4ஜி அலைவரிசை

அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. 
இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 
39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர். 
மொபைல் அழைப்புகள் இடையே 'கட்' ஆவதை நிறுத்த 1.5 லட்சம் இணைப்பு கோபுரங்கள் புதியதாக நம் நாட்டில் நிறுவப்படும். ஏற்கனவே, சென்ற ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், தொலை தொடர்பு நிறுவனங்கள், 1.3 லட்சம் இணைப்பு கோபுரங்களை நிறுவியுள்ளன. 
இந்தியாவில், இன்னும் 95 கோடி பேர் இணைய தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர். 

Assocham-Deloitte என்ற இரு நிறுவன ஆய்வமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் விலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், உலகிலேயே மொபைல் டேட்டா கட்டணங்கள், இந்தியாவில் தான் குறைவாக இருந்தாலும், இணைய இணைப்பின்றி 95 கோடி பேர் இருப்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. 
ஆனால், நிச்சயம் வெகு விரைவில் பலர் இணையத் தொடர்பினைப் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
நிதிப் பரிமாற்றம் அனைத்தும் டிஜிட்டலாக இருக்க வேண்டும் என்ற இலக்கு, நடப்பு 2017 ஆம் ஆண்டில் பலம் பெறும். 21 ஆண்டுகளுக்கு முன் இணையம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்றைய நிலையில், 133 கோடி மக்களில், 37 கோடி பேர் மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் இந்த நிலையில் பெரிய அளவில் மாற்றம் வரும்.
சீனாவில் அதிவேக 4ஜி நெட்வொர்க் இணைப்பு பயனாளர்களின் எண்ணிக்கை 73.4 கோடியைத் தாண்டியுள்ளது. வர்த்தக ரீதியாக 5ஜி இணைப்பு, வரும் 2020 ஆம் ஆண்டில் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஜூன் வரையில், சீனாவில் இணையத்தைப் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 71 கோடி. இது சீனாவின் ஜனத்தொகையில் 51.7% ஆகும். 
தொடர்ந்து பல புதிய நிறுவனங்கள், மொபைல் போன் விற்பனைச் சந்தையில் புகுந்து கலக்கி வருகின்றன. தங்களுடைய புதிய மாடல் போன்கள் குறித்துப் பலவகையான குறிப்புகளை, பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக வெளியிட்டு வருகின்றன. 
மொபைல் போன் வாங்குபவர்களும், மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். 
அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். 
நாம், உடனே, நான்கைக் காட்டிலும், எட்டுதானே அதிக மதிப்புடையது என்ற எண்ணத்தில், ஆக்டா கோர் ப்ராசசரே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறோம். இது அனைத்து போன்களுக்கும் பொருந்தாது. இதன் அடிப்படையில் ப்ராசசரின் இயக்க தன்மை குறித்து முடிவெடுப்பது தவறாகும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தொழில் நுட்ப விவகாரங்கள் என்றைக்கும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளன. எனவே, வியாபாரத்தில் உள்ள ஒரு நிறுவனம், தொழில் நுட்ப விஷயங்களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர் ஒருவர், என்ன வாங்குவது என்ற முடிவினைச் சரியாக எடுக்க முடியும். 

“அதிக எண்ணிக்கையில் தரப்படுவதுதான் சிறந்தது” என்பது எந்த ஒரு சராசரி மனிதனும் எண்ணக் கூடியதே. ஆனால், அது எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. கேமராவைப் பொறுத்தவரை, இதே போல மெகா பிக்ஸெல் திறன் குறித்து கணிக்கிறோம். 
ஒரு கேமராவின் மெகா பிக்ஸெல் திறன் அதிகமாக இருப்பதாலேயே, அதன் வழி எடுக்கப்படும் படங்கள், மிகச் சிறந்தவையாக இருக்கும் என்ற முடிவிற்கு வர முடியாது. அதே போல, அதிக கோர் இயக்கம் இருப்பதாலேயே ஒரு ப்ராசசர் மிகச் சிறந்ததாக இருக்க முடியாது. ப்ராசசர் ஒன்றில் ஒவ்வொரு கோர் பகுதியும், ஒரு மையச் செயலகமாகச் செயல்படும். 
அதனால், அதிக எண்ணிக்கையில் கோர் பகுதியை ப்ராசசரில் இணைப்பதால், அது வேகமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அனைத்து கோர் பிரிவுகளும் இயங்கும் வகையில், சாப்ட்வேர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டிருந்தாலே, அது சிறந்ததாகவும் வேகமாகவும் செயல்பட வழி தரும். எடுத்துக் காட்டாக, எட்டு சமையல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவினைத் தயாரிப்பதில் ஈடுபட்டால், அனைவரின் சக்தியும், அந்த உணவினைத் தயாரிப்பதில் ஈடுபடும் வகையில் நாம் அவர்களை நிர்வாகம் செய்திட வேண்டும். 
இல்லை எனில், பலரின் உழைப்பின் பலன் அந்த உணவின் தயாரிப்பில் இருக்காது. 
எட்டு கோர் ப்ராசசரின் செயல் தன்மையைப் பல காரணிகள் நிச்சயிக்கின்றன. அந்த ப்ராசசரின் செயல் வேக இடைவெளி, (frequency), அனைத்து கோர் இயக்கங்களையும் திறமையாகச் செயல்படுத்தும் சாப்ட்வேர், சிப் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ஆகிய அனைத்தும் இணைந்தே ப்ராசசரின் செயல் தன்மையை உறுதி செய்கின்றன. 
இவற்றில், ப்ராசசர் ஒன்றின் செயல் தன்மையை முழுமையாகப் பெறவிடாமல் கெடுப்பது அதனை இயக்கும் சாப்ட்வேர் தொகுப்பாகத்தான் இருக்கும். 

