இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 18 அக்டோபர், 2018

புதிய அடிமையைத் தேடி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோரை குறிவைத்து நடைபெற்று வரும் சிபிஐ ,வருமானவரி ரெய்டுகள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தாகவும், அப்போது நீங்க கிளம்பி போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என பிரதமர் உறுதி அளித்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் எடப்பாடியின் டெல்லி சென்று மோடியை சந்தித்த  சில நாட்களிலேயே  அவர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கை  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றிட ஆணைபிறப்பித்து எடப்பாடி  தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்..
மேலும் ஒரு மாதத்துக்குள் முதல கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இது அழிக்க முடியாத ஆவணங்களை உள்ளடக்கிய வழக்கு என்பதால் இதற்கு நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பாவார் எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ளபடியே பல அமைச்சர்களுக்கும்,அதிமுகவினருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
ஒரு மாத விசாரணையில் இந்த முறைகேட்டுக்கு  முகாந்திரம் இருப்பதாக ஒரு வேளை சிபிஐ தெரிவித்தால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய கட்டாயம்  இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.
காரணம் எட்டப்பாடியை மாட்டிவிடும் பதிவுகள் பல உள்ளதாம்.அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் எடுக்காமல் மறைத்து எடப்பாடி மீது வழக்குத்தொடுக்க முகாந்திரமில்லை என்று பூசி மெழுகினாலும் ஆதாரங்கள் அதிகம் உள்ளதாம்.
இதை வைத்து எடப்பாடி மீதான பிடியை இறுக்க முடிவு செய்துள்ள பாஜக, இபிஎஸ் தான் சொல்லுகிறபடியெல்லாம் ஆட வேண்டும் என நினைப்பதாக  கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் வசம் போக வேண்டும்  என பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் கொண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோடடையனை நியமிக்க மோடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதல்வராகும் வாய்ப்பை இழந்து விரக்தியில் உள்ள  செங்கோட்டையனும் மகிழ்வுடன் தலையாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாஜகவுடன் வரும் தேர்தல்களில் கூட்டணி வைத்து பாஜகவை தமிழகத்தில் முதுகில் இடம் கொடுத்து சுமக்க வேண்டிய நிபந்தனைக்கும் செங்கோட்டையன் சம்மதித்துவிட்டார்.
இந்த நடைமுறைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 
இதன் மூலம் அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை  மாற்ற முடியும் என்றும் பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. 
எது எப்படியோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தன்னை விட தொண்டர்கள் பலமிக்க அதிமுகவுடன்  இணைந்து சந்திக்க எண்ணி பாஜக போட்ட திட்டம் நிறைவேறுகிறது.
தங்களுக்கேற்ற அடிமைவம்சம் கட்சியில் புதிய அடிமையைத் தேடிய பாஜக அதற்கு பட்டம் சூட்டும் நாள் நெருங்குகிறது.
அதனால்தான் காவி வேட்டிகள் பத்து வரும் சட்டமன்றத்தில் அமர்வார்கள் என்று 
ஆனால் ஏற்கனவே தமிழக மக்கள் மனதில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வரும் பாஜக,அதிமுக மீதுள்ள கோபம் ஒட்டுமொத்தமாக இருகட்சிகளுக்கும் பாடம் புகட்டுவதாகவே இருக்கும் எனது தெரிகிறது.
=========================================================================================
410 கோடிகளில்  சுற்றுப்பயணம்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ஆகஸ்ட் வரை 55 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் மற்றும் அதற்கான செலவுத்தொகை 393.34 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

2014 ஜூன்  மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் அவர் பூட்டானுக்கு பயணம் செய்தார், இதுவே அவரின் முதல் பயணம். 

