குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே மோடி அரசு

மோடியும் மத்திய அரசும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.
பலர் இதை சுட்டிக்காண்பித்தும் மோடி அரசு திருந்துவதாகவே தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ,சசிகலா சட்டவிரோதமாக ச.ம.உ.க்கலையா அடைத்து வைத்ததை வேடிக்கை பார்த்தும்,ரவிசங்கர்  நதிக்கரையை அசிங்கப்படுத்துவதாக சுற்று சூழல் துறை மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போது ரவிசங்கரை ஆதரித்து மோடி சென்றதும் பழையன என்றால்,
இன்று மக்களால் மோசடி சாமியார் எனப்படும் ஜக்கி மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர வசதி களிக்கூடம் கட்டியும்,யானை வழித்தடங்களை,ஏரிகளை ஆக்கிரமித்துள்ள வந்துள்ளார் என்றும்,அப்பாவிகளை அதுவும் பணக்காரர்களை மூளைசலவை செய்து சாமியார்களாக்கி அவர்களது சொத்துக்களை ஆட்டையை போடுகிறார் என்றும்,தனது மனைவியையே கொலை செய்தார் எனவும்  மாபெரும் குற்றசாட்டுகளை சுமந்துள்ளார் .

அவர்   ஆன்மீகத்தின் பெயரால் வனப் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதையும் பழங்குடியினர் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டதையும் விலங்குகளின் வாழ்நிலை சீர்குலைக்கப்பட்டதையும் அங்கீகரிக்கலாமா,வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து பெரிய சிலையை கோடிகளில் கட்டி அதை திறக்க இந்திய பிரதமர் வருவது எவ்வளவு வெட்கக்  கேடானது  .

தமிழகத்தின் உயிர் பிரச்சனையான காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சனைக்கெல்லாம் என்னவென்று கேட்காத மோடி காட்டு நிலங்களை கபளீகரம் செய்யும் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி எப்படி வரலாம்?

கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமரும் முதல் வரும் பங்கேற்கக்கூடாது.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 13 லட்சம் சதுர அடி பரப்பில் ஈஷாயோகா மையம் சார்பில் அதன் தலைவர் ஜக்கிவாசுதேவ் பல்வேறு கட்டடங்களை சட்டவிரோதமாகக் கட்டிவருவது பற்றிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற அரசாணையையும் அவர் மதிக்கவில்லை என்ற நிலையில், பிப்.24 அன்று இங்கு மகாசிவராத்திரி விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுதொடர்பாக புதனன்று (பிப்.22) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிஅரிபரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் “ஒரு பகுதிமக்களின் ஆன்மிக விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. 

இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம். மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கிறபோது, இந்த விழாவில் பிரதமரும் முதலமைச்சரும் பங்கேற்பது, விதி மீறல்களை அங்கீகரிப்பதாகிவிடும். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடத் தூண்டுவதாகிவிடும்,” என்று கூறினர்.

வழக்குகள் உள்ள நபரின் விழா
2012 நவம்பர் 5ல் நகரம் மற்றும் ஊர் திட்டத் துறை துணை இயக்குநரால் பிறப்பிக்கப்பட்ட, பணிகளை நிறுத்திவைக்கும் ஆணை, கட்டுமானங்களைப் பூட்டி ‘சீல்’ வைத்து இடிப்பதற்காக என அதே ஆண்டு டிசம்பர் 24 அன்றுபிறப்பிக்கப்பட்ட ஆணை, இந்தக் கட்டுமானங்களால் வனப்பகுதியில் மனிதர் - விலங்குகள் முரண்பாடு ஏற்படும் அபாயம்இருப்பது பற்றி வனத்துறையின் கோவை மாவட்ட அலுவலர் அக்டோபர் 12 அன்று வனத்துறை தலைவருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் நகல்களை செய்தியாளர்களுக்குக் காட்டினார் நீதிபதி அரிபரந்தாமன். 

“இதுபோன்ற வழக்குகள் உள்ள இடத்திற்கு பிரதமர் வருவது சரியல்ல. 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது,” என்றார் அவர்.

