சட்டமன்றத்தில் A 1 படம் ?

"கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை."

தேவையே இல்லாமல் சொலவடை நினைவுக்கு வருகிறது.ஒரு வேளை "சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு" செய்தியை படித்ததால் இருக்கலாம்.

தற்போதைய அதிமுகவின் செயல் தலைவர் மோடியை முன்னாள் தலைவர் ஜெயலலிதா படத்தை திறக்க கூப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை கட்சிக்காரர்கள்  தங்கள் வீட்டில்,கட்சி அலுவலகத்தில் திறக்கட்டும்.

ஆனால் அதை ஒரு நாட்டின் அரசியலமைப்பை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் திறப்பது என்றால் கண்டிப்பாக மிகைத்தவாறு.

தனது நாட்டின் சட்டத்த்திட்டங்களை,அரசியல் அமைப்பை தானே கிழித்து எறிவது போல்தான்.

ஜெயலலிதா தமிழ் நாட்டினமுதல்வராக பல முறை இருந்திருக்கலாம்.

ஆனால்  முன்பும் ஊழலுக்காக் சிறை சென்று பதவியில் உட்காரமுடியாமல் பினாமியை வைத்து இருமுறை ஆட்சி செய்த இரும்பு மனுசி.

கடைசியில் மைக்கேல் குகாவால் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை ,100 கோடிகள் அபராதம் என தீர்ப்பை பெற்ற நிதி தேவதை.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தலைக்கு மேல் கத்தியுடன் ஆட்சியை தேர்தல் ஆணைய உதவியுடன் கைப்பற்றி ஆள ஆரம்பித்தார்.

அப்போலோவில் அவர் மரணிக்கும் வரை பொறுமைக்காத்த உச்சம் இறந்தவுடன் தீர்ப்பை வாசித்து குற்றம் குற்றமே.தண்டனை தண்டனையே என்று உறுதி செய்தது.ஆனால் அவர் தலையை சாய்த்து விட்டதால் நான்காண்டு சிறையை கொடுக்க வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டது.


ஆக அமரரானாலும் ஜெயலலிதா தண்டனை பெற்ற குற்றவாளிதான்.A 1 தான்.


அவர் முதல்வர் பதவி பறிப்புட ன் ஐந்தாண்டுகள் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியும் பறிக்கப்பட்டவர்.
சாதாரண ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினராக  கூட அவர் இல்லை.

அப்படி பட்ட ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பு என்பது எவ்வளவு விதி,சட்ட,அரசியலமைப்பு மீறல்கள்.கேவலமான செயல்.


அதை விடக்  கேவலம் ஒரு ஊழல் குற்றத்தால் முதல்வர் பதவியை இழந்தவர்,தேர்தல்களில் நிற்க தகுதியற்றவர் படத்தை திறந்து வைக்க இந்திய நாட்டின் பிரதமரை அழைப்பது.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எழலாம்.அப்படி பட்ட படத்தை திறக்க பிரதமர் எப்படி ஒப்புக்கொள்வார் ,அந்த அளவு மரபு,சட்டம் தெரியாதவரா மோடி? என்று.

இந்திய பிரதமர் அப்படி செய்யலாம்.ஆனால் ஆர்.எஸ்.எஸ் ,கண்ணாடி  அணிந்த மோடி?இந்திய விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து செயல் பட்ட சர்க்கார்,காந்தியை சுட்ட நாதுராம் கோட்ஸே க்களை சிலைகளாகவும்,படங்களாகவும் திறந்துவரும் இந்துத்துவா கூட்டத்தை சேர்ந்தவர் ,அதன் தலைவர்களை  ராஜரிஷிகளாகக் கொண்டு ஆள்பவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை வைத்துப்பாருங்கள்.


மேலும் தற்போது எதிரவரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் எவ்வளவு முக்கியாயத்துவம் வாய்ந்தவை என்பதை அமித் ஷா மோடிக்கு சொல்லாமலா இருப்பார்.

கவுதமி,சச்சின் ,ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்  மைத்ரேயன் போன்றவர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க நேரம்,காலம்தரும் பிரதமர் மோடி...காவிரி பிரசனைகளில்,விவசாயிகள்,மக்கள்,குடிநீர்  பிரசனைகளில் மனு வாங்கக்கூட  யாரையுமே  சந்திக்காதவர் அதிகபட்சமாக 89 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட தமிழக எதிர்க்கடசித்தலைவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கூட சந்திக்காதவர்.

ஆனால்  எந்த பதவியிலும் இல்லா சாதா ச.ம.உ ஓ.பி.சை அந்த காலக்கட்டத்தில் மூன்று முறை சந்தித்து அளவளாவி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காரியம் ஆக கழுதை காலைக்கூட பிடித்து குட்மார்னிங் சொல்லுவான் புத்திசாலி.
அவனே காரியம் முடிந்தால் கழுதைக்கு காயடித்தும் விடுவான்.

 மொத்தத்தில் ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது மொள்ளமாரித்தனம் என்றால்.அதற்கு பெருசுகள் வந்து செல்வது கடைந்தெடுத்த கேப்மாரித்தனம்.