அதைத்தொடர்ந்து 2018 ஆகஸ்ட் வரை அமெரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர் பிரேசில் என மொத்தம் 55 நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த நான்கு ஆண்டுகளில் 44 அரசுமுறை பயணங்கள் சென்றுள்ள பிரதமர் மோடி,  சில நாடுகளுக்கு இருமுறை சென்றுள்ளார் என்பதும், ஆறு பயணங்களுக்கு இந்திய விமானப்படை விமானத்தில் சென்றதால் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும், அந்த ஆறு ரசீது இதுவரை கிடைக்கவில்லை.
 எஞ்சிய பயணங்களுக்கான தொகைதான் இந்த  ரூ. 393,34,27,465  என்பது  தெரியவந்துள்ளது. 
ஆறு பயணங்கள் தொகையும் சேர்ந்தால் 410 கோடிகளாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
கடந்த உலக சுற்றுலாதினத்தில் அதிகம் நினைவுகூறப்பட்டவர் இந்திய பிரதமர் மோடிதான்.
====================================================================================
ன்று,
அக்டோபர்-18.
சார்லஸ் பாபேஜ்


 • கணினியைக்  கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)

 • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)

 •  கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)

 •  முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை டெக்சாஸ் 
 • இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது(1954)
 • நாகப்பட்டினம் மாவட்டம் அமைப்பு (1991)
=====================================================================================

கணினியின் தந்தை என கருதப்படும்  சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage, 1791 - 1871) பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். 

இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.


1837யில்  முதல் முழுமையான செய்நிரல் கணினியை (Programmable Mechanical Computer) சார்ல்ஸ் பாபேஜ் வடிவமைத்தார். 


ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, 
நிதி பற்றாக்குறை, 
மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) 
போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.


இவரது இயந்திரத்தில் துளையிடப்பட்ட அட்டைகள் (Punch Card) பயன்படுத்தப்பட்டன. 


உதாரணமாக இரண்டையும் மூன்றையும் கூட்ட வேண்டும் எனில் இரண்டு துளையிடப்பட்ட அட்டையையும், மூன்று துளையிடப்பட்ட அட்டையையும் இவ்வியந்திரதினுள் நுழைத்தால்
 ஐந்து துளைகளிடப்பட்ட அட்டை விடையாக வரும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 17 அக்டோபர், 2018

எழுபதை தாண்டிய நான்கு.!

காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை   பா.ஜ.க நான்காண்டுகளில் செய்துள்ளது உண்மையே!!
பேல் விமான ஊழல் விவகாரத்தில் தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள் எழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 
ரபேல் விமான ஒப்பந்த ஷரத்துகளின் படி அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் கூட்டுப் பங்கு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதற்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தர வேண்டும் எனவும், இந்திய நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து தான் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் சொல்கிறது. 
இதன்படி, மன்மோகன் அரசு போட்டிருந்த ஒப்பந்தத்தை அடுத்து ரபேல் நிறுவனம் இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்திருந்தது.
இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு பழைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. அதன்படி முதல் கட்டமாக 36 விமானங்கள் வாங்குவது திட்டம். 
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி, விமானங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதுடன் கூட்டுப் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் நுழைக்கப்பட்டது. 

இது குறித்து புகார்கள் எழுந்த போது “இது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால், தஸ்ஸால்ட் தெரிவு செய்த கூட்டு நிறுவனம் குறித்து எமக்குத் தெரியாது” என்கிற பதிலை மத்திய அரசு – குறிப்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி வந்தார்.
இந்நிலையில் மீடியாபார்ட் என்கிற பிரெஞ்சு பத்திரிகை, தஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை கூட்டு சேர்த்துக் கொண்டால்தான் ஒப்பந்தம் கிடைக்கும் என தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. 
மீடியாபார்ட்டில் வெளிவந்துள்ள கட்டுரையின் படி, தஸ்ஸால்ட்டின் மூத்த அதிகாரி லோயிக் செகாலென் தனது ஊழியர்களுடன் 2017 மே 11ம் தேதியன்று நடத்திய கலந்துரையாடலின் போது, ஒப்பந்தத்தை வெல்ல வேண்டுமெனில் ரிலையன்சை அனுசரித்துப் போக வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் விவகாரங்களை காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் ஓரளவுக்கு சொரணை உள்ள ஊடகங்களும் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கின்றன. 
அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் பயணமாக பிரான்சு சென்றிருப்பதுடன் அங்கே தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ரபேல் ஒப்பந்த ஊழலை மிகப் பெரிய அளவில் கிளப்பும் திட்டத்துடன் காங்கிரசு கட்சி இருப்பது அதன் சமீபத்திய நடவடிக்கைகளில் இருந்து தெரிய வருகின்றது. 
கடந்த வாரம் பெங்களூரு வந்த காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அங்கு ஹெச்.ஏ.எல். நிறுவன ஊழியர் சங்கங்களைச் சந்தித்துள்ளார். 
ஊழியர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம் ஹெச்.ஏ.எல்-ன் உரிமை என்றும், அதைப் பெற்றுத் தருவது தனது கடமை என்றும் பேசியிருக்கிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, “தின்னவும் மாட்டேன், தின்ன விடவும் மாட்டேன்” என்கிற முழக்கத்தை முன் வைத்த மோடி, ஊழலை ஒழிப்பதே தனது முதன்மை லட்சியம் எனக் கூறியிருந்தார். மோடி அப்போது எடுத்த அதே ஆயுதத்தை இப்போது காங்கிரசும் கையிலெடுத்திருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமனின் திடீர் பிரான்சு விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. 

