இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

5.1 லட்சம் செலவில்

படம்
ஆறு மாதங்களில் ஆறு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உங்கள் பொருளை தயாரிப்பதாகக் கூறுங்கள்  (இதற்கு சல்லி பைசா செலவாகாது) எல்லாரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் நம்பமுடியாத விலையில் ஒரு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இருப்பதாக அறிவியுங்கள். அதன் பெயர் எல்லாரையும் கவரும் விதத்தில் இருக்கவேண்டும்.  உதாரணத்திற்கு 'ஃப்ரீடம் 251'.  மேலும் அதில் இரண்டு கேமரா, 3ஜி, ஹெச்.டி திரை உள்ளிட்ட கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக அறிவிக்க வேண்டும். மார்க்கெட்டிங் செலவு (இதற்கும் நயா பைசா செலவழிக்க வேண்டியதில்லை)  மேலே சொன்ன அறிவிப்பின் மூலம் உலக மீடியாக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிவிடலாம். இணையதளங்களும் உங்களை மொய்க்கத் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் உங்கள் அறிவிப்பு ட்ரெண்டாகும்.  இந்த மாதிரியான அறிவிப்புகளில் இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் இந்திய மீடியாக்களும் உங்களை கவர் செய்வார்கள். பொருளை அறிமுகப்படுத்த ஒரு தேதி குறியு

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு...,!

படம்
நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளினால் சிக்கல்கள் ஏற்படுகையில், இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பெற்றவற்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். இந்த தர வரிசைப் பட்டியல் பல பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, செயல் திறன், பயன்பாடு, பழுது நீக்கும் தன்மை மற்றும் ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு என்ற பிரிவுகளில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில், சிறந்த பாதுகாப்பிற்கான விருதினை செமாண்டெக் (Semantec Norton Security) நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் Symantec Endpoint Protection தொகுப்பு, நிறுவனங்களுக்கான சிறந்த பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  தற்போது கம்ப்யூட்டர்களைத் தாக்கி வரும் 1,50,000 வைரஸ் புரோகிராம்கள் மட்டுமின்றி, 1,500க்கும் மேற்பட்ட, ”ஸீரோ டே” தாக்குதலைத் தொடுக்கும் வைரஸ்களுக்கும் எதிராகவும், செமாண்டெக் பாதுகாப்பு அளிக்கிறது. ('ஸீரோ டே' தாக்குதல் என்பது, வைரஸ் புரோகிராம் ஒன்று, அது வெளியாகி, அதற்கான எதிர்ப்பு புரோகிராம் தயார்ப்ப

மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான்

படம்
மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு.  மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான்.  வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான்.  மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது. பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறி வினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகு காலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள் தனமாக நம்பிக் கொண்டு முட்டாளாக இருக்கின்றான். மனிதன் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகின்றன.  அப் படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், சாதி என்கின்றவை களில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர் களாக, முட்டாள்களாக இருக்கின்றனர்.  சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவைகளேயாகும்.  இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொ

நமது பாவங்களுக்கான வரி!

படம்
ப ட்ஜெட் 2016 தாக்கலாகப்போகிறது. உலக நாடுகளெல்லாம் பொருளாதார ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. நாம் நம் உள் நாட்டுப் பிரச்னையைத் தவிர, இந்த நாடுகளின் பிரச்னைகளையும் உள் வாங்கி, பாதிப்படைந்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் பட்ஜெட்,  பொதுநல பட்ஜெட்டாக இருக்குமா, இல்லை இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே.... இந்த பட்ஜெட்டில் வரக்கூடிய ஒரு புதிய வரியான சின் டாக்ஸ் (SIN TAX ) பற்றி பார்ப்போம்.  வரி, வட்டி,  கிஸ்தி…… இந்தப்பட்டியலில் இது குஸ்தி. ஆமாம் பாவங்களுக்கு எதிரான குஸ்தி. இந்த வரி வருமா வராதா தெரியாது. ஆனால் வருமென்றே தோன்றுகிறது. சரி முதலில் இது என்ன வரி என்று பார்த்துவிட்டு, ஏன் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் பார்க்கலாம். 'சின் டாக்ஸ்' என்பது ஒரு மறைமுக வரி. மத்திய கலால் வரி (Central Excise Duty  ) யில் ஒரு வகை. பண்டங்கள் மேல் விதிக்கப்படும். எந்தப் பண்டங்கள் என்று பார்த்தால் பீடி ,சிகரெட், மதுபானங்கள் , குளிர் பானங்கள் , உயர் ரக கார் இப்படி சமூகத்துக்கு தீமை விளைவிக்கும் அல்லது உபயோகத்தைக் குறைக்கவேண்டும் என்று அரசாங்கமே எண்ண

அலைபேசி பயங்கரம்!

படம்
செங்கல்பட்டைச் சேர்ந்த தனுஷ் என்கிற 9 வயது சிறுவன் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததன் காரணமாக, அவனது பார்வை பறிபோனது.  வியாசர்பாடியில் மெத்தை மீது சார்ஜ் போடப்பட்டு வைத்திருந்த செல்போன் வெடித்து மெத்தை தீப்பற்றி அவ்வீட்டில் இருந்த கணவன் - மனைவி இருவரும் இறந்தனர்.  சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்திகள் இவை. நம் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்ட செல்போன் உயிருக்கும் உலை வைக்குமா என்பதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ஏன் இந்த விபத்துகள் நடந்தன? செல்போனை எவ்வாறு கையாள வேண்டும்? செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனுள் மின்சாரம் ஏற்றப்படுவதன் காரணமாக அது சூடாகும். அப்போது செல்போன் பயன்படுத்துவதை முடிந்த வரை தடுக்கலாம். பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். நிறைய பேர் இரவு படுக்கும்போது சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டார்கள் என்றால், சராசரியாக 8 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த பின்புதான் கழற்றுவார்கள். பேட்டரி சார்ஜ் ஆன பிறகும் மின் இணைப்பில் இருக்கும்போது, வெளியாகும் மின்சாரத்தை பேட்டரி தாங்காது என்பதோடு, அது வெடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கி