இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மூன்றாண்டு சாதனைகள்

 சுருக்க வரலாறு.

சிலருக்கு நாம் எவ்வளவுதான் செய்தாலும் திருப்தி கிடைக்காது.


பாஜக இந்த மூன்றாண்டில் இந்திய மக்களை வச்சு செய்தாலும் சில பேர்கள் பாஜக மோடி அரசு என்னதான் செய்தது என்று மீண்டும் கேட்கிறார்கள்.

இவர்களை வரும் இரண்டாண்டுகளில் மோடி கவனித்துக் கொள்வார் என்றாலும்,
நமது பங்குக்கு மூன்றாண்டு சாதனைகள் பட்டியலிட்டு தொகுத்துள்ளோம்.

விவரமாக எழுதினால் பொன்னியின்செல்வனுக்கு போட்டியாகிவிடும்.எனவே சுருக்கமுறையில் கொடுத்துள்ளோம்.புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளக்கிக்கொள்ளுங்கள்.அல்லது விலகிக்கொள்ளுங்கள்.
 
-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்களில் பலநூறு கோடிகள் விரயம்.கிடைத்த லாபம் 0.
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் வறட்சியாக தரல் .
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார் குளறுபடிகள்.
-பாதுகாப்புத்துறை வரை அந்நிய நேரடி முதலீடு


-பெயரளவினாலான தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்


-அணு உலை
-புல்லட் ரயில் 80000கோடிகள் கடனாக ஜப்பான் தருவதை இலவசம் என்று பொய்யான தம்பட்டம்.
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
- குளறுபடியான ஜி.எஸ்.டி


-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

தனியார் நிறுவனங்களில் இருந்து மட்டுமல்ல தனியார் வங்கிகளிலும் வேலை இழப்பு 2லட்சம்.
-IT ஊழியர்கள் பணி நீக்கம்-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு,காவிரி பிரச்னைகளில் நம்பவைத்து  கால்வாரல்.


-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு


-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM


-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு


-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)


-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை


-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000 என முதியோர் ஓய்வுஊதிய கணக்குகளில் பிடித்தல்.
-மாட்டு அரசியல்


-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் நிறுத்தம் .

========================================================================================

ன்று,
செப்டம்பர்-25.
உடுமலை நாராயணகவி
 • பாஸ்கோ நூனியெத் பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கடந்த  ஐரோப்பியர் (1513)

 • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)

 • அல்ஜீரிய மக்கள்  குடியரசு அமைக்கப்பட்டது(1962)
 • =========================================================================================
பொது இடங்களில் பெண்களை கட்டிபிடிப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும் ~பாஜக M.P சாக்ஷி மகராஜ் .

ரூ.4000 கோடி போச்சே


''அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. எங்கும் எந்த பணியும் நடக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்திருக்கிறது என்று கூட நான் கூறுவேன்'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

இந்த ஆறு மாத காலத்தில் தமிழக அரசு நிர்வாகம் எப்படி சீரழிந்து, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். 

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம். இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது. 


இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும். 

மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி.
'''100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை. 

மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள். 


இத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்காக வழக்கமாக நியமிக்கப் படும், பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவிலான ''குடிமராமரத்து கமிட்டிகளை' நியமிக்க ஏற்கனவே உத்தரவு போட்டு விட்டேன் என்று என்னிடம் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுகிறார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.
இந்த விவகாரத்தில் நபார்டு வங்கியையும் பாண்டியன் சாடுகிறார். 

''தான் உதவி செய்யும் திட்டங்கள் எந்த லட்சணத்தில் செயற்படுகின்றன என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நபார்டு வங்கிக்கு இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப அறிவு கொண்டவர்களின் குழு இது. ஆனால் 100 கோடி ரூபாய் விவகாரத்தில் நபார்டு வங்கி வாய் திறக்க மறுக்கிறது. 

100 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப் பட்டது என்பதை பற்றிய தெளிவான ஆதாரங்களை நபார்டு வங்கி வெளியிட வேண்டும். 
இல்லையென்றால் இந்த 100 கோடி ரூபாய் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது, இதில் நபார்டு வங்கிக்கும் பங்கு இருக்கிறது என்பது தான் பொருள். 

