அதானிக்கு மேலும் ரூ.500 கோடி சலுகை அளித்த மோடி

நாட்டு மக்கள் மீது, ஏராளமான வரியை விதித்து கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் தொழில் குழுமத்துக்கு புதிதாக ரூ. 500 கோடியை வரிச் சலுகையாக அளித்திருப்பது தெரியவந்துள்ளது.



இ.பி.டபிள்யு. எனப்படும் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி, இதனை அம்பலப்படுத்தியுள்ளது.இ.பி.டபிள்யு. இதழானது, கடந்த ஜூன் 17-ஆம் தேதி புலனாய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தித் திட்டங்களில், அடிக்கடி விதிகளை மாற்றியமைத்ததன் மூலம் அதானிக்குச் சொந்தமான “கிரீன் எனர்ஜி லிமிடெட்” மின்சார நிறுவனம் ரூ. 500 கோடி அளவுக்கு சுங்க வரிச் சலுகை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில், அதானி நிறுவனத்தின் முந்த்ரா மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தலா 330 மெகாவாட் திறன் கொண்ட நான்கு மின்நிலையங்களையும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து மின்நிலையங்களையும் கொண்டது.இவற்றுக்குத் தேவையான மூலப்பொருளான நிலக்கரியை இறக்குமதி செய்தபோது அதானி நிறுவனம் சுங்கவரி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சுங்கவரி செலுத்தியிருந்தால், அதைத் திரும்பப்பெற முடியும் என விதிகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அதானி நிறுவனம் செலுத்திய ரூ. 506 கோடி சுங்கவரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


உண்மையில் அதானியின் “கிரீன் எனர்ஜி லிமிடெட்” சுங்க வரியை செலுத்தவே இல்லை என்பதுதான் இ.பி. டபிள்யு இதழின் குற்றச்சாட்டாக உள்ளது. செலுத்தாத வரியை, செலுத்தியதாக காட்டி, பின்னர் வரிச்சலுகைக்கான திருத்தம் மூலம் அதானி நிறுவனம் வரி கட்ட வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்கள் பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றும் இ.பி.டபிள்யு. இதழ் தெரிவித்துள்ளது.

மாறாக, இ.பி.டபிள்யு கட்டுரையால் தங்களுக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக இ.பி.டபிள்யு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதானி நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதானியின் நோட்டீஸூக்கு அஞ்சாத இ.பி.டபிள்யு வீக்லி, “ தங்களின் இதழில் அதானி குழுமம் தொடர்பாக வெளிவந்த இரண்டு கட்டுரைகளும், முழுக்க உண்மையை அடிப்படையாகக் கொண்டவை என்பது மட்டுமன்றி, உரிய ஆதாரங்களும் இருக்கின்றன” என்று பதிலடி கொடுத்துள்ளது.பொதுநலன் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இதை வெளியிடுவதற்கு இபிடபிள்யு பத்திரிகைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிமை உண்டு என்றும் பதிலளித்துள்ளது.

தமிழகத்தின் கமுதியில் உள்ள “அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்” நிறுவனமும், அதன் சோலார் பேனல்களைச் சுத்தம்செய்ய தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடித்து வருவது; 
ஏற்றுமதியையே செய்யாமல், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் பயனை அனுபவிக்க முயன்று, அதானி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானது ஆகியவை பற்றியும் இ.பி.டபிள்யு பத்திரிகை தனது கட்டுரையில் விரிவாக பதிவு செய்துள்ளது.
                                                                                                                    -எகனாமிக் & பொலிடிக்கல் வீக்லி 

=====================================================================================
விசம  பிழை !
குஜராத் மாநில நான்காம் வகுப்பு முதல் மொழி பாடமான இந்தி பாட புத்தகத்தின் 13 வது பக்கத்தில்,
"ரம்ஜான் நோன்பு கடைபிடித்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக அமையும்"
என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத் கல்வித்துறை அதிகாரி நிதின் பெதானி,
"இது ஒரு அச்சுப்பிழை, இப்படி ஒரு வாக்கியம் அமைந்தது வருந்தத் தக்கது. விரைவில் அது நீக்கப்பட்டு புதிய பாட புத்தகம் விநியோகிக்கப்படும்'
- என்று தெரிவித்துள்ளார்.

அச்சுப்பிழை என்றால் ஓரிரு எழுத்துக்கள்,அல்லது அதிகப்படியாக ஒரு வார்த்தை பிழையாக இருக்கலாம் ஒட்டுமொத்த கருத்தே எப்படி அச்சுப் பிழையாக இருக்கும்?

இந்துக்களும் நோன்பு இருப்பது வழக்கம்.அது அறிவியல் பூர்வமாகவே உடல் நலத்துக்கு நல்லது என்று கூறப்படும் நிலையில் வாந்தி,நோய்கள் வரும் என்பது அச்சுப்பிழையாக இருக்குமா?

விசமத்தன பாஜக அரசின் கருத்துப் பிழையா?


ரூ 2,00,00,000 விலையில் மாங்குயில் கூவிடும் சோலை
பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என சிறையை ஆய்வு செய்த கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். 



இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். 
அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு, ரூபா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. 

அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கெனசில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம்பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே சசிகலாவுக்கு சிறப்பான பணிவிடைகள் செய்யப்படுவதாகவும்  சிறை பணியில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயத் தில், உண்மையில் தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி  நடவ டிக்கை எடுக்க வேண்டும். 

சிறைத்துறை,டி.ஐ.ஜி.,யான நான்,ஆய்வு நடத்தியதை, தங் களுக்கு  அறிக்கையாகத்தந்துள்ளேன்.. என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களி டம் ரூபா கூறுகையில்இதே அறிக்கையை, ஊழல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்,'' என்றார் டி.ஐ.ஜி. ரூபா.

குமாரசாமிகளையே விலைக்கு வாங்கும் சக்தி படைத்த சசிகலாவுக்கு டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு விலை கொடுப்பது எம்மாத்திரம்.

 மாங்குயில் கூவிடும் சோலை எம்மை மாட்டிட  நினைத்திடும் சிறைசாலை  என்ற வரிகளுக்கு ஏற்ப பரப்பன சிறையையே போயஸ் தோட்டமாக மாற்றிவிட்டார் சின்னம்மா?
==================================================================================
ன்று,
ஜூலை-13.


  • இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
  • பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)

  • லாஸ் ஏஞ்சல்ஸ்  மலையின் மேல் "ஹாலிவுட்" என  எழுதப்பட்டது(1923)

  • முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)

கவிஞர் வைரமுத்து பிறப்பு (1953)
===================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?