மனைவியைக் கொன்றவர்  ஜக்கி?
ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜி என்றவிஜயலட்சுமியைக் கொலை செய்ததாக பெங்களூரு காவல்துறை பதிவு செய்த வழக்கு கோவை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 
அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாரா என்பதும் தெரியவரவில்லை, விசாரணை என்ன ஆனதுஎன்பதும் தெரியவில்லை. அது தொடர்பானரிட் மனுவுக்கு பதிலளித்து ஈஷா மையம் தாக் கல் செய்த மனுவில் அந்தக் குற்றச்சாட்டை அவர்மறுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அரிபரந்தாமன், “இப்படிப்பட்ட வழக்குகள் உள்ளஒருவரது விழாவுக்கு பிரதமர் வருவது முறையல்ல,” என்றார்.
இது போல் பல சாமியார்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால் பிரதமரே விழாவுக்கு வருவது சட்டத்திற்குப் புறம்பான செயல்களை அரசாங்கமே ஆதரிப்பதாகிவிடும். 
தமிழக அரசுதான் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது என்பதால் முதலமைச்சர் பங்கேற்பதும் சரியல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

தொடரும் சட்டமீறல்கள்
ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “பல ஆண்டுகளாகவே ஈஷா மையம் இப்படிப்பட்ட சட்ட மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உரிய சட்டப்பூர்வ அமைப்புகளின் அனுமதி பெறாமலே கட்டுமானங்கள் நடந்துள் ளன,” என்றார்.“வனப்பகுதியில் 44 ஏக்கர் நிலம் பினாமியாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பல அமைப்புகள் அதை எதிர்த்து வந்துள்ளன. 

ஆனால் அந்த இடத்தில்தான் தற்போது விழாவுக்கான வரவேற்பு வளைவு கட்டப்பட் டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.இது போன்ற கட்டுமானங்களுக்கு மாவட்டஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்றவிதியே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான். 

ஈஷா மையத்தின் அத்துமீறலால் இப்பகுதியின் நீராதாரம், வாழ்வாதாரம் ஆகியவையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

ஆக்கிரமிப்புகள் ஊக்குவிக்கப்படும்
“மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடைபெற்றிருக்கிறபோது நிச்சயமாக அதில் பிரதமரும் முதலமைச்சரும் கலந்துகொள்ளக்கூடாது,” என்றார் நல்லகண்ணு.தமிழகத்திலே சுவையான, நல்ல குடிநீர் சிறுவாணி நீர்தான். அதைச் சுற்றிதான் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. வன விலங்குகளுக்குத் தீங்கு ஏற்படும். யானைத் தடம் மறிக்கப்படுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

காருண்யா, சின்மயா உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளும் நடந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளால் நீர்ப்பிடிப்புப் பகுதி மொத்தமும் பாழாகிவிடும். மற்ற அமைப்புகளும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட முயல்வார்கள் என்று எச்சரித் தார் அவர்.‘

பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் சுந்தரராஜ், வழக்குரைஞர் சுந்தரராசன் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சட்டவிரோதத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் பிரதமர் நடந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வலியுறுத்தியும் நாளை (பிப்.24) மாலை 5 மணிக்கு கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இயக்கங்களும், தலித் இயக்கங்களும் இணைந்து மாபெரும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

‘‘எங்க கிட்ட கேட்டிருந்தா உங்களுக்கு நாங்க நிலம் குடுத்திருப்போம்’’ என்று பேரம் பேசிய ஈஷா யோகா மையத்தினரிடம் அடிபணியாமல் ஒரு குடிசை கூட இல்லாத பழங்குடி மக்கள் எதிர்த்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் வனவளம், நீர், நிலம் என இயற்கையைச் சூறையாடிய ஈஷா யோகா மையத்தில் பிரதமரின் வருகைக்காக அனைத்து அரசுத்துறைகளும் அணிவகுத்து பணிந்து குனிந்து நிற்கின்றன. கோவையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சிறுவாணி சாலையில் உள்ள 17 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. 

