இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 19 ஜூலை, 2017

இவர் யார் என்று புரிகிறதா?


ஆக மொத்தத்தில் கமல்ஹாசனை அரசியல் சாக்கடைக்குள் அதிமுக,பாஜக கூட்டணியினர் இழுத்துவிட்டனர் என்றே தெரிகிறது.

ஆனால் "இந்த வகை அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.

அப்படி வந்தால் துப்பாக்கியுடன் வருவேன்" என்று ஆரம்பகால கமல் ஒரு பெட்டியில் கூறியிருந்தார்.அப்போது இளம் ரத்தம்.அதனால் அப்படி கூறியிருப்பார்.
ஆனால் அன்றிருந்ததை விட  அரசியல் மிகவும் அசிங்கமாக,ஊழலே மூச்சாக மாறிபோனது கமலை மிகவும் உறுத்தியதால் இன்றைய அனுபவம் ஏறிய பொறுப்புடன் கூறிய வார்த்தைகள் அவரை அரசியல் சூறாவளியில் சுழற்றி விட்டுவிட்டது.

இன்றைக்கு வருவேன்,நாளைக்கழித்து வருவேன்,போரடித்தால் மன்னிக்கவும் போர் வந்தால் வருவேன் என்று கூறியே அரசியல் செய்யும்  நடிகர்  ரஜினிகாந்த் ஆண்டவன் சொல்லி வருவதற்குள் ஆண்டவனை நம்பாத அவரது நண்பர் கமல்ஹாசன் அரசியலில் வந்து விட்டது போல் தோற்றம் உருவாகியுள்ளது.

ஆனால் அரசியல் வேண்டாம் என்று அடிக்கடி கூறும் கமல் கட்சியினை துவக்குவாரா,அல்லது இணைவாரா என்பது காலம் கையில்.

இந்தி திணிப்புக்கு குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்து விட்டதை முதுகெலும்பு அறிஞர் ,அரசியல் ஞானி ஏச்சு.ராஜா வுக்கு கமல் சொல்லியிருக்கிறார்.


ஆனால் அதற்கு முன்பே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனது ரசிகர்களை வைத்து நடத்திய ஊர்வலத்தின் போதே அவரது அரசியல் வெளிப்பட்டு விட்டது.

கமல்ஹாசன் எப்போதும் சொல்லுவார் வாக்களிக்க கையை கறையாக்கும் ஒவ்வொருவரும் அரசியலில்தான் இருக்கின்றனர்.

உண்மை.

எந்த கட்சிக்கு வாக்கு என்பது தீர்மானிப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன?

 தற்போது அதிகமாக கமல்ஹாசனை அரசியலுக்கு இழுத்துவர முயற்சித்த அதிமுக அமைச்சர்கள்,பாஜக வினருக்கு பதில் தர ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிமுக ஆட்சி ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலக நாயகன் கமல்ஹாசனின் கடிதம்.

கமலஹாசன்  முழுக்க அரசியல் பேச்சாக இல்லாமல் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்பதற்கு அதிமுக அமைச்சர்கள் தரும் பதிலை விட பாஜக கட்சியினர் கடுமையாக தரும் பதில் தான் மிகவும் வியப்பாக உள்ளது ,

ஊழல் தமிழகத்தில் பெருகி விட்டது என்றால் தேவையே இல்லாமல் பாஜக உள்ளே நுழைந்து அரசியலுக்கு வந்து பார்,முதுகெலும்பு இல்லை ,சேவை செய்த பின்னர்தான் அரசியலுக்கு வரவேண்டும் ,கோழை என்று கமலஹாசனை விமரிசிப்பது தேவையற்ற ஒன்று .

இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் செய்த தூய்மை இந்தியாவின் 7 பிரதிநிதிகளில் கமல்ஹாசனும் ஒருவராக மோடியால் நியமனம் செய்யப்பட்டார்.அப்போது நடந்த விழாவில் கமலுடன் வாலியை தூக்கி போட்டோவுக்கு நின்றவர் பாஜக தலைவி தமிழிசைதான்.அது சமூக சேவை இல்லையா?