ரபேல் விவகாரத்தை இந்தியாவில் உள்ள மையநீரோட்ட ஊடகங்களில் விவாதமாகாமல் தடுப்பதில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று விட்டது.
எனினும், பிரான்சில் உள்ள ஊடகங்களோ தொடர்ச்சியாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
சில வாரங்களுக்கு முன் அனில் அம்பானியை எங்கள் தலையில் கட்டி விட்டார்கள் என முன்னாள் பிரான்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலாந்தே பிரான்சு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். 
அந்த தகவலை பிரான்சு அரசாங்கம், இந்திய அரசாங்கம், தஸ்ஸால்ட் நிறுவனம் என அனைவரும் மறுத்து வந்த நிலையில்தான் தற்போது தஸ்ஸால்டின் ஆவணங்களை மீடியாபோர்ட் அம்பலப்படுத்தியுள்ளது.
எனவே, முடிந்த வரை பிரான்சு / ஐரோப்பிய பத்திரிகைகளில் உண்மைகள் கசிவதைத் தடுக்கும் நோக்கத்தோடு தான் ஊறுகாய் மாமி சென்றிருப்பார் என்பதை ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. 
எப்படிப் பார்த்தாலும், இந்திய அடிமை ஊடகங்களின் வாயை அடைத்ததைப் போல் ஐரோப்பிய ஊடகங்களின் வாயை அடைப்பது அத்தனை சுலபமில்லை என்பதோடு உண்மையை நிரந்தரமாக மூடி மறைப்பதும் சாத்தியமற்ற காரியம்.
காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று .
அது எதில் உண்மையோ இல்லையோ ஊழல் விவகாரத்தில் அசைக்க முடியாத உண்மை என்பதை ரபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
=========================================================================================
மிடூ முதல் பலி.
 வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மீ டூ விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், எம்.ஜே.அக்பருடன் பணியாற்றிய 10க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணியும் ஒருவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அமைச்சர் அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, தன் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் கையாள்வார்கள் என்றும் அதன் பிறகு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் எம்.ஜே.அக்பர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு தேவையா?


டில்லியில் புதிய கட்டுமான திட்டப்படி, குடியிருப்பு பகுதியில், குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இந்தப்புதிய தடையை மீறி அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் , டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தடை புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அந்த இடம் ஆட்கள் குடியிருப்பே இல்லாத இடம் அதனால் அனுமதிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைப் பகுதி என்று தெரிந்தும் சென்ற பாஜக ஆடசியில்தான் அங்கு குடியிருப்பு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பல ஆண்டுகள் கழிந்த பின்னர் ஆம் ஆத்மீ ஆட்சி அமைக்கப்பட்டபின்னர்தான் துணை ஆளுநர் இப்படி தடையை விதித்தார்.இந்தத்தடையை கரணம் காட்டித்தான் பசுமைத் தீர்ப்பாயம் அரசுக்கு அபராதம் விதித்துள்ளது.

