முதல் லட்டு.....?


 காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலர்  அகமது படேல்  பாஜகவினரின் குதிரைப் பேரம்,காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் விலைக்கு வாங்கல்,காவல்துறை,அரசு அதிகாரிகள் மூலம் மிரட்டல்,கடத்தல் போன்ற  பல்வேறு திருப்பங்கள், பரபரப்புகளுடன் முடிந்த, குஜராத் ராஜ்யசபா தேர்தலில்,வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ராஜ்யசபாவுக் குள் நுழைந்துள்ளார். 
சரியாக வெற்றிக்கு தேவை யான, 44 ஓட்டுகள் அவருக்கு கிடைத்தன. 

அதில், 43 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள். 
ஆனால், அந்த, 44வது ஓட்டைப் போட்டது யார் என்பது தான் தற்போது, மிகப் பெரிய விவாதமாக உள்ளது.

முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. 

சட்டசபையில் மொத்த முள்ள, 182 இடங்களில், காங்கிரஸ்  57 எம்.எல்.ஏ க்களுக்கு ஒரு வேட்பாளரும்,பா.ஜ.,வுக்கு, 121 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அந்த கட்சி சார் பில் 2 வேட்பாளர்களுக்கும் வெற்றி உறுதி என்ற நிலை.
காங்கிரஸ் சார்பில் அகமது படேலும்,பாஜக சார்பில் அக்கடசியின்   தேசிய தலை வர் அமித் ஷா, மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகிய மூவரின் வெற்றி உறுதியாகி விட்டது.
ஆனால் அடுத்த ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தங்கள் வலிமையை காட்டவும்,பாஜக கொள்கைப்படி எதிர் கடசிகளை அரசு எந்திரம் மூலம் முடக்கும் வேலையை செய்யவும் பாஜக அமித் ஷா திட்டப்படி காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் தோல்வியை அடைய பாஜக பல மோடி வித்தைகளை குஜராத்தில் நிறைவேற்றியது.
அகமது படேல் சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்பதும் அவர் தோல்வியை பாஜக விரும்ப கரணம்.அதைவிட முக்கிய கரணம் அமித் ஷா.
அவர் இந்தியா முழுக்க மாநிலம்,மாநிலமாகப்போய் அங்கு பாஜகவை வலிமைப்படுத்த,ஆட்சியை கைப்பற்ற  பல்வேறு பணிகளை செய்து வருகிறார்,பணம்,மிரட்டல்,வழக்கு ,வருமானவரி ஆய்வு,அமுலாக்கத்துறை நடவடிக்கை என எதிர்க்கட்சிகளை நெருக்கடியில் தள்ளி அரசு அதிகாரம் மூலம் செயல்படா நிலையை உருவாக்கி வருகிறார்.
இதை பாஜகவினர் அமித் ஷாவின் ராஜ தந்திரம் என புகழ்கிறார்கள்.
அந்த அமித் ஷாவின் ராஜ தந்திரத்துக்கு முதல் ஆப்பு அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே சரியாக வைக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவின் குதிரை பேரம் மூலம்  காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. மூத்த தலை வர், சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து விலகினார். இவர் பாஜக தலைவராக இருந்து இதே அமித் ஷா,மோடி கூட்டணியின் மூலம் துரத்தியடிக்கப் பட்டு காங்கிரசுக்கு வந்தவர்.
அவரது ஆதரவாளர் களான( பழைய பாஜகவினர்) ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 
அதில், பல்வந்த் சிங் ராஜ்புத் உட்பட மூன்று பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். 
வெற்றிக்கு, 45 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசக ரான, அஹமது படேல் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, பல்வந்த் சிங் ராஜ்புத்தை பா.ஜ., அதிரடியாக களமிறக்கியது.

சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு, 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இதில், ஆறு பேர் ராஜினாமா செய்தனர். சங்கர்சிங் வகேலா உட்பட, ஆறு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல். ஏ.,க்கள், பா.ஜ., வுக்கு ஓட்டளிக்கப் போவதாக கூறினர். 

இதையடுத்து, 45 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்த நிலையில், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தனர். பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்ததற்கு ஆதாரமாக, ஓட்டுச் சீட்டை, பா.ஜ., ஏஜென்டிடம், இருவரும் காண்பித்தனர். இதற்கு, காங்கிரஸ் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.


இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்து, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட, இரண்டு, எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளையும் செல்லாது என அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களது ஓட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம்நள்ளிரவு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட் டன. 
பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட, அமித் ஷா, ஸ்மிருதி ஆகியோர், தலா, 46 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றனர்.
மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்ட, காங்கிரசைச் சேர்ந்த, அஹமது படேல், 44 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். 
இரண்டு எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், வெற்றி பெற தேவையான ஓட்டுகளின் எண்ணிக்கை, 44 ஆக குறைந்ததால், அவருக்கு, இந்த வெற்றி, சாத்தியம் ஆனது. 
இந் நிலையில், அஹமது படேலுக்கு, காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,க்களின், 43 ஓட்டுகள் கிடைத்தன. 
வெற் றிக்கு தேவையான, அந்த, முக்கியமான, 44வது ஓட்டை, யார் அளித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கூட்டாளியான, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, குஜராத்தில் இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 
அதில், ஒருவர், அணி மாறி ஓட்டுப் போட்டதாக, தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது.அதே நேரத்தில், சமீபத்தில், பா.ஜ., கூட்டணிக்கு சென்ற, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, சோட்டு வாசவா, காங்கிரஸ் வேட்பாளர், அஹமது படேலுக்கு ஓட்டுப் போட்டதாகக் கூறியுள்ளார்.

அதனால், அஹமது படேலுக்கு, ஐக்கிய ஜனதா தளத்தின் ஓட்டு கிடைத்ததா அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓட்டு கிடைத்ததா என்ற பட்டிமன்றம் நடந்து வருகிறது. 
ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்துள்ளது.

சரத் பவாரும், சமீபகாலமாக, பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால், சமீபத்தில் உருவான, 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியில், மேலும் பிளவு ஏற்படுமா என்ற அச்சம், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்த, நலின் கோடாடியா, அஹமது படேலுக்கு ஓட்டு போட்டதாக கூறிஉள்ளார். 
ஆனால், இதை பா.ஜ., மறுத்துள்ளது.

குஜராத் சட்டசபையின் பதவிக்காலம், 2018, ஜனவரியில் முடிவுக்கு வருவதால், இந்த ஆண்டு இறுதியில், அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 
இந்நிலையில், அங்கு கட்சி களுக்குள் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல  ஆளும் பா.ஜ.,வுக்கும்  எச்சரிக்கை தரும் விதமாக  அமைந்துள்ளது.
அசைக்க முடியா அளவில் பாஜக ஆக்கிரமித்துள்ள குஜராத்திலேயே பாஜகவுக்கு அதிலும் அமித் ஷாவுக்கு  முதல் லட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
 =====================================================================================


குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் வென் றுள்ள, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவ ரான அஹமது படேல், இந்திரா முதல், காங்., கட்சியின் பல்வேறு பிரதமர்களின் நம்பிக் கையை பெற்றவர்.
முன்னாள் பிரதமர், ராஜிவின் அரசியல் செயலராக இருந்தவர். 
தற்போது, கட்சித் தலைவர் சோனியாவின் அரசியல் செயலராக உள்ளார்.

குஜராத்தில் இருந்து, எட்டாவது முறையாக, பார்லி மென்ட்டுக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 
கடந்த, 1977ல், முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வானார்;
 1980, 1984 லோக் சபா தேர்தலிலும் வென்றார். 
பின்னர், 1990ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்விஅடைந்த தால், ராஜ்யசபா எம்.பி.,யானார். தற்போது, தொடர்ச்சியாக, ஐந்தாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ளார்.இந்திரா உட் பட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பிரத மர்கள் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து, கட்சிப் பணியில் ஈடுபட்டார். 
சோனியாவின் வலது கர மாகவும், கட்சியின் வலிமை மிகுந்த தலைவ ராகவும், அவர் உள்ளார்.
              நைனி சிறையில் நேரு.      உடன் அவர் சகோதரர் ரஞ்சித் சீதாராம் பண்டிட்.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-10.

இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி 

வைக்கப்பட்டது(1948)


  • மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)


  • மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் 
  • கொள்ளப்பட்டது(1821)

======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?