எங்களது நியாயமான கோரிக்கைக்கு நபார்டு வங்கி உண்மையான காரணத்தை தெரிவிக்காவிட்டால் நாங்கள் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை விரைவில் வழக்கு தொடுப்போம்''' என்று மேலும் கூறுகிறார் பாண்டியன்.
ஒவ்வோர் துறையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத, பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். 
'''தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு ஆண்டு தோறும் வழங்கப் பட வேண்டிய உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப் பட்டு விட்டது. 
கோவை மாநகராட்சியில் 500 துப்புரவுத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதியம் சில மாதங்களாக கொடுக்கப்படாததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

இவை எல்லாமே இந்த ஆட்சி நிர்வாகம் சரிவதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் என்றே நான் பார்க்கிறேன்''.


தமிழக அரசின் வருவாயும் பெரிய அளவில் பாதிக்கப் பட துவங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். 
குறிப்பாக டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுபான கடைகள் அகற்றப் பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்திரவு தமிழக அரசின் வருவாயை கடுமையாக பாதிக்கத் துவங்கியிருக்கிறது.
'''குடி மன்னர்களின் தாலியை''' ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அறுத்து எறிந்து கொண்டிருக்கும் டாஸ்மாக் விற்பனை இவ்வாறு தொடர்ந்து சரிவது மாநிலத்தின் நிதி நிலைமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இது இன்னும் சில மாதங்கள் நீடித்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மேலும் மோசமாக மாறி விடும்''' என்கிறார் மாநில அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார நிபுனர் ஒருவர். 


'''மு.கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்கள் முதலமைச்சர்களாக பதவி வகித்த, கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது இல்லை''' என்று மேலும் கூறுகிறார் அவர்.
அரசியல் ரீதியில் ஸ்திரமான ஆட்சி இல்லையென்றால் என்ன வெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை எல்லாமே கள சாட்சிகளாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன. 

24 மணி நேரமும் தன்னுடைய ஆட்சியையும், தான் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலியையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளுவது என்பதை தவிர வேறெதிலும் கவனம் செலுத்தும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லை. 


இத்தகைய '''ஸ்திரமற்ற அரசியல் சூழல்''' வேறெந்த தமிழக முதலமைச்சரும் சந்திக்காத ஒன்றுதான். இதனை நாம் மறுப்பதற்கு இல்லை.
ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்களில் ஒன்று, தனியார் துறையின் முதலீடுகள். தற்போது தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலில் எந்த முதலீட்டாளரும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார் என்பது கூடுதல் தகவல்.

 இன்று எல்லாவற்றுக்கும் மோடியின் கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுதான் எடப்பாடி அரசின் ஒரே சாதனை. 2019 ல் மக்களவை தேர்தலை சந்திக்க விருக்கும் மோடி, எடப்பாடி அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு கரங்களை நீட்டலாம். நாம் மறுப்பதற்கு இல்லை.... 


ஆனால் அதற்கு அரசியல் ரீதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசும், அவரது கட்சியும் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும். 


இந்த விலை எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது கட்சிக்கும் வேண்டுமானால் லாபத்தை கொண்டு வரலாம். 


ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அந்த விலை தாங்க முடியாத இன்னல்களையும், பிரச்சனைகளையும் தான் கொண்டு வரும். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ... 


ஏற்கனவே முடங்கி கிடக்கும் தமிழக அரசு நிர்வாகம், தற்போது அழிவிலிருந்து பேரழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. 


அமைச்சர்கள்,அதிகாரிகள் மற்றும் அரசு பற்றிய விவரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த வேதனையான  உண்மை.

 "எல்லோரும் சசிகலா கூறச் சொன்னதைத்தான் சொன்னோம்." அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் .

"ஆளுநருமா? "
=======================================================================================

ன்று,
செப்டம்பர்-24.

 • உலக காதுகேளாதோர் தினம்
 • முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
 • அமெரிக்க உச்ச நீதிமன்றம்  நிறுவப்பட்டது(1789)
 • இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)
========================================================================================

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஆன்ம விசாரணை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்பொதுக் கூட்டத்தில் பேசும்போது  '' டிடிவி தினகரன் ஆர்.கே நகரில்  வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?. 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது  நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பம் விடவில்லை. 
ஜெயலலிதாவை பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக  நாங்கள் எல்லோரும் அப்போது பொய்தான்  சொன்னோம்,

அதற்கு இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை, அனைத்தும் விசாரணை கமிஷனில் தெரியவரும்'' 

என்று வாக்குமூலம் கூறியுள்ளார்.
இதிலிருந்தே அதிமுக அமைச்சர்கள்,தலைவர்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மர்ம மரணத்தில் பங்குள்ளது.