இதே பசுமைத்தீர்ப்பாயம் தூத்துக்குடியில் மக்களை புற்று நோய்,சுவாசக்கோளாறு,தோல் வியாதிகள் மூலம் கொன்று வரும் ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு ஆணைபிறப்பித்தப்பின்னரும் அலுவலகம் இயங்கலாம்,விரிவாக்கம் மட்டும் இயங்க வேண்டாம் என்று சொல்லுகிறது.

இந்த  பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பை  வைத்துக்கொண்டு ஸ்டெர்லைட் மீண்டும் இயங்க ஆரம்பிக்கிறது.

தெலுங்கானா,ஆந்திரா,பீகார் என்று பல மாநிலங்களில் மக்கள் எதிர்ப்பையும் மீறி,சுற்றுசூழல் கேட்டும் என்பது தெரிந்துமே அனில் அகர்வால்,அம்பானி,அதானி ஆகியோரின் அலுமினியம்,தாமிரம்,மீத்தேன் தொழிற்சாலைகளுக்கு பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது .

காட்டையும்,மலைகளையும்,ஏரி,குளங்கள் ,விவசாய நிலங்களை அழித்து உருவாக்ககும் மக்களுக்கு தேவையே இல்லாத மக்கள் அனைவரும் எதிர்க்கும் திட்டமான சேலம் எட்டுவழிச்சாலை ,மீத்தேன் திட்டங்களுக்கும் இதன் அனுமதிதான் காரணம்.பசுமையை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்  இப்படி ஒரு பசுமைத்தீர்ப்பாயம் இந்தியாவுக்கு தேவையா?

இந்த தீர்ப்பாயம் இதுவரை பசுமையை காப்பாற்றி,சுற்றுசூழலை பாதுகாத்து ஒரு தீர்ப்பையாவது வழங்கியுள்ளதா?
சொல்லப்போனால் மக்கள் கோரிக்கையை ஏற்று வழங்கிய உச்ச நீதிமன்றத்தீர்ப்பை எல்லாம் இந்த பசுமைத்தீர்ப்பாயம் மேல்முறையீட்டு வழக்கில் செல்லாதாக்கிவிட்டு வன,கனிம வளத்தை அழித்தேவருகிறது.

ஆனால் மோடி அரசுக்கு எதிரானவர்களை மட்டும் உத்தமன் போல் பழிவாங்கி செயல்படுகிறது இந்தபசுமைத்தீர்ப்பாயம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பீஹார் தலைநகர் பாட்னாவின் முக்கிய பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோரின் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ளசுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. 

அதில்  ரபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா?

நாட்டின் பல பகுதிகளில், 35 விமான நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவை, எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா? 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நபருக்கு, துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை கால பரிசு தொகையாக, 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்னதாம்பா சொல்லவரீங்க ? 
=========================================================================================
ன்று,
அக்டோபர்-17.
 • உலக வறுமை ஒழிப்பு தினம்

 • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)

 • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
=========================================================================================='
 • உலக வறுமை ஒழிப்பு தினம்
வறுமை தீயினும் கொடியது' எனும் சொற்றொடரில் வருவதை வெறும் வார்த்தைகளாய் கடந்து விடாமல் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அனுபவித்து இவ்வுலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இன்றும் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
வறுமையின் உடன்பிறப்புகளான பஞ்சம், பசி, பட்டினி இவையெல்லாம் இம்மக்களின் உற்றத் தோழர்களாகும்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்கிறார் பாரதி, ஆனால், இன்றளவும் வறுமையின் காரணமாக சர்வதேச அளவில் 82 கோடி மக்கள் தினந்தோறும் சரியான உணவு கிடைக்காமாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

அதே சமயம், ஆண்டுதோறும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாவதாக மற்றொரு ஆய்வு தெரிவிப்பது கசப்பான உண்மையாகும்.
வறுமை தனது பார்வையை உணவின் மீது மட்டுமல்லாமல் வறியவர்களின் வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் பாரபட்சமின்றி காட்டுகிறது.

இதன் காரணமாகவே பல கோடிக்கணக்கான மக்கள் சரியான மருத்துவம், கல்வி, வாழ்விடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன்காரணமாகவே, பல லட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி கற்பதை விட்டுவிட்டு கற்களை உடைக்க செல்கின்றனர். 