அல்லது அப்போது கமலுக்கு முதுகெலும்பு இல்லாதது  உங்களுக்கும், எலும்பு நிபுணர் ஏச்சு.ராஜாவுக்கும் தெரியாதா?
இதுதான் பலரது கருத்து.

ஆனால்  பாஜக ரஜினியை அரசியலுக்கு வா,வா என்கிற காலக்கட்டத்தில் கமலை கண்டு மட்டும் பயம் கொள்வது ஏன்?

நடிகர் ரஜினி பாஜக ஆதரவான இந்துத்துவா கருத்துக்கொண்டவர்.
ஆனால் கமல் ஹாசன் திரையுலகை மட்டுமின்றி நடப்புலகிலும் ரஜினிக்கு போட்டியான கருத்துக்களைக்கொண்டவர்.

திராவிட ,பகுத்தறிவு,இடதுசாரி கருத்துக்களை கொண்டவர்.இந்தி எதிர்ப்பாளர்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடனே ஒத்து செல்வார்  என்ற  எதிர்பார்ப்பு உண்டு.ஆனால் கமல் மாட்டிறைச்சி,ஜல்லிக்கட்டு,இந்தி திணிப்பு ,ஜி.எஸ்.டி,உடன்பட எல்லா வகையிலுமே மோடி அரசை விமரிசிப்பவர்.

இவை எல்லாவற்றையும் விட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கலந்துரையாடலில் "மோடியின் இஸ்ரேல் பயணத்தை கடுமையாக விமரிசித்தார்.

அதுமட்டுமின்றி தற்போது 100 ஆண்டு போராட்டத்தின் பயனாக பஜ்ரங் தள் ,ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி விட்டது.அதை இளைஞர்கள்தான் போராடி நாட்டை காப்பாற்ற வேண்டும் அதற்கான பணிகளை  D Y F I (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் )முன்னெடுப்பு செய்யவேண்டும்" என்றும் கூறினார் .

இந்த  செய்திகளை வழக்கம் போல் நமது நடுநிலை உணர்வுமிக்க ஊடகங்கள் மக்கள் பார்வைக்கே வரவிடவில்லை.

ஆனால் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பாஜக,அதிமுகவுக்கு போகாமல் இருக்குமா?

இப்போது  தமிழ் நாட்டை ஆள்வது யார் என்று    புரிகிறதா?
கமலின் அரசியல் பேச்சுக்கு பாஜக அலறுவது ஏன் என்று தெரிகிறதா?

விஸ்வருபம் பாடல்தான் நினைவில்

"இவன்  யார்  என்று  புரிகிறதா?

இவன்  " தீ "  என்று     தெரிகிறதா?
=======================================================================================
 இன்று,
ஜூலை-20.
 • உலக  சதுரங்க தினம்
 • கொலம்பியா விடுதலை தினம்(1810)
 • யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)
 • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
 • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)
=======================================================================================
]

புதிய இந்தியா?


பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் 152 நாடுகளின் பட்டியலில் இந்தியா 132-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமூகப் பாதுகாப்பு மற்றும்சமூக நலத்திற்கான செலவுகளை மேற்கொள்வதில் இந்தியாவால், கடைசி இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. 

பெண்கள் பாதுகாப்பிலும் இந்தியாவில் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகள் மற்றும்அதைஅந்நாடுகள் சரி செய்ய முடியாத நிலை குறித்து ‘நியூ ஆக்ஸ்பாம்’என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

அதில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.ஏற்றத் தாழ்வை குறைப்பதற்காக, ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து, சமூகச் செலவு, வரி மற்றும்தொழிலாளர் உரிமைகள் என்ற மூன்று அம்சங்களை முதன்மையாக வைத்து,கல்வி, சுகாதாரம் என 21 தலைப்புகளில் ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.


சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகளின் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் கணக்கிடப்பட்டு உள்ளது. 

அதன் முடிவில் 152 நாடுகளை உள்ளடக்கிய தரப்பட்டியல் ஒன்றும்ஆக்ஸ்பாம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. 

