இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

மோடிக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை?

உலகப் புகழ்பெற்ற 'டைம்' இதழ் ஒவ்வொரு ஆண்டும் 'Person of the Year' என ஒருவரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. முதல்கட்டமாக 100 பேர் அறிவிக்கப்பட்டு அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 
அந்த 100 பேர்களை ஆன்லைன் வழியாக டைம் இதழின் வாசகர்கள் தேர்வு செய்வார்கள் கடந்த 2012ம் ஆண்டு டைம் இதழ் அட்டைப் பக்கத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி இடம் பெற்றார். அதற்கு அவர் அமைத்த்திருந்த தொழில் நுட்பப்படையை சார்ந்த 4000 பேர்கள்தான் காரணம்.
இந்த உண்மை பின்னர்தான் தெரிய  வந்தது.

இந்திய பிரதமரான பிறகு 2015ம் ஆண்டில் டைம் இதழ் அவரிடம் பிரத்தியேக பேட்டி எடுத்திருந்தது. அந்த சமயத்திலும் தொழில் நுட்பப்படை உதவியுடன் டைம் இதழின் அட்டைப்படத்தில் மோடி இடம் பெற்றிருந்தார். 
குறிப்பாக டைம் இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடிப்பது உலக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை மரியாதையை பெற்றுத்தரும்,உலகமக்கள் கவனிப்பை பெரும் செயல்.
 அத்தகைய வாய்ப்பு மோடிக்கு குறுகிய காலத்திலேயே இருமுறை கிடைத்தது. 

ஆனால் அதற்கு அவர் அமைத்திருந்த தொழில் நுட்பப்படை வழங்கிய வாக்குகள் பல்வேறு பெயர்களினாலான முகநூல்,டுவிட்டர் கணக்குகளின் லைக்குகள்தான் உபாயம் .

தற்போதைய உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் யார் யார் இடம் பெற வேண்டுமென்று 'டைம்' இதழ் நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன?
அதே போல் கடந்த ஆண்டு டைம் இதழின் செல்வாக்குமிகுந்த 100 பேர் பட்டியலில் மோடி இடம் பெற்றிருந்தார். 

அதிகமாக பாப்புலவராகி வரும் தலைவர் என்ற வகையில் மோடிக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்தது. 'Person of the Year'  வரிசையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 7 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தார். 

அந்த வகையிலும்,மோடியின் திருவிளையாடல் உணர்ந்தாலும்  டொனால்ட் ட்ரம்ப்பை டைம் இதழ் அறிவித்தது. 
 இந்த ஆண்டு 100 பேர்கள் பட்டியலில் யார் யார்... இடம் பெறலாம் என டைம் இதழ் ஆன்லைன் வாக்கெடுப்பை நடத்தியது. 
வாக்கெடுப்பில் அதிரடி மூலம் உலகின் கவனத்தை தன்பக்கம் கொணர்ந்த  பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்தே முதலிடத்தில் வந்துள்ளார். 
இவருக்கு 5 சதவீத வாக்குகள் கிடைத்தன. 

கடந்த ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக ரோட்ரிகோ பதவியேற்ற பின் ஒரே அதிரடிதான். 'போதைப் பொருட்கள் மீதான போர்' என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இவர் எடுத்த நடவடிக்கையால் இதுவரை 8,000 பேர் வரை கொல்லப்பட்டுள்னர். 
ஒரே மாதத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை வாய்க்கு வந்தபடி பேசி மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இந்த அதிரடிகாரருக்குத்தான் அமெரிக்கர்கள் உள்ளிட்ட டைம் வாசகர்கள் தேர்வு செய்த பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. 
பிலிப்பைன்ஸ் அதிபரை தொடர்ந்து போப் ஃப்ரான்ஸிஸ், கனடா பிரதமர் Justin Trudeau,  மைக்ரோசாப்ட் நிறுவுனர் Bill Gates  ஃபேஸ்புக் சிஇஓ Mark Zuckerberg ஆகியோர் தலா 3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். (கடந்த முறை 'Person of the Year' அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 சதவீத வாக்குகள் கிடைத்தன) 
பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பாஜக பிரதமர்  மோடிக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நாதென்யாகுவுக்கும் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.ஒரு வாக்கு கூட கிடைக்காத மற்றவர்கள்... மைக்ரோசாப்ட்  தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவங்கா ஆகியோர்.  

மற்றவர்களை விடுங்கள் இத்தனைக்கும் பிரதமராக பொறுப்பேற்ற பின், அமெரிக்காவுக்கு இருமுறை போய் அமெரிக்க அதிபர்,தொழிலதிபர்களுக்கு ஆதரவாக பல உறுதிகளை வரை தெளித்து வந்தார்.
அமெரிக்காவில்  வாழும்  இந்தியர்கள் கூட ஒரு ஓட்டு கூட ஓட்டளிக்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 

சென்ற முறை அமோகமாக நூற்றில் ஒருவாரம் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காதது அமேரிக்கா,இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகையே புருவத்தை உயர்த்தி வியக்க வைத்துள்ளது.

இதற்கும் மோடிக்கு இதுவரை உழைத்து வந்த தொழில் நுட்ப அணி உ.பி.தேர்தலுக்குப்பின்னர் வேறு அரசியல் தலைவர்களுக்கு உழைக்கும் குத்தகை எடுத்து சென்று விட்டதற்கும் தொடர்பு இருக்கலாமோ என்று தற்போது  பலரால் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
=============================================================================================
ன்று,
ஏப்ரல்-20.
  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி பிறந்த தினம்(570)
  • இழ்சாக் கார்ட்டியே, கனடாவை வெளியுலகுக்கு அறிவித்தார்.(1534)
  • ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  • திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  • =============================================================================================