அன்றாடம், குப்பைத் தொட்டிகளில் தங்களது உணவைத் தேடும் மனிதர்கள், பாலங்களுக்கு  அடியிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தங்களது உறைவிடம் தேடும் மனிதர்கள், கந்தலோ, கிழிசலோ கிடைத்ததை உடுத்தி கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள் இன்று நம் பலரின் பார்வையில் அன்றாடம் படும் அங்கங்களாகிவிட்டனர். 
இப்படி உலகெங்கிலும் வறுமை கருணையின்றி கோரதாண்டவம் ஆடி வருவது அனைவரும் அறிந்த அப்பட்டமான உண்மையாகும்.

இன்று, உலகின் பல நாடுகள் தங்களது விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் விண்ணைத் தொட்டுவிட்டன. நிலவில் இருக்கும் தண்ணீரை படம்பிடிக்க பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவுச் செய்யும் அரசுகள், நிலவொளியில் வாழும் பல கோடிகணக்கானோரின் கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டன என்பதே நிதர்சனமான உண்மையாகும்.


எது உண்மையான வறுமை ஒழிப்பு என்று பார்த்தால், 'பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் ' என்ற பகத் சிங்கின் கூற்று நனவாகும் நாள், 
உலகின் கடைக்கோடி மனிதனும் துயர்நீங்கி பசியாறும் நாள், அந்நாளே உண்மையான வறுமை ஒழிப்பு நாளாக முடியும்.
எனவே, 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்பதை மன்னர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே உண்மையில் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமாகும்.

அவ்வாறல்லாமல், கடைக்கோடி மக்களின் கதறல்களை உணராத கல் நெஞ்சம்  படைத்த மனிதர்கள் இருக்கும் வரையில் கேரளாவின் மதுவை போன்ற மனிதர்களின் நிலை இங்கு பலருக்கு தொடரத்தான் செய்யும்.
செவ்வாய், 16 அக்டோபர், 2018

உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள் ..!

எண்ணெய் உற்பத்தியாளர்கள் மாநாட்டை நடத்திய பிரதமர் அம்மாநாட்டின் மூலம் பெட்ரோல் விலை குறைவு தொடர்பாக முடிவெடுக்கவே இது நடக்கிறது என்கிறார்.
ஆனால் அக்கூட்டத்தில் எந்தவிதமான பெட்ரோல் விலைக்குறைப்பு முடிவும் எடுக்கப்படவில்லை.குறைந்த அளவுக்காவது விலை குறைப்பு பற்றிய ஆலோசனையும் நடத்த்தப்படவில்லை.
மாறாக இந்தியாவில் இயற்கை எரிவாயு,எண்ணெய் எடுக்கும்,சுத்திகரிக்கும் ஆலைகள் துவக்க தனியார் முதலாளிகளுக்கு,முதலீட்டார்களுக்கு அழிய்ப்பு மட்டுமே வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் 
'' தனியார் நிறுவனங்கள்,மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்களிடம் உள்ள உபரி நிதியை இந்தியா போனற  நாடுகளில் எண்ணெய் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

இயற்கை எரிவாயு எடுப்பு மற்றும் வினியோக துறையில் ஈடுபடவும் வேண்டும் அதற்கான வசதிகளை இந்திய அரசு செய்து தரும் "என  அழைப்பு விடுத்தார். "

இந்த கூட்டத்தில்  ரிலையன்ஸ் அனில் அம்பானி,அதானி, ஸ்டெர்லைட் அனில் அகர்வால் போன்ற பெரும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.மக்கள் பிரதிநிதிகள் என்று கூறப்படும் யாரும் இந்த பெட்ரோல் விலை குறைப்பு(?) ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துவில்லை.

ஆக தனியார்கள் பெட்ரோலியத்துறையில் நுழைந்து தங்கள் வியாபாரக்கூட்டணி மூலம் இன்னமும் விலையை உயர்த்த்தான் மோடி அழகிய்ப்பு விட்டுள்ளார்.