இதில், ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்றத்தாழ்வை களைவதில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில்,இந்தியா 132-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் வரிசையில் உள்ள சில நாடுகள்பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்இடையிலான இடைவெளியைக் குறைப்பதில், வலுவான முன்னேற்றத்தைஅடைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த வகையில், சமூக செலவினங்களில் இந்தியா கடைசி இடத்தையே (152) பெற்றுள்ளது. 

முற்போக்கு வரி விதிப்பில் 91-ஆவது இடத்திலும், தொழிலாளர்கள் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் 86-ஆவது இடத்திலும் உள்ள இந்தியா,சுகாதார செலவினம், கல்வி மற்றும் சமூகபாதுகாப்பு விஷயங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மதிப்பளிப்பது ஆகிய விஷயங்களில் இந்தியா படுமோசமாக உள்ளது.இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது; 

அதைக் குறைக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், நமது பார்வை முன்னோக்கியவாறு இருக்க வேண்டும். பின்னோக்கியவாறு இருக்கக் கூடாது. 

மேலும் பொதுவாக ஏற்பட்டு வரும் அளவு மாறுபாடுகள் துரிதமாக, திடீரெனக் குணமாறுதல்களாகப் பரிணமிப்பது வளர்ச்சியின் ஒரு விதி என்று ஏற்பட்டால் - அப்பொழுது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் உண்டாக்குகிற புரட்சிகள் என்பவை இயற்கையான, தவிர்க்க முடியாத தோற்றமே என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும், முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையடைவதும், மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலம் - சீர்திருத்தங்கள் மூலமாக - சாத்தியமில்லை. 

அதற்கு மாறாக, முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதின் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான், அவை சாத்தியமாகும்.

ஆகவே, கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், நாம் புரட்சியாளனாக இருந்து தீர வேண்டும். சீர்திருத்தவாதியாக அல்ல.
                                                                                                                                              - ஸ்டாலின்
======================================================================================
ன்று,
ஜூலை-19.
 • பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
 • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
 • நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)
 • நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
=======================================================================================


கமல்ஹாசன் மக்கள் சேவை செய்யவில்லையா?பிறகு என்ன ===க்கு உங்க தல மோடி தூய்மை இந்தியாக்கு பிரதிநிதியாக நியமித்தார்.?நீயும் பக்கத்தில் பல்லைக்காட்டிக்கொண்டு படம் பிடித்தே?

திங்கள், 17 ஜூலை, 2017

மாடு ஆய்வு குழு. !

😨மாட்டின் பயன்கள் பற்றி  ஆய்வு செய்ய ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
19 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இக்குழு. 

 இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர். 

‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
மாட்டு குழு.
ஆய்வு துவக்கப்பட்ட போது  

மாட்டின் கோமியம்,பஞ்ச கவ்யம் பற்றி ஆய்வு செய்வதுதான் குழுவின் முக்கிய நோக்கம்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.🤔

🤥"பாஜக அரசின் இந்த குழுவை பாரட்டி வரவேற்கிறோம்."
என முதல்வர்கள் நிதிஷ் குமார்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலாவது ஆட்களாகக் வரவேற்றனர்.

"இந்த ஆய்வின் மூலம் ஜிஎஸ்டி வரி பாதிப்பினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் குறையும்.இந்தியா பொருளாதர வல்லரசாக உருவெடுக்கும்" என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

😗"விவசாயிகள்  பஞ்ச கவ்யத்தை வயல் வெளிகளில் தெளிப்பதின் எல்லா வயல்களிலும் பாஸ்மதி அரிசி விளைந்து அவர்களின் பிரச்னை எல்லாம் தீரும்" என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூடுவாஞ்சேரி விமான நிலையைத்தில் பேட்டியளித்தார்.
(அவரின் துறை அவருக்கே தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.)

😆"கோமியத்தை இந்த ஆய்வின் மூலம் அதிக அளவு உறபத்தி செய்து காவிரி பிரச்னையை தீர்க்கலாம்.கர்னாடகாவிடம் இனி தண்ணீர் கேட்டு கெஞ்ச வேண்டாம்.இதை எதிர்க்கும் ஸ்டாலினும்,கமல்ஹாசனும் இன்னும் அரசியலில் பக்குவ‌மடையவில்லை "என தமிழிசை கருத்து தெரிவித்தார்.

