இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 31 மார்ச், 2017

தத்தளிக்கும் பல்கலைகள்


ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலாவைத் தொடர்ந்து நாட்டின் முதன்மை பல்கலைக் கழகமான ஜவஹர்லால் நேரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருதலித் ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன்தற்கொலை செய்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நமது கல்விமுறையில் பேணி வளர்க்கப்பட்டு வந்த மதச்சார்பற்ற கருத்தோட்டம், உலகளாவிய பார்வை, கருத்துரிமை, கல்வி வளாக ஜனநாயகம், மாணவர் ஒற்றுமை, உள்ளிட்டவைகள் நசுக்கப்பட்டு வருவதும், மேலும், கல்வி வளாகங்களில் இன்றும் தொடரும் சாதிய பாகுபாடும் இதுபோன்ற மரணங்களுக்கு முக்கியக் காரணம். கல்வியின் அவசியத்தை உணர்ந்த உலகின்பல நாடுகள் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவந்து, கல்வியின் தரத்தையும், உயர் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தி வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா உயர் கல்வி துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருக்கின்றன. 2000-ம் ஆண்டில் 1400 பல்கலைக்கழங்கள் இருந்த சீனாவில் இன்று 2553 ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 2002-ல் 11.02 மில்லியனிலிருந்து 2014-ல் 23.91 மில்லியனாக உயர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக பொருளாதார தடை மற்றும் பலபிரச்சனைகளை எதிர் கொண்ட கியூபா 99.7 சதவீதம் எழுத்தறிவு பெற்ற நாடாக இன்று மிளிர்கிறது. 134 கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் 25 சதவீதம் பேர் எழுத்தறிவற்றவர்களாகவே இன்றும் உள்ளனர். இந்தியாவில் உள்ளபல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வெறும்789 மட்டுமே. அதிலும் 406 பல்கலைக் கழகங்கள் தான் அரசு பல்கலைக்கழகங்கள். இதில் 359 மாநில பல்கலைக்கழகங்களும், 49 மத்தியப் பல்கலைக்கழகங்களும் அடங்கும். மீதமுள்ள 383 பல்கலைக்கழகங்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பல்கலைக் கழகங்களை துவங்காமலும், இருக்கும் உயர்கல்வி நிலையங்களை மேம்படுத்தாமலும் இந்தியாவின் உயர்கல்வியை அகல பாதாளத்திற்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இன்றைய மத்தியபாஜக அரசு. இதன் விளைவு உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நமது பல்கலைக்கழகம் ஒன்றுகூட இல்லை. இந்தியாவின் உயர்கல்வி இப்படி இருக்க தமிழகத்தின் உயர்கல்வியோ அதைவிட மிக மோசமான நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகப் பல்கலைக்கழகங்கள் மாலுமி இல்லாத கப்பல்களைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
முடங்கியுள்ள பல்கலைக்கழகங்கள்
தமிழகத்தில் 22 மாநில பல்கலைக்கழகங்களும், 2 மத்திய பல்கலைக்கழகங்களும், 28 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும் உள்ளன. இதில் 22 மாநில பல்கலைக்கழகங்களுக்கு கீழ் தான் ஆயிரக்கணக்கான கல்லூரிகளும், அவற்றில் லட்சக்கணக்கான மாணவர்களும் பயின்று வருகின்றனர். இலட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றுவதாக இப்பல்கலைக்கழகங்கள் உள்ளன. அத்தகைய இப்பல்கலைக் கழகங்களின் இன்றைய நிலை தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளது. இது கல்வியாளர்களையும், சமூக அக்கறை கொண்டவர்களையும், மாணவர்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிவருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் முக்கிய 5 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் இல்லை. 10 பல்கலைக் கழகங்களில் பதிவாளர் இல்லை. 7 பல்கலைக் கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர் இல்லை. பல பல்கலை.யில் நிதி அலுவலர்இல்லை. ஒட்டு மொத்தமாக சொல்லப் போனால் தமிழகப் பல்கலைக் கழகங்கள் ஊழல்மயமாக மாறிவிட்டன. பல்கலைக் கழகங்களின்நோக்கத்தை கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சிகள் சிதைத்துவிட்டன
அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு துணைவேந்தர் பதவி
1857-ல் துவங்கப்பட்ட தாய்பல்கலைக் கழகமான சென்னை பல்கலை. 580 பொறியியல் கல்லூரிகளை தன்னகத்தே கொண்ட அண்ணா பல்கலை. சட்ட மேதைகளை உருவாக்கும் அம்பேத்கர் சட்ட பல்கலை. மதுரை காமராஜர் பல்கலை. உள்ளிட்ட முக்கிய பல்கலைக் கழகங்களில் ஓராண்டுக்கு மேலாகியும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது என்பது தெரிந்தும் தமிழக அரசு துணைவேந்தர்களை நியமிக்காமல் இருப்பதற்கான காரணத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அரசியல் பின்புலமும் பணபலமும் உள்ளவர்கள்தான் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக வரமுடியும் என்பதற்கு சமீப கால நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தாலே நமக்கு புரியும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதா இலட்சுமி தலைமையில் 6 துணை வேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர், சட்டப் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்டோர் போயஸ்கார்டன் சென்றுதற்போது சிறையில் உள்ள சசிகலாவை அதிமுகவின் பொறுப்பேற்கும்படி சொன்னது, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் துணைவேந்தராவதற்கு ரூ.50 கோடிதற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தற்கான ஆதாரம் உள்ளதாகஒரு அரசியல் கட்சி தலைவர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பது என ஏராளமான நிகழ்வுகளை உதாரணங்களாக கூற முடியும்.