நீதிபதிகளே போராடும் காலம்.

உரிமை மறுக்கப்படும்போது  நீதிபதிகளே களம் இறங்கும் நிலை நாட்டில் உள்ள போது  தங்கள் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களை போராடக்  கூடாது என்று இதே நீதிபதிகள் சொல்வது நகை முரண் தானே?

உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக முறையாக இல்லை; விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 'இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், நீதித் துறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் அது பாதிக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, நான்கு மூத்த நீதிபதிகள் திடீர் போர்க் கொடி துாக்கியுள்ளனர்.

நீதித்துறையின் வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக தலைமை நீதிபதி மீது நீதிபதிகள்  குற்றச்சாட்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி உட்பட, 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. தலைமை நீதிபதியாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற தீபக் மிஸ்ரா, இந்தாண்டு, அக்டோபர், 2ல் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில், நிருபர்களை நேற்று சந்தித்தனர்.


அப்போது, நீதிபதி, சலமேஸ்வர் கூறியதாவது: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. 

உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் குறித்து, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவை காலையில் சந்தித்து பேசினோம். அப்போது, நீதிமன்றத்தை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அவருடன் விவாதித்தோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், எங்களுடைய முயற்சிகள் பலிக்கவில்லை.

பல முக்கிய வழக்குகளை, தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கிறது. மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அதேபோல பல வழக்குகளை, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல் மற்ற அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக, குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சிறப்பு, சி.பி.ஐ., நீதிபதி, லோயா மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10வது கோர்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


நாங்கள் நீதித் துறைக்கும், தேசத்துக்கும் பதில் சொல்லும் பொறுப்பில் உள்ளோம். எந்த ஒரு நாட்டிலும், குறிப்பாக நம் நாட்டில், நீதித் துறையில் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை உருவானதில்லை. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. 

ஆனால், கடந்த சில மாதங்களாக, நீதித் துறை நிர்வாகம் முறையாக நடக்கவில்லை. நாங்கள் எங்களுடைய பொறுப்பில் இருந்து மீறவில்லை. நாட்டுக்கு கடமை பட்டுள்ளோம்; அதனாலேயே இதை தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்னை தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர். இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்தப் பிரச்னை, நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

நீதித் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு, நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: 

  •  தலைமை நீதிபதி என்பவர், சமமானவர்களின் முதன்மையானவர். அவர் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. 
  •  இந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சில நீதித் துறை உத்தரவுகள், நீதித் துறையின் செயல்பாட்டுடன், உயர் நீதிமன்றங்களின் சுதந்திரத்தையும் பாதித்துள்ளது; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  •  மிக முக்கியமான பல வழக்குகள், எவ்வித கோட்பாடுகளும் இல்லாமல், தலைமை நீதிபதியால், தனக்கு விருப்பமான அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
  •  உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித் துறைக்கும் பாதிப்பு, களங்கம் ஏற்படக் கூடாது என, பல விஷயங்களை நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த பாதிப்பு ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. 
  •  வழக்குகளை ஒதுக்குவது போன்ற அதிகாரங்கள், தலைமை நீதிபதிக்கு நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. 
  • தன்னுடன் பணியாற்றுபவர்களைவிட, தலைமை நீதிபதிக்கு என்று எந்த தனிப்பட்ட உரிமையும் வழங்கப்படவில்லை. 

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள, நான்கு நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ள, ஐந்து முக்கிய பிரச்னைகள்: 
1. அனைத்து மிகவும் முக்கிய வழக்குகளையும், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கிறது. 
மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு அவை ஒதுக்கப்படுவதில்லை. 

2. மிகவும் முக்கியமான பிரச்னை உள்ள வழக்குகளை, விதிகளின்படி இல்லாமல், தனக்கு விருப்பமான அமர்வுகளுக்கே தலைமை நீதிபதி ஒதுக்குகிறார். 

3. குறிப்பாக, சி.பி.ஐ., நீதிபதி, லோயா மர்ம மரணம் குறித்த முக்கியமான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10வது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

4. மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கை, தலைமை நீதிபதி, நீதிபதிகள், கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் மற்றும் தான் அடங்கியுள்ள, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற, நீதிபதி சலமேஸ்வர் அமர்வு பரிந்துரைத்தது. 
ஆனால், அந்த வழக்கு, 7வது நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

5. முன்பு, ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்த வழக்குகளை, சிறிய அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி விசாரித்து வருகிறார். இவ்வாறு நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் சட்டமைப்பு க்கு விரோதமாக நாங்கள் நடந்து கொண்டதாக வரலாற்றில் பதிவாகி விடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் என்கின்றனர் இந்த நீதிபதிகள்.
உரிமை மறுக்கப்படும்போது  நீதிபதிகளே களம் இறங்கும் நிலை நாட்டில் உள்ள போது  தங்கள் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களை போராடக்  கூடாது என்று இதே நீதிபதிகள் சொல்வது நகை முரண் தானே?
   தமிழ்ப் புத்தாண்டு,பொங்கல்,திருவள்ளுவர் தினம் வாழ்த்துகள் !
  • Tweets, current page.
  •  
  1. அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.

=========================================================================================
ன்று,
ஜனவரி-13.
ராகேஷ் சர்மா

  • மிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)

  • விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம்(1949)

  • கானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
=========================================================================================

                      முன்னாள் அமைசசர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது கொடுக்க                                                                                                                                    காரணமாயிருந்த புகைப்படங்கள் 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?