😎"மாட்டின் கோமியம்,பஞ்சகவ்யம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்ததன் மூலம் இன்னுமொரு "புதிய இந்தியா'  பிறந்துள்ளது.வாழ்த்துகள்"என்று இன்ப சுற்றுலா சென்றுள்ள பிரதமர் மோடி  அன்டார்டிகாவில் இருந்து டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.


மக்கள் அல்லாடும் பிரசனைகளுக்கு இந்தியாவில் வறுமையா என்ன?

வேலைவாய்ப்பு,குடிநீர்,விவசாயம்,நீட்,ஜி.எஸ்.டி  என்று எத்தனையோ  வருகிறது. 
எதற்காவது இந்த பாஜக அரசு முதலாவது குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுத்ததா?
பாஜக அரசே திட்டமிட்டு மக்கள் மீது திணித்த பண மதிப்பிழப்பு,நீட்,மாட்டிறைச்சி என்று எதிலாவது மக்கள் கேட்க ஓர் ஓரமாக  மனதிலாவது நினைத்ததா?

ஏன் .மாட்டின் மீது மட்டும் இந்த பாசம்,பரிவு,
இதில் நூற்றில் ஒரு பங்காவது தனக்கு வாக்களித்து நாடு,நாடாக சுற்றுலா போக வைத்திருக்கும் மக்கள் மீது மோடி காட்டுகிறாரா?

தன்னை சந்திக்க வரும் நடிகைகளுக்கு ஒதுக்கும் நேரத்தை அவரால் விவசாயிகள்,மக்கள் பிரச்னைக்காக வருபவர்களை சந்திக்க ஒதுக்க முடிகிறதா?

இதில் வேறு உலகிலேயே தன்னை ஆள்வோர் மீது நம்பிக்கை வைத்துள்ள நாடுகளில் இந்தியாதான் (74%)முதலிடமாம்.

நாட்டை ஒரு வழி செய்வதில் மோடிக்கு இருக்கும் ஆர்வத்தை விட இந்திய மக்களுக்குத்தான் அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

மாற்றி யோசித்தால் எப்படியோ இந்த வாழ்வில் இருந்து அப்படியாவது தப்பிக்கலாமா என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
========================================================================================
ன்று,
ஜூலை-18.


 • உருகுவே அர சு அமைப்பு தினம்(1830)
 • தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
 • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)
 • வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
 • கவிஞர் வாலி இறந்த தினம்(1993)

=========================================================================================


சிறைக்குள் சசிகலா தர்பார் நடத்தியதை டிஐஜி ரூபா முழுமையாக படம் பிடித்திருக்கிறார். 


அப்படி படம் பிடித்தபோது நைட்டி உடையில் இருந்த சசிகலா டிஐஜி ரூபாவை தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். 


அத்துடன் ரூபாவுடன் வாய்ச்சண்டையும் போட்டிருக்கிறார் சசிகலா.தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் சவால்

ஞாயிறு, 16 ஜூலை, 2017

வாராக்கடன்களும் வராத விபரங்களும்

இந்தியாவின் வங்கி அமைப்பு முறை ஒருகாலத்தில் மிகவும்சிறப்பாக இருந்தது. 2008ஆம்ஆண்டு, உலகம் முழுதும் நிதி நெருக்கடி யால் சிக்கித்தவித்த காலத்தில்கூட இந்தியாவின் வங்கிகள் எவ்விதமான பிரச்சனை களும் இன்றி, மிகவும் வலுவான நிலையிலேயே,நிலைத்து நின்றன. 
ஆனால் அவற்றின் இன்றைய நிலை, குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் நிலை, மிகவும் பரிதாபமாகும்.
கார்ப்ப ரேட்டுகள் தாங்கள் வாங்கிய கடன்களை அவற்றிற்குத் திருப்பிச்செலுத்தாமல் அவற்றைசெயல்படா சொத்துக்களாக (NPA—Non-performing Assets), வராக்கடன்களாக மாற்றி யிருப்பதன் காரணமாக, மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. 