இந்த உதாரணங்கள் திரைமறைவில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடத்திற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டு வருவதையே காட்டுகிறது, பல்கலைக்கழகம் என்பதுதன்னாட்சி அதிகாரம் கொண்டது. பணிநியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரிக்கானஅங்கீகாரம் என அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் துணைவேந்தருக்கு உண்டு. இந்த அதிகார குவியலால்தான் துணைவேந்தர் பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும். கோவை பாரதியார் பல்கலை.யில்சமீபத்தில் ஒரு பேராசிரியர் பணியிடத்திற்கு35 லட்சம் ரூபாய் என 28 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என அப்பல்கலைக்கழகம் முன் இன்றும் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி வியாபார தலங்களாக பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன. நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர்.மல்கம்,எஸ்.ஆதிசேஷையா,முனைவர் மு.வரதராசன் உள்ளிட்ட திறமையான துணைவேந்தர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்களில் எந்த தகுதியும், அனுபவமும் இல்லாதகல்யாணி மதிவாணன் போன்றவர்களும் குறுக்கு வழியில் துணைவேந்தர்களாக வருவதற்கு தமிழகத்தில் இன்று வாய்ப்பு உள்ளது.மேலும் துணைவேந்தர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. 22 பல்கலைக்கழகங்களில் இதுவரை 150 பேருக்கு மேல் துணைவேந்தர்களாக பதவிவகித்தவர்கள் இருப்பார்கள். இதில் இதுவரை வெறும் 6 பேரே தலித் துணைவேந்தர்கள். தகுதியை மட்டுமே பார்த்தால் இன்னும்எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகி இருக்க முடியும்.
தலை தூக்கியிருக்கும் நிர்வாகப் பிரச்சனைகள்
துணைவேந்தர் இல்லாததால் சில கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் முடிவெடுப்பது, பணிநியமனம், பணிஉயர்வு, கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக் கூடங்களுக்கு தேவையானஉபகரணங்கள் வாங்க முடியாமை என பல பணிகள் கிடப்பில் உள்ளன. அதைவிட முக்கியமாக பல பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியாமல், வேலைக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். பதிவாளர் இல்லாத பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பிற்கு விண்ணப்பித்தமாணவர்களுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்படாமல் நிலுவையில் உள்ளது. தேர்வுகட்டுப்பாட்டாளர் இல்லாத பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வினை நடத்தாமலும் கேள்வித்தாளை முறையாக தயாரிக்காமலும், தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடாமலும், படித்து முடித்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படாமலும் பணிகள் நிலுவையில் உள்ளன. நிதி அலுவலர் இல்லாதஇடங்களில் ஆண்டின் நிதிநிலை குறித்த வரவு-செலவு வைப்பதில்லை, இதனால் பல்கலைக் கழகங்களின் நிதிநிலை மோசமாகவும் முறைகேடாகவும் உள்ளது.மேலும் கட்டப்பட்ட பல்கலைக்கழக கட்டடங்கள் திறக்கப்படாமலும், யுசிஜி மூலம்கிடைக்க கூடிய ஒதஊ, தஎசஊ, மௌலானாஆசாத் உள்ளிட்ட மத்திய அரசின் கல்விஉதவித்தொகை இரண்டு மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாமலும் நிலுவையில் உள்ளன. மெத்தனமான நிர்வாக பணிகள், நஇ / நப நல்ங்ஸ்ரீண்ஹப் இங்ப்ப் செயல்படாமலிருப்பது, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இருபால் நட்புறவு குழுக்களை அமைக்காமலிருப்பது, நவீன நூலக வசதியின்மை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு சுதந்திரமின்மை என பல்கலைக்கழக வளாகங்கள் மோசமான சூழலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன.இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாரி சுருட்டவும், பதவியை தக்கவைத்துக் கொள்ளவும் அதற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டுவரும் அதிமுக அரசு இனியேனும் பல்கலைக் கழகங்கள்உயர்கல்வியை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர் முதல்அடிமட்ட பணியாளர் வரை தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்திடவும், புதிய பல்கலைக் கழகங்களை துவங்கிடவும், உச்சநீதிமன்ற லிண்டோ கமிட்டியின் பரிந்துரைபடி மாணவர் பேரவைத் தேர்தலை பல்கலைக்கழகங்களில் நடத்திடவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 
                                                                                                                                       ப.ஆறுமுகம்

=======================================================================================
ன்று,
மார்ச் -31.

  • ஈபிள் டவர் கட்டுமானம் தொடக்க விழா (1889)

  • ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)

  • மால்ட்டா விடுதலை தினம்(1979)

  • முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
  • =======================================================================================