சசிகலாவை  மட்டும் குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்?அவரையும் ,அவர்குடும்பத்தினர்களை   மட்டும் 
விசாரணைக்குழு விசாரிப்பது சரிவராது.

பன்னிர்செல்வம்,பழனிசாமி உட்பட்ட ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்,அல்வா தந்தார்,காவிரி கலந்தாலோசித்தார்,கைநாட்டு வைத்தார் .என்று பேட்டி  அனைவருமே விசாரிக்க வேண்டியவர்கள். குற்றத்தில் பங்காளிகள் தான்.

குற்றம் செய்தவர் மட்டுமல்ல,அதற்கு துணையாக நின்றவர்களும் , அக்குற்றத்தை மறைக்க துணை போனவர்களும் குற்றவாளிகள்தான் என்கிறது சட்டம்.

"ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை"என்று  கேள்வி எழுப்புகிறவர்கள் அன்று அப்போலோவுக்கு வெளியே இட்லி,அல்வா கதைகளை சொல்லி பேட்டி எதற்காக கொடுக்கவேண்டும்.

உள்ளபடி ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.மருத்துவர்கள் அவர் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே.

இப்போது ஆன்மாவுடன் பேசுகிறவர்கள் அன்று ஏன் பேசமுடியவில்லை.?
விசாரணைக்குழுவினர் அதிமுகவினர் சொல்லும் ஜெ ஆன்மாவையும் சாவு தொடர்பாக விசாரிப்பது உண்மை வெளிவர உதவும் என்று தெரிகிறது.
=========================================================================================
தொடரும் ஊடக கொலைகள்.!

ஊடகத்தின் ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே ஊடக தர்மத்தை  கொலை செய்து வருகிறார்கள்.
அதிலும் விதிவிலக்காக நடுநிலையுடன் சமூக  செயல்படும்,எழுதும் ஊடகவினர் இந்தியா முழுக்க கொலையாகி வருகின்றனர்.
ஒட்டு மொத்த ஊடகவினரும் நடுநிலையுடன் ,சமூக பொறுப்புடன் இருந்தால்,செயல்பட்டால்,செய்திகளை தந்தால் இது போன்ற கொலைகள் இராது.

கர்நாடக மாநிலத்தில் முற்போக்குப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் திரிபுராவில் தொலைக்காட்சிச் செய்தியாளரான 29 வயது சாந்தனு பௌமிக் செப்.20 அன்று அநியாயமாகக் கொல்லப்பட்டார். 


இதற்கு முன் மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்நாடகத்தில் எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 

பௌமிக்இரும்புத் தடிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும்தாக்கிக் கொல்லப்பட்டார். 
அவர் களத்தில் செய்திசேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

பழங்குடி மக்களை இதர பிரிவு மக்களுக்கு எதிரான பகைமை அடிப்படையில் திரட்ட முயல்கிற திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎப்டி) என்ற, சங் பரிவார ஆசிர்வாதம் பெற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், மதவாத, இனவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்துகிற உள்நோக்கத்துடன் அண்மை நாட்களாக வன்முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு தேர்தலுக்கு முன் பதற்றச்சூழலை ஏற்படுத்துவது, அதை வாக்கு வங்கிக்கான முதலீடாக்குவது என்ற உத்தி சங் பரிவாரத்திற்கு கைவந்த கலை.சம்பவ நாளன்று, தலைநகர் அகர்தலாவுக்கு அருகில் உள்ள மண்டாய் பகுதியில் ஐபிஎப்டி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். 

அந்தநிகழ்வுகளைப் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியபௌமிக், வன்முறை தொடர்கிறது என்ற தகவல்கிடைத்ததையடுத்து மறுபடியும் அங்கே சென்றார்.

காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது கைப்பேசியையும் அடையாள அட்டையையும் கைப்பற்றிய ஒரு கும்பல் பின்னர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றிருக்கிறது. 
முன்பு இந்திய மாணவர்சங்கத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் செயல்பட்ட பௌமிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் கூட. 

