உதய் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்குமா?

உதய் திட்டத்தில் தமிழக அரசு 21ஆவது மாநிலமாக சேர்ந்து விட்டதனால் தமிழக மின்வாரியத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் லாபம் என்றுபட்டியலிடப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் கடனான ரூ.81 ஆயிரம் கோடி ரூபாயில் மின்வழங்கல் தொடர்பான கடனான ரூ.36 ஆயிரம் கோடியில் 75 சதவீதத்தை தமிழக அரசிற்கு மாற்றியதனால் 2019 ஆம் ஆண்டிற்குள் 1699 கோடி ரூபாய் வரை மிச்சமாகுமாம்.
அதேபோன்று மின் இழப்பு, எல்இடி பல்ப் வழங்குவது, கிராமப்புற மின்மயமாக்குதல் போன்றவைகளின் மூலம் மின்வாரியத்திற்கு இந்த 11 ஆயிரம் கோடி மட்டுமல்ல மேலும் வரும் என்று கூறப்படுகின்றது.இதனால் மின்விநியோக கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றார்கள்.

இந்த உதய் திட்டத்தை ஏன் மத்திய அரசு வலிய வலிய மாநிலங்களை ஏற்கச்செய்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் குடைந்து கொண்டு இருக்கின்றது.
இதில் எழக்கூடிய பிரச்சனைகளை பட்டிய லிடலாம்.மாநில மின்வாரியங்கள் ஏன் நட்ட மடைந்து கொண்டு வருகின்றன?நட்டமடைந்து கொண்டு வரும் மாநில மின்விநியோக கழகங்களை புனரமைப்பதற்கு பின்னால் என்ன நோக்கம் பாஜக அரசுக்கு இருக்கின்றது?
மாநில அதிகாரத்திற்கு இதனால் பங்கம் ஏற்படுகின்றதா? 
இதற்கு முன் இந்த திட்டம் கடைப்பிடிக்கப்பட்டதா? 
இந்த திட்டம் மாநில அரசினால் ஏற்றுக்கொள்ளப்படுவதால் மின் நுகர்வோ ருக்கு மின்கட்டணம் குறைந்து தரமான மின்சாரம் கிடைக்குமா?
முதலில் இந்த திட்டத்தின் பெயரைப் பார்ப்போம். 
உஜ்வல் அஷ்யூரன்ஸ் டிஸ்காம் யோஜனா என்பதின் சுருக்கம் தான் உதய் திட்டம்.

மாநில மின்விநியோக கழகங்கள் ஏன் நட்டமடைந்து வருகின்றது. 
இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னால் அனைவருக்கும் மின்சாரம் என்ற கோஷத்தை மத்திய அரசு முன்வைத்தது.
அனைவருக்கும் மின்சாரத்தை அளிக்கவேண்டும் என்றால் மின்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போதுமான பணமில்லை என்று கூறி தனியாரும் மின்உற்பத்தியில், விநியோ கத்தில் பங்கேற்க வகை செய்யும் வகையில் மின்சாரச் சட்டம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டது.
இதே நிலையால் தான் அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் சுகாதாரம் என்ற கோஷத்தின் மூலம் தனியார் ஈர்க்கப்பட்டனர். 
ஐந்தாண்டுத்திட்டங்களின் மூலம் மாநில மின் உற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கான ஏற்பாடைச்செய்யும் நிதி ஏற்பாடு மத்திய அரசால் நிறுத்தப்பட்டது.
தனியாரும் மின்சாரத்தை உற்பத்தி மற்றும் மின்விநியோகம் செய்யும்போது அதைஒழுங்குபடுத்திட ஒழுங்குமுறை ஆணை யங்கள் அமைக்கப்பட்டன.
மாநிலங்களில் ஏற்படும் மின்தேவைகளை பூர்த்தி செய்திட மாநில அரசுகளிடம் போதுமான நிதி இல்லாதபோது தனியாரை மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளித்து ஊக்குவித்திட மத்திய அரசு வழிகாட்டியது.அப்படிப்பட்ட நிலையில் வந்தது தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்ட என்ரான் மற்றும் தமிழகத்தில் அமைக்கப்பட்ட ஏழு தனியார் மின்நிலையங்கள்.

35 சதவீத செலவு 5 சதவீத வரவு
மாநில மின்வாரியங்கள் தனியாரிடம் போடப்பட்ட மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தின் மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு விநியோகம் செய்தன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் தமிழக மின்வாரியம் தமிழகத்திற்கு தேவையான 9 சதவீதமான மின்சாரத்தை தமிழகத்தில் அமைக்கப்பட்ட ஏழு மின்நிலையங்களில் இருந்து வாங்குவதற்கு 35 சதவீதமான தமிழக மின்வாரியத்தின் வருமானத்தை இழக்கவேண்டிய தாயிற்று. அம்மின்சாரத்தை தமிழக மின்வாரி யம் விற்பதன் மூலம் வரும் வருமானம் 5 சதவீதம் கூட இருப்பதில்லை.
மத்தியில் ஆண்ட கட்சியால் கொண்டு வந்த இந்த திட்ட நடவடிக்கையினால் மாநில மின்வாரியங்கள் கடுமையான நட்டத்தில் தள்ளப்பட்டன.

