இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 20 ஜூன், 2017

இணைய பொறாமை,போட்டி தகவல்கள்.

இந்­தி­யா­வின் இன்­போ­சிஸ் முதல், பிரிட்­ட­னின் பிரிட்­டிஷ் அமெ­ரிக்­கன் டுபாக்கோ வரை, பல்­வேறு நிறு­வ­னங்­கள், சமூக வலை­த­ளங்­களில் பரப்­பப்­படும் பொய் தக­வல்­க­ளால், அவற்­றின் பாரம்­ப­ரிய பெருமை, மதிப்பு, வர்த்­த­கம் ஆகி­யவை பாதிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்து உள்ளன.

சமீ­பத்­தில், இன்­போ­சிஸ் மற்­றும் விப்ரோ நிறு­வ­னங்­களில் வைத்­துள்ள பங்­கு­களை, நிறு­வ­னர்­கள் விற்­று­விட்டு வெளி­யேற உள்­ள­தாக, ஊட­கம் மற்­றும் சமூக வலை­த­ளங்­களில் தக­வல் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

இதை­ய­டுத்து, அந்­நி­று­வ­னங்­களின் பங்­கு­களை, அவ­சர அவ­ச­ர­மாக முத­லீட்­டா­ளர்­கள் விற்­பனை செய்­த­னர். இத­னால், அப்­பங்­கு­கள் விலை வீழ்ச்சி­ அடைந்­தது. 


உடனே நிறு­வ­னர்­கள், பங்கு விற்­பனை குறித்த செய்­தியை மறுத்து அறிக்கை வெளி­யிட்­ட­னர்.

இது போன்ற தவ­றான தக­வல்­கள், ‘பேஸ்­புக், டுவிட்­டர்’ போன்ற சமூக வலை­த­ளங்­களில் வெளி­யா­வ­தும், அதற்கு மறுப்பு தெரி­வித்து அறிக்கை வெளி­யி­டு­வ­தும், சமீ­ப­கா­ல­மாக அதி­க­ரித்து வரு­கிறது. 

‘இத்­த­கைய பொய் தக­வல்­கள், இயக்­கு­னர் குழு­வின் கவ­னத்தை திசை திருப்பி, மூத்த நிர்­வா­கி­களை வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் இருந்து ஒதுக்­க­வும், சமூ­கத்­தில் நிறு­வ­னத்­தின் மதிப்பு குறை­ய­வும் கார­ண­மாக உள்ளன’ என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. 

அவை, இத்­த­கைய பிரச்னை குறித்து விரி­வாக விளக்கி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பு மற்­றும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அறிக்கை அனுப்­பி­யுள்ளன.

இதே போல, அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களில் இடம் பெற்­றுள்ள ஏரா­ள­மான நிறு­வ­னங்­களும், ஊட­கங்­கள் மற்­றும் சமூக வலை­த­ளங்­களில் பரப்­பப்­படும் விஷம பிர­சா­ரங்­க­ளால், அவற்­றின் மதிப்பு சீர்­கு­லை­வ­து­டன், முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, பங்கு விலை வீழ்ச்­சிக்கு வழி­வ­குப்­ப­தாக கவலை தெரி­வித்து உள்ளன. 

சர்­வ­தேச அள­வில், பிரிட்­டிஷ் அமெ­ரிக்­கன் டுபாக்கோ, கனடா கூஸ் ஹோல்­டிங்ஸ், பிர­வுன் போர்­மன் கார்ப்­ப­ரே­ஷன் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களும், சமூக வலை­த­ளங்­களில் பரப்­பப்­படும் எதிர்­மறை கருத்­துக்­க­ளால், வர்த்­த­கம் பாதிக்­கப்­பட்டு, நிதி நிலை மோச­ம­டை­வ­தாக கூறி உள்ளன.

கனடா கூஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம், ஆயத்த ஆடை­கள் விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. 

இந்­நி­று­வ­னம், அதன் வாத்து இறக்­கை­யில் தயா­ரிக்­கப்­படும் ஆடை­கள் விற்­ப­னைக்கு, பிராணி நல ஆர்­வ­லர்­க­ளால் பாதிப்பு ஏற்­படும் என, அச்­சம் தெரி­வித்து உள்­ளது.

‘சமூக ஊட­கங்­களில் தவ­றான பரப்­புரை வெளி­யாகி, எங்­கள் கடை­கள் முன், பிராணி நல ஆர்­வ­லர்­கள் போராட்­டத்தை தீவி­ரப்­ப­டுத்­தி­னால், விற்­பனை பாதிக்­கப்­படும்’ என, இந்­நி­று­வ­னம் கூறி­உள்­ளது. 

புகழ் பெற்ற, ‘ஜேக் டானி­யல்ஸ், பின்­லாந்­தியா’ போன்ற மது­பா­னங்­களை தயா­ரிக்­கும் பிர­வுன் போர்­மன் கார்ப்­ப­ரே­ஷன், ‘நுகர்­வோர், போட்டி நிறு­வ­னங்­களின் பிராண்­டு­க­ளுக்கு மாற, சமூக ஊட­கங்­களில் வைர­லாக பர­வும் எதிர்­மறை கருத்­துக்­கள் உத­வு­கின்றன’ என, கூறி­யுள்­ளது.

 சமூக வலை­த­ளங்­கள் பொறுப்­பு­டன் செயல்­பட, ஒருங்­கி­ணைந்த முயற்சி தேவை என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் வலி­யு­றுத்தி உள்ளன.

இதேபோல் இணையதளத்தில் பயங்கரவாத,தீவிரவாத  கருத்துகளை பரப்புவோருக்கு எதிரான நடவடிக்கைகளைஎடுக்க,அதை கட்டுப்படுத்த  கூகுள் நிறுவனம் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ளன.

பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதிகள், தங்களுக்குள் ரகசிய சங்கேத குறியீடுகளுடன் கூடிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், வதந்திகளை பரப்பிடவும், தங்கள் அமைப்பை புகழவும், இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் தேடுதளம் மூலமாக பயங்கரவாத கருத்துகளை பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர். அண்மையில் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரில் ஒருவர், யூடியூப் தளத்தை பயன்படுத்தி வீடியோக்களை பகிர்ந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில் பயங்கரவாத கருத்துகளை பரப்பும் வீடியோக்களையும், அதற்கு ஆதரவான விளம்பரங்களையும் கண்டறிந்து களையெடுக்க கூகுள் நிறுவனமும், அதன் துணை நிறுவமான யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளன. மேலும், பயங்கரவாத கருத்துகள், அவதூறு செய்திகளை முற்றிலுமாக நீக்கவும், சம்பந்தப்பட்டவர்களை பிளாக் செய்யவும் கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

========================================================================================
ன்று,
ஜூன்-20.
  • உலக அகதிகள் தினம்
  • அர்ஜெண்டீனா கொடி நாள்
  • இந்திய சிப்பாய்கள் கலகம்  முடிந்தது(1958)
  • மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)
  • விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)
=========================================================================================