இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 29 மே, 2017

நகங்கள் காட்டும் நோய்கள்

உங்கள் நகங்களில் ஏற்படும் நிறங்களை , மாற்றங்களை கொண்டு, உங்கள் உடல் நலத்தை உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.நோய் பாதிப்பு ஏற்பட்ட உடற்பகுதிகளை கண்டு கொள்ளலாம்.

நகங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது,அவசியமம் கூட . 
உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள்தான் நமக்கு  நகமாக வளர்கின்றன. 
அதாவது உடலில் தேவையற்று வெளியேற்றப்படும் கெரட்டின் எனும் கழிவு தான், நகமாக வளர்கிறது.

நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.

இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நகத்தின்  செல்கள் வளர மூலமாக இருக்கிறது .

மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.

ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.

இது நாம்  சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. 
எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் நம் உடலின் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. 
நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் கண்ணாடி  போல செயல்படுகின்றன.நகங்களை கண்காணிப்பதன் மூலம் நம் உடலை பாதுகாக்கலாம்.அதற்கான எச்சரிக்கையைத்தான் நகங்களின் நிறங்கள்,கரடு முரடான பரப்புகள்  நமக்கு அறிவிக்கிறது.

நகங்கள் விரல்கள் முனைகளுக்கு பாதுகாப்புக்காக மட்டும்தான் என்று எண்ணுவது முற்றிலும் தவறு.
விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.


  நகங்கள் காட்டும் நோய்கள் பற்றிய சில விபரங்கள்.

பொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். 

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். 

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். 

இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்களாக காணப்படும்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். 

நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.

நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. 
இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். 
நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.

பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். 
இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகிறது.

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி -12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
==============================================================================================
ன்று,
மே-29.
  • உலக தம்பதியர் தினம்
  • உலக  அமைதி தினம்
  • ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)
  • இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)
  • நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
===============================================================================================
பெருகும்  இருசக்கர வாகனங்கள்.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள்  எண்ணிக்கை, இரண்டு கோடியை கடந்துள்ளது.தமிழகத்தில், 1993ல், 13.91 லட்சம் இருசக்கர வாகனங்கள் இருந்தன. 1997 முதல், அதன் விற்பனை வேகம் எடுத்தது. அந்தாண்டு மார்ச் முடிவில்    இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 24.54 லட்சத்தை எட்டியது. 1998 மார்ச்சில், 28.16 லட்சமாக உயர்ந்தது.
கடனுதவி அளிப்பவர்கள் அதிகரித்ததாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்களே, கடனுதவி அளித்ததாலும் இருசக்கர வாகனங்கள்  வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்தது. அதன் மொத்த எண்ணிக்கை, 2003ல், 50 லட்சத்தை கடந்தது.
கடந்த, 2010ம் ஆண்டின் இடைப்பட்ட காலத் தில், தமிழகத்தில், அவற்றின் எண்ணிக்கை, முதல் முறையாக, ஒரு கோடியை கடந்தது. 
அதற்கடுத்த ஏழு ஆண்டுகளில்    இருசக்கர வாகனங்கள்எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

2016 மார்ச் முடிவில், 1.84 கோடியாக இருந்த   இருசக்கர வாகனங்கள்எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இரண்டு கோடியாக, அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில், மக்கள் தொகைக்கேற்ப, போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படாததே 
 இருசக்கர வாகனங்கள் அசுர வளர்ச்சிக்கு காரணம் என, சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த நிதியாண்டில், 18 லட்சம் புதிய வாகனங்கள், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், வாகனங்களின் மொத்த எண்ணிக்கை, 2.38 கோடியாக அதிகரித்துள்ளது. 2016 ஏப்., 1ல், தமிழ கத்தில், 2.20 கோடி வாகனங்கள் பதிவாகியிருந்தன. 

அதில்   
 இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 1.85 கோடி. அவற் றில், மோட்டார் சைக்கிள், 1.09 கோடி; ஸ்கூட்டர், 25 லட்சம்; மொபட், 50.14 லட்சம்.மேலும், மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், பஸ், வேன், லாரி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், 12.13 லட்சமாக இருந்தன. அதேநேரத்தில் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, ஜீப்போன்ற வாகனங்களின் எண்ணிக்கை, 2.08 கோடியாக இருந்தது.

சென்னை நகரில், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, மார்ச் மாதத்தில், 50 லட்சத்தை, முதல் முறையாக கடந்துள்ளது. சென்னை யில், தற்போது, 50.73 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. அதில்   இருசக்கர வாகனங்கள் எண் ணிக்கை மட்டும், 80 சதவீதம். அவற்றின் எண் ணிக்கை, ஏப்., மாதம், 40 லட்சத்தை கடந்துள் ளது.சென்னையில், 2016 ஏப்., 1ல், 37.41 லட்சம்   இருசக்கர வாகனங்கள் உட்பட, 47.58 லட்சம் வாகனங்கள் இருந்தன. ஒரே ஆண்டில், 2.45 லட்சம் வாகனங் கள் அதிகரித்துள்ளன.