சொத்துக்குவிக்க வாறீர்களா?



சசிகலா மாபியா கும்பலைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, 'டிவி' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஐந்து நாட்கள், வருமான வரி சோதனை நடந்தது. 

அதையடுத்து, விவேக், பூங்குன்றன், சிவகுமார், கிருஷ்ணபிரியா, அவரின் கணவர், கார்த்திகேயன், ஷகிலா, அவரின் கணவர், ராஜராஜன் உள்ளிட்டோர், வருமான வரித்துறை விசாரணைக்கு, நேரில் சென்று  வருகின்றனர்.

இதில், முதல் கட்டமாக, 1,430 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டாத சொத்துகள்; 12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அரசின் வழிகாட்டல் மதிப்புதான் . வெளிச்சந்தையில் பலமடங்கு எகிறும்.


ஏராளமான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்பு களையும், மூன்று பெட்டகத்தில் வைரங்களையும் அதிகாரிகள் அள்ளி வந்துள்ளனர். 


அவற்றின் மதிப்பை கணக்கிட்டு வருகின்றனர்.லட்சம் கோடியை எட்டினாலும் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.காரணம் அவர்கள் அடித்த கொள்ளை அப்படி அதனோடு அவர்களின் முதலாளி ஜெயலலிதா மறைத்து வைத்த பணம்,தங்கம்,வைரங்கள் எல்லாம் சசிகலா கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அவற்றை அலசி ஆராய்ந்த திலும், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்தும் சசி கும்பல் சேர்த்த பணத்தை,அவரது சகோதரர், திவாகரன், பல மட்டங்களில் முதலீடு செய்து உள்ளது, விசாரணையில் தெரிய வந்தது. 

ஆனால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற விசாரணையில் அனைவரும் சசிகலாவை தான் கை காட்டி உள்ளனர். உண்மையும் அதுதானே இந்த மாபியா கும்பலின் சின்னம்மாவே அவர்தானே.பெரியம்மா அல்லது அம்மா யாருன்னுதான் தெரியுமே உலகுக்கு.


'ஒட்டுமொத்த குடும்பத்தினரின் அனைத்து வித வருவாய்க்கும், சொத்து குவிப்புக்கும் மூலக்காரணம், அவர் தான்' என, விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளதுசோதனை மேற்கொண்ட இடத்தில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், சசிகலாவை விசாரிக்க பெங்களூரு சிறைக்கு சென்று 'சம்மன்' கொடுத்து விசாரிக்கும் முடிவில் அதிகாரிகள் உள்ளனரா.

அவருடன் சேர்த்து, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெறும். இதனால் மேலும் சில புதிய திருப்பங்களுக்கும் ,பிணக்குவியலுக்கும்  வழிவகுக்க வாய்ப்பு உள்ளது. 

சசி குடும்பத்தினர், வேறு எங்கெல்லாம் ஆவணங்களை பதுக்கியுள்ளனர்; வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளனர் என்பது போன்ற பல கேள்விகளுக்கு, சசிகலா, இளவரசியிடம் நடக்கும் விசாரணையில் விடை கிடைக்கும்.

'வருமான வரி சோதனையில், அரசியல் உள்நோக்கம் இல்லை' என, இளவரசியின் வாரிசுகள் கூறியது, சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக, குரல் கொடுத்த, அரசியல் தலைவர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர் கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், நிறுவனங்கள் என, 187 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள்,ஒரே நேரத்தில்சோதனை நடத்தினர். 
ஐந்து நாட்கள் சோதனை நடந்தது. சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனைக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர், எதிர்ப்பு தெரிவித்தனர். 

'பா.ஜ., அரசு, வருமான வரித்துறையை, தவறாக பயன்படுத்துகிறது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில், திடீரென நடத்தப்படும் சோதனைக்கு, அரசியல் உள் நோக்கம் தான் காரணம்' என, தெரிவித்தனர். 
ஆனால் கண்டிப்பாக சசிகலா மாபியா கும்பலை அரசு நடவடிக்கை எடுத்து சொத்துக்களை பறி முதல் செய்து தண்டிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த மக்கள் எண்ணம்.
சென்னை, போயஸ் இல்லத்தில், ஜெயலலிதா வின் உதவியாளராக இருந்த, பூங்குன்றனின் வீட்டில், ஐந்து நாட்கள் சோதனை நடந்தது. 
அதில், சில சொத்து ஆவணங்கள் சிக்கின. 'நான், ஜெயலலிதாவின் அரசியல் உதவியாளர். அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளை மட்டும் தான், நான் கவனித்து வந்தேன்' என வாக்கு மூலம் கொடுத்த அவர் வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வந்தது எப்படி?
'ஐந்து நாள் சோதனையில்,சசி குடும்பத்தினரின், 15 வங்கி லாக்கர்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
அவற்றை திறந்து, கோப்புகள், நகைகள்ஆகியவற்றை மதிப்பிடவுள்ளனர்  வருமான வரி அதிகாரிகள் .
அங்கு பத்மநாபசாமி கோவில் அறைகளை தோற்கடிக்கும் படி ஆச்ச்சரியங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவை 15ம் அதிகாரப்பூர்வமாக சசிகலா குடும்பத்தினர் பெயரில் உள்ள பெட்டகங்கள்.
பினாமிகள் பெயரில் உள்ளவை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதேபோல் மன்னார்குடியில் சசிகலா வின்  நெருங்கிய ரத்த சொந்தங்களாக கருதப்பட்ட, 14 குடும்பங்களின் வீடுகளில், சோதனை நடத்தபட்டது .

ஆனால் அவர்கள் சாதாரண ஓட்டை, உடைசல் வீடுகளில் வசித்தவருகின்றனர்.அவர்களின்  வீடுகளில், எந்தவித ஆவணங்களும் இல்லை. 
உண்மையிலேயே அவர்கள் அன்றாட வாழ்க்கையையே சிரமப்பட்டு தான் நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு இருந்தாலே, பெரிய பணக்காரன் என்ற எண்ணம் உள்ளது.அதையே அவர்கள் பெரிய தொகையாக நினைக்கின்றனர்.
மன்னார்குடியில் நெருங்கிய சொந்தங்களிடம்  அவ்வப்போது பணம் கொடுத்து வேலையை மட்டுமே  சசிகலா வாங்கியுள்ளது.
ஆனால் அவர்களது குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களிடம், கோடிக்கணக்கான சொத்துக்களை ஒப்படைத்து, பல பினாமி நிறுவனங்களை நடத்தி வரும் தகவல் கிடைத்துள்ளது. அரசை ஏமாற்றவே அவர்கள் அப்படி செய்துள்ளனர்.
========================================================================================
ன்று,
நவம்பர்-16.
  • இந்திய தேசிய பத்திரிக்கை தினம்
  • உலக சகிப்புத் தன்மை தினம்
  • முதல் முறையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது(1896)
  • ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஐநா., ஆல் திறக்கப்பட்டது (1914)
  • யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்டது(1945)
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?