மோ(ச)டியான மழுப்பல்

சமையல் எரிவாயு உருளை  மானியம் வேண்டுமென்றால் எல்லோரும் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆதார் பதியவைத்து, அந்த வேலை முடிந்தவுடன் மானியத்தை முற்றாக ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு.
தற்போது  உருளையின் முழு விலையையும் கொடுத்த பின்னர்தான் மானியம் தனியே வருகிறது.அதை அப்படியே விட்டுவிடுவார்கள் என்பதே பெரும் அதிர்ச்சியாக உள்ள நிலையில் மாதா,மாதம் உருளை விலையில் ரூ 4/-அதிகரிக்கும் என்பது அடுத்த இடி.

இப்படி அநியாயமாகக் கொடுக்கும் விலையை நினைத்தால் அதில் சமைத்த உணவு ருசிக்குமா?
இயற்கை எரிவாயு உற்பத்தி ,விநியோக பணியில் உள்ள அம்பானி க்கு லாபம் குறைந்து விடக்  கூடாது என தினசரி விலை நிர்ணயம் செய்யும் மோடி ஏழை மக்களுக்கு  கிடைக்கும் மானியங்கள் மீது மட்டும் கைவைத்து எதற்கு?
இப்படி செய்வதிலும்,அதனால் ஏழைமக்கள் அல்லாடுவதை பார்ப்பதிலும் அவருக்கு என்ன மகிழ்வோ.

இந்தியாவை பணக்கார நாடாக்குவதில் அவரின் முயற்சிகளில் ஒன்றுதான் ஏழைகளை இல்லாமல் செய்வதோ என்ற ஐயம்.

அப்படியெல்லாம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மறுக்க முயற்சித்திருக்கிறார் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

அதே மக்களை ஏமாற்றும் மோ(ச)டி வேலையைத்தான்,தமிழ் நாட்டில்  உணவுத் துறை அமைச்சர் காமராஜை வைத்து செய்கிறது பாஜக பினாமி  அரசு.

"தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள்- 2017" என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிக்கையில், யாருக்கெல்லாம் இனிமேல் ரேசன் அட்டை கிடையாது என்று குறிப்பிட்டுள்ள வரையறையை ஆய்வு செய்தால் அதற்குள் அடங்காத ஒருவர் கூட இருக்கமாட்டார்.

 தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இனி ரேசன் இல்லை என்பது மட்டும்  பளிச்சென புலப்படுகிறது.

வருமான வரி செலுத்தும் நபரை (குறைந்ததுஒருவர்) உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்,
தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள், 
பெரு விவசாயிகளின் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) குடும்பங்கள், 
மத்திய - மாநில உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய - மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், 
4 சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (தினசரி வாழ்வாதாரத்துக்காக ஒரேயொரு வாகனத்தை வணிகபயன்பாட்டுக்குப் பயன்படுத்திவரும் குடும்பங் கள் நீங்கலாக), 
குளிர்சாதனக் கருவி வைத்துள்ள குடும்பங்கள், 

3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை (கான்கிரீட்) மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள், 
பல்வேறு சட்டங்களின் கீழ்வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து தொழில்செய்துவரும் குடும்பங்கள், 

மாதம் 8ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் என அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம்ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளகுடும்பங்கள் ஆகியவற்றை ரேசன் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இனி தமிழக அரசு கொடுத்துள்ள குடும்ப மின்னணு அட்டை ஏதாவது சான்றிதழ் வாங்கவும் அதை வாங்க காத்திருக்கும் நேரம் வெயிலால் அரிக்கும் இடத்தில் சுகமாக சொரிந்து விடவும் மட்டும்தான் பயன் படும்.

அனைத்து ஆதாரங்களிலிருந்தும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தாலே பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்பது தமிழக மக்கள் மீதான பயங்கர தாக்குதல்.

மத்திய அரசு கூறும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வரையறுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும்தான் ரேசன் அட்டை பெறுவதற்கான தகுதி உள்ளவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரியவருகிறது. 

மலிவு விலை அரிசி ,மண் எண்ணை ஆகியவைகளுக்கான மானியத்தை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு நிறுத்த ஆணையிட்டுள்ளதை பார்க்கையில் இனி நியாய விலைக்கடைகளில் ஒன்றும் நியாயமாக கிடைக்க வழி இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

ஆனால்  உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அரசாணையில் ஒன்றும் கிடைக்காது என்றாலும் நியாவிலைக்கடைகளில் இப்போது போல் எல்லாம் கிடைக்கும்,அரசாணை சும்மானாச்சுக்கும் என்று மக்களை புன்னகை மன்னன் ஆக்குகிறார்.

ஏற்கனவே தமிழ் நாட்டு நியாயவிலைக்கடைகளில் அரசு உப்பும்,டான் தேயிலையும்தான் இருப்பில் உள்ளது.
மற்றவை ஜெயலலிதா மறைவுக்கு முன்னரே மறைந்து , மாயமாகி விட்டது.

அந்த தைரியத்தில்தான் அரசாணை ஒருபக்கம் வந்தாலும் நியாய விலைக்கடை தற்போது போலவே இயங்கும் என்கிறார்  உணவுத் துறை அமைச்சர் காமராஜ் .

அமித்ஷாவின் சொத்துக்கள் குறித்த செய்திகள் மாயம்

2012இல் அமித்ஷா குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்திற்கும், இப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்திற்கும் இடையே கடந்த ஐந்தாண்டுகளில் எப்படியெல்லாம் அமித்ஷாவின் சொத்துக்கள் 300 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. அதேபோன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்பு 2014 மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாண வாக்குமூலத்தில் பி.காம். தேர்ச்சிபெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதே கல்வித்தகுதியைத்தான் 2011 மாநிலங்களவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்திருந்த பிரமாண வாக்குமூலத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 2004 மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாண வாக்குமூலத்தில் 1996இல் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஏ. தேர்ச்சி பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தான் இன்னமும் பி.காம். பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார். இவ்விவரங்கள் அனைத்தையும் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு மற்றும் அதன் சகோதர செய்தி நிறுவனங்களான நவபாரத் டைம்ஸ் (இந்தி) மற்றும் எகனாமிக் டைம்ஸ் ஏடுகளின் இணையதளங்களும் பதிவேற்றம் செய்திருந்தன.
ஆனால் இப்போது அவை அவற்றிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.டைம்ஸ் குழுமம் இவ்வாறு ஒரு செய்தியைப் போடுவதும், பின்னர் அதனை எடுத்துவிடுவதும் புது விஷயமல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு செய்திருக்கிறது. இதுகுறித்து அப்போது தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியராக இருந்த பிரசாத் சன்யாலிடம் கேட்டதற்கு அவர், ‘இது ஊடக உரிமையாளர்களின் பிரத்யேக உரிமை’ என்பதுபோல் பதிலளித்திருந்தார். 
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-02.
  • மேசிடோனியா குடியரசு தினம்
  • உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  • தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)
  • அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
=====================================================================================











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?