ஆபாச சாமியாரை ஆதரிக்கும் பாஜக அரசு ?

"ஹரியானா மாநில அரசானது, தனது அரசியல் சுயலாபத்திற்காக பஞ்ச்குலா வை தீக்கிரையாக்கி விட்டதாக, உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.‘தேரா சச்சா சவுதா’ வன்முறையாளர் களிடம், முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரசு சரணடைந்து விட்டதாகவும் நீதிபதிகள் சாடியுள்ளனர்."
நன்றி:தீக்கதிர்.


தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50), தனதுஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் சிஷ்யைகளை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கிய குற்றம் நிரூபணமாகி இருப்பதாக பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிஜகதீப் சிங் தீர்ப்பளித்தார்.


குர்மீத் ராமுக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை யன்று வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அதைத்தொடர்ந்து, பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேரா சச்சா தொண்ட ர்கள், வன்முறையில் இறங்கினர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துவங்கிய வன்முறை, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது.
தேரா சச்சா சவுதா தொண்டர்கள், பொதுமக்களின் வாகனங்களை அடித்துநொறுக்கியதுடன், பேருந்து, ரயில் களுக்கு தீ வைத்தனர்.

அரசு கட்டங்கள் மற்றும்காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் மீது கற்களை வீசினர்.வன்முறையைத் தடுப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில், ஹரியானாவின் பஞ்ச்குலா நகரில் 24 ஆண்கள், 3 பெண்கள், 1 குழந்தைஎன 28 பேர், சிர்ஸாவில் 3 பேர் என மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர்.இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் 60 பேர் உட்பட 360 பேர் காயம் அடைந்தனர். 

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வன்முறை நிகழ்ந்த பகுதிகளுக்கு சனிக்கிழமையன்று காலை கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.
தில்லியில் 80 சதவிகித பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இந்த தடைஉத்தரவு அமலில் இருக்கும் என்றுகூறப்படுகிறது. 

தில்லியில் 11 மாவட்டங் கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ளன.பஞ்சாப்பில் உள்ள 10 மாவட்டங்களில் 85 கம்பெனி ராணுவம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.ஹரியானாவின் பஞ்ச்குலா, சிர்ஸா மற்றும் பண்டிண்டா நகரங்களில் மயான அமைதி நிலவுகிறது. 

இங்கு ஊரடங்குதளர்த்தப்பட்டாலும், 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை தீக்கிரை யாக்கிவிட்டதாக ஹரியானா மாநில பாஜக அரசு மீது பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.போராட்டக்காரர்களிடம் மனோகர் லால் கட்டா தலைமையிலான பாஜகஅரசு சரண் அடைந்துவிட்டது என்றும் உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

பாலியல் வல்லுறவு வழக்கில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியிருந்தது. இதனால், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, சாமியார் குர்மீத்தின் பக்தர்கள் பஞ்ச்குலாவில் குவியத் தொடங்கினர். 

ஆனால் ஹரியானா மாநில பாஜகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கவில்லை. இதுதொடர்பாகபுதன்கிழமையன்றே ஹரியானா அரசைஉயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித் தது. இவ்வளவு ஆதரவாளர்களை குவியவிட்டது ஏன்? என கேள்வியை எழுப்பியது.

வெள்ளிக்கிழமையன்று சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநில அரசுக்களுக்கும் கண்டனம் தெரிவித்தஉயர் நீதிமன்றம், வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக் களுக்கான இழப்பீட்டை, சாமியார் குர்மீத் சிங்கிடமிருந்தே வசூலிக்க உத்தரவிட்டது;


 குர்மீத்தின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது.இந்நிலையிலேயே, “அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை பற்றி எரிய நீங்கள் (மாநில பாஜக அரசு)அனுமதித்து உள்ளீர்கள்; போராட்டக் காரர்களிடம் ஹரியானா அரசு சரண் அடைந்துவிட்டது” என்று குற்றம்சாட்டி யுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் கண்டனக் கணைகளால், சனிக்கிழமையன்று தேரா சச்சா அமைப்பினருக்கு எதிராக, உத்தரவுகள் சிலவற்றை ஹரியானா மாநில பாஜக அரசு பிறப்பித்தது. குறிப்பாக, சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்-கிற்குசொந்தமான ஆசிரமங்களில் சோதனை நடத்துமாறு மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டார். 

தேரா சச்சா ஆசிரமங்களில் கவனமாக சோதனை மேற்கொண்டு ஆயுதங்கள் இருப்பின் அவற்றை பறிமுதல்செய்யுமாறு அரசு உத்தரவிட்டு உள்ளதாக ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிர்ஸாவில் தேரா சச்சா சவுதாவின் தலைமையகத்தை சனிக்கிழமையன்று ராணுவம் சுற்றிவளைத்தது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு தலைமையகத்துக்கு வருமாறு தமது ஆதரவாளர்களுக்கு குர்மீத் ராம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ள தேரா வளாகத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை கூடினர். அவர்களில் பல ஆயிரம்பேர் தீர்ப்பு வரும் வரை அங்கேயே தங்கி இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தனர். 
அவர்களிடம் ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.எனவே, இவர்களும் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் ராணுவத்தினர் ஆசிரமத்தை சுற்றி























































வளைத்தனர். பின்னர், உள்ளே இருப்பவர்களை ஆசிர மத்தை விட்டு வெளியேறுமாறு, போலீசார் ஒலி பெருக்கி மூலம் சனிக்கிழமை கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பலர் வளாகத்தை விட்டு வெளியேறினர். 