இதுவங்கித்துறையின் எதிர்காலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில், மத்தியில் பாஜகதலைமையிலான மோடி ஆட்சியின்கீழ், வங்கிகளின் வராக்கடன்கள் மதிப்பு மும்மடங்கு ஆகியிருக்கிறது. 
2.3 லட்சம் கோடிரூபாய்களாக இருந்தது, 6.8 லட்சம் கோடிரூபாய்களாக மாறியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் இன்றைய செயல்படா சொத்து க்களாக மாற்றப்பட்டுள்ள வராக்கடன்களின் மதிப்பு அவை அளித்துள்ள கடன்களின் மதிப்பில் 11 சதவீதமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவை அதிகமாகும்.
இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாது இருப்பதுதான் வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் பெருகியிருப்பதற்கு முக்கியகாரணமாகும்.
நாடாளுமன்றக் கணக்குக்குழுவின் தலைவரான கே.வி.தாமஸ்நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கை யின்படி, வங்கிகளின் செயல்படா சொத்துக்க ளில் 70 சதவீதம் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களேயாகும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு செயல்படா சொத்துக்கள் உருவா வதற்கு முந்தைய ஐமுகூ அரசுதான் காரணம்என்று சொல்லி நழுவப்பார்த்தார். ஐமுகூ அரசு காலத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள்தான் இந்றைய அரசின் காலத்தில் செயல்படா சொத்துக்களாக மாறி இருக்கின்றன என்று கூறினார்.
ஐமுகூ அரசாங்கம், கார்ப்பரேட்டுகளிடம் மிகவும் தாராளமாக நடந்துகொண்டது என்பது உண்மைதான். ஆனால் பாஜக அரசாங்கம் அவர்களையும் மிஞ்சிவிட்டது. 
ஐமுகூ அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு கடன் அளித்திட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளைக் கட்டாயப்படுத்தியது என்றால், பாஜக அரசாங்கமோ அவர்கள் திருப்பித்தராமல் இருப்பதற்கு பல்வேறு வடிவங்களிலும் உதவி செய்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கடன் மறுநிதியம் மற்றும் மறுகட்டமைப்புத் திட்டங்கள் (Loan refinancing and restructuring schemes) என்று கொண்டு வந்திருக்கின்றன.
இதன்காரணமாக இவ்வாறு கடன் வாங்கிவிட்டு கட்டாத கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் இதே வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு கடன் வாங்கிவிட்டு பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றியதற்கு விஜய் மல்லைய்யா மிகச் சரியான உதாரணமாகும். இந்நிலையில் மோடிக்கு மிகவும்வேண்டியவரான அதானியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கவேண்டிய தொகை இன்ன மும் அதிகமாகும். 
சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாயை அதானி பொதுத்துறை வங்கிகளுக்கு அளித்திட வேண்டும். இந்தப் பேர் வழிக்குச் சொந்தமான விமானத்தில்தான் பிரதமர் மோடி உலகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
பாஜக அரசாங்கம் மத்தியில் அமைந்தபின்னர், அதானிக்குச் சொந்தமான இருமின்சாரம் உற்பத்தி செய்திடும் நிறுவனங் களுக்கு பொதுத்துறை வங்கிகளிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கடன்கள் அளிக்கப்பட்டன.