அம்பானி,அதானி,அகர்வாள்கள் பெட்ரோலியத்துறையில் நுழைந்தபின்னர்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வே தொடர்கதையாகிவிட்டது.

வியாபாரிகள் தங்கள் லாபத்தை எப்படி குறைப்பார்கள்.மோடி கடந்த கால அனுபவத்தில் படம் கற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை.அரபு நாடுகளில் கூட அரசு சார்பில்தான் பெட்ரோல் ஏற்றுமதி,விலை நிர்ணயம் நடக்கிறது.

ஆனால் இந்தியாவில்  தனியார்கள் தினசரி விலையை உயர்த்த அரசுதன்பங்குக்கு அந்த விலையை விட அதிகமாக வரிகளைப்போட்டு கொடுமைப படுத்துகிறது.சானிட்டரி துணியைக்  கூட ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவந்த பாஜக அரசு பெட்ரோலை ஏன் அதன் கீழ் கொண்டுவர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

அதுவும் ஜி.எஸ்.டி வரியி கீழ் வந்தால் விலை குறையும் எல்லாப் பகுதிகளிலும் பெட்ரோல் விலை சமமாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கமல் சேலம் கூட்டம் .

 அதிர்ந்த ஆளுங்கட்சி!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் சேலம், நாமக்கல் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கிறார். இதுவரையில் கமல் மேற்கொண்ட மக்கள் பயணங்களிலேயே இந்தப் பயணம்தான் டாப் என்று கமல்ஹாசனைப் பற்றி உளவுத்துறை சென்னைத் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் சென்ற கமல்ஹாசன், அங்கே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அக்டோபர் 15 ஆம் தேதி காலை சேலத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பினார். கமல்ஹாசன் சென்னையைத் தொடுவதற்கு முன்னதாகவே அவரது சேலம் மாவட்ட பயணம் பற்றிய உளவுத்துறையின் விரிவான அறிக்கை ஆளுந்தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அக்டோபர் 13 ஆம் தேதி மாலை கமல்ஹாசன் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே பல பாயிண்ட்டுகளில் பேசிப் பேசி நகர்ந்து வந்துகொண்டிருந்ததால், கோட்டை மைதானத்துக்கு அவர் வந்து சேர அறிவிக்கப்பட்ட நேரத்தை விடத் தாமதம் ஆனது. 
ஆனாலும் உண்மையிலேயே ‘மாபெரும்’ கூட்டம் கமலுக்காக காத்திருந்தது. இது கமலுக்கு மட்டுமல்ல, மக்கள் நீதிமய்ய பொறுப்பாளர்களுக்கே ஆச்சரியமான அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த அவர்கள் கடுமையான சிரமத்தை அனுபவித்தார்கள், ஆனாலும் இதை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடை வழக்கம்போல இல்லாமல், விருது வழங்கும் விழா, அழகிப் போட்டி விழா மேடை போல முன் பக்கம் கொஞ்சம் நீண்டிருந்தது. அதனால் பொதுமக்களிடையே அவ்வப்போது வந்து பேசிவிட்டுச் செல்வது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.


கமல்ஹாசன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது அவரை எம்.ஜி.ஆர். தன் தோளில் தூக்கி வைத்திருந்த புகைப்படத்தை பெரிய சைஸ் பதாகைகளாகத் தயாரித்து கூட்டத்தில் ஆங்காங்கே அசைத்துக் கொண்டிருந்தனர் தொண்டர்கள்.

“மாபெரும் கூட்டம் என்றால் இதுதான். இந்த அன்பில் நான் திக்குமுக்காடிவிட்டேன். இந்த அன்பு தொடர வேண்டும்” என்று பேசத் தொடங்கிய கமல்ஹாசன் சேலத்தின் முக்கியப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டு வெறும் 20 நிமிடங்களில் தன் பேச்சை முடித்துவிட்டார்.

கமல் பேசுவதற்காக கேட்டிருந்த பல சின்னச் சின்ன பாயின் ட்டுகளில் மேடை போட்டு பேசக் கூடாது என்று காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
 அதனால் ஆங்காங்கே வாகனத்தில் இருந்தபடியே பேசினார். ஒவ்வொரு பாயின் ட்டிலும் கமலுக்கு ஆயிரம் பேராவது குறைந்தபட்சம் கூடிவிட்டனர்.

