பணமில்லா மோ(ச)டி .

திருவாளர் பிரதமர் மோடி இன்றைய மக்களை அவதிக்குள்ளாக்கும் பண மதிப்பிழப்பு செயலை இரவு அறிவித்த உடனே அதை வாழ்த்தி அடுத்த நாளேஎல்லா நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்த நிறுவனம் PAYTM.
புதைய இந்திய உருவாக்குவதாக மோடியை வானளாவ புகழ்ந்து விளம்பரம் வந்தது.
இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தை மிக ரகசியமாக வைத்திருந்ததாக மோடியும் அரசும் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ளும் வேளையில் இம்மாதிரியான விளம்பரம் வடிவமைக்கப்பட்டு அடுத்த நாளே தினசரிகளில் எப்படி வந்தது.என்பது கேள்வி?
இரவு 8 மணிக்கு மோடி அறிவிக்கிறார்.நம்மூரில் தினசரிகள் விடிகாலை 3 மணிக்கே அச்சாகி விட ஆரம்பித்து விடும்.
அதற்குள் இந்திய முழுக்க உள்ள எல்லா தினசரிகளிலும் ,எல்லா மொழிகளிலும் PAYTM விளம்பரம் எப்படி வெளி வந்தது.?
இன்றைய தகவல் தொழில் நுட்ப வேகத்தில் இது சாத்தியம் என்றாலும் வடிவமைப்பு மற்றும் இரவில் திடீரென அறிவித்ததில் இவ்வளவு வேகம் சாத்தியமா என்பதில் மர்மம் உள்ளது.
ஆனால் மோடியின் பணமில்லா இந்திய கனவு மிகப்பெரிய ஓட்டைகளுடன் உள்ளது.அதனால் மோடிக்கும்,பாஜகவுக்கும்,அதானி ,அம்பானிகளுக்கு பலன் இருந்தாலும் மக்களுக்கு மேலும் செலவுதான்.
ஒவ்வொரு பண அட்டைத்தேய்ப்புக்கும் சேவைக்கட்டணமும்,சேவை வரியும் பிடிக்கப்படும்.பாமர மக்களின் பணசேமிப்பு கரையும்.
பொருளின் விலையை விட அதிகமாக ணம் செலுத்த வேண்டும்.இந்த தொல்லை நேரடியாக பணம் கொடுக்கையில் இல்லை.
மக்கள் நலனுக்கு எதிரான இந்த சட்டம்,திட்டம் யாருக்காக ?பதில் சொல்ல வேண்டியவர் மோடி.
மக்கள் வாங்கும் பொருளுக்கு விற்பவரைத் தவிர அனாமத்தாக தேவையின்றி சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு எதற்கு தண்டம் அழ வேண்டும்.இதுதான் புதிய இந்தியாவா. ஒரு பக்கம் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு வாராவாரம் இதனால் பொருட்கள் விலையேற்றம்.மறுபக்கம் இந்த தண்டசெலவு.
அதை விட பெரிய கவலை இந்த PAYTM போன்ற நிறுவனங்களின் நம்பகத்தன்மை.
தொழில்நுட்ப ரீதியாக வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியில் செய்யும் PAYTM நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

பணமில்லா வணிகத்தை ஊக்கவிக்கும் வகையில் செல்போன் மூலமாக பணபரிவர்த்தனையை மத்திய மோடி அரசு நேரடியாக ஊக்கவித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு நிறுவனத்தினர், MONEY WALLET என்ற பெயரில் புதிய ஆப்பை அறிமுகம் செய்து வருகின்றனர். 

இத்துறையில் பிரபலமான நிறுவனமான PAYTM நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக தற்போது அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அமைப்பினர், நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

48-க்கும் மேற்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபிஐ அமைப்பினர், இதுவரை 6.25 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். 

குற்றம் நிருபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு PAYTM நிறுவனத்தினர் உள்ளாவர்கள் என்றும் கூறப்படுகிறது. PAYTM நிறுவனம் இந்தியா முழுக்க முதன்மை நிறுவனமாக  செயல்படுவதும்,மோடி அரசால் ஊக்குவிக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது. 


=====================================================================================
ன்று,
ஜனவரி -02.


  • கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)

  • ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)

  • ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)

  • முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
======================================================================================


"வருடத்தின் முதல் நாளே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி எங்களை மகிழ்சி கடலில் ஆழ்த்திய மத்திய அரசுக்கும் அதனை சார்ந்த அண்ணன் அம்பானி மற்றும் எங்கள் ஆருயிர் சகோதரர் அதானி அவர்களுக்கும் கமிட்டி சார்பா நன்றிய தெரிவிச்சுகுறோம்.."

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?