இந்த இரு நிறுவனங்களும் இந்தத் தொகைக்கான வட்டியைக் கட்டக் கூடிய அளவிற்குக்கூட உற்பத்தியை உருவாக்காத நிலையிலேயே இவ்வாறு கடன்கள்அளிக்கப்பட்டன. 
இவ்வாறு கடன் வழங்கும் போது, இந்நிறுவனங்கள் இதற்கு முன் வாங்கியகடன் தொகையையும் இப்புதிய கடனுடன் சேர்த்து, இத்தொகையை மேலும் பத்தாண்டு கள் கழித்து வழங்கினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
மேலும் இந்நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் இதற்கான வட்டியைக் கூட கட்ட வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்றே, மோடிக்கு மிகவும் வேண்டியவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனமான ரிலயன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கான பழைய கடனையும் சேர்த்து புதிதாக 4,500 கோடி ரூபாய்புதுக்கடனாக அளிக்கப்பட்டு அதனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் பத்தாண்டுக்கும் மேலாக நீட்டித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அறிக்கையின்படி, இவ்வாறு செயல்படா சொத்துக்கள் மற்றும் வராக்கடன்களில் பெரும்பாலானவை ரிலயன்ஸ், அதானி மற்றும் வேதாந்தா ஆகிய கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமானவைகளாகும். 
வேதாந்தா என்பவரின் நிறுவனம்தான், ஒடிசாவில் விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, தன்னுடைய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பறித்துக்கொண்ட தாகும். 
இவ்வாறு இந்நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அதே நிறுவனங்களுக்கு இக்கடன்களோடு மேலும் கடன்கள் வழங்கப்பட்டு அவை மாற்றி யமைக்கப்பட்டிருப்பதுடன், அவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தையும் நீட்டித்திருப்பதானது வரவிருக்கும் காலங்களில் இவ்வங்கிகள் மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்திப்பதற்கு இட்டுச் செல்லும்.

சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துள்ள முகேஷ் அம்பானி யின் கடன்களை அவர் திருப்பிச் செலுத்து வதற்கு காலக்கெடுவை நீட்டித்திடும் இதே அரசாங்கம், நாட்டில் வறட்சி மற்றும் பயிரிழப்பு ஆகியவற்றின் காரணங்களால் விவசாயிகள் செத்தாலும் அல்லது அவர்கள் தங்கள் நிலங்களை விற்றாலும் கவலையில்லை என்று கூறி அவர்கள் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்துவறட்சியால் பாதிப்புக்கு உள்ளான தமிழ் நாட்டு விவசாயிகள், கடன் தள்ளுபடிக்காக பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள். மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. கடன்வலையில் கடுமையாகச் சிக்கிக்கொண்டு தவிக்கும் விவசாயிகளைக் காப்பாற்றிட மத்திய மோடி அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை. 
விவசாயிகள் என்ன மத்திய அரசால் நிறைவேற்ற முடியாத அளவிற்கா கோரிக்கை வைத்திருக்கிறார் கள்.
நாடு முழுவதற்குமான பயிர்க்கடனின் மொத்தத் தொகையும் சுமார் 75 ஆயிரம் கோடிரூபாயாகும். அதானிக்கு மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக்கொடுத்துள்ள அதே சமயத்தில், ஒட்டுமொத்த விவசாயி களின் கடன்களை ரத்து செய்ய முடியாதா? 
செய்ய முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு.
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் விவசாயிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் பொதுவெளியில் தொங்க விடப்படுகின்றன. எவ்விதமான மன உறுத்தலுமின்றி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படு கின்றன. 
இவ்வாறு செய்ய முன்வந்துள்ள அரசாங்கமானது, கார்ப்பரேட்டுகளிடம் மட்டும் ஏன் அதனைச் செய்ய மறுக்கிறது? 
இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிடுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதனைச் செய்ய மறுக்கிறது. வங்கிகள் என்பவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை.
எனவே மக்களுக்கும் அவை சொந்தமானவைகளாகும். அதன்காரணமாக வங்கிகளின் சேமிப்புகள் மக்களுக்குச் சொந்தமானவைகளாகும். வங்கிகளில் உள்ள சேமிப்புகளில் சுமார் 60 சதவீதம் சாமானிய மக்களால் அளிக்கப்பட்டுள்ளவைகளாகும்.

