால் வெடித்த சிதறல்கள் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் இங்கு அதன் வேகத்திலும் தடை இருக்காது மாற்றமும் இருக்காது.
அண்டத்தின் பிரமிக்கத்தக்க ஆற்றல் இது. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தத்தமது நிறைக்கு ஏற்ப ஈர்ப்புவிசையினை கொண்டுள்ளது.
சூரியன் உருவாகிய போது ஏற்பட்ட அதிபயங்கர வெடிப்பில் உண்டான புகை தூசு மற்றும் துணிக்கைகள் போன்றன சிதறப்பட்டு ஈர்ப்பு விதிக்கு கட்டுப்பட்டு சூரியனை இடைவிடாது சுற்ற, அவை தத்தமது நிறைக்கு ஏற்ப ஈர்ப்பு விசையால் இணைந்ததன் மூலமாகவே எமது சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மற்ற கோள்களும் உருவாகியதாக விஞ்ஞானிகளின் கருத்து உள்ளது.
அதேபோல் பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த அண்ட மா வெடிப்பிற்கு (டிபைடீயபெ) பிறகு விரிவடைந்த பொருட்களே இப்போது பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளது. பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் எல்லை எவராலும் கணக்கிட முடியவில்லை.
என்றாலும் சுமார் 1300கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மா வெடிப்பு அதன் ஆரம்ப வெடிப்பின் வேகம் குறைவடையும் எனவும் அவ்வாறு குறைவடைந்தபோது ஆரம்ப புள்ளியை நோக்கி மறுபடியும் ஈர்த்துக் கொண்டு சுருக்கமடையும் எனவும் விஞ்ஞானிகள் எதிர்ப்பார்த்தனர்.
அதாவது பிரபஞ்ச வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்கள் மற்றும் பிரபஞ்சத்தில் பரந்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் விசையினால் மீண்டும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு சுருங்கிய பின்னர் ஆரம்ப புள்ளியின் நிலைக்கே வந்துவிடும் என்பதே விஞ்ஞானிகள் எதிர்பார்த்த விடயம்.
இதற்கு பெரும் அண்டக்குழைவு big crunch என்று பெயரிடப்பட்டது. நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் கருதுகோள்களில் ஒன்றே இது.
இதன்படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டுமொத்தமாய் சுருங்கி ஒரு கருந்துளையாகி விடும் என்பதே விஞ்ஞானிகளின் வாதம்.
இந்த கொள்கையின் படி அண்ட மாவெடிப்பு ஏற்பட்டு சுமார் 1300 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டதால் அண்டத்தின் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
என்றாலும் அதிநவீன தொலைநோக்கியில் பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், பிரபஞ்சம் முன்னரை விடவும் வேகமாக விரிவடைவதை இப்போது கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஆச்சிரியத்தில் இருக்கின்றனர்.
இதில் பிரமிப்பான செய்தி என்னவெனில் இந்த வேகத்தில் அனைத்தும் (பிரபஞ்சம்) விலகி விரிவடைந்து செல்லுமானால் ஆரம்ப ஈர்ப்பு விசை குறைவடைந்து விடும். பூமியின் ஈர்ப்பு விசையிலும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.
இப்படியாக குறைவடையும் ஈர்ப்பு விசையின் அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக நம் கண் எதிரே விண்வெளியை தோற்றுவிக்கும். அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேல் எழுந்து ஆரம்பத்தில் மிதக்கத் தொடங்கும்.
இதன் படி எல்லாப் பொருட்களும் படிப்படியாக அணு அணுவாகப் பிரிந்து வெளியில் விலகிச் சென்றுவிடும், உயிரினங்களும் உட்பட அனைத்துமே. காரணம் ஈர்ப்புவிசை தான் இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.
சுருங்கக் கூறின் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்தும் கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். விரிவடையும் வேகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல இப்போது விஞ்ஞானிகள் அழுத்திக் கூறுகிறார்கள்.
என்றாலும் சில இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்கள் ஈர்ப்பு விசையினால் சுருங்கும் பிரபஞ்சம் மிகச் சிறியதாக சுருங்கிவிட்டால் ஈர்ப்புவிசையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி பிரபஞ்சத்தை விரிவாக்கும் என்று கூறுவதோடு big bounce என்று பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் படி விரிவும் சுருக்கமும் மாறி மாறி நடைபெறும் நிகழ்ச்சியால்தான் எமது பிரபஞ்சம் இந்த நிலையில் இருக்கின்றது. மேலும் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் அண்ட மா வெடிப்பின் மூலம் பிரபஞ்சம் தோன்றவில்லை.
அதற்கு முன்னரே உருவாகி இருந்த பிரபஞ்சம் சுருங்கி விரிவடைந்த காரணத்தினால் தான் பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றது. ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவாகவில்லை என்ற ஆச்சரிய முடிவையும் ஒரு சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரபஞ்சத்தின் உள்ள கருந்துளைகள் மூலமாக புதிய பிரபஞ்சங்கள் உருவாகியிருக்கின்றது எனவும் சில விஞ்ஞானிகள் வாதம் முன்வைத்துள்ளனர்.
இது எப்படியாயினும் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் முடிவு பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் முன்னுக்கு பின் முரண்பட்ட கோட்பாடுகளையே வைத்து வருகின்றனர்.
இத்தனையை கூறும் எவரும் பிரபஞ்சத்தின் எல்லை எது? 
கருமை மிக்க பகுதிகளில் காணப்படும் ஆற்றல் எது? 
இதனைப் படைத்தது யார்? 
என்ற கேள்விகள் மட்டும் இன்னும் பதில் காண முடியாதவையாக உள்ளது.
கடவுள் என்று மட்டும் கூறாதீர்கள்.
அப்படி என்றால் அவர் எங்கிருந்து இவற்றை படைக்கிறார்.?
எல்லையில்லா பிரபஞ்சத்தில் அவர் இருப்பது எங்கே.?
அவர் உருவம் ஏன்னா?
இவற்றை படைத்ததால் அவருக்கு என்ன கிடைக்கிறது.?
முடிவாக அவர் எப்படி உருவானார்?
சூனியத்தில் இருந்து உருவானார் என்றால் அந்த சூனியம் எப்படி உருவானது?
அதை படைத்தவர் யார் என்ற வாழையடி கேள்விகள் வரும்!
                                                                                                                                       - நன்றி:டிடி என்.