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பரப் பலகைகள் பொக்லைன் மூலம் முன்னறிவிப்பின்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. சாலையோரம் இருந்த இளநீர் கடைகள் உட்பட அப்புறப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் அந்த சாலையில் விரைந்து கொண்டிருக்கின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பறந்து வந்து பிப்ரவரி 24 வெள்ளியன்று கலந்து கொள்ளவிருக்கும் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளில் சிறுதுளி. ஈஷா யோகா மையத்தில் ஆன்மீகம் என்கிற போர்வையில் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு பிரதமரின் வருகை மேலும் கூடுதல் அங்கீகாரம் அளிப்பதாகவே கருதப்படுகிறது.

‘‘யான வழித்தடத்த அடச்சிட்டாங்க’’
ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள்- அவர்களது மூதாதையர் காலம் தொட்டு பயன்படுத்தி வந்த நீராதாரங்கள், வனவளம் அனைத்தும் பறிபோனதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

ஈஷாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உதவியுடன் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மடக்காடைச் சேர்ந்த முத்தம்மாவை (46) ஈஷாவின் ஆட்கள் அணுகி, வழக்கு எதுக்கு ஜக்கி வாசுதேவுடன் பேசியிருந்தாலே உங்களுக்கு இடம் கொடுத்திருப்போமே எனத் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து முத்தம்மா கூறுகையில், ‘நாங்க எதுக்கு சார் அவர்கிட்ட போய் நெலம் கேக்கணும், எங்களுக்கு நெலம் தரவேண்டியது அரசாங்கம். இவர் யாரு நடுவில. வீட்டுக்கு நிலம் மட்டுமா பிரச்சனை; தண்ணி வராம தடுத்திருக்காங்க, யான வழித்தடத்த அடைச்சிட்டாங்க, எங்க காட்டோட அமைதியை கெடுத்திட்டாங்க. இதுக்கெல்லாம் சேர்த்து தான் கேசு போட்டிருக்கிறோம்" என்றார். 

ஈஷா மையத்தின் எதிரில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட மடத்துவயல் குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இந்த குளத்துக்கு நீராதாரமாக விளங்கும் நீலிவாய்க்கால், ஏழுவாய்க்கால் ஆகியவை ஈஷா மையத்தால் தடுக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு தொண்டாமுத்தூர் வரை நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நொய்யல் ஆற்றுக்கான நீர் வரத்தும் தடைப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவிய போதிலும் நீலிவாய்க்காலில் சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீருக்காக தினமும் யானைகள் வருவதாக பழங்குடியின பெண் ரங்கநாயகி தெரிவித்தார். 

இவரது குடிசைக்குப் பின்புறம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இங்குள்ள 30 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகளுக்கு பட்டா இல்லை. மடக்காட்டில் 65 பழங்குடியினருக்கு 1.38 ஏக்கர் நிலத்தில் வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளைத் தவிர வேறு நிலம் இல்லை. இது போல் முள்ளங்காட்டில் உள்ள 350 தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் 5 குடும்பங்கள் வரை வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

வெள்ளி கற்பகம்மாள் தம்பதியினர் திருமணமான தங்களது 4 பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்.

அனைத்தும் பினாமி பெயர்களில்....
இதே பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாத படித்த இளைஞர் கோவை காந்திபுரத்தில் சுயதொழில் செய்து வருகிறார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறுகையில், ஈஷாவிடம் உள்ள நிலங்களில் பெரும்பகுதி நிலச்சீர்திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்பட்டவை. 
இந்த நிலங்களுக்கு மூல ஆவணம் இருக்காது. அனைத்தும் பினாமி பெயர்களில் உள்ளன. எங்கள் தாத்தா பெயரில் கூட நிலம் உள்ளது. 
அதில் ஒரு பகுதியை கூட ஈஷா வாங்கியிருக்கிறது என்றார். 

மடக்காடு பழனிசாமி (57) கூறுகையில், ‘‘2000 க்கு பிறகு தான் அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். ஏக்கர் ரூ.60 ஆயிரத்துக்கு ஆரம்பத்தில் கொடுத்தார்கள். பிறகு ஏக்கருக்கு ரூ.65 லட்சம் வரை கொடுத்தார்கள். இப்போது ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார்.

வனத்துறைக்கு சம்பந்தமில்லையா?