அசிங்கப்படப்போவது இந்திய அரசியல் அமைப்பு,அரசியியல் சட்டத்திட்டங்கள்,தேர்தல் ஆணையம் இவற்றை விட உச்சமாக இத்தீரப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் தான் .

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பது,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தாவூத் படம் திறப்பது,பாராளுமன்றத்தில் நாதுராம் கோட்ஸே படம் திறப்பது எல்லாமே  ஒரே நிலைதான்.
அதிலும் மோடி கலந்து கொள்வாரா?
===========================================================================================
ன்று,
மே-26.
  • ஜார்ஜியா தேசிய தினம்
  • ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • நடிகை  மனோரமா பிறந்த தினம்(1937)
  • பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)
  • ஒருங்கிணைந்த ஐரோப்பிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.(1986)
 மனோரமா

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா, தஞ்சை மாவட்டம், ராஜமன்னார்குடியில், காசி கிளாக் உடையார் - ராமாமிர்தம் தம்பதியின் மகளாக, 1937, மே 26ல் பிறந்தார். 

அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோர், தமிழகத்தின் முதல்வர்கள் ஆவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தனர்,அவர்களுடன் மனோரமா நடித்துள்ளார். 

சினிமாவில் அடியெடுத்து வைத்த பின், நகைச்சுவை கதாபாத்திரங்களில், திறனை வெளிப்படுத்தினார். 


ஆனாலும் பிற்காலத்தில் குணசித்திர பாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகையருடன் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட, 1,500 திரைப்படங்களில் நடித்துள்ளார்; இதன் காரணமாக, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 


அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,  என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை நடிகை மனோரமாவுக்கு உண்டு.

சில பின்னணி பாடல்களும் பாடியுள்ளார். தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும், 'ஆச்சி' என, அன்புடன் அழைக்கப்பட்டவர்.

கலைமாமணி,பத்மஷிரீ,  உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்  மனோரமா.
=============================================================================================

மோடியின்  பொம்மைகள்

மோடியின் பொம்மைகள் என்றால் தமிழ் நாட்டில் உள்ள அதிமுகவினரை எண்ணி வீட்டா வேண்டாம்.
இது சொந்த கடசி அமைசர்கள் பொம்மைகள் தான்.
மத்திய பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து பாஜகவில் இப்போது அளவுக்கு மீறிய அதிகாரங்களுடன் விளங்கும் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர்கள் கொக்கரிக்கிற போதிலும், உண்மையில் அவர்கள் தங்களது கட்சியினை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கடும் புகைச்சலும் விமர்சனமும் எழுந்துள்ளது.

பாஜக எனும் கட்சி இப்போது அமித் ஷா - மோடி என்ற இரு நபர்களின் கட்சியாக மாறிப் போயுள்ளது. இருவரும் இரும்புக் கரம் கொண்டு கட்சியை நடத்தி வருகின்றனர். எனவேகட்சி வெளுத்துப்போய்க் கொண்டிருக்கிறது. இதை மோடியின் அமைச்சர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

மோடியின் அமைச்சர்கள் அனைவரும் அநேகமாக பொம்மைகள்தான். 
எந்த அமைச்சருக்கும் உண்மையில் எவ்விதமான அதிகாரமும் கிடையாது. 

அனைத்து அமைச்சர்களும் சமமானவர்களே என்றும், பிரதமர் என்றால் அமைச்சர்களில் முதலாமவர் என்றும் கூறினால், மோடியின் அமைச்சர்கள் சிரிக்கிறார்கள். முக்கியமான துறையைப் பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் இதைக்கேட்டதும், ‘‘சமமானவர்களில் முதலாமவர். 
அப்படி என்றால் என்ன? 
எங்களால் அமைச்சரவையில் ஒரு வார்த்தைகூட கூற முடியாது. அனைத்தும் பிரதமர் அலுவலகத்திலேயே மோடிஜியால், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. நாங்கள் வெறும் ரப்பர்-ஸ்டாம்புகள்தான். மனோகர் பாரிக்கர் கோவாவிற்கும், இதர மூத்த அமைச்சர்கள் உத்தரப்பிரதேசத்திற்கும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தது குறித்து நீங்கள் என்னநினைக்கிறீர்கள்? 

மத்திய அமைச்சரவையில் ஒரு சிறைக்கைதி போல் இருப்பதைவிட மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கலாம் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். இங்கே 1லிருந்து 100 வரை எல்லாமே மோடிதான். அதன்பிறகு அமித் ஷா. வேறு யாரும் கிடையாது’’ என்றார்.