அப்போது அவர்களில் பலரிடமிருந்து உருட்டுக்கட்டைகள், பாட்டில்கள், கத்தி, பெட்ரோல் குண்டு ஆகியவை கைப்பற்றப் பட்ந்து உருட்டுக்கட்டைகள், பாட்டில்கள், கத்தி, பெட்ரோல் குண்டு ஆகியவை கைப்பற்றப் பட்டன. முன்னதாக ராணுவத்தினர் வளாகத்துக்கு வெளியே கொடி அணி வகுப்பு நடத்தினர். 

குருஷேத்ரா மாவட்ட போலீசார் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பிற்கு சொந்தமான 9 ஆசிரமங்களுக்கு ‘சீல்’வைத்து உள்ளனர். அங்கிருந்து சுமார் 2,500 உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூர்மை யான ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

குர்மீத் ராமை, குற்றவாளி என்று தீர்ப்பளித்த பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு,அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதால் நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு, உயர்மட்ட பாதுகாப்பு வழங்க ஹரியானா மாநில அரசுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய அதிரடிப்படை போலீஸ் பாது காப்பு வழங்குவது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை தவறியதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில், வன்முறை ஏற்பட்ட பஞ்ச்குலா நகர காவல் துணை ஆணையர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவம், தொடர் பதற்றம், ஊரடங்கு உத்தரவுக்கு இடையே, சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்-கிற்கான தண்டனை விவரத்தை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்களன்று அறிவிக்கிறது.பெண் சிஷ்யைகள் 2 பேரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், ஐபிசி பிரிவு 376 (வல்லுறவு)மற்றும் 506 (குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவு களின் கீழ் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி எனசிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

எனவே, இந்தப் பிரிவுகளின் கீழ், குர்மீத் ராமிற்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லதுஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தேராவில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். குர்மீத் சிங்கால் பெண் சிஷ்யைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதுதொடர்பான கடிதம் ஒன்றை ராம் சந்தர் சத்ரபதி தனது பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். 
இதுதான் குர்மீத் ராமின் மற்றொரு முகத்தை வெளியே கொண்டுவந்தது. 

இதனையடுத்து 2002-ம் ஆண்டில் அக்டோபர் 24-ஆம் தேதி செய்தியாளர் சத்ரபதி சுட்டுக் கொல்லப் பட்டார். 
வலுவான சாட்சியங்கள் இருப்பதால் இவ்வழக்கி லும் சாமியார் குர்மீத் ராமிற்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலவரச்சூழலை அறிந்தும் தடுக்காத முதல்வர் கட்டார்!
உள்துறை அமைச்சகத்திடம் உளவுத்துறை அறிக்கை
பலாத்கார வழக்கில் குர்மீத் சிங் மீதான தீர்ப்புக்குப்பின் கலவரம் வரும் என அறிந்தும் அதை தடுக்க ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்முயலவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், ஹரியானாவில் கலவரம் வெடித்தது.இதில் ஹரியானாவில் 29 பேர் மற்றும் பஞ்சாப்பில் 2 பேர் பலியாகினர். இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 60 பாதுகாப்புப் படையினர் உட்பட 360 பேர் காயம் அடைந்துள் ளனர்.

இதனால் ஹரியானா , பஞ்சாப், தில்லிமாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு மட்டும் பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலா, சிர்சா மற்றும்பதிந்தா ஆகிய இடங்களில் மயான அமைதிநிலவுகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட பாஜக முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அரசே முழுக்காரணம் என பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 


அமைதியான நகரம் எனப்பெயர் எடுத்த பஞ்ச்குலாவில் இதுபோன்ற கலவரம் ஏற்பட்டதில்லை எனக் கருதப்படுகிறது.இதுகுறித்து மத்திய உளவுத்துறை வட்டாரம் கூறுகையில், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடும்படி ஹரியானா அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந் தோம். தீர்ப்பு நாளன்று கூட்டம் சேர அனு மதிக்காதீர்கள் என்பதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

கலவரச்சூழலை அறிந்தும் ஹரியானா அரசு தடுக்காமல் இருந்தது தான் உயிர் பலிகளுக்கு காரணம்’’எனத் தெரிவித்தனர்.

முன்னதாக வெள்ளி மாலை பத்திரிகை யாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானாவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார். 

இவர் ஹரியானாவின் பாஜக முதல்வர் கட்டார் அரசைக் காக்கும் வகையில் கூறினாயுள்ளார்.
ஆனால் மத்திய உள்துறைச் செயலாளரான ராஜீவ் மெஹரிஷியின் கருத்து வேறு. 
அது உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.. 

ராஜ்நாத் பேசிய பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மெஹரிஷ், ஹரியானாவில் பதற்ற நிலை நீடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.


=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-27.
  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
  • உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
  • மால்டோவா விடுதலை தினம்(1991)
======================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?