வனப்பகுதியின் அமைதியைக் குலைக்கும் வகையில் ஒளிவெள்ளத்துடன் ஓசையெழுப்பும் நிகழ்ச்சியை நடத்த அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது பலரது கேள்வியாக உள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஆர்.கலையரசு அனுப்பிய மனுவுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.சண்முகம் தனது துறைக்கு சம்பந்தமில்லை என பதிலளித்துள்ளார்.

 மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியத்திடம் கேட்ட போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலையோ கட்டுமானங்களோ இல்லை. யானை வழித்தடம் குறித்து ஆய்வு செய்து தான் கூற முடியும் என்றார். ஆனால் ஈஷா யோகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் அருகில் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகர் அலுவலகத்தையும், மறுபுறம் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இருட்டுப்பள்ளம் சோதனைச் சாவடியையும் கடந்து செல்ல வேண்டும். 

இங்குள்ள அறிவிப்பு பலகையில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஈஷாவுக்கு அது பொருந்தாது என்பது போல் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். நகர் ஊரமைப்புத் துறை அலுவலர் செல்வராஜிடம் இது குறித்து கேட்டபோது, சிலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார். 

அதனுடன் 2 மண்டபம் கட்ட அனுமதி கோரியுள்ளனர். 

முறையான ஆவணங்கள் வழங்கப்படாததால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கும் உள்ளது. இந்த பகுதியில் நடக்கும் எந்த ஒரு கட்டுமானத்திற்கும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி தேவை. 

அப்படி எந்த அனுமதியும் இது வரை ஈஷா மையம் பெற்றதாக தகவல் இல்லை எனக் குறிப்பிட்டார்.உயர்நீதிமன்றத்தில் முத்தம்மா தாக்கல் செய்துள்ள மனுவில், 2005 முதல் 2015 வரை பத்து ஆண்டுகளில் மனிதர்கள் - வனவிலங்கு இடையேயான மோதலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வனத்துறையின் ஒரு அறிக்கையை குறிப்பிட்டுள்ளார். 

அதில் 2005ல் உயிரிழப்பு-4, காயம்-2, இழப்பீடு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் எனவும், இது 2015ல் உயிரிழப்பு-18, காயம்-19 இழப்பீடு ரூ.25 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குக்கு இடைக்கால தடைபெற்று நடத்தப்படும் விழாவில் தான் பிரதமர் பங்கேற்க உள்ளார். இது போல் பசுமைத் தீர்ப்பாயத்தில் அவர் தொடுத்துள்ள வழக்கில், விளக்கம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் ஈஷா பவுண்டேசன், 112 அடி உயரமான ஆதிசிவன் சிலையை நிறுவியுள்ளது. 
இந்த சிலையை வரும் பிப்ரவரி-24ந் தேதி தாங்கள் நேரில் வந்து திறந்து வைக்க இருப்பதாக ஈஷா இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தமிழக அரசு அதிகாரிகளும் தங்களின் வருகையை உறுதிப்படுத்தும் விதத்திலேயே பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

ஈஷா நிறுவனம், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்வதற்கு இடையூறாக ஒரு லட்சம் சதுர அடிக்கு மேலாக பிரம்மாண்டமான கட்டுமானத்தை உருவாக்கியிருக்கிறது. 
இந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் வகையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருவதுடன், இத்தகைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள இடம் நன்கு விளையக் கூடிய நன்செய் நிலங்கள் ஆகும். மேற்படி கட்டுமானப் பணிகளுக்கு எந்தவொரு துறையிடமும் ஈஷா நிறுவனம் அனுமதி பெறவில்லை.

 பல்லுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் பணிகளை மேற்கொண்டதால், இதை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். 

ஆனால் நடவடிக்கை இல்லை. 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவர் நீதிப் பேராணை மனு எண் று.ஞ.சூடி.3550 டிக 2017 தாக்கல் செய்தார். இந்த ரிட்மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 17ஆம் தேதி ஈஷா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

இத்தகைய நிலையில், தாங்கள் வருகை தந்து சிலையை திறந்து வைப்பது அரசின் அனுமதியின்றி, சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலையை நாட்டின் பிரதமரே திறந்து வைத்தார் என்ற அவப்பெயர் தங்களுக்கு ஏற்படும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும், ஈஷா நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அரசு மற்றும் நீதித்துறையில் ஈஷா நிறுவனம் இத்தகைய செல்வாக்கைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 
எனவே, தாங்கள் பிப்ரவரி 24ந் தேதி கோவை ஈஷா பவுண்டேசனில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
======================================================================================
ன்று,

பிப்ரவரி-24.


