இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 29 ஜூன், 2017

பினாமி ஆட்சி போதை........,


தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான, 'மாவா', 'குட்கா' வியாபாரிகளிடம் தமிழக அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள் பல கோடி ரூபாய் மாமூல் பெற்றதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் தடையை மீறி, சென்னை மாதவரம் பகுதியில் 'குட்கா' தயாரிப்பு நிறுவனம் இயங்குவதாக, கடந்த 2015ல், மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.,) சென்னை போலீஸ் கமிஷனருக்கு ரகசிய குறிப்பு அனுப்பியது. 

இதையடுத்து அந்நிறுவன குடோனில் திடீர் சோதனை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூடை மூடையாக குட்கா, மாவா பொருட்களைக் கைப்பற்றி, 'சீல்' வைத்தனர்.

இதுதொடர்பாக கடந்த 2016, டிச.,22ல் மாநில உள்துறை செயலருக்கு ரகசிய கடிதம் எழுதிய அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், 'அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா பொருட்களை விற்கும் நபர்களுடன் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு உள்ளது. 

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என கூறியிருந்தார்.

இக்கடிதத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனருக்கு அனுப்பி வைத்தது உள்துறை அலுவலகம்.ஆனால், நடவடிக்கை மேற்கொள்ளப் படாமல் கோப்பு கிடப்பில் போடப்பட்டதாக கூறப் படுகிறது.


இதற்கிடையே சென்னையிலுள்ள குட்கா நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்திய வருமானவரித்துறை யினர்,முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

அந்த ஆவணங்களில் தமிழக அமைச்சர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை மாமூல் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இருந்தன.

இதையடுத்து உஷாரடைந்த வருமான வரித்துறை, தமிழக அரசின் முக்கிய புள்ளி மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை மேற் கொள்ளுமாறு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி யது. 
எனினும், தமிழக அரசு தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.


இந்நிலையில்தான் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை, வருமானவரித்துறையின் தலைமை அலுவலகம், கடந்த 2016 ஆக., 11ல் அனுப்பியது. 

பத்துமாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது இக்கடித விவரங்கள்தான் அம்பல மாகி தமிழக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சென்னை போலீஸ் உயரதிகாரிகள், 'குட்கா' வியாபாரிகளிடம் மாமூல் பெற்று வருவதாக தமிழக அரசின் உள்துறைக்கு கடிதம் அனுப்பிய அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீதும் இப்போது புகார்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. 

இதனால் இதுதொடர்பான விசாரணை நேர்மை யாக நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளி வரும்' .
ஆனால் இது தொடர்பாக சட்டமனறத்தில் விவாதிக்கவே சபாநாயகர் தனபால் இடம் அளிக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு செய்தி தாளில்,தொலைக்காட்சியில்,சி.டி யில்,ஆவண நகல் கள் போன்றவற்றை தான் விவாதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சபாநாயகர் தனபால் கூறி அனுமதி அளிக்கவில்லை.
மீறினால் வெளியேற்றுவேன் என்றார்.
அப்படி என்றால் இது போன்ற ஊழல்,முறைகேடுகள்,போன்றவற்றை சட்ட சபையில் எப்படித்தான் விவாதித்து நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
நீதிமன்றம் வழக்கை எடுக்க ஆலோசிக்கும் போதே அந்த விசயம் நிதிமன்றத்தி இருப்பதால் விவாதிக்க கூடாது என்று குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக பேசுபவரை நடுநிலை சபாநாயகராக வைத்தது அந்த பதவிக்கு இழுக்கு.


மத்திய அரசு ஊழல்களை ஆதாரங்களுடன் வாங்கி கையில் வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அதை வைத்து அமைசர்கள்,அதிமுக தலைகளை மிரட்டி பினாமி ஆட்சி செய்கிறது.
மத்திய அரசின் ஆதரவாளர் ஆளுநரிடம் மனு கொடுத்தால் அதை வைத்து நடவடிக்கை எடுக்காமல்,அதைவைத்தும் மிரட்டி ஆட்சி நடத்துகிறார்கள்.
இந்த குடகா,பான்பராக் விவகாரங்களும் பாஜக தலைமை இந்த ஆதாரங்களை வைத்து இன்னமும் அதிமுக ஆட்சியில் தனது பிடியை இறுக்குமே தவிர நடவடிக்கை எடுக்கும் என்பது சின்னப்புள்ளத்தனமான நம்பிக்கை.
அப்படி நடவடிக்கை எடுக்கும் நியாயமான பாஜக மத்திய அரசாக இருந்தால் விஜய பாஸ்கர் இன்று அமைச்சராக இருக்க மாட்டார்.புழலில் இருப்பார்.
ஆர்கே நகர் தேர்தல் ,வருமான வரி ஆய்வு,ஆய்வின் போது நடந்த அடாவடிகள் தொடர்பாக நடவடிக்கைகள்  அவரை  கட்சித்தலைவி ஜெயலலிதா,சசிகலா,போல உள்ளே அல்லவா தள்ளியிருக்கும். 
பண போதையில் அமைச்சர்,காவல்துறை அதிகாரிகள் குட்கா கையூட்டு பெறறார்கள்.
பினாமி ஆட்சி போதை பாஜகவை அதை கண்டு கொள்ளவிடாமல் வைக்கிறது.
===========================================================================================
ன்று,
ஜூன்-29.
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
===========================================================================================