தூங்கிக்கிட்டிருந்த மிருகம் ...,

இந்திய திரு நாட்டின் மத்திய அமைச்சர் என்ற மாபெரும் பொறுப்பில் இருப்பவர் பொன்னார் என்ற பொன் .ராதாகிருஷ்ணன்.
அவரை இதுவரை பாஜகவின் அசட்டுத்தன வேலைகளுக்கு கேனத்தனமான விளக்கங்களை தருபவராகவும்,விமான தள  பேட்டித்துறை அமைச்சர்  என்று மட்டுமே அறிந்திருந்தோம்.

இப்போது பூனைகுட்டி  வெளியே வந்து விட்டது.அதாவது அவருக்குள்ளே தூங்கிக்கிட்டிருந்த மிருகம் அதுதான்.

ஆனால் அவர் தனது பொறுப்பு மிக்க பதவியை மறந்து சாதாரண பேட்டை ரவுடியை போல் ,அல்லது ஆர்.எஸ்.எஸ்.சேவக் போல் முழங்கியுள்ளார்.
"இந்து அமைப்பினர் தாக்கப்படுவது தொடருமானால் “தமிழகம் கலவர பூமியாக மாறும்” என்று . 
இந்து அமைப்பினர் என்று தாங்கள் சொல்வதன் பொருளை வெறி மிக்க இந்துத்துவா அமைப்பினர் என்று மக்கள் புரிந்து கொள்ளாத முறையில் ஒட்டு மொத்த இந்துக்களையும் கூறுவது போல் கூறியுள்ளார்.
 சமீபத்தில் இந்துத்துவா அமைப்பினர் எங்கே, எதற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பொன்னர் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தம் பொதுவாக தமிழகத்தில் இந்துக்கள் எல்லோரும் தாக்கப்படுவதாக சொல்லியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் பாஜக,இந்து முன்னணி யினர் வீடுகளில் வெட்டி குண்டு வீச்சு, தாக்குதல் என்று வருபவை எல்லாம் அவர்களாகவே செய்து கொண்டதாகவும்,கள்ளக்காதல் விவகார மோதல்;களாகவுமே இருக்கிறது.
ஆனால் அதை காட்டி மாற்று மதத்தினர் மீது தாக்குதலை வழிய சென்று நடத்துவது மட்டுமே பாஜக,இந்துத்துவாக்கள். 
மாறாக, தமிழகத்தில் சமீபகாலங்களில் நடக்கும் தனிப்பட்ட விரோதத்தின் காரணமான தாக்குதல்களை, காவல்துறைக்கு அவகாசம் கொடுக்காமலேயே, இஸ்லாமியர்கள் தான் அந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று அறிக்கை வெளியிடுவதும், அதேபோன்று தற்கொலை செய்து கொண்டவர்களை கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் மதரீதியான அமைப்புகள் என்று தோன்றும் வகையிலும் தாங்கள் உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகிறீர்கள். 
இதன் தொடர்ச்சியாக உங்கள் அமைப்பின் ‘கொள்கை’ வழியில் நின்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற  நிகழ்சி நிரல் உங்களிடம் உள்ளது என்பதை உங்கள் மிரட்டல் வெளிக்கொணர்ந்து விட்டது.

இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் கலவரங்கள் இல்லாமல் சொத்து அழிப்புகளும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் கொல்லப்படாமலும், தாக்கப்படாமலும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக காட்ட முடியாது. 
மற்றவற்றை விடுங்கள். நீங்கள் வெற்றி பெற்றுள்ள நாகர்கோவில் தொகுதியில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின்பு தான் தங்கள் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது என்பதும், அதன் பிறகு இரு மதங்கள் உள்ள எல்லா ஊர்களிலும் ஏதோ ஒரு வகையில் பகைத் தீயை எரிய விட்டிருக்கிறீர்கள் என்பதும் தமிழகம் அறிந்த செய்தி.
அடுத்தது, கோயம்புத்தூர். கலவரங்களின் மூலமாகவும், அழித்தொழிப்புகளின் மூலமாகவுமே உங்கள் அமைப்பை காப்பாற்றி வருகிறீர்கள். திருப்பூரும் அப்படித்தான். எல்லா பிரச்சனைகளையும், அதன் பின்புலத்தையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கே நன்கு தெரியும்.

கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று உங்கள் கட்சியின் இராமநாதபுரம் நகரத்தின் நிர்வாகியாக இருந்த அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். 
இது குறித்து தங்கள் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று விளம்பியிருக்கிறார். 
இதேபோன்று நாராயணன் “தமிழக காவல்துறை தலிபான்கள் அதிகம் உள்ள இராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். 
சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால் ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேரோடு அறுக்கும்” என்று தனது ‘நோக்கத்தை’ உண்மை போல வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் “அஸ்வின்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் வெட்டப்பட்டுள்ளார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி ஒவ்வொருவரும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லீம்கள்தான், தீவிரவாத அமைப்புகள் தான் அஸ்வினையும் அவருடைய தந்தையையும் வெட்டிவிட்டார்கள், கடை சூறையாடப்பட்டுவிட்டது என்று கொளுத்திபோடுகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிற அப்பாவிகள் இருந்தால் என்ன நடந்திருக்கும்... முஸ்லீம்கள் தாக்கப்பட்டிருப்பார்கள், முஸ்லீம் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட அப்பாவிகள் சிறைக்கு போயிருப்பார்கள்; அல்லது உங்களை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். 
அதை வைத்து நீங்கள் காவிக்கொடியை பறக்க விட்டிருப்பீர்கள். இதுதானே வழக்கம்.
இந்த தாக்குதல் வழக்கில் மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இவர்கள் எல்லாம் தலிபான்களா? முஸ்லீம் தீவிரவாதிகளா?

இதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி திருப்பூரில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்து என்கிற மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்குகிறார். அவருடைய பிணத்தின் கீழே பாஜக கொடி, இந்து முன்னணி கொடி, பிரதமர் மோடியின் படம் மூன்றிற்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கிறது. 
உங்கள் கட்சியின் தலைவர்கள் இது கொலையென்றும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும் இந்துத்துவா இயக்க பிரமுகர்கள் இப்படி கொல்லப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் பேசினார்கள். 
 அந்த படத்தை பார்க்கிற யாருக்கும் உண்மையிலேயே  மனம் பதை பதைக்கும். 
தாங்கள் கூட அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், உதவி செய்யவும் வருவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. 
பின்னர், உங்களுடைய அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் பத்திரிகைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது. 
அதன் பிறகு உங்கள் கட்சியைச் சார்ந்த யாரும் முத்து அவர்களின் மரணம் பற்றி எதுவும் பேசியது கிடையாது. 
ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் முத்து சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது அம்பலமானது.
மரியாதைக்குரிய மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதுவொரு கொலையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருக்கும்பட்சத்தில் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? 
அது தற்கொலை தான் என்று தாங்கள் முடிவுக்கு வந்தால் உண்மையில் உங்கள் கட்சி இந்த பிரச்சனையை நேர்மையாக அணுகினால் பாஜக, இந்து முன்னணி கொடிகளுக்கும்,மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? 
நிச்சயமாக, இதையெல்லாம் செய்து விட்டு முத்து தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.

இந்த தற் கொலையை  உங்கள் வெறி அமைப்புகளைச் சார்ந்த ஒருவர் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும், போலீசுக்கும் சொல்வதற்கு முன்பாக கொடிகளுக்கும், மோடியின் படத்திற்கும் செருப்பு மாலை அணிவித்து விட்டு சொல்லியிருக்கிறார்.