  • மெக்சிகோ கொடி நாள்
  • கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)
  • எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
  • கொடுங்கோலன் ஹிட்லர் நாசிக் கட்சி ஆரம்பித்தான் (1920)
=======================================================================================
விளையாட்டுப் பொம்மையா ரிசர்வ் வங்கி?

தில்லியின் சத்தல்பூர் பகுதியில் ஒரு கால்சென்டரில் கஸ்டமர் கேர் அலுவலராக பணிபுரியும் ரோகித் என்பவர் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். 
8 ஆயிரம் ரூபாய் கேட்டு பொத்தான்களை அழுத்தி காத்து நின்றவரின் கைகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் நான்கு வந்து விழுந்தது. புத்தம் புதிதாக இருந்த அந்த ரூபாய் தாள்களை பார்த்து ரோகித் அதிர்ச்சியில் உறைந்தார். 

நான்கு தாள்களிலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று பொறித்திருந்தது. 

அது கள்ள நோட்டு என்று கூட சொல்ல முடியாது. குழந்தைகள் வைத்து விளையாடும் ஒரு பொம்மை தாள். ஏடிஎம் மையத்தில் அதிகாரப்பூர்வமாக வந்து விழுந்த இந்த தாள்களை வைத்துக் கொண்டு அவர் எதுவும் செய்ய முடியாது.காவல்நிலையத்திற்கு சென்றார். அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். முதலில், இப்படியெல்லாம் போலியான தாள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். பின்னர் நேரடியாக ஆய்வு செய்த போது அது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள். 



பிப்ரவரி 6ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 22ந்தேதி தான் வெளி உலகிற்கு தெரியவந்தது.




நவரச நாயகன் பிரதமர் மோடி இந்திய தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுகொண்டிருப்பதன் லட்சணம் இவ்வளவுதான்.உலகின் மிகப்பிரம்மாண்டமான மத்திய வங்கிகளில் ஒன்றான இந்திய ரிசர்வ் வங்கியை இதைவிட வேறு எந்தவிதத்திலும் கேவலப்படுத்த முடியாது. 

எப்படி இந்த தாள்கள் ஏடிஎம் இயந்திரத்திற்குள் சென்றன என்பது குறித்து காவல்துறையினரும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

மறுபுறத்தில் கறுப்புப் பணமோ, கள்ளப் பணமோ குறைவதற்கு பதிலாக இருமடங்கு ஆகியிருக்கிறது என்ற உண்மை விபரங்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.இவையெல்லாம் ஒரு புறம் இருக்க கடந்த நவம்பர் 8ந்தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி இந்தியாவின் அனைத்து தளங்களிலும் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகள், நடுத்தர மக்கள்தான் புலம்புகிறார்கள் என்று பாஜக அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் விதவிதமாக மறுப்புரையும், பதிலுரையும் தந்துகொண்டிருக்கிறார்கள்.



இந்தியாவில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் பஜாஜ் இந்தப் பிரச்சனையில் மோடியை விலாசித் தள்ளியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். கடந்த பிப்ரவரி 17ந்தேதி கார்ப்பரேட் நிறுவனங்களின் அமைப்புகளில் ஒன்றான நாஸ்காமின் ஆண்டுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்றுப் பேசிய ராஜீவ் பஜாஜ் ‘‘ஒரு பிரச்சனைக்கு சொல்லப்படுகிற தீர்வு மிகச் சரியானது என்றால் அது வெண்ணெய்யில் கத்தி இறங்குவது போல மிக எளிதாகச் செல்ல வேண்டும்; ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் அதைவிட ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இல்லை என்று பொருள், பண மதிப்பு நீக்கத்தைப் போல....’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் இருசக்கர வாகன துறையில் விற்பனை பெருமளவில் சரிந்திருக்கிறது என்ற எரிச்சலில்தான் ராஜீவ் பஜாஜ், பிரதமரின் முடிவை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார்.இந்திய கார்ப்பரேட்டுகளில் மோடியை விமர்சிக்கத் தயங்காத குழுமம் என்று பெயர் பெற்றது பஜாஜ் குழுமம். 

