கலங்க வைத்த இறுதி ஊர்வலம்...




20 ரூபாய் டாக்டருக்கு  கண்ணீர் அஞ்சலி! 

'வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்' என கிராமங்களில் சொல்வது உண்டு. 
அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான மருத்துவரின் இறுதி ஊர்வலம். ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 
சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கிறார்கள். கோவை மாநகரம் முழுக்க அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 
இறந்தவர் அரசியல்வாதியோ, இல்லை பெரும் பணக்காரரோ இல்லை. பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்றும் மக்கள் சேவையாற்றும் ஒரு மருத்துவர். 

மருத்துவம் என்பது அதிக லாபமீட்டும் பெருந்தொழில் ஆகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் சேவையை மட்டுமே முன்னிறுத்தி, கிளினிக் நடத்தும் அறைக்கான வாடகைக்காக மட்டும் சொற்பத்தொகையை வாங்கி சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம். 

2 ரூபாயில் துவங்கி, கடைசியாக இவர் வாங்கிய தொகை 20 ரூபாய். பணமில்லை என்றால் அதையும் கூட கேட்க மாட்டார். 

தன் வாழ்வு முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் இரு தினங்களுக்கு முன்னர் நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 
இவரது இறப்பு கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏழை மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். 
இரு தினங்களில் ஆயிரக்கணக்கானோர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
 'ஏழைகளின் தெய்வம்' 'மக்கள் சேவகன்' என இவரது சேவையை நினைவு கூறும் வகையில், கோவை முழுவதும் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். 
எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
தங்கள் குழந்தைகளை கையில் ஏந்தி மருத்துவர் பாலசுப்பிரமணியன் உடலை தொட்டு கும்பிட வைத்தனர். 
காண்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த இறுதி ஊர்வலம் நடந்தது. 

டாக்டர் பாலசுப்பிரமணியத்தின் மகள் பிரியாவிடம் பேசினோம். 
"மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம். வாடகை உள்ளிட்ட சில செலவினங்களுக்காகத்தான் பணம் வாங்கத்துவங்கினார். ஆரம்பத்தில் 2 ரூபாய் வாங்கியவர், வாடகை உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி தற்போது 20 ரூபாய் வாங்கினார். 
ஆனால் பணமில்லாவிட்டாலும் அவர் சிகிச்சை அளிக்கத் தவறியதில்லை. பணம் கொடுத்தால் வாங்குவார். அதுவும் 20 ரூபாய் தான் வாங்குவார்," 
-என்றார். 

"பொருள் சார்ந்த எந்த ஈர்ப்பும் இல்லாதவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இறுதி வரை சேவையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டவர். 
மக்களுக்கு தொண்டாற்றுவதைத் தவிர எதையும் இவர் விரும்பியதில்லை. ஆனால் தான் ஒரு பெண்ணாக பிறந்து, மகப்பேறு மருத்துவர் ஆகி இருந்தால், மகப்பேறு சிகிச்சை செய்து தாயையும், சேயையும் காப்பாற்றும் பெயரை பெற்றிருக்கலாம் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்," என்கிறார் அவரது நண்பர் மனோகரன். 

ஆம். மக்கள் சேவையாற்றி மருத்துவர் பாலசுப்பிரமணியன் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை அவரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்தது. 

                                                                                                                                                   - தி.விஜய்
======================================================================================
ன்று.

டிசம்பர்-07.
  • இந்திய கொடி நாள்

  • சீனக் குடியரசின் அரசு, நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது(1949)

  • இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது(1988)
  • ======================================================================================
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 
"சோ" என அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
1934 டிசம்பர் 5ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்த அவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இவருடைய தந்தையார் பெயர் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சிறிது காலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியார்.
பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் ஒன்றின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார்.
தன்னுடைய அங்கத எழுத்துகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் மிகவும் அறியப்பட்ட சோ, 1970ஆம் ஆண்டில் துக்ளக் வார இதழை துவங்கினார். அதன் பிறகு Pickwick என்ற ஆங்கில இதழையும் சில காலம் நடத்தினார்.
1950களில் நாடகங்களை எழுதி நடிக்க ஆரம்பித்த சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது இந்து மகா சமுத்திரம் என்ற நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
1971ல் இவரது இயக்கத்தில் முகமது பின் துக்ளக் திரைப்படம், இவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று.
'முகமது பின் துக்ளக்' , 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட 5 திரைப்படங்களையும் சோ இயக்கியிருக்கிறார்.
தன்னுடைய நாடகங்கள், எழுத்துகள், திரைப்படங்களில் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த சோ, காங்கிரஸ் கட்சியின் மீதும் தொடர் விமர்சனங்கள் முன்வைத்துவந்தார்.
திராவிட இயக்கம் முன்வைத்த சமூகநீதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பெண்கள் சம உரிமை உள்ளிட்ட கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் முன்வைத்துவந்தார்.
1975-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்த சில பத்திரிகையாளர்களில் சோவும் ஒருவர்.
தீவிர வலதுசாரி சிந்தனையாளரான சோ, மக்கள் சிவில் உரிமைக் கழகத்திலும் சில காலம் இணைந்து செயல்பட்டார்.
ஈழப் பிரச்சனை குறித்த இவரது நிலைப்பாடுகள் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின.
1999ல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சோ, 2005 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 கம்பெனிகளின் எம்டியாகவும் இருந்து செயல்பட்டு வந்தவர் சோ .

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சோ தொடர்ந்து மருத்துவனையிலும் வீட்டிலும் சிகிச்சைபெற்று வந்தார். பிறகு சில நாட்களுக்கு முன்பாக சுவாசப் பிரச்சனையின் காரணமாக மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோ டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை காலமானார்.
இன்றைய பிரதமர் "மோடி"அன்றைய குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா நிறுவனத்தில் வாங்கிய பணம் விவகார விபரம். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?