இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 30 ஜூன், 2017

கேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,

பழனியில் விவசாயி ஒருவர் தனது 3மாடுகளை பண்ணைக்கு கொண்டு செல்கையில் வந்தவழியே வந்த ஜீயர் எனப்படும் பார்ப்பன சாமியார் இந்து முன்னணி ஆட்கள் துணையுடன் அந்த லாரியை காவல் நிலையம் அழைத்து சென்று புகாரை கொடுத்துள்ளார்.
"தனது மாடுகளை தான் பண்ணைக்கு கொண்டு செல்ல யார் அனுமதி வேண்டும்"என்று விவசாயி கேள்வி எழுப்ப அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கடசியினர்,விவசாயிகள் பொதுமக்கள் கூட காவல் அதிகாரி மாடுகளை விடுவித்தார்.
ஆனால் ஜீயர் அடியாட்கள் இந்து முன்னணியினர் சாலை மறியல்,அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்குதல்கள் நடத்த காவலர்கள் அவர்களை அடித்து கலைத்து விரட்டியுள்ளனர்.
கலவரத்தை உருவாக்கிய ஜீயரோ பாதுகாப்புடன் தூசி கூட படாமல் காரில் ஏறி பறந்து விட்டார்.
அவர் கார் மீது செருப்புகள் வீசப்பட்டது வேறு.
ஆக மடாதிபதிகள் ,பார்ப்பன சாமியார்கள் மாடுகள் தொடர்பாக பிரசனைகளை கிளப்பி விட்டு தங்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.அடிபடுவது என்னவோ சூத்திர இந்து வெறியர்கள்தான்.காரணம் பகுத்தறிவை மதத்தின் பெயரால் இழந்து விடுகிறார்கள்.
பசுவை கோமாதா என கும்பிடுவது பார்ப்பனர்கள் ஆனால் அதை காக்க கொலை செய்வதும்,கொலைக்கு ஆளாவதும் சூத்திரர் எனப்படும் தீண்டத்தகாத இந்துக்கள் எனப்படுபவர்கள்தான்.
பழனியில் இப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி என்றாலே கொலையாகும் நிலை.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் பரப்பிய பகுத்தறிவுதான் பசுக்காவலர்கள் எழாமல் தடுக்கும் இந்த  நிலைக்கு காரணம்.
பா.ஜ. ஆளும் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தில் பஜார்டாங்க் என்ற பகுதியில் வேன் ஒன்றில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவதாக பாஜக,ஆர்.எஸ்.எஸ். கும்பல் வேனை மறித்து டிரைவர் அலிமூதீன் என்பவரை  கடுமையாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்று காலைதான் குஜராத் கூட்டத்தில் ஒன்றும் அறியத உத்தமர் போல் 'பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது' என்று வேதம் ஓதினார் பிரதமர் மோடி.


ஆனால் அவரது இந்துத்துவா அரசுதான் பசு பாதுகாப்பு சட்டத்தையே  வெளியிட்டுள்ளது.
பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு,தொட்டிலை ஆட்டும் சேவையை செய்கிறார் மோடி.அவரின் இந்துத்துவா ஆடசியின் கொடூர  முகத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைகள்.


மனிதர்களை கொன்று மாடுகளை பாதுகாப்பது அறிவுள்ள மனிதன் செய்யும் காரியம் அல்ல.

காட்டுமிராண்டிகள் செயல்.இந்தியாவை 29ம் நூற்றாண்டில் இருந்து 10ம்  நூற்ராண்டுக்கு கொண்டு செல்லும் காரியத்தை மோடி அரசு செய்கிறது.
 மாட்டுக்காக பசு பாதுகாப்பு தீவிரவாத அமைப்பின் கீழ் 16 வயது முதல் 60 வயது வரை கொல்லப்பட்டவர்கள் மற்றும் கடுமையாக தக்கப்பட்டு காயமடைந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அவையாவன;
ஜூன் 2014 முஹ்சின் சாதிக் சேக் வயது 24 - புனேவில் கொல்லப்பட்டார்.
மார்ச் 2015 செய்யது ஷரீபுத்தீன் கான் நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.
மே 2015 அப்துல் ஜப்பார் குரைஷி வயது 60. ராஜஸ்தான்
செப்டம்பர் 2015 முஹம்மது அக்லாக் வயது 50 உத்திர பிரதேசம் தாத்ரி
அக்டோபர் 2015 ஜாஹித் ரசூல் பட் வயது 16 உதம்பூர்
அக்டோபர் 2015 நோமன் அக்தார் வயது 28. ஹிமாச்சல் பிரதேசம்
நவம்பர் 2015 முஹம்மது ஹம்சாத் அலி வயது 55 மனிப்பூர் .
மார்ச் 2016 முஹம்மது மஜ்லூம் வயது 35. மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ்கான் வயது 12. ஜார்கண்ட்.
ஏப்ரல் 2017 பெஹ்லுகான் ராஜஸ்தான்.
ஏப்ரல் 2017 அபூ ஹனீபா மற்றும் ரியாசுத்தீன் அலி. அஸ்ஸாம்.
மே. 2017 முன்னா அன்சாரி வயது 39. ஜார்கண்ட்.
ஜூன் 2017 ஜாஃபர் ஹுசைன் ராஜஸ்தான்
ஜூன் 2017 ஹாஃபிஸ் ஜுனைது வயது 16
ஜூன் 2017 நசீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் மேற்கு வங்கம்.
ஜூன் 2017 முஹம்மது சல்மான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்
ஜூன் 2017 உஸ்மான் அன்சாரி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.
பாஜக அரசு போட்ட மாட்டிறைச்சி சட்டம் தான் இந்த படுகொலைகளுக்கு மூலம்.
இந்த படுகொலைகள் அனைத்தும் மோடியின் பாஜக கணக்கில்தான் சேரும்.