2002ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் நடந்த மிகக்கொடிய இனப்படுகொலையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அப்போதைய பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சித்தார். இதனால் எரிச்சலடைந்த மோடி, ஓராண்டு கழித்து 2003ல் இந்திய தொழிற்கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசும்போது குஜராத்திற்கு தொழில்துவங்க வாருங்கள்; 
சட்டம் - ஒழுங்கை சீர்செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.பணமதிப்பு நீக்கத்தால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள அளவிட முடியாத நெருக்கடியே நாடு முழுவதும் இருசக்கர வாகன விற்பனையில் பிரதிபலித்துள்ளது என்கிறார் ராஜீவ் பஜாஜ். கடந்த டிசம்பரில் மட்டும் 22.04 சதவீதத்திற்கு இருசக்கர வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதைப்பற்றி கூறும்போது ‘‘இந்தியாவில் தயாரிப்போம்(ஆயனந in ஐனேயை) என்றார்கள்; ஆனால் இன்றைக்கு நிலைமை ‘‘பைத்தியக்கார இந்தியாவாக’’ (ஆயன in ஐனேயை) இருக்கிறது என்று ராஜீவ் பஜாஜ் கடுமையாக சாடியிருக்கிறார்.



தொழில்துறையின் லட்சணம் இதுவென்றால் கிராமப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை கடந்த மூன்று மாதத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. வறட்சி ஆண்டுகளைவிட 2016-17ம் ஆண்டில் நெல், கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தி 8 சதவீதம் அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூறினாலும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களின் உண்மை வருமானம் எந்தவிதத்திலும் உயரவில்லை என்று ‘தி மின்ட்’ பத்திரிகை கூறுகிறது. 

கிராமப்புற மக்களின் கைகளில் பணம் புழங்குகிறது என்பதையும் அவர்களிடம் வாங்கும் சக்தி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் பெறுகிற கூலியின் மதிப்பை வைத்துதான் கணக்கிட முடியும்; அப்படி பார்க்கும்போது உண்மைக் கூலியின் மதிப்பு முன்பு இருந்ததைவிட வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையே நிலைமை என மின்ட் பத்திரிகை விவரித்துள்ளது. 

அதுவும் கூட 2016-17ம் ஆண்டில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.53 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்ட போதிலும், நிலைமை இதுதான்; கிராமப்புற வேலை உறுதித்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால் பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகான இந்த மூன்று மாதங்களில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மரணத்தை தழுவியிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 

2016 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் அல்லாத இதர தொழிலாளர்களின் தினக்கூலியில் 6 சதவீதம் அளவிற்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரசின் கணக்கீடுகள் கூறுகின்றன. 

ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வறட்சி ஆண்டு என ஒப்புக்கொள்ளப்பட்ட 2015 டிசம்பருடன் ஒப்பிடும்போது குறைவே ஆகும்; அது மட்டுமல்ல, 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் குறைவு;



2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் குறைவு என மின்ட் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.தொழிலும் விவசாயமும் பணமதிப்பு நீக்கத்தால் இப்படி சீரழிவின் பிடியில் சிக்கியிருக்க, அதன்தொடர் விளைவாக விலைவாசி உயர்வு மிகக்கடுமையானதாக மாறி வருகிறது. தலைநகர் தில்லியில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

இது இன்னும் தீவிரமாகி நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் தற்போது நிலைமையை சீராக்கிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகிகளும் மத்திய அரசின் பொருளாதார துறை செயலாளர்களும் இடைவிடாமல் பேட்டி அளித்து வருகிறார்கள். 

ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வீழ்ச்சியின் தீவிரம் புரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தது இப்போதுதான் நிரூபணமாகத் தொடங்கியிருக்கிறது. 

வீழ்ச்சியின் பிடியில் இந்தியா வேகமாக பயணிக்கத் துவங்கியிருக்கிறது.
================================================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?