இது ஓர் அமைச்சரின் புலம்பலாகஇருக்கலாம். எனினும், மார்ச்சில் கோவாவிற்கு பாரிக்கர் சென்றபிறகு, பாதுகாப்பு அமைச்சராக வேறொருவரை முழுமையாக நியமிக்க முடியாதிருப்பதிலிருந்து இதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எவ்விதமான முடிவாக இருந்தாலும் அது பிரதமர் அலுவலகத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அது ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பாக இருந்தாலும் சரி, அல்லது படாடோபமாகக் கூறப்பட்ட ‘துல்லியத் தாக்குதல்களாக’ இருந்தாலும் சரி. எனவேதான் ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று தீர்மானித்தது யார் என்கிற கேள்விக்கு அரசாங்கம் நேரடியாக இதுவரை பதில் சொல்ல மறுத்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் மோடி, அமைச்சரவையின் கூட்டு முடிவு என்கிற நெறிமுறையையே முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்.

தற்சமயம் பாஜகவில் இரண்டாவது தலைவராகக் கருதப்படும் நிலையில் இருக்கும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரும், ஜம்மு - காஷ்மீர் விவகாரங்களில் இறுதிமுடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றிருப்பவருமான, ராம் மாதவ், ‘மோடி இந்தியாவை ஜனாதிபதி அமைப்புமுறையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்’ என்று சமீபத்தில் உளறினார்.

இதனால்தான் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் எந்தப் பிரச்சனை குறித்தும் ராஜ்நாத் சிங்குடன் கூட கலந்தாலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. 
அயல்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் கதியும் அதேதான். அயல்துறைக் கொள்கையை மோடியும், அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவலும்தான் தீர்மானிக்கிறார்கள். மேற்படி டோவலுக்கு அயல்துறை விவகாரங்கள் தொடர்பாக எவ்வித அனுபவமும் கிடையாது.

மோடி தனது அமைச்சரவையை ரப்பர் ஸ்டாம்ப்பாக குறைப்பதற்கு முன்பு,கட்சியில் தன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். பாஜகவின் மூத்த தலைவர்களை ‘மார்க்தர்ஷக் மண்டல்’ என்ற பெயரில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மூத்தோர் இல்லத்திற்கு அனுப்பிவைத்துவிட்டார். 

இந்த மண்டலில் யஷ்வந்த் சின்காவும் இருக்கிறார். இது மோடிக்கு திசைவழியைத் தெரிவித்திடும் என்று கூறப்பட்டது. ஆனால் இது அமைக்கப்பட்டபின் இதுவரை ஒரு கூட்டத்தைக்கூட கூட்டிடவில்லை.

இன்றைய தினம் ரத்தசோகை பீடித்ததுபோல் காணப்படும் பாஜகவை, பலரும் வாஜ்பாய் பிரதமராக இருந்த அன்றைய காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். வாஜ்பாய் உயர் தலைவராக இருந்த அதே சமயத்தில், தனக்குஎதிராகக் கருத்து கூறுவோரை அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை. வாஜ்பாய் போலவே மேலும் பல அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் இருந்தார்கள். 

ஆனால் இப்போது, நகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்குக்கூட மோடியின் பிம்பம்தான் தேவை எனும் அளவிற்கு அக்கட்சியை அமித்ஷா குறுக்கி விட்டார்.

அமித் ஷாவைப் பொறுத்தவரை பாஜகவில் மோடியின் பிம்பத்தைத் தவிர வேறு யார் பிம்பமும் அனுமதிக்கப்படக்கூடாது. மோடி மட்டும்தான் ‘சாஹேப்’(தலைவர்).

அனைத்து அதிகாரங்களும் அமித்ஷாவுக்குத்தான். எந்த மாநிலத்தில் தேர்தல் என்றாலும் ஷா தனக்கு நம்பிக்கையானவர்களை குஜராத்திலிருந்து, கொண்டுபோய் இறக்கிவிடுவார். அங்கு செயல்பட்டு வந்த பாஜகவினர்ஓரங்கட்டப்படுவார்கள். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதும் அமித்ஷாதான். 

மாநிலத் தலைவர்களை அவர் கலந்தாலோசிப்பதே இல்லை. அவருக்கு என்று வைத்துள்ள குழுதான் அவற்றைத் தீர்மானிக்கும்.

சுயசிந்தனை உள்ள எவராக இருந்தாலும் அவரை மோடி ஓரங்கட்டிவிடுவார். வருண் காந்தி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வருண் காந்தியை மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிடிக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் அவருடைய பெயரில்கடைசியாக ஒட்டிக்கொண்டுள்ள ‘காந்தி’தான். 

காந்தி குடும்பத்தை விமர்சிக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் அதற்கு மறுத்ததன்விளைவாக இப்போது அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.

மோடி முன்பெல்லாம் பிரச்சாரங்களின்போது ‘நல்லாட்சி’ என்று பேசிவந்தார். இப்போது மோடியோ, அமித்ஷாவோ அவ்வாறெல்லாம் பேசுவதில்லை. 2019க்கான நிகழ்ச்சி நிரல் தயாராகிவிட்டது. 

அது உத்தரப்பிரதேச மாடல். ‘அதாவது, ஒரு முஸ்லிமுக்குக் கூட டிக்கெட் கிடையாது. 
முதல்வராக ஆதித்யநாத் நியமிக்கப்பட்டதே இதனை விளக்கிடும்.
                                                                                                                                                            தி ஒயர் இணைய இதழில் சுவாதி சதுர்வேதி 

===============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?