இந்த சேலம் கோட்டை மைதானத்தில்தான் கடந்த மாதம் முதல்வரின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் கலைந்துகொண்டிருந்தது. 
ஆனால் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் அவர் பேசி முடித்த பிறகே கூட்டம் எழுந்து செல்ல ஆரம்பித்தது. 

மக்கள் நீதி மய்யத்தினர் கூட்டம் சேர்க்க வழக்கமான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சுமார் பத்தாயிரத்துக்கும் நெருக்கமானவர்கள் கமல் பொதுக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

இதனால் சேலம் மாவட்டத்தில் கமலுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் செல்வாக்கு என்று ஆராய உத்தரவிட்டிருக்கிறது அரசு.
                                                                                                                                                                                                                                                        -ஆரா
=======================================================================================
ன்று,
அக்டோபர்-16.


 • உலக  உணவு தினம்
 • சிலி ஆசிரியர் தினம்
 • பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
 • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிவினை நடந்தது (1905)
 • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
=======================================================================================
ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்???
சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருந்தனர் என்பதை தரவாடு முறை மற்றும் தோள் சீலைப் போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதிப் பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு, மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதாகும்.
தரவாடு முறை என்பது நாயர் போன்ற மேல் சாதி சமூகத்தில் திருமணங்கள் நடைபெற்றால், முதல் குழந்தையை நம்பூதிரி பார்ப்பனர்கள் மூலம் பெற வேண்டும் என்பது தான். அதாவது திருமணம் நடந்ததும் முதல் இரவு நம்பூதிரி பார்ப்பனர்கள் உடன் தான்
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது எனச் சிந்திக்கும் , பேசும் , வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்தக் கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது.
இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்தக் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்துச் சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு, நாடார் கிருத்தவப் பெண்களுக்குத் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்:
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பிராமணர்களின் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் , சேரநாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன.
12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாயிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு.
உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்துப் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ்வுடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு.
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகக் கடைபிடிக்கப் பட்டன.
உடை அணியும் விதத்தை வைத்தே மக்கள் உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது.
முதல் போராட்டம்:
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவப் பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவப் பெண்கள் தங்கள் மார்பகங்களைத் துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர், ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாகக் கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் , பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப் படுகிறது.
இரண்டாம் கட்டப் போராட்டம்:
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதிப் பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்றாம் கட்டப் போராட்டம்:
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்தப் பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை.

இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின் கரையில் தொடங்கிய போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறை பரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்துக் கொண்டனர்.
உடை உடுத்த உரிமை:
இப் போராட்டத்தின் விளைவாகவும், ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலை மாதம் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை, மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
மேற்கோள்கள்.
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை
.
Kalai Arasu அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து....
-திருப்பூர் சுகுணாதேவி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜின், மகள் அர்ச்சனா,வயது  10.
 இரண்டரை மாதங்களாக, உடம்பில் வியர்வை வெளியேறுவது போல், தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டார். 
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. 

இதையறிந்த, ஓசூரைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டார். 
ஒரு சில நிமிடங்களிலேயே, அர்ச்சனாவின் உடலில் ரத்தம் வெளியேறுவது நின்றது. அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன் இது பற்றி கூறும் பொது 
" சிறுமியின், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிக சூடு, நெஞ்சுப் பகுதியைத் தாக்கி, இதயத்திலிருந்து, ரத்தம் பம்பாகி செல்லும்போது, உடலின் பல்வேறு பகுதியில் இருந்து, ரத்தம் வெளியேறியுள்ளது. அக்குபஞ்சர் சிகிச்சையில், சூட்டை குறைக்க, ஊசி போடப்பட்டது. 
இரண்டு நிமிடங்களில், உடல் சூடு குறைந்து, ரத்தம் வெளியேறுவது நின்றது. 
இனி, அவரது உடலில் சூடு ஏற்படாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். "
என்றார் .