 எத்தனை நயவஞ்சகம், எத்தனை அழுகிப்போன வக்கிரமான மூளை அது. அவரை குறை சொல்லி வீட்டா முடியாது நீங்கள் மதவெறியை ஊட்டி,மாற்று மத த்தினரை எப்படி எல்லாம் சூறையாடலாம் .தாக்கலாம் என்று அவருக்கு அளித்த பயிற்சியின் விளைவு.
தொடர் பயிற்சியில்லாமல் மிக நிதானமாக ஒரு பிணத்தின் கீழே இவற்றையெல்லாம் ஒருவரால் நடத்தியிருக்க முடியுமா? 
உங்கள் அமைப்புகளுக்கு தொடர்பில்லை என்றால் தீய நோக்கத்துடன் இச்செயலை செய்தவரை கண்டுபிடிக்க வேண்டுமென்று நீங்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டாமா? இன்று வரை அதை செய்யவில்லையே. இதன் பொருள் என்ன? 
திட்டமிட்டு மதமோதலை உருவாவதற்கு முயற்சித்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
கடந்த ஆண்டும் திருப்பூரில் பக்ரீத் பண்டிகை அன்று கடையடைப்பு செய்வதற்கு உங்கள் அமைப்பினர் செய்த முயற்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளின் துணையோடு முறியடித்தது.

உங்கள் கட்சியில் வளர்ந்து வரும் திண்டுக்கல் நகர தலைவர் ஒருவர், தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். உங்கள் கட்சியினர் கண்டித்தார்கள். ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. காவல்துறையும் முடுக்கிவிடப்பட்டது. 

அப்புறம் தான் தெரிந்தது, உங்கள் கட்சியின் ஒவ்வொரு தலைவரும் ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பாதுகாப்புடன் அலைவதை பார்த்ததும் தனக்கும் அப்படியொரு பாதுகாப்பிற்காக நாடகம் ஆடினார் என்று.
இது தங்கள் அமைப்புகளுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த கால தங்கள் அமைப்புகளின் செயல்பாட்டிலிருந்தே உங்களிடம் புதிதாக வருபவர்களும் ‘கற்றுக் கொள்கிறார்கள்’.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ந் தேதியன்று குடியரசு தினத்திற்கு இரண்டு நாள் முன்பு தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. 
குண்டு வெடித்த இடத்தில் முஸ்லீம்கள் அணியும் தொப்பி கிடக்கிறது. தென்காசி அதற்கு முன் பலமுறை மதமோதல்களையும், கொலைகளையும் கண்டிருக்கிறது. 2007ம் ஆண்டு தென்காசியில் மதமோதலில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். 
உடனடியாக பதற்றம் பற்றிக் கொள்கிறது. நம்மையெல்லாம் சந்தேகிப்பார்களோ என்று முஸ்லீம் இளைஞர்களுக்கு பதற்றம். நீங்கள் வழக்கமாக பேசுகின்ற "நாங்கள் எல்லாம் இந்துக்கள்" என்பதை நம்புகிற சாதாரண இந்து மனிதனுக்கு எந்தவொரு முஸ்லீமை பார்த்தாலும் இவர்கள் தான் செய்திருப்பார்களோ என்கிற சந்தேகம். 


இப்படிப்பட்ட ஒரு களம் உங்கள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு அல்லவா? 
அது எளிய மனிதர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? 

நல்லவேளையாக அப்போதிருந்த காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்த பிறகு குண்டு போட்டவர்கள் இந்து முன்னணி அமைப்பினர் என்று கண்டுபிடித்தார்கள். நீதிமன்றமும் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

இதேபோன்று இந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதியன்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் ‘அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசி தாக்குதல்’ நடத்திவிட்டார்கள். ஆனால் 6 மணி 31 நிமிடத்திற்கெல்லாம் ஜெயதேவ் ஹரிந்தரன் நாயர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்து விட்டதாக பதிவு செய்திருக்கிறார். அந்த அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 