முழுநேர ஊடகவியலாளராக அவர் பணியாற்றிய ‘தின் ராத்’ தொலைக்காட்சியும் கூட முற்போக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிற நிறுவனம்தான்.மக்களை மோதவிடும் அமைப்பின் செயல்பாடுகளை ஒரு ஊடகவியலாளராகப் பதிவு செய்துவந்த, பல உண்மைகளைத் தெரிந்துவைத்திருந்த பௌமிக் மீது ஏற்கெனவே இருந்து வந்த ஆத்திரத்தின் பின்னணியில்தான் கொலைநடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது.


ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைப்பழியை சுமத்த பாஜக வின் மாநில தலைமை முயல்கிறது. ஆயினும், தலைமையின்ஆணைப்படி ஐபிஎப்டி அமைப்புக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது பற்றி பாஜகமாநில பொருளாளர் எழுதியதாகக் கூறப்படும்கடிதத்தை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கிறது. 

கொலை தொடர்பாக ஐபிஎப்டி அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்களிடையே பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தி அரசியல் அறுவடை நடத்தும் பாஜகவின் உத்தி திரிபுராவில் எடுபடாது. 

கருத்தியல் தளத்தில் இயங்குவோரைத் தாக்கி, மாற்றுச் சிந்தனைகளை முடக்கும்சதிகள் தொடர்வதை நாடு அனுமதிக்காது.
=========================================================================================
ன்று,
செப்டம்பர்-23.
 • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
 • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
 • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
 • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
==========================================================================================

கொய்யாப்பழம்

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதியாகி, நம் ஊர்களில் விற்கும் கண்ணைக் கவரும் ஆப்பிள் பழங்களைவிட நமது நாட்டுக் கொய்யாவில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. 
இதில் உள்ள சத்துக்களை நாம் அறிந்தால், ஆப்பிளை விட கொய்யா பழத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவோம் என்கின்றனர் மருத்துவர்கள்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ‘சி’ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், நமது உடலை கிருமிகள் தாக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது. அதிக நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.* இதில் ஃபோலிக் ஆசிட்டும், வைட்டமின் பி9ம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாப்பழத்தை தினமும் உண்ணுதல் நலம்.

* நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.

* கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

* மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.வியாழன், 21 செப்டம்பர், 2017

நோயாளிகளாவதில் இருந்து தப்பிக்க.

இன்றைய தமிழக அரசியலில் ஆளுங்கட்சி அதிமுகவில் தினசரி நடக்கும் கூத்துக்கள் ,
மத்திய ஆளுங்கட்சி பாஜக தினசரி மக்களுக்கு அதாவது தேசத்துரோகர்கள் வாழ்க்கைக்கு விடும் குத்துக்கள் இரண்டுமே அனைவரையும் நோயாளிகளாக்குகிறது.

உண்மையான ஒன்றுதான் இது.

இவர்கள் செய்யும் கொடுமையை பார்த்து ரத்தம் கொதிக்காதவர்கள் அக்கட்சித்தலைவர்கள் மட்டுமே.
இறந்த கொதிப்புதான் நம் உடலை ரத்தக்கொதிப்புக்கு ஆளாக்கி விடுகிறது.

ஏற்கனவே இது போன்றவர்களை நீரழிவு வியாதி அனுமதி கேட்காமலேயே அணுகி கூட்டணி வைத்துக்கொள்ளும்.
இவை போதாதா?


சிலருக்கு இவைகள் மட்டும் காணாது என்று மாரடைப்பையும் நேற்று முன்னாள் இடைக்காலப் புகழ் முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பேசிய பேச்சு கொணர்ந்து விட்டது.

"என்னைப் போன்று நல்ல அரசியல் வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்"என்ற வெள்ளந்தி பேச்சுதான் இந்த பணியை செய்தது.

இந்நேர முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசிய "தமிழக மக்கள் போராட்டமே செய்யாமல் மகிழ்வுடன் இருப்பது எங்கள் ஆட்சி நல்லாட்சி என்பதால்தான்"என்றதை கூட தாங்கிய இதயம் பன்னிர்செல்வம் பேச்சுக்கு ஆடித்தான் போய்விட்டது.

இது போன்ற நம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் செய்திகள்,பேச்சுக்கள் இனி தொடர்ந்து தாக்கலாம்.

இனி அரசியல்வாதிகள் பேச்சுக்களை பிரசுரிக்கும் முன்னர்,ஒளி பரப்பும் முன்னர் உடலநலத்துக்கு தீங்குதரலாம் என்ற எச்சரிக்கையை கொடுக்க வேண்டும்.திரையரங்களுக்களில் படம் ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் பாடுவதில்லையா அது போல் .

