இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 31 மே, 2017

வங்கி புதிய கட்டணங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி  புதிய கட்டணங்கள்  அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அதன்படி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டணங்களின் வவிரம் :


* வங்கிகளில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

* இலவச முறைகளுக்கு மேல் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க, தற்போது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.,

* அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் எடுத்தால் 10 ரூபாயும், பிற ஏடிஎம்களில் எடுத்தால் 20 ரூபாயும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.


* நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், பிற ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.


* நகரங்கள் அல்லாத கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்கலாம்.

* ஜூன் 1 முதல் கணக்கின் உரிமையாளர் 10 காசோலைகளைக் கொண்ட செக் புக் வாங்க 30 ரூபாயும், 25 காசோலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும், 50 கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

* Buddy e-wallet பயனாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் சேவையை 25 ரூபாய் கட்டணத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

* இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ, யூஎஸ்எஸ்டி முறைகளில் IMPS பணப் பரிமாற்றம் செய்யும் போது 1 லட்சம் ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

========================================================================================