அவை வேலை செய்யவில்லையாம். இதற்கு முன்பும் இப்படி ‘தாக்குதல்’ நடந்த போதும் அந்த சி.சி.டி.வி. கேமராக்கள் வேலை செய்யவில்லையாம். எனவே கலவர பூமியாக்கி விடுவோம் என்று நீங்கள் சொல்வதன் பொருள் தமிழகத்தை பொய்யான மோதல்கள் மூலம், தவறான தகவல்கள் மூலம் கலவர பூமியாக மாற்றுவதற்கு உங்கள் அமைப்பினர் முடிவு செய்திருப்பதாகவே பொருள் கொள்ளத் தோன்றுகிறது.

இதோ, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.கேட்டால் கேரளாவை கைகாட்டுகிறார்.அங்கு கண்ணனுரில் கலவரத்தை போதித்தவர்,அதை வளர்த்து வருபவர்கள் பாஜக,இந்து மதவாத அமைப்புகள் என்பது இந்தியாவே அறிந்த உண்மை.

மாண்புமிகு. மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதிகாரத்திற்காக பொய்யான தகவல்கள் மூலம், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை உங்கள் அமைப்பு வழக்கமாக வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் வாக்குமூலமாக சொல்லுவதற்கு முன்வந்திருக்கிறீர்கள். 
தமிழ் நாட்டை கொல்லைப்புறம் வழியே வந்து அதிமுகவினரை மிரட்டி ஆட்சி செய்கிறீர்கள்.
அதை அப்படியே மாற்றி பாஜக ஆட்சியாக்க முயற்சிக்கிறீர்கள்.
இது ஒவ்வொரு தமிழமும் அறிந்த உண்மை.
ஆனால் திமுக போன்ற கட்சிகளை ,மத சார்பற்ற உணர்வுள்ளவர்களை அகற்றவே இந்து மத வெறியை ஊட்டி கலவரத்தை விதைக்க முயற்சிக்கிறியர்கள்.
கோத்ரா  சம்பவத்தை மக்கள் மறக்கவில்லை.அதன் மூலம் குவிந்த பிணங்களின் மீது ஆட்சி அமைத்த மோடியை நாங்கள் மறக்கவே இல்லை.பின்தங்கிய உ.பி,ம.பி,பீகார் போன்ற மாநிலங்களில் எளிதாக மதவெறியை இருபக்கமும் தூண்டி பாஜக குளிர் காயலாம்.
ஆனால் பெரியாரால் தமிழ மண் பகுத்தறிவை கொஞ்சமாவது பெற்றிருக்கிறது.இங்கு உங்கள் கௌடில்ய வேலைகள் செல்லுபடியாவது கொஞ்சம் அல்ல நிறையவே அரிது.

=========================================================================================================================================
ன்று,
ஜூலை-11.


  • உலக  மக்கள்தொகை தினம்
  • மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)
  • மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)
  • நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)

1987, ஜூலை 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. 
இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா உருவாக்கியது.
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம், மக்கள் தொகை உயர்வு.
ஆண்டுதோறும் வேகமாக உயரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
உலகில் ஆண்டுதோறும் 18 வயதுக்கும் கீழே திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உள்ளது. மறுபுறம் 32 லட்சம் பேருக்கு பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடக்கிறது. இளம் வயது திருமணம் காரணமாக, கர்ப்ப கால இறப்பும் அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட திருமணங்களை, அறவே ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
               இந்தியாவில் உள்ள  மாநிலத்தின் மக்கட்தொகை அதற்கு எதிரே உள்ள நாட்டின் மக்கட் தொகைக்கு சமம்.
தனிமனித கட்டுப்பாடும் இதில் அவசியம்.
உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது.தற்போது 713 கோடியாக உயர்ந்துள்ளது. 2050ல் இந்த எண்ணிக்கை 955 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும். இந்திய மக்கள்தொகை, 1950ல் 38 கோடியாக இருந்தது. 
2011 கணக்கின் படி, 121 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் 162 கோடியாக அதிகரிக்கும் எனவும், அப்போது இந்தியா தான் உலக மக்கள் தொகையில் முதலிடத்தை பெறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
மாறாகத் தற்போது 139 கோடி மக்கள் தொகையைக் கொண்டு, முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை, 2050ல், 138 கோடியாக நிலைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த ஆய்வு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது.
அனைத்து துறைகளிலும் முன்னேறிய சீனாவை, மக்கள்தொகையில் முந்துகிற சாதனையை இந்தியா படைக்க உள்ளது.
============================================================================================
அப்படி போடு.
புதுச்சேரியில் பாஜக-வின் மாநில நிர்வாகிகள் 3 பேருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட இவர் களுக்கு, ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இந்த 3 பேரும் நியமனஅதிகாரம் பெற்றவர்களால் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர்களின் எம்எல்ஏ பதவி செல்லாது என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