அதிலிருந்து உடல் நலத்தை பாதுகாக்க நாம் சில சிறிய உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதுதான் நம்மை அடுத்த தேர்தல்வரையாவது தாக்குப்பிடித்து சரியான ஆட்சியை தேர்வு செய்ய உதவும் .சரி .உடற்பயிற்சி தேவையை உணர்ந்திருப்பீர்கள்.

இனி மெல்லோட்டம் பற்றி பார்க்கலாம்.இதுதான் நாம் தற்போது செய்யக்கூடிய எளிதான பயிற்சி.
மேலும் தினசரி கூடும் பெட்ரோல் தாக்குதலில் இருந்து மேலோட்டமாக அலுவலகம்,கடைகளுக்கு சென்று பாதுகாத்துக்கொள்ளும் வழியாகவும் உள்ளது.

மெல்லோட்டம் (ஜாக்கிங்) யாரெல்லாம் செய்யணும்? 

எப்படி செய்யணும்?

மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக் கொள்ளுங்கள்.


அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். 
அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். 

மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. 
ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.

மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும்.

காலைப் பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். 
இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம். 

மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். 

பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள்.நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டு வந்தது. 
அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனது.

அதேபோல, ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ரத்த அழுத்தம் இருந்தால் தான் இதயப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கபப்டும் என்று தற்போதைய ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே.மைக்கல் காஸியானோ தலைமையில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட, 9300 பேரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வில், இது தெரியவந்துள்ளது.


இதுவே இத்துறையில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வாகும். உலகில் பெரும்பாலானோர், மாரடைப்புக்கு உள்ளாகும் நேரத்தில் சர்வே மூலம் கிடைத்துள்ள இந்தத் தகவல் உலகில் பலரின் உயிரை காக்க உதவும்.

அந்த ஆய்வின்படி, ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 120-க்கும் கீழேயும், அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு 140-150 வரை ரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என இதன்மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால்தான் ரத்தம் முறையாக அவர்களின் மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கும் பகிர முடியும். 
அதனால் அது தொடர்பாக கவலை வேண்டாம் என்றும் இந்த மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

பொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. 
குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை.

சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து உள்ளது.


வாதுமைப் பருப்பு ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது. 

நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். 

இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.

வாதுமைப் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம். 

இதில் உள்ள ஒமேகா 3 அமிலம், இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது. 
ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. 

இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாதுமைப் பருப்பு உதவுகிறது.

ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. 

இது எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் வாதுமைப் பருப்பில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.

வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது.

சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-22.
 • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
 • பாடகர் பி.பி.சீனிவாஸ்  பிறந்த திணம் (1930)
 • மாலி விடுதலை தினம்(1960)
 • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
புகழ் பெற்ற, திரைப்பட பின்னணி பாடகர், பி.பி.சீனிவாஸ், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தார். 
1953ல் வெளிவந்த, ஜாதகம் படத்தில் இடம்பெற்ற, 'சிந்தனை என் செல்வமே...' என்ற தமிழ் பாடலை முதன் முதலாகப் பாடினார். 
பி.பி.சீனிவாஸ்

உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடுவதில், புதிய பாணியை கொண்டு வந்தவர். 
'காலங்களில் அவள் வசந்தம்...' எனும் பாடலை பாடி, பெரும் புகழ் ஈட்டினார். 
தமிழ் படங்களில், நடிகர் ஜெமினிக்கும், கன்னடத்தில், நடிகர் ராஜ்குமாருக்கும் பெரும்பான்மையான பாடல்களை பாடியுள்ளார்.
ஆங்கிலம், உருது உட்பட, எட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்; பல பாடல்களையும் எழுதியுள்ளார்.
 'மதுவண்டு' என்ற புனைப்பெயரில், தமிழ் கவிதைகளை எழுதினார்.
வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள, ஹிந்தி பாடல்களை இவரே இயற்றினார். 
2014 ஏப்., 14ல் காலமானார். 
========================================================================================
புதன், 20 செப்டம்பர், 2017

பெட்ரோல் - டீசல் கலால் வரி கொள்ளை.