மின்சாரச் சட்டம்- 2003 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது இடது சாரிக் கட்சிகள் தவிர அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றனர்.
இந்த சட்டம் நிறைவேற்றிய பின்னால் மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் இறுகின. மின்சாரச் சட்டத்தை ஏற்காத மாநில மின்வாரியங்கள் கடுமையாக மிரட்டப்பட்டன. மாநில மின்வாரியத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்ற நிலையில் மின்சாரச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன.

பத்து ஆண்டுகள் கழித்து அதாவது 2012 இல் மின்சாரச் சட்டம் அமலாகிய பின்னால்மாநில மின்வாரியங்களின் நிதி நிலைகளை ஆய்வு செய்திட ஷஜ்ங்கலு என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி போடப்பட்டது.அக்கமிட்டி தனது அறிக்கையில் மாநில மின்வாரியங்கள் ரூபாய் 2 லட்சம் கோடி அளவிற்கு கடனில் உள்ளதால் மின்விநியோகம் செய்வது கடினமான ஒன்றாக உள்ளது.
எனவே மீட்சி நிதி மாநில மின்வாரியங்களுக்கு அளித்திட வேண்டும்என்றும் அதற்கான ஒப்பந்தம் நிதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநில மின்வாரியங் களுடன் போடவேண்டும் என்றும் நிர்ப்பந்தம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது. 
தமிழகமும் நிதிச்சீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2012 ஆம் ஆண்டு நிதிசீரமைப்பில் கையெழுத்திட்டு 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக மின்வாரியத்தால் பெறப்பட்டது.

2014 இல் பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்தது.ஆட்சிக்கு வந்த பின்னால் மாநில மின்வாரியங்களின் கடன் 4 லட்சம் கோடி ரூபாய்கடனாக மாறியது.உள் நாட்டு நிலக்கரிஉற்பத்தியை அதிகப்படுத்தி வெளிநாட்டிலி ருந்து நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படும் என்றார்கள்.உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி சற்று அதிக மானது.ஆனால் நிலக்கரி வாங்குவோர் இல்லாமல் தேக்கமானது. இதே காலத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்உற்பத்தி செய்யாமல் நிறுத்தப்பட்டன.
இந்தியாவில் உள்ள அனல் மின்நிலை யங்களின் உற்பத்தித் திறன் 60 சதவீதமானது. ஒரு கணக்கை இங்கு சொல்ல முடியும். 2015 ஏப்ரல் மாதம் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 2,68,603 மெகாவாட் ஆக இருந்தது என்றால் அதில் 1,34,892 மெகாவாட் மட்டும் தான் உற்பத்தி செய்யப்பட்டது.காரணம் என்ன என்று ஆய்வு செய்யப் பட்டது. தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்படுத்துவது குறைந்துள்ளது.
அதனால் உற்பத்தித் துறைகளில் தேக்கம் ஏற்பட்டது.
மாநில மின்வாரியங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளதால் மின்சார த்தை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பது ஒரு காரணம். அதனால் மின்சாரத்தை வாங்கமுடியாத நிலை மின்வாரியங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை வாங்காமல் மின்விநியோக கழகங்கள் போனதால் தனியார் மின்உற்பத்தி யாளர்கள் மின்சார உற்பத்தியை நிறுத்தி விட்டனர். 
மின்சார உற்பத்தியை செய்து குறைந்த விலைக்கு விற்பதற்கு தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் என்ன பொதுத்துறை நிறுவனங்களா?

