89 கோடியே, 65 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்

இந்த சூழலில், சோதனையில்கைப்பற்றிய ஆவணத்தில் ஒன்றை, நேற்று வருமான வரித்துறை வெளியிட்டது. 
அதில், தினகரன் தரப்பினர், 85 சதவீத வாக்கா ளர்களுக்கு, அதாவது, இரண்டு லட்சத்து, 24 ஆயிரத்து, 145 பேருக்கு, தலா, 4,000 ரூபாய் வீதம், 89 கோடியே, 65 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்துள்ள தகவல் இடம் பெற்றுள்ளது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., ஆகியோரிடம், குறைந்தபட்சம், 11.68 கோடி ரூபாய் முதல் அதிகபட்சம், 14.91 கோடி ரூபாய் வரை, பகிர்ந்து அளிக்கப்பட்ட பட்டியலும் உள்ளது. 


இது, ஓட்டுக்கு பட்டு வாடா புகாரை நிரூபிப்பது போல் உள்ளதால், அது பற்றிய அறிக்கையை, டில்லிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ளனர்.
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம் தரப்பட்டதற்கான ஆதாரங்களும், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டன. 
அதனால், தேர்தலை நியாயமாக நடத்துவதற் காக, சிறப்பு தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. அவரது மேற்பார்வையில், பட்டுவாடாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கையில், தேர்தல் ஆணையம் இறங்கியது. 
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர், உதவியாளர்கள், உறவினர்கள் வீடுகளில், நேற்று முன்தினம் வருமான வரி சோதனை நடந்தது. அதில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டு வாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால், 'இது, அரசியல் பழிவாங்கும் செயல்; தினகரன் வெற்றியை சீர்குலைக்கும் முயற்சி' என்று, வருமான வரி சோதனை குறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட, தினகரன் அணியினர் குற்றம் சாட்டினர். 'தன் வீட்டில் எதுவும் சிக்கவில்லை' என, அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார். 
வருமான வரித்துறையின் சம்மனை ஏற்று, விஜயபாஸ்கரின் தந்தை, திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 
இதுபோல், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமாருக்கும், வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள், நாளை அல்லது நாளை மறுநாள் ஆஜராவர் என, தெரிகிறது.
விஜயபாஸ்கர் உள்ளிட்ட தினகரன் அணியினர், வருமான வரித்துறையினர் மீது குற்றம் சாட்டினர். அதனால், கடுப்பான, வருமான வரி அதிகாரிகள் சிலர், அமைச்சர் கூறும் தகவல்கள் பொய் என்பதை நிரூபிக்க முடிவு செய்தனர். அது, உடனடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, முக்கிய ஆவண பிரதியை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, 'டிவி' சேனல்களுக்கு அனுப்பியுள்ளனர். அதை, வருமான வரி உயரதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். 
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அது மட்டுமின்றி, அமைச்சர் வீட்டில் இருந்த ஒரு ஆவணத்தை, தளவாய்சுந்தரம் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, ஒருவரிடம் கொடுத்த காட்சி, 'டிவி'யில் ஒளிபரப்பானது. 
அந்த ஆவணத்தை தான், தற்போது வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த ஆவணத்தை பறித்துக் கொண்டு ஓடியவர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இது பற்றி வருமான வரித்துறையினர் கூறும்போது, 'அந்த ஆவணத்தை, நாங்கள் ஏற்கனவே புகைப்படம் எடுத்திருந்ததை அறி யாமல், அதை திருடிச் செல்ல முயன்றனர். இது தொடர்பாக, டில்லிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்' என்றனர். 
       தான் வெற்றி பெற கிட்டத்தட்ட அவர்களின் கணக்குப்படியே 90 கோடிகளை மக்களுக்கு கையூட்டாக கொடுத்துள்ளார்.தினகரன்.( உண்மையில் 200கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.)கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.அவரின் அடிமைகளே அவரை மாட்ட வைத்துள்ளனர்.
இதற்காக தேர்தல் ஆணையம் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை நிறுத்திவைப்பது என்பது தவறான முடிவு.தினகரனை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.அதுதான் இது போல் பணத்தை இறைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற எண்ணும் அரசியல்வியாதிகளுகு சரியான பாடமாக அமையும். தேர்தல் ஆணையம் மீது ஒரு பயம் வரும்.ரா.கி,நகர் தேர்தலில் தினகரன் ஒன்று தான் வெல்ல வேண்டும்.அல்லது தேர்தலையே ஒத்தி வைத்து தான் தப்பிக்க வேண்டும் என்றுதான் இவ்வாளவு பகிரங்கமாக தேர்தல் அலுவலர்கள்,அரசு அதிகாரிகள்,காவல்துறை துணையுடன் பணத்தை அள்ளி வீசுகிறார்.அவர் போன்ற பணபலத்தால் வெற்றியை பெற எண்ணுபவர்களை தேர்தல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்தால் ஒழிய வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது.                                                                             


========================================================================================
ன்று,
ஏப்ரல்-09.
  • அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)
  • அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் 7 பேரின் பெயர்களை நாசா அறிவித்தது(1959)
  • ஜார்ஜியா, சோவியத் ஒன்றியத்தின் விடுதலையை அறிவித்தது(1991)
  • வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது(1953)
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?