 மத்திய அரசுக்கு  வரவு ரூ. 3.35 லட்சம் கோடிகள் 

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் மட்டும், கடந்த நிதியாண்டில் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடியை மோடி அரசு வாரிச் சுருட்டியிருப்பது தெரியவந்துள்ளது. 
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மக்கள் பயனடைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் கலால் வரியை 200 மடங்கு உயர்த்தி கொள்ளை வருமானம் பார்த்துள்ளது.
பொதுவாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல் - டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், நாட்டு மக்களுக்கு கிடைத்து விடாத வகையில், மத்திய அரசு கலால் வரியை உயர்த்திக் கொண்டே போகிறது. 
அதனால்தான் ஒரே ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
விலை என்ன?
ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை வெறும் 26 ரூபாய் 65 காசுகள்தான். கச்சா எண்ணெய் மீதான கலால் வரியையும் சேர்த்துத்தான் இந்த விலை. ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் என்ற கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது. 
மும்பை போன்ற இடங்களில் 80 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் விலை உள்ளது. அதாவது 200 மடங்கு அளவிற்கு கூடுதல் விலைக்கு பெட்ரோலை விற்கிறார்கள். 26 ரூபாய் அடக்கவிலை கொண்ட டீசலும் சந்தையில் 62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், இவர்கள் வரியை மட்டும் குறைக்கவே மாட்டார்கள். மாறாக, எவ்வளவு விலை குறைகிறதோ, அதே அளவிற்கு வரியை உயர்த்தி விடுவார்கள். 
உதாரணத்திற்கு, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவிற்கு இருந்தது. 
அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 73 என்ற அளவில் இருந்தது. 
இப்போது கச்சா எண்ணெய்யின் விலை 53.06 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
நியாயமாக பெட்ரோல் விலை பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் பெட்ரோல் விலை ரூ. 73-தான். 
அவ்வளவும் வரி.குறிப்பாக மத்திய பாஜக ஆட்சியில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி 126 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே பெட்ரோல் விலை 73 ரூபாயைத் தொட்டது.
அடக்கவிலைக்கும் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை யாருக்கு போகிறது என்றால், பெரும்பகுதி மத்திய அரசுக்கும், ஒரு சிறு பகுதி மாநில அரசுக்கும் பல்வேறு வரிகள் மூலம் சென்று கொண்டிருக்கிறது.
 சுத்திகரிப்பு ஆலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 26 ரூபாய் 65 காசுகள். எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு அதை விற்பனை செய்யும்போது அதன் விலை 30 ரூபாய் 7 காசுகள் ஆகிறது. 
இதன் பின் மத்திய கலால் வரியாக 21 ரூபாய் 48 காசுகளும், மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி 14 ரூபாய் 96 காசுகள், டீலர் கமிஷன் தொகை 3 ரூபாய் 24 காசுகள் என சேர்க்கப்படும் போது, ஒரு லிட்டர் பெட்ரோல் சந்தைக்கு வரும்போது 70 ரூபாய் 39 காசுகளாகி விடுகிறது. 
பின்னர் தினசரி விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை 73 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை மத்திய பாஜக ஆட்சி பார்க்கிறது. நாட்டின் தொழில்துறை வீழ்ச்சியால் நாடு சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை மேலும் மேலும் உயர்த்தி போலியான வரி வருவாயைக் காட்ட முயற்சிக்கிறது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழும்போ தெல்லாம், அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், மாநில அரசுகள் தங்களின் வரியை குறைத்துக் கொள்ள வேண்டியதுதானே என மத்திய பாஜகஆட்சியாளர்கள் கூறுவதும் வாடிக்கை யாகி விட்டது. 
ஆனால், 2016-17 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு மூலம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய், மோடி அரசு கூறுவது எவ்வளவு மோசடியானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் மீது பழிபோடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்பதையும் அது அம்பலப்படுத்தியுள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மூலம் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 066 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 
அதுவே 2016-17ஆம் நிதியாண்டில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, மக்களைக் கசக்கிப் பிழியும் மோடி அரசின் ஆட்சிலட்சணத்தை தெளிவாகக் காட்டியுள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி உயர்வின் மூலம் மத்திய அரசு மக்களிடமிருந்து இரண்டு மடங்கு கொள்ளை லாபம் பெற்றுள்ளது.
இதே காலக்கட்டத்தில் மாநில அரசு பெற்ற வருமானத்தின் அளவைப் பார்த்தால், அது 1 லட்சத்து 60 ஆயிரத்து 554 கோடி ரூபாயில் இருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 770 கோடி அளவிற்கு - சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கே உயர்ந்துள்ளது.
2014-ஆம் ஆண்டு, ஜனவரி 1-இல் டீசல் மற்றும் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, முறையே 3 ரூபாய் 56 காசுகளாகவும், 9 ரூபாய் 48 காசுகளாகவும் இருந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு இந்த கலால் வரியை டீசலுக்கு 17 ரூபாய் 33 காசுகளும், பெட்ரோலுக்கு 21 ரூபாய் 48 காசுகளும் உயர்த்தியுள்ளது. 
இந்த உண்மையை மறைக்க, மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை நோக்கி கைகாட்டுகிறது. உண்மையில் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரி இரண்டுமே பலமடங்கு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. அதை இரண்டு அரசுகளுமே செய்வதில்லை. 
மக்களை ஏமாற்றுவதிலேயே தீவிரமாக இருக்கின்றனர்.
ஆனால் நாட்டின் விலைவாசி உயர்வுக்கும் ,பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த  பெட்ரோல் விலை அதிகரிப்பு முக்கிய காரணிகளை ஒன்றாக உள்ளதை அரசுகள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
டீசல் விலை உயர்வினால் உணவுப்பொருட்கள் முதல் அனைத்து பொருட்களுக்கும் போக்குவரத்து செலவினம் தினமும் உயர்கிறது.இதனால் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகிறது.
பெட்ரோல் விலை ஏற்றம்-இரக்கம் இல்லாமல் உயர்வை மட்டுமே சந்திக்கையில் போக்குவரத்து வாகனங்கள் வாடகையும் தன்னால் உயர்ந்து விடுகிறது.
பெட்ரோலை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்களே அதானால் விலை உயர்ந்த பொருட்களையும் அதிகவிலை கொடுத்து வாங்கும் இரட்டை விலை உயர்வுக்கு பலியாகிறார்கள். 
====================================================================================================================================
ன்று ,
செப்டம்பர்-21.