இந்தியாவில் உள்ள மின்உற்பத்தித் திறன் அமைந்துள்ளதை பாருங்கள். தனியார் பங்கு 1,30,559 மெகாவாட் - 42.3 சதவீதம். மாநிலஅரசின் பங்கு 1,01,472 மெகாவாட் - 33.1சதவீதம். மத்திய அரசின் பங்கு 76,182 மெகா வாட் - 24.7 சதவீதமாகும். 
தனியார் மின்நிலையங் களுக்கு முதலீடு 70 சதவீத நிதி என்பது நிதிதிரட்டல் மூலமும் 30 சதவீதம் சொந்த முதலீடுமாகும்.இந்த 30 சதவீத பங்கினைச்செலுத்து வதற்கும் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கித்தான் முதலீடு செய்துள் ளார்கள்.இது ஒரு பக்கம் என்றால் இந்தியாவில் மின்சாரம் கிடைக்காதவர்கள் 30 கோடி பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு மின்சாரம் கிடைப்பது 2022 இல் தான் கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறுகின்றார்.
தனியார் மின்நிலையங்களில் நிறுத்தி வைத்துள்ள மின்உற்பத்தியை மீண்டும் செய்யவேண்டுமென்றால்; உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வாரியம் கடனில் வாங்க வேண்டும். 
மாநில அரசு இந்தக்கடனை தள்ளுபடி செய்யமுடியாது. தமிழக மின்வாரி யம் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் கிடையாதே? 
ஆனால் இரண்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு அளித்துள்ள சலுகைகள் 12 லட்சம் கோடி ஆகும்.முதலாளிகளுக்கு உதவி செய்திடத்தான் இந்த உதய்திட்டம்.இதனால் மின்வாரியத்தின் கடன் மாநில அரசிற்குச்செல்லும்.மாநில அரசின் கடன்சுமை அதிகமாகும்.
இந்த உதய் திட்டம் ஏற்கப்படுவதால் மின்கட்டணம் குறையாது. மின்வாரியத்தில் ஏற்படும் நட்டம் மின்கட்டணம் மூலம் சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ள மின்சாரச்சட்டத்தின் பிரிவை நீக்கினால் ஒழிய மின்கட்டண உயர்வு இருக்காது என்று சொல்லமுடியாது.
மோடி அரசு மாநில மின்வாரியங்களைக் காப்பாற்றிட வேண்டுமென்றால் மாநில மின்வாரியங்கள் மத்திய பொதுத்துறை நிதி நிறுவ னங்களிடம் வாங்கிய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கவேண்டும்.
மின்வாரியங்களின் கடன் மத்திய அரசின் கொள்கையால் தான் ஏற்பட்டது. மின்சாரச் சட்டம் 2003 மூலம் தனியாரிடம் மின்சாரத்தை வாங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களே காரணமாகும். மின்சாரச் சட்டம் 2014 இல் உள்ள ஷரத்துக்கள் விநியோகத்தில் பல தனியார் விநியோகஸ்தர்கள் இருக்கலாம் என்ற திருத்தம் கொண்டு வருவதை நீக்கியிருக்கவேண்டும். 
அப்பொழுது தான் பொதுத்துறையில் மின்வாரியங்கள் நீடிக்கும்.பாஜக அரசோ பொதுத்துறைகளை அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகிறது. 
இதை தமிழக அரசு எதிர்க்காமல் சாத்தியமில்லை.
                                                                                                                                                                                                     -கே.விஜயன்
கட்டுரையாளர்: சிஐடியு. மாநிலதுணைத் தலைவர்
நன்றி:தீக்கதிர்.
========================================================================================
ன்று,
ஜனவரி -16.

  • கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)
  • வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
  • பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)
=========================================================================================
மோடி நவம்பர் 8 அன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபின்பு புதிய ரூபாய்நோட்டுகள், அச்சடிக்கும் அரசாங்கஅச்சகங்களிலிருந்து சிலரது வீடுகளுக்கு நேரடியாக எடுத்துச்சென்று கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 
இது குறித்து வருமானவரித்துறை மற்றும்உளவு அமைப்பின் அதிகாரிகள் புலனா ய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டில் வந்துள்ள செய்தி களின் விவரங்கள் வருமாறு:சென்ற மாதம் தெற்கு தில்லியில் உள்ளமார்க்கெட் ஒன்றின் அருகில் ஒரு நபரை20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்த ரூபாய் நோட்டுகள் மகாராஷ்ட்ராமாநிலத்தில் உள்ள நாசிக் அச்சகத்தி லும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளசல்போனி அச்சகத்திலும் அச்சடிக்கப் பட்ட நோட்டுகளாகும்.

அந்த அச்சகங் களின் தாள்களில் கட்டி அரசாங்க முத்திரைகளுடன் அந்த நோட்டுகள் இருந்திருக் கின்றன. எனவே இதுகுறித்து வருமானவரித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் கிருஷ்ண குமார். அவர் கிரேட்டர் கைலாஷ்-1 பகுதியில் எம் பிளாக் மார்க்கெட் டில் ஒரு நபரை சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட் டார்.
அநேகமாக அவர் பணத்தை பரிமா ற்றம் செய்திடும் கூரியர் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக வருவாய்த்துறை மற்றும் உளவு அமைப்பின் அதிகாரிகள் இது எப்படி நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகத்தெ ரிவித்தார்கள். 
ஆனால் அதே சமயத்தில் இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
நாசிக் மற்றும் சல்போனி ஆகிய இரு அச்சகங்களும் நவம்பர் 8 அன்று பிரதமர் மோடி ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததற்குப்பின்னர் சுமார்52 மில்லியன் நோட்டுகளை ஒவ்வொரு நாளும் அச்சடித்திருக்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?