அடுத்த அஸ்திரம்: கோழி.?


முதலில் அவர்கள் மாடுகளைக் குறி வைத்தபோது, ‘இது நமக்குத் தொடர்பில்லாத விஷயம்’ என்று நிறைய பேர் நினைத்தனர். 


இப்போது சத்தமில்லாமல் கோழிகள் பக்கம் திரும்பிவிட்டது நரேந்திர மோடியின் மத்திய அரசு. கிட்டத்தட்ட இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலையே ஒழித்துக் கட்டும் கடுமையான விதிமுறைகள், மோடியின் அடுத்த அஸ்திரமாக வர இருக்கின்றன.

கோழிப்பண்ணைத் தொழிலை நம்பியிருக்கும் பல லட்சம் மக்களை நடுவீதியில் நிறுத்தி வேலைவாய்ப்பை மோடி வழியில் பெருக்குவதோடு ,முட்டை விலையையும், கோழிக்கறியின் விலையையும் தாறுமாறாக உயர்த்தப் போகிறது இந்த அறிவிப்பு.

கோழிப்பண்ணைகளிலும், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும்போதும் கோழிகள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதிய மத்திய சட்ட அமைச்சகம், இதுதொடர்பாக விதிமுறைகளைப் பரிந்துரைக்குமாறு சட்ட ஆணையத்திடம் கடந்த மார்ச் 2-ம் தேதி கேட்டுக்கொண்டது. 



இதுபற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தது சட்ட ஆணையம். 

இதைத் தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி புதிய விதிமுறைகளைப் பரிந்துரை செய்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அளித்திருக்கிறார், சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.எஸ்.சவுகான். 

‘முட்டைக்கோழி வதைத் தடுப்பு விதிகள் 2017’ மற்றும் ‘கறிக்கோழி வதைத் தடுப்பு விதிகள் 2017’ என அழைக்கப்படும் இவற்றை வெகுவிரைவிலேயே அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு.

முட்டை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஓர் ஆண்டில் சுமார் 6,500 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 


இந்தியக் குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படாமல் தடுப்பதில் முட்டைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக முட்டை தருகின்றன பல மாநிலங்கள். கறிக்கோழி உற்பத்தியிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. 

இந்திய கறிக்கோழி மார்க்கெட்டின் ஆண்டு பிசினஸ் மதிப்பு, சுமார் 40,000 கோடி ரூபாய். இவை எல்லாவற்றையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்த நடைமுறை பார்க்கப்படுகிறது.
============================================================================================
ன்று,
ஜூலை-10.


  • வேலூர் சிப்பாய் கலகம் உண்டானது (1806)
  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)

  • பஹாமாஸ் விடுதலை தினம்(1973)
  • டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)

  • ============================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?