 • உலக அமைதி தினம்
 • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
 • மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
 • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)
 • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
========================================================================================
காலத்தின் கட்டாயம் .

தமிழகத்தில் தங்களது சொல்படி ஆடும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை காப்பாற்ற மத்திய மோடி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஆளுநர், சபாநாயகர் போன்ற நடுநிலையாக செயல்பட வேண்டியவர்களை தங்களது வசதிக்கேற்ப மோடி அரசு வளைக்கிறது. மோடிஅரசின் இத்தகைய செய்கூலியால் சேதாரப்படுவது ஜனநாயக நெறி முறைகள்தான்.

ஆளுங்கட்சி சட்டமன்ற கொறடாவின் உத்தரவை பின்பற்றத் தவறியதாகக் கூறி தினகரன்அணியைச் சேர்ந்த 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். 

18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு சபாநாயகர் தனபால் கூறும் காரணங்கள் முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது.

 அதிமுகவின் மேல் வைத்திருந்த விசுவாசத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சியை நோக்கி அவர்கள் சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கேற்ப செயல்பட்டதாகவும் தனபால் கூறியுள்ளார். இதை அதிமுகவினர் கூறியிருந்தால் பரவாயில்லை.

ஆனால் நடுநிலையான சபாநாயகர் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது. கொறடாவின் உத்தரவை மீறி சபையில் வாக்களித்தால்தான் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்யமுடியும் என்றுவிதிகள் கூறுவதாக நிபுணர்கள் பலரும் கருத்துதெரிவிக்கும் வேளையில், எதிர்க்கட்சிகளின்பக்கம் இவர்கள் போக முடிவு செய்துவிட்டார்கள் என சபாநாயகர் முக்காலமும் உணர்ந்த ஞானியாக மாறி கூறியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பின் மரியாதைக்கு உகந்ததாக இல்லை. 

இந்தப் பிரச்சனையில் ஆளுநர் வித்யாசாகர்ராவின் நடவடிக்கையும் உள்நோக்கம் கொண்டதாகவும் மத்திய பாஜக அரசின்அரசியல் சதுரங்க நகர்வுக்கு உதவி செய்வதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று இவரிடம் மனு கொடுத்தபோதே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. 
ஆனால் இது அவர்களின் உள்கட்சி விவகாரம் என கூறிய ஆளுநர் குதிரை லாயத்தை திறந்து வைத்தார். இதைப் பயன்படுத்தி ஒரு குதிரை எதிரணிக்கு பாய்ந்தோடியது. 