அவர் அரசின் மீது சாதனைகள் பதக்கங்கள் அல்ல.ரத்தக்கறைதான்..

=========================================================================================
ன்று,
ஜூன்-30.


  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணாக " 999" லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)

  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பாட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
=========================================================================================
F .I .R .குற்றவாளிகள் பார்ப்பனரில்  உண்டு.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட திமுக மதிமாறன் அவ்விவாதத்தில் கலந்து கொண்ட பாஜக நாராயணன் என்பவரை தனது விவாதம் மூலம் திணறடித்து ஓட வைத்தார்.
இதில் கடுப்பான பாஜகவினர் ஸ்டாலினுடன் நட்பில் இருக்கும் பார்ப்பன நடிகர் எஸ்.வி.சேகர் மூலம் மதிமாறனை இனி விவாதங்களில் கலந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
சட்டமன்ற நடவடிக்கையில் மூழ்கியிருந்த திமுக தலைவர் ஸ்டாலினும் ஆவண செய்வதாக கூறியுள்ளார்.

இதை வெளியில் சொன்ன சேகர் ஸ்டாலின் அந்த உறுப்பினரை கண்டித்து விட்டதாகவும்,தொலைக்காட்சி உரிமையாளரிடமும் மதிமாறனை இனி விவாதங்களுக்கு அழைக்க தட்டி கேட்டு அவரும் ஒப்புக்கொண்டதாகவும் தங்களை எதிர்த்து ஒன்றும் நடக்காது என்றும் ,இதுவரை ஒரு பார்ப்பனர் மீது கூட எப்.ஐ.ஆர்.காவல் நிலையத்தில் பதியப்பட்டதில்லை என்றும் அலட்டிக்கொண்டார்.

பார்ப்பனர்கள் கவ்டில்யர் வாரிசுகள்.மற்ற வர்களைத் தூண்டிவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்வார்கள்.முடிந்தால் எதிரியுடனே இணைந்து ராஜகுருவாகி விடுவார்கள்.புராண காலம் முதல் இதுதான் நிலை.
1947 வரை ஆங்கிலேயே அரசிடம் அதிகரமிக்க பதவிகளை வாங்கி மற்றவர்களை அடிமைகளாக்கி சொகுசாக வாழ்ந்தவர்கள் தான் .
விடுதலைப்பெற்ற பின்னரும் அரசுப்பதவிகளில் அதிகாரமிக்க பீடங்களில்72 %அவர்கள்தான் என்று புள்ளி விபரணமககள் கூறுகின்றன.

ஆனால் நாதுராம் கோட்ஸே,விர் சவுகார்.ஜெயலலிதா,ஆகிய மூவரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்.
இவர்களின் ஆச்சார்யார்  ஜெயேந்திர சங்காரச்யார் கொலை குற்றம் பதிவு செய்யப்பட்டு பாஜக அரசு வந்ததும் தப்பித்தார்.

இவரால் கூலி படை ஏவி கொல்லப்பட்ட சங்கராமனை கொலை செய்தவர் யார் என்பதுதான் காவல்துறை முன் உள்ள கேள்வி?கூலிப்படையினர் கக்கிக்காட்டியது முழுக்க காஞ்சி மடாதிபதியைத்தான்.
எஸ்.வி.சேகர் தான் திமுக தலைவர் ஸ்டாலினை நடவடிக்கை எடுக்கவைத்ததாக தம்பட்டம் 
அடித்ததுக்கொண்டு இருப்பதை சகிக்க முடியாமல் திமுகவினர் இணையத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப அவர் தந்த பதில் :- 

"தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். 

சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. 

டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.


இதன் தொடர்ச்சியாக,தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு,சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். 

நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை. 

தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. 

அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. 
அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன்.
 அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன்.

 யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது-சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. 

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.