இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிப்பு அரக்கன்!

படம்
நடிகர் நாகேஷ் பூர்வீகம் மைசூரு.  கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை.  குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய். நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.  குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், 'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை.  நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும்.  சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்ப

சென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் ?

படம்
சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர், பிரதீப், கமல். இவர்கள்  இருவரும், அசாமில் இருந்து கள்ள துப்பாக்கிகள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை, ரயிலில் கடத்தி வந்த போது ரகசிய தகவல் மூலம் தேடிய  வேப்பேரி காவல்துறையினரிடம்  சிக்கினர்.  இவர்களை விசாரித்தபோது "தமிழகத்தில், கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை மற்றும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதன் வாயிலாக, பாக்., பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய" தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி  திருச்சியில் இரு பெண்கள்  துப்பாக்கிகளுடனும்,அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து மறைத்து வைக்க சொன்ன சென்னையைச் சேர்ந்த  காவலர்  பரமேஸ்வரன் உள்ளிட்ட மூவரும்  கைது செய்யப்பட்டனர்.  இவர்களுக்கு தலைவன் பாக்., உளவாளி, முகமது ரபீக்  என்பதும் தற்போது அவன்    புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான் என்பதும் தெரிந்தது. கொடுங்கையூரை சேர்ந்த, முகமது ரபீக், 2014ல், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.  அசாமில் இருந்து, 10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை, ரயிலில் கடத்தி வந்தது தொடர்பான வழக்கும், இவன் மீது உள்ளது. இந்நிலையில், செயின்

கட்டாத கட்டணம்?

படம்
தமிழகத்தில் அநியாயமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்துப்பகுதி மக்களும் கொந்தளித்தனர்.  குறிப்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டக் களம் கண்டனர்.  இந்த உணர்வைப் புரிந்து கொண்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக அச்சுறுத்தல் மூலம் மாணவர்கள், வாலிபர்களை மிரட்ட முயன்றது அதிமுக அரசு.போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது.  ஆனால், அஞ்சாமல் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடின. ஆனால், போக்குவரத்து அமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திமிர்வாதம் பேசினர். இந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திங்களன்று தமிழகம் முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  போராட்டப் பெருநெருப்பின் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைத

குறுக்கு வழிகள் .

படம்
 இன்றைய காலத்தில் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடியை  பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை.  இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள்தான் தற்போது  பெரும் உதவி கரமாக உள்ளது.  இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் தேடியே நமக்கு  சில குறுக்கு வழி வசதிகளை  தந்துள்ளது.  அவற்றில் சில, இங்கு . குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடிட    (inurl:command):   இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம்.  எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும். விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”):   தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம்.  ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம்.  எடுத்துக் காட

வங்கிகள் மோசடி?

படம்
மத்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமரின் முக்கிய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல், உதவி கவர்னர் வைரல் ஆச்சார்யா போன்றவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டுமென்று தொடர்ந்து பொது வெளியில் பேசி வருகின்றனர்.  வங்கித் துறையை பற்றி இந்த அரசாங்கத்தின் கொள்கை நிலை என்ன என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும். இந்தப் பின்னணியில்தான் வங்கித் துறை பற்றிய சர்ச்சை பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.  இன்றைக்கு வங்கித் துறையை அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை பீடித்திருக்கும் முக்கிய நோய் “வாராக் கடன்”. “வங்கிகளின் மொத்தக் கடனில் 56 சதவீதம் கடன் பெற்றுள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியுள்ள பெரும் கடனாளிகள்தான் மொத்த வாராக் கடனில் 88 சதவீதத்திற்கு பொறுப்பானவர்கள்” என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையே தெள்ளத் தெளிவாக கூறுகிறது. அதிலும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலாக வாராக் கடன் வைத்துள்ள 12 பெரு நிறுவனங்களின் வாராக் கடன் ரூ.2,53,000 கோடியாகும்.  இது மொத்த வாராக் கடனில் 25 சதவீதமாகும்.  இது