எடுத்துக் காட்டாக, மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், அந்த கேம் இயங்க இயக்கப்படும் சாப்ட்வேர், எட்டு கோர் பிரிவுகளையும், ஒரே நேரத்தில் முழு திறனையும் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். 
ஆனால், அனைத்து கேம்ஸ்களிலும் இது போல அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

அது போலவே, அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ப்ராசசர் சிப் ஒன்றின் எட்டு பிரிவுகளையும் வேலை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 
மொபைல் போன்களுக்கான ப்ராசசர் சிப்கள் பெரும்பாலும் ஏ.ஆர்.எம். (ARM) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. 

ஏனென்றால், இந்நிறுவனம் Qualcomm, Samsung, NVIDIA, and Mediatek போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவனங்களுக்கு சிப் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்பதனை வழங்கி அதற்கேற்ப சிப்களைத் தயாரிக்க அனுமதி கொடுத்து பெற்றுக் கொள்கிறது. 
அடுத்த இடத்தில் இருப்பது இண்டெல். ஏ.ஆர்.எம். நிறுவனம் தான், முதன் முதலில், இரண்டு குவாட் கோர் ப்ராசசர்களை (மொத்தத்தில் எட்டு) கொண்டு சிப் வடிவமைப்பதில் ஈடுபட்டது. 
இவற்றில் ஒரு குவாட் கோர் பிரிவு அதிக பட்ச செயல் திறன் தர பயன்படுத்தப்படும். இன்னொரு குவார் கோர் பிரிவு, பேட்டரி, உஷ்ணம் போன்றவற்றைக் கண்காணிக்கும். 

பொதுவாக இந்த இரண்டு குவாட் கோர் பிரிவுகளும் தனித்தனியே தான் செயல்படும். இன்றைக்கு சந்தைக்கு வரும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள். ஏ.ஆர்.எம். தந்த கட்டமைப்பில் குவால்காம், சாம்சங், மீடியாடெக் போன்ற நிறுவனங்கள் தயாரித்த சிப்களுடன் தான் நமக்குக் கிடைக்கின்றன. அசூஸ் மற்றும் லெனோவா போன்ற, இண்டெல் நிறுவனத்துடன் தாங்கள் தயாரிக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே, இண்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்களைப் பயன்படுத்துகின்றன. 
இண்டெல், குவாட் கோர் ப்ராசசர்களுடன் நிறுத்திக் கொண்டது. ஏ.ஆர்.எம். நிறுவனம் இரண்டு குவாட் கோர் அடங்கிய ப்ராசசர்களைக் கொண்டுள்ளது. இண்டெல் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு, தனியே ஒரு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட ப்ராசசர்களைக் கொடுத்து வருகிறது. 
எனவே, ஆக்டா மற்றும் குவாட் கோர் ப்ராசசர்களிடையே செயல் திறன் வேறுபாடு அவை குறிப்பிடும் எண்களில் இல்லை. 

அதனால் தான், சில மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள ப்ராசசர் சிப் குறித்து குறிப்பிடுகையில், அவை “உண்மையான ஆக்டா கோர் (“True octa-cores”,)” எனக் குறிப்பிடுகின்றன. அப்படிக் கூறுவதன் மூலம், தங்களுடைய சிப்களில், எட்டு கோர் பிரிவுகளும் முழுமையான சக்தியைத் தரும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கின்றன. 
ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், பெரும்பாலான அப்ளிகேஷன்கள் முழுமையான பலன் தரும் வகையில் இயங்க, எட்டு கோர் பிரிவுகளும், ஒரு ப்ராசசரில் இயங்கத் தேவை இல்லை என்பதே. அண்மையில் வந்திருக்கும் சில ஆண்ட்ராய்ட் விளையாட்டுகள் கூட குவாட் கோர் ப்ராசசர்களில் சிறப்பாக இயங்குகின்றன. 
ஆனால், இவை இயங்க நல்ல கிராபிக்ஸ் ப்ராசசர் துணை இருக்க வேண்டும்.
குவாட் மற்றும் ஆக்டா கோர் ப்ராசசர்களுக்கிடையே உண்மையிலேயே இயக்க திறன் வேறுபாடு உள்ளதா என்ற சர்ச்சை இருந்தாலும், இந்த மாயத் தன்மையை பல மொபைல் போன் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவர பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை. எனவே, வாங்க இருக்கும் மொபைல் போன் திறனை, அதன் ஆக்டா அல்லது குவாட் கோர் ப்ராசசரைக் கொண்டு மட்டும் முடிவு செய்திட வேண்டாம். 

மற்ற வசதிகளைத் தரும் ஹார்ட் வேர் பாகங்களும் முக்கியமானவையே. எனவே, மொத்த செயல் திறனைக் கொண்டு தான், மொபைல் போன் ஒன்றை எடை போட வேண்டும். 
இப்போதெல்லாம், இணைய தளங்களில், பலர் மொபைல் போன் திறன் குறித்தும், குறிப்பிட்ட போன் ஒன்றை, அதே ஹார்ட்வேர் அமைப்பில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிட்டும் தகவல்களைப் பதிந்து வழங்குகின்றனர். 

இவற்றைப் படித்து நாம் மொபைல் போன் ஒன்றின் திறனை முடிவு செய்திடலாம்.
======================================================================================
ன்று,
பிப்ரவரி-17.
  • முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது(1911)
  • முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது(1929)
  • காம்பியா விடுதலை தினம்(1965)
  • அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)
  • =======================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?