 15 சதவீதம் அரசுத்துறை நிறுவனங்களால் அளிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் நஷ்டம் அடைகின்றன என்றால் மக்கள் நஷ்டம் அடைகிறார்கள் என்றே பொருளாகும். சேமிப்பா ளர்கள் என்ற முறையிலும் அவற்றின் உரிமையாளர்கள் என்ற முறையிலும் நஷ்டம் அடைகிறார்கள். 
இவ்வாறு பொதுப்பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிவழங்கிவிட்டு, இந்திய ரிசர்வ்வங்கியில் உள்ள மோடியின் செல்லப்பிள்ளை கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? சமீ பத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவரான வைரல் ஆச்சார்யா என்பவர் செயல் படா சொத்துக்கள் நெருக்கடிக்குத் தீர்வு பொதுத்துறை வங்கிகளை மறுபடியும் தனியாரிடம் தாரை வார்த்துவிட வேண்டுமாம்.
அதேபோன்று அரசு முதலீடுகளையும் தனியாரி டம் ஒப்படைத்துவிட வேண்டுமாம். 
இந்தியரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல்கூற்றும் இதிலிருந்து பெரிதாக மாறிவிட வில்லை. செயல்படா சொத்துக்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய வங்கிகள்மூழ்கிவிட இயற்கையாகவே அனுமதித்து விட வேண்டுமாம். 
2008 உலக நிதி நெருக்கடி யிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியது நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகள்தான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.சரி, அப்படியே இந்தியாவில் வங்கிகளை விற்பதற்கு அரசு முன்வந்தால் அவற்றை வாங்கப்போவது யார்? 
பொதுத்துறை வங்கி களுக்குத் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தராமல், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் கடன்பட்டிருக்கிற, இதே கார்ப்பரேட்டு கள்தான் வாங்க முன்வருவார்கள்.
நம் நாட்டில் ஆட்சியாளர்களையும் அதனை வழிநடத்திடும் அதிகாரவர்க்கத்தின ரையும் சலுகைசார் முதலாளித்துவம் என்னும்புற்றுநோய் நன்கு கவ்விப் பீடித்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.
இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில் சலுகைகளுக்கு மேல் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. 
மோடி, இவ்வாறு தன்னை ஆட்சியில் அமர்த்திய கார்ப்பரேட்டுகளின் ‘மணிப்பர்ஸ்’களை நிரப்புவதற்குத் தவறவில்லை. 
இதற்குப் பிரதிபலனாக இப்போது அதே கார்ப்ப ரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நன் கொடைகள் அளிப்பதையும் சட்டப்படி செல்லத்தக்கதாக்கிவிட்டார்.
தமிழில்: ச.வீரமணி                                                                                                                                                         -ஸ்ரூஜனா.
நன்றி:தீக்கதிர்,
==================================================================================================================================

ன்று,
ஜூலை-17.
 • உலக  நீதி தினம்
 • தென்கொரியா அரசியலமைப்பு தினம்
 • கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
 • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)
 • மெட்றாஸ்  முதல்வர் கலைஞரால் சென்னை என மாற்றப்பட்டது (1996)

=======================================================================================சனி, 15 ஜூலை, 2017

வரலாறு முக்கியம் அமைச்சர்களே!

:''நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து அரசை ஆதாரமின்றி விமர்சித்து வருகிறார். இது தொடர்ந்தால், தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்,'' ,
😂
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.
😲வேண்டாம் அமைசர்களே .
தமிழக அமைசர்கள்,அதிமுகவினர் ஊழல் உலகம் முழுக்க நாறி கிடக்கிறது.உத்தம வேடம் உங்களுக்கு பொருந்தாது.ஆதாரம் காட்டாத கமல் மீது வழக்கு என்று சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
ஆதாரங்கள் அரசு கோப்புகளிலும்,வருமானவரித்துறை ,தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி அனுப்பிய கடிதங்களில் கொட்டி கிடக்கிறது.உங்கள் கைகளால் உங்கள் கண்களை குத்திக்கொள்ளாதீர்கள்.உங்கள் பு.தலைவி ஊழலால் சிறை சென்றார்.
செத்ததால் தப்பித்தார்.உங்க சி.பு.தலைவி இன்னும் உள்ளேதான் இருக்கிறார்.உங்கள் கூவத்தூர் குதூகலம் குவைத்தை வீட்டா நாடு நாறியது.நீங்கள் எப்படி பட்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.கமல் வருமானவரி ஒழுங்காக கட்டி விருது பெற்றவர்.
தமிழ் நாடு அரசு சார்பில் கேளிக்கை வரி விலக்கு ஜெயலலிதா ஆட்ச்சிக்காலத்தில் இருந்து இதுவரை அவர் படங்களுக்கும்,உதயநிதி ஸ்டாலின் படங்களுக்கும் வழங்க மறுக்கப்பட்ட வந்துள்ளது.வாயை கொடுத்து வாங்கிக்கட்டி கொள்ளாதீர்கள்.

