மாயப் பணம்

 "பிட்காயின்"
மாயப்பணம் என்ற உடன் ரா.கி.நகர்,தினகரன் உங்கள் நினைவுக்கு வரலாம்.அதில் தப்பே இல்லை.
ஆனால் நாம் இப்போது பார்ப்பது குக்கர் காயின் அல்ல பிட்காயின் .

இதுதான் இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்துவரும் கையிலே வாங்கி உணர,காணக்கிடைக்காத பணம்.மாயப்பணம்.
இதில் வரவு செலவு வைக்கலாம் .பொருட்களை வாங்கலாம்.ஆனால் மீதிப்பணம் கணக்கிலேயே இருக்கும்.கைகளில் தட்டுப்படா பணம் இது.

இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. 
அவர்களில் அதிக பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது  அறியப்படாத,குழப்பமான  ஒன்றாகும். 
ஆனால் பிட்காயினை பிரபலப்படுத்த  bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அது போக பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 ம்  மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.


சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. 
ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. 
பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகள் உங்களுக்கு எழுவது சரியானதே?வரும் காலங்களில் இந்த பிட்காயின் நம் வாழ்க்கையில் பல விளைவுகளை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.
மின்னணு பணம் என்று சொல்லி அலைகிற மோடி அரசு பிட்காயினை சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கும் அபாயத்தை புறந்தள்ளிவிட முடியாது.
தற்போதே இந்தியாவில், இந்த பிட்காயின் கரன்சி பரிவர்த்தனைக்கு தடை இல்லை.
 இதில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று மட்டுமே  ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பிட்காயின்களில்   முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. 
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். 
மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
வலைதளங்களில் புழங்கும், 'பிட்காயின்' போன்ற மெய்நிகர் கரன்சிகளின் பரி வர்த்தனைக்காகவே பலர், சமீபகாலமாக, நிறுவனங்களை துவக்கி வருவது தெரிய வந்துள்ளது.
வலைதளங்களில் மட்டும் புழங்கும், 'பிட்காயின், எத்திரியம், லைட்காயின்' உள்ளிட்ட, மெய்நிகர் கரன்சிகளை கட்டுப்படுத்த, எந்தவொரு அமைப்பும் இல்லை.

இதன் பரிவர்த்தனைக்காக, வலைதள நிறுவனங்கள் பல உருவெடுத்து வருகின்றன. 
பல வலைதளங்கள், அவற்றின் பலதரப்பட்ட சேவைகளுக்கு ஈடாக, மெய்நிகர் கரன்சிகளை பெற்றுக் கொள்கின்றன.

தற்போது, பலர் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்காக, அலுவலக கட்டமைப்புடன், தனி நிறுவனங்களையே துவக்கி வருகின்றனர். 

இந்த வகையில், சில வாரங்களில், 'பிட்காயின்' என்ற பெயரை இணைத்து, 'பிட்காயின் இந்தியா, பிட்காயின் பஜார், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச், பிட்காயின் இந்தியா சாப்ட்வேர் சர்வீசஸ்' என்ற பெயர்களில், பலநிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பல நிறுவனங்கள், 'காயின்' என்ற சொல்லை இணைத்து, 'இந்திகாயின், பாரத்காயின், ஸ்வச்காயின்' என, நுாதன பெயர்களையும் பதிவு செய்து உள்ளன.ஒரு நிறுவனம், தனிநபர் மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களின் பழுது நீக்கும் பணியை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
புலனாய்வு பத்திரிகை தொழிலை ஊக்குவிப்பதாக, ஒரு நிறுவனம் சொல்லிக் கொள்கிறது.

பல் சிகிச்சைக்கு என, மெய்நிகர் கரன்சிகளை வழங்குவதாகவும், இடைத்தரகரின்றி, குறைந்த செலவில் சேவையும், சுலபமாக காப்பீடும் பெறலாம் என, ஒரு நிறுவனம் கூறுகிறது.வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும்,பாலுறவு கருவிகள் வர்த்தகத்திற்கும், 'செக்ஸ் காயின்'களை வழங்குவதாக, ஒரு நிறுவனம் தெரிவிக்கிறது.

