வாக்காளர்கள் பணம் வாங்கினால் மட்டும்தான் நடவடிக்கை?

தமிழகத்தில் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் டிசம்பர் 21-ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிகந்தரா தொகுதி, அருணாச்சலப் பிரதேசத்தின் பக்கே-கசாங் மற்றும் லிக்பாலி தனித் தொகுதிகள், மேற்குவங்கத்தின் சபாங் தொகுதி ஆகியவற்றுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கே. வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். தேர்தல் நடத்தும் உதவி அலுவர்களாக முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரையும் கார்த்திகேயன் நியமித்துள்ளார்.


ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சென்னை இராதாகிருஷ்ணன்(ஆர்.கே.நகர்) நகர் தொகுதிக்கான சட்டமன்ற இடைத் தேர்தல், டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உடனடியாக நவம்பர் 27-ஆம் தேதியே துவங்கும் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், டிசம்பர் 4-ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம்; டிசம்பர் 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனைக்குப் பின், டிசம்பர் 7-ஆம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்; 
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஆர்.கே. நகர் தொகுதியிலுள்ள 256 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்குத்தான் பதிவாகி இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும், 
அதற்கான காகிதத் தணிக்கை இயந்திரம் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016 டிசம்பர் மாதம் முதல் ஆர்.கே. நகர் தொகுதியாக காலியாக உள்ளது. 
கடந்த மார்ச் மாதம் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் முடிந்து, ஏப்ரல் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில், பணப் பட்டுவாடா புகார் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
“அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது; பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள், வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது; நூதன முறைகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது; 
ஏப்ரல் 7-ஆம் தேதி வரை ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; செல்போன், வெள்ளித்தட்டு ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 
பணப்பட்டுவாடா புகாரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 35 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது, தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழல் இல்லை; 
எனவே, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்” என்று தேர்தல் ஆணையம் 29 பக்க விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
ஏப்ரல் 7-ஆம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
அப்போது, ரூ. 89 கோடி அளவிற்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
 இதுபற்றி வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. அதனடிப்படையிலேயே தேர்தல் ரத்து நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியது. 
முன்னதாக ஆர்.கே. நகர் தொகுதியில் தொகுதியில் 45 ஆயிரத்து 819 வாக்காளர்களின் பெயர்களை போலி வாக்காளர்கள் என்று கண்டறிந்து நீக்கி விட்டதாகவும் அறிவித்தது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வியாழனன்று தில்லி சென்று தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்தே, தற்போது ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1977-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்.கே. நகர், மிகச்சிறிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இங்கு இது வரை நடந்த தேர்தல்களில் 7 முறை அதிமுக-வும், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக (அம்மா அணி) சார்பில் டிடிவி தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் இ. மதுசூதனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர். லோகநாதன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 62 பேர் போட்டியில் இருந்தனர்.
மேலும் அப்போது அதிமுக-வின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் டிடிவி தினகரனுக்கு ‘தொப்பி’ சின்னமும், மதுசூதனனுக்கு ‘மின்கம்பம்’ சின்னமும் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாளில் இரட்டை இலையை அவசர அவசரமாக இ. மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
எனினும் இந்த தேர்தலிலும் அதிமுக இரண்டு அணிகளாக போட்டியிடும் சூழலே நிலவுகிறது.
பலமுனைப் போட்டிக்கு வாய்ப்பு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார். 
சனிக்கிழமையன்று சசிகலா அணியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தினகரன் முறைப்படி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இரட்டை இலை ‘பலத்தை’ காட்ட வேண்டிய கட்டாயம் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்டுள்ளது.ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அறிவித்துள்ள நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று அதன் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் அறிவித்துள்ளார்.
 பிற கட்சிகள் விரைவில் தங்கள் முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எதற்காக இந்த தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதன் மீது எந்த நடவடிக்கையுமே இல்லாமல் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது முறையாகுமா?
பணம் கொடுத்த தினகரன்,எடப்பாடி பழனிசசாமி ,விஜயபாஸ்கர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சொல்லி கடிதம் முறையாக அனுப்பப்பட்டும் தமிழ்நாடு அரசு,தலைமைச்செயலாளர் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அக்குற்றம் செய்தவர்கள் தேர்தலில் எப்படி போட்டியிட முடியும்?தினகரன் மட்டுமல்ல பட்டுவாடா செய்த எடப்பாடி,விஜயபாஸ்கர் களின் கட்சியான அதிமுகவும் தற்போது போட்டியிடுவது தார்மீகமாக சரியானது அல்ல.
பணம் கொடுத்தவர்களை ,தேர்தலையே நிறுத்துமளவு செய்தவர்கள் மீண்டும் போட்டியிடுவதும்,அதை தேர்தல் ஆணையம் அனுமதிப்பதும் தேர்தல் ஆணையம் கூறிவரும் 100% நேர்மையான தேர்தல் என்பதற்கு ஒத்து வருமா?பணம் கொடுப்பது இன்னமும் சர்வசாதாரணமாகிவிடும்.
வாக்காளர்கள் பணம் வாங்கினால் மட்டும்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.பணம் கொடுப்பவர்களை ஊக்கப்படுத்தும் என்ற அவலசொல்தான் உண்டாகும்.
தமிழ்நாடு அரசை அசல் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்கள் 
======================================================================================
ன்று,
நவம்பர்-25.

  • உலக  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

  • ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)

  • சுரிநாம் விடுதலை தினம்(1975)
======================================================================================
என்கவுன்டர் சாமியார்.?
சாமியார் ஆட்சி என்றால் அது சாத்வீகமாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். 
ஆனால் உ பி யில் நடக்கும் பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத்தின்ஆட்சி கொலைகார ஆட்சியாக உள்ளது. 
அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களிலேயே 431என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 பேர் மாண்டு போனார்ககள், 88 பேர் படுகாயம்பட்டார்கள். 

போலிசார் நடத்தும் என்கவுன்டர்கள்அனேகமாக போலியானவை என்பது உலகறிந்த ரகசியம். 


வியாபார சாமியாரும்,                    முதல்வர் சாமியாரும்.
குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித்தர வேண்டியது அரசின் கடமை என்பதில் அட்டியில்லை. ஆனால் அதற்கு சட்டபூர்வ நடைமுறைகள் இருக்கின்றன. 

அதை விடுத்துபோலிசே நீதிபதியாகி மரண தண்டனை தரக்கூடாது. 

அதை அனுமதித்தால் மனித உரிமைகள் மட்டுமல்ல, நிரபராதிகளின் உயிர்கள் பறிபோகும் ஆபத்து உள்ளது. ஆனால் இது பற்றியெல்லாம் அந்த சாமியார் முதல்வர் கவலைப்படவில்லை. 

என்கவுன்டர் நடத்தும் மாவட்ட போலிசிற்கு ரூ 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து மனிதர் ஊக்கப்படுத்தியிருக்கிறார்! 

பாசிசம் அரசுக்கு வெளியே தனிப்படைகள் மூலமும், அரசுக்கு உள்ளே என்கவுன்டர்கள் மூலமும் தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்டியதே வரலாறு. 
அது இந்தியாவிலும் துவங்கியிருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தலை கொண்டு வருபவர்களுக்கு கோடிகளை பரிசாக அறிவிக்கும் சாமியார்களிடம் ஆட்சியையே ஒப்படைத்தால் இப்படித்தான் சம்காரம் நடக்கும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?