பாஜக வுக்கு கொத்தடிமையாக இருக்கும் வரை உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.அதை இது போன்ற வெட்டி மோதலில் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.நீதிமன்றம் சென்றால் அசிங்கப்படப்போவது பினாமி அரசு ,அதிமுகத்தான்.
நாள்தோறும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,பாமக ராமதாஸ் ஆகியோர்  கூறிய, குற்ற சாட்டுகளுக்கே இன்றுவரை அதிமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.
வீணாக இன்னொரு உத்தம வில்லனை சம்பாதித்துக்கொள்ளாதீர்கள்.
அடிக்கடி விஸ்வரூபம் வர உதவினார் ஜெயலலிதா என்று அதற்கு நன்றி இல்லையா என்று சொல்லாதீர்கள்.
விஸ்வரூபம் வர ஜெயலலிதா உதவிய கதை தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி நல்ல பெயர் எடுக்க எண்ணினார் ஜெ.அதன் மூலம் தனக்கு எதிரான கமல்ஹாசனை தன கைப்பிடிக்குள் கொண்டுவறுவது அவர் திட்டம்.
அவர் கிள்ளி விட்ட பின் கமல் ஜெ காலில் விழாமல் நீதிமன்றத்தை நாடி விட்டார்.தொட்டிலை ஆட்டி விட்டது நீதிமன்றம்.
கமல்ஹாசன் மீதான ஜெயலலிதா பகை பலகாலம் தொடர்வது.கடைசி பகை 100 கோடிகள் பேரம் பேசியும் அதிமுகவில் சேர்ந்து 2001 தேர்தலை பிரசாரம் செய்ய மறுத்தது.
அதன் பின்னரும் ஜெயலலிதா நெருக்கடியில் இருந்து விலக தேர்தல் காலம் கமல் வெளிநாடு சென்று விட்டார் .
கலைஞர் ஆட்சியில் வந்ததால் தசாவதாரம் தப்பித்தது.
அடுத்து வந்த ஜெ கமலை  பழி வாங்கவே விஸ்வரூபத்தை எடுத்தார் ஜெ.

ஆனாலும் ஜெயலலிதா கையில் எடுத்து விஸ்வரூபத்தை  தடை செய்து கமலுக்கு நல்ல விளம்பரத்தை செய்து கொடுத்து விஸ்வரூபம் இரண்டாம்பாகம் எடுக்க வஸ்கி செய்து விட்டார்.
ஜெயலலிதா விஸ்வரூபத்தில் அவ்வளவு இடையூரு செய்யாவிட்டால் விஸ்வரூபம் தோல்விப்படமாகத்தான் அமைந்திருக்கும் என்பதுதான் கமல்ஹாசன் ரசிகர்கள் கருத்து.
ஜெ அதை வசூல் கொட்டும் படமாக மாற்றி கமலுக்கு உதவி விட்டார்.
தசாவதாரத்தை விட அதிக வசூல் .அடகு வைத்த வீடுவாசல் எல்லாவற்றையும் திருப்பி விட்டார் கமல்.
இந்த கதை எல்லாம் ஜெயலலிதாவுக்கு அப்போது அடிமை சேவகம் செய்து வந்த அமைசர்களுக்கு தெரியாமலா இருக்கும்.இருந்தும் விஸ்வரூபம் வெளிவர உதவினார் என்பது பொய்யான தகவல்.தடையை உருவாக்க சிலரை தூண்டிவிட்டவர் ஜெயலலிதாதான்.
ஆனால் விஸ்வரூபம் வெற்றிக்கு உதவினார் ஜெயலலிதா என்றால் அதை மறு  பேச்சு இல்லாமல் ஒத்துக்கொள்ளலாம்.கமல்ஹாசனே ஒத்துக்கொள்வார்.
வரலாறு முக்கியம் அமைச்சர்களே!
😱

=====================================================================================

ன்று,
ஜூலை-16.

 • ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
 • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
 • எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
 • டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
 • பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)
=====================================================================================