இது மட்டுமின்றி, மெய்நிகர் கரன்சிகளுக்கு என, 'கிரிப்டோ அட்வைசர்ஸ், கிரிப்டோ லேப்ஸ், கிரிப்டோ மைனிங்,கிரிப்டோ யோ காயின் இந்தியா' போன்ற ஆலோசனை நிறுவனங்களும் முளைத்துள்ளன.
மத்திய அரசு, மெய்நிகர் கரன்சி கொள்கையை, விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, மெய்நிகர் கரன்சி நிறுவனங்கள் பெருகத்தான் செய்யும். முதலீட்டாளர்களும், நுகர்வோரும் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

'பிட்காயின்' சந்தைகள், முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கு துணை புரிவதாக வந்த புகாரை அடுத்து, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் உள்ள, ஒன்பது பிட்காயின் சந்தைகளில், சமீபத்தில், வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

அதில், 'ஜெப்பே' பிட்காயின் சந்தையின் விற்றுமுதல், ஒரே ஆண்டில், 1,000 கோடி ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துஇருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.


இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.
இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.
பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.
மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.
பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 
உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.
பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. 
ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காரணம் பிட்காயின் என்ற இணைய  தளம் உருவாக்கியவர்கள் யாரென்றே தெரியாத நிலைதான் தற்போதும்.அதை உலகளவில் ஆங்காங்கே நிர்வகிப்பவர்கள் வெளிப்படையாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.
அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. 
மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.
சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.
"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர் திமுக தோல்விக்கு பல அறுவை சிகிசசைகள் நடந்து முடிவுகள் வருகினறன.
கலைஞரை மோடி சந்தித்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை மாற்றி போட்டுவிட்டனர்.

திமுகவினர் வாக்குகளை மாற்றி போட்டனர்.


திமுகவை (ஸ்டாலின் தலைமையை ) மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்னும் பல.


ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான்.


அழகிரி திருமங்கத்தில் அடித்து காட்டிய பண விநியோகம் இங்கு தினகாரனால் பரிணாமம் மாறியுள்ளது.


அவரின் அனுபவத்தில் பெற்ற ஹவாலா பாணியில் வாக்களித்து 20ரூபாயை காட்டினால் வாக்குக்கு 10000 நிச்ச்யம் என்ற முறைதான் வென்றுள்ளது.கட்சிகள் அடுத்த கட்டமாகி விட்டது.


அடித்தட்டு மக்கள் நிரம்பிய தொகுதியில் பலருக்கு 10000 என்பது கிட்டத்தட்ட ஒரு மாத ஊதியம் .
5வாக்குகள் உள்ள குடும்பத்தில் ஏற்கனவே வாங்கிய குக்கருடன் 2000போக இந்த 50000சின்ன தொகையா?


ஆனாலும் இந்த 10000த்தையும்,அதிமுக தந்த 6000த்தையும் மீறிதிமுக 25000 வாக்குகளை பெற்றிருப்பது உள்ளபடியே ஸ்டாலின்தலைமைக்கு கிடைத்த வெற்றி.


உள்ளபடியே இரட்டை இலை சின்னம்,6000ரூபாய்,அதிகாரவர்க்க உறுதுணை கொண்டிருந்த அதிமுகத்தான் அம்மணமாகியுள்ளது.திமுக வாக்கு பெற காசு கொடுக்க மாட்டோம் என்ற நிலைக்கு அமோக ஆதரவுதான் திமுக பெற்ற வாக்குகள்.


 திமுக வாக்குகள் மாறி விட்டன என்பதும் வடிகட்டிய பொய் .ராதாகிருஷ்ணன் நகர் என்றுமே அதிமுக செல்வாக்கான தொகுதி.
இது ஊடகங்களுக்கு தெரிந்தும் திமுகவுக்கு அவமானம் என எழுதுவது திமுக தொண்டர்களை சோர்வு உண்டாக்கி முடக்கி வைப்பதுதான் .

கழகத்தில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி மட்டும்தான் .சின்ன தொகுதிக்கு இப்படி வாரி இறைத்த பாரிகள் பொதுத்தேர்தலில் எப்படி வாருவார்கள்?
=======================================================================================
ன்று,
டிசம்பர்-27.
  • வடகொரியா அரசியலமைப்பு தினம்
  • பேர்சியா நாடு  ஈரான் என்ற பெயருக்கு மாறியது (1934)
  • உலக வங்கி உருவானது(1945)
  •  தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1956)
  • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)
=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?