எதிர்பார்த்த அளவுக்கு குதிரைகள் இடமாற்றம் நடைபெறாததால் தகுதிநீக்கம் என்ற அஸ்திரம் சபாநாயகர் மூலம் ஏவப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நடந்த முயற்சியை நீதிமன்றம் தடை செய்தது.
இல்லையென்றால் எடப்பாடி அரசை ஆதரிக்காத அனைவரும் தகுதிநீக்கம் என்ற அளவுக்கு போயிருப்பார்கள். 

எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட மறுத்த ஆளுநர் 18 பேர் தகுதிநீக்கத்திற்கு பிறகு அதாவது செயற்கையான, ஜனநாயகவிரோதமான பெரும்பான்மையை உருவாக்கிய பிறகு தமிழகத்திற்கு பறந்து வந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

குடியரசுத் தலைவரும் கூட இந்த விசயத்தில் தன்னுடைய கடமையை செய்ததாக தெரியவில்லை. மொத்தத்தில் தமிழக அரசு ,அதிமுக வினர் டெல்லி தாளத்துக்கேற்ப ஆளுநர் ஆட்டிவைக்கும் பொம்மலாட்டமாகி விட்டது.

ஜெயலலிதா காலத்தில் தான் கார் டயரை கும்பிடும் முதுகெழுமில்லா கூட்டம் ஜெயலலிதா மறைவுக்குப்பின் கொஞ்சசமாவது முதுகு நிமிருதுவார்கள் என்று பார்த்தால் முன் போன்றே தங்கள் கொள்ளைக்கு ஒத்துழைக்கும் ,பாதுகாக்கும் யாராயினும் காலை நக்க காலம் பூராவும் தயார் என்ற முதுகெலும்பில்லா ஊர்வனவாகவே மாறி விட்டார்கள் .

இவர்களை பார்த்து சகித்துக்கொள்வதுதான் சிறிது நாட்களுக்கு தமிழ் நாட்டு மக்களுக்கு காலத்தின் கட்டாயமாகி விட்டது .வேறு வழி ?
                                                                                                                                                                       நன்றி:தீக்கதிர்,
=======================================================================================================================================

ன்று,
 செப்டம்பர் -20
 • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிட்டது(1847)
 • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)
 • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
========================================================================================
சர்க்கரை நோயின் பாதிப்புகள் ஆபத்தாக இருக்கும் என்பதால் இன்று இன்சுலின் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.
தேவை என்று வரும் பொழுது அனைவரும் இதனை முறையாய் கற்றுக் கொண்டு விடுகின்றனர். என்றாலும் சில நேரங்களில் முறையான அளவு இல்லாமல் கூடுதலாக எடுத்துக் கொள்வதால் ஆபத்தான நிலைக்கு கொண்டு விட்டு விடுகின்றது.
* சாப்பிடும் முன் அவர்கள் சர்க்கரையின் அளவு
* அவர்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைடிரேட்டின் அளவு
* அவர்களின் அன்றாட உழைப்பின் அளவு
இவைகளைக் கொண்டே மருத்துவர் ஒருவரின் இன்சுலின் தேவையினை முடிவு செய்கின்றனர்.
இன்சுலின் வேலை சர்க்கரையை எரித்து சக்தியாக மாற்றுவதாகும். தவறுதலாக அதிக இன்சுலின் எடுத்துக் கொண்டால் திடீரென சர்க்கரையின் அளவு அதிகம் ரத்தத்தில் குறைந்து விடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைவது மிகுந்த ஆபத்தில் கொண்டு விடும். ஆகவே இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் சிறு சந்தேகம் கூட இல்லாது இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறையினை அறிவது மிக மிக அவசியம்.
இன்சுலின் அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்.
* குழப்பம்
* எரிச்சல்
* படபடப்பு
* உடல் நடுக்கம்
* மயக்கம்
* அதிக இருதய துடிப்பு
* பார்வை கோளாறு
* அதிக வியர்வை
இது[போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரி சோதிக்க வேண்டும். மருத்துவர் உதவியும் மிக மிக அவசியம்.
இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள் அதற்கான உரிய நேரத்தில் முறையான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
==========================================================================================