பாஜகவின் புதுச்சேரி மாநிலத் தலைவர்சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை, திடீரென மத்திய அரசு எல்எல்ஏ-க்களாக நியமித்தது. இவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது அறையில் ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பொதுவாக, நியமன எம்எல்ஏ-க்கள்புதுச்சேரி அரசின் பரிந்துரை அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், அரசின் பரிந்துரையை மீறி, பாஜக-வைச்சேர்ந்தவர்கள் எம்எல்ஏ-க்கள் ஆக்கப்பட் டார்கள். இதற்கு புதுவை அரசு எதிர்ப்புதெரிவித்தது. 

மேலும் இதைக் கண்டித்து, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டமும் நடைப்பெற்றது.

இந்நிலையில், 3 பேரின் எம்எல்ஏ நியமனம் செல்லாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்; இதை ஏற்றுக்கொண்டு அவர்களை எம்.எல்.ஏ.க் களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநரின் செயலாளர் தேவநீதிதாஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்க மறுத்து, அதனைமீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ள சபாநாயகர், அதில், ஆளுநரின் கடிதத்தை ஏன் ஏற்க முடியாது என்பதற்கான காரணங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.“நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 பேரும் என்னிடம் மத்திய அரசு கடிதத்தை காண்பித்தார் கள்;

 அதில் 3 பேரின் பெயர் மட்டும் தான் இருந்தது; அவர்களுடைய தந்தை பெயர், முகவரி போன்ற எந்த விவரங்களும் இல்லை. எனவே முழு தகவல்கள் அடங்கியஉத்தரவு இருந்தால்தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று கூறினேன்.

மேலும் 3 பேர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு எதுவும் சபாநாயகர் அலுவலகத்துக்கு “நியமிக்கும் அதிகாரம் உள்ள உரிய நபர்களிடம் இருந்து” வரவில்லை; எனவே, நான் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை.

ஆனால் நீங்கள் (ஆளுநர்) அவர்களுக்குபதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறீர்கள்; சபாநாயகர் இருக்கும் போது, அவர்தான் எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்; அவரை மீறி ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது.தற்காலிக சபாநாயகராக நியமிக்கப் படும் நபருக்கு மட்டுமே எம்.எல்.ஏ. பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; 

மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.எனவே, நீங்கள் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது செல்லாது; நான் அவர்களை எம்.எல்.ஏ. வாக பணியாற்ற அனுமதிக்க முடியாது.

”இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.சபாநாயகரின் இந்த முடிவால் புதுவை நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் பாஜக-வுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவை வளாகம் முழுவதும் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபாநாயகர் என்ன உத்தரவு பிறப்பிக் கிறாரோ, அதையே சட்டப்பேரவைக் காவலர்கள் நிறைவேற்றுவார்கள். 

இதனால் 3 பேரையும் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டால் 3 எம்எல்ஏ-க்களும்சட்டப்பேரவைக்கு உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?