இரு ஊழல்களின் வரலாறு,

பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலைமை செயலாளராக பணியாற்றியவர் விஜய் சங்கர் துபே. 

தற்போது 74 வயதாகும் இவர், 1966ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிய துவங்கினார்.
2002ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். 

நாளந்தா திறந்தநிலை பல்கலையின் துணைவேந்தராக 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.
 இவர் தான், கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கியதற்கு முக்கிய காரணம். 

கால்நடை தீவன ஊழல் வழக்கில் இரண்டாவது முறையாக, 3.5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், இந்த விவகாரத்தில் சிக்கியது, இவரின் ஒரு வரி பேக்ஸ் கடிதம் மூலம் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பீஹார் அரசின் நிதி நிலைமை 1995 - 96ம் ஆண்டில் மிகவும் மோசமாக இருந்தது. 
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட கூட பணம் இல்லை. 
அந்த நேரத்தில் தான், 1995ம் ஆண்டு ஜூலை மாதம், நிதி துறையின் முதன்மை செயலாளராக நான் நியமிக்கப்பட்டேன். 
நிதி நிலைமை மோசமாக இருந்ததால், அவ்வளவு பணமும் எங்கே போனது என்ற கேள்வி என்னை துளைத்து எடுத்தது. 1995ம் ஆண்டு செப்., - அக்., மாதங்களில், கால்நடை நலத்துறை தனது பட்ஜெட் ஒதுக்கீட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக செலவு செய்து இருப்பதை கண்டுபிடித்தோம். எங்கேயோ தவறு நடக்கிறது என்பதை யூகித்தேன்.


1996ம் ஆண்டு ஜன., 19ம் தேதி பட்ஜெட் ஒதுக்கீட்டை தாண்டி கால்நடை நலத்துறை மீண்டும் கூடுதலாக செலவு செய்தது உறுதி செய்யப்பட்டது. நான் அதிர்ச்சி அடைந்தேன்.

 சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பேக்ஸ் மூலம் ஒரு கடிதம் அனுப்பினேன். 
அதில், ' கடந்த மூன்று ஆண்டுகளில் கால்நடை நலத்துறையில் நடந்த செலவு செய்தது எவ்வளவு என்பதை தெரியப்படுத்துங்கள்' என்ற ஒரு வரி தான் இடம் பெற்று இருந்தது. 

கால்நடை தீவன ஊழல் என்று அழைக்கப்படுவதை வெளிச்சம் போட்டு காட்டியதே அந்த ஒரு வரி தான். அடுத்த நாள் ஜன., 20ம் தேதி, ராஞ்சி நகருக்கு கூடுதல் செயலாளர் ஒருவரை அனுப்பி கால்நடை நலத்துறையில் மூன்று ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்ய சொன்னேன்.

அடுத்த நாள் ஜன., 21ம் தேதி அவர், ' கால்நடை நலத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை தாண்டி செலவு செய்ததோடு மட்டும் அல்லாமல், செலவுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகளும் போலி' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
 

அனைத்து ரசீதுகளையும் பறிமுதல் செய்து பாட்னாவுக்கு வரும்படி அவருக்கு உத்தரவிட்டேன். அவர் ஜன., 22ம் தேதி பாட்னா வந்தார். 

அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகு, ராஞ்சியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என ஜன., 23ம் தேதி அரசுக்கு அறிக்கை அளித்தேன். 

தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டேன். இந்த விவகாரத்தை மாநில அரசு மூடி வைக்க பார்த்தது. இருப்பினும் என் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். 

1996ம் ஆண்டு ஜன., 27 ம் தேதி, சாய்பாஸா என்ற நகரில் இருந்த கருவூலத்தில் சோதனை நடத்தும்படி சாய்பாஸா மாவட்ட கலெக்டராக இருந்த அமித் காரே என்பவருக்கு உத்தரவிட்டேன். 

அந்த சோதனை குறித்த செய்தி நாடு முழுவதும் வெளியானது. அந்த சோதனைக்கு பிறகு முறைகேடுக்கு காரணமான ஊழியர்களும், கால்நடை தீவன சப்ளையர்களும் தலைமறைவாகினர். 

நிலைமை இந்த அளவுக்கு மோசமான பிறகும், எனது பரிந்துரையின் பேரில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
அப்போது பீஹார் முதல்வராக இருந்தது லாலு பிரசாத் யாதவ். ஒரு வழியாக, ஜன., 30ம் தேதி, எனது பரிந்துரையின் பேரில் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. 
அதற்கு அடுத்த வாரங்களில் பல நிகழ்வுகள் நடந்தேறின. தும்கா, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் நடந்த சோதனைகள் அதன் மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டன. 

இந்த விஷயத்தில் எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. ஆனால், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். 

ஆனால், நிலைமை கைமீறி விட்டது. கால்நடை நலத்துறையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருந்தது வெட்ட வெளிச்சமாகி விட்டது. 

அந்த ஆண்டு இறுதியில், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில், மாநில அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

1997 ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக லாலு பிரசாத்தை சி.பி.ஐ., அறிவித்தது. அதை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து லாலு பிரசாத் விலகினார். 
என்று கால்நடை தீவன ஊழல் வெளிவந்த விதத்தை  விஜய் சங்கர் துபே விளக்கினார்.

லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சி.பி.ஐ., நீதிமன்றம் கடந்த டிசம்., 23ம் தேதி தான் 3.5 ஆண்டு சிறை தண்டனையை அறிவித்தது. 
 உடனே லாலு  ராஞ்சி நகரில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 

அவர் சிறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் , லட்சுமணன் மக்தோ, மதன் யாதவ் ஆகிய இரண்டு பேர் திருட்டு வழக்கில் சரண் அடைந்து அதே சிறைக்குள் அடைக்கப்பட்டனர். 
இதில் லட்சுமணன் மக்தோ, லாலுவின் உதவியாளர் என்பது அரசியல் வட்டாரங்களுக்கு தெரியும். லாலு ராஞ்சிக்கு வரும் போதெல்லாம் அவருக்கு உதவியாக இருந்தவர் மதன் யாதவ். 

லாலுவுக்கு உதவி செய்யவே, திருட்டு வழக்கில் சரண் அடைந்து அவர்கள் சிறைக்கு உள்ளே வந்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
========================================================================================
ன்று,
ஜனவரி-10.

  • உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
  • விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
  • தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
  • முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)
=========================================================================================
போதை ஊழல் ,
அதிமுக அரசை நடத்த கைகொடுக்கும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 4,500 மதுக் கடைகள் உள்ளன. 
இவற்றில், பீர் மற்றும் மது வகைகளை, அரசு நிர்ணயித்துள்ள விலைக்குத்தான்  விற்க வேண்டும். 
ஆனால், கடை ஊழியர்கள் எல்லாவகை மதுகளுக்கும்  ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர்.
இவை அப்படியே அவர்களுக்கும், கடை மேற்பார்வையாளர்களுக்கும்  பைகளுக்கு போய் விடுகின்றன.
அவ்வப்போது கடையை சோதனை செய்ய வரும் அதிகாரிகளுக்கு மாதாமாதம் கப்பமாக சிறு தொகையும் அழுது விடுகின்றனர்.


ஆரமப்த்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர்  காப்புத் தொகை கட்டக் கூட அடுத்தவரிடம் கடன் வாங்கி டாஸ்மாக்கில் கட்டி வேலைக்கு சேர்ந்த இந்த ஊழியர்களில் தற்போது சொந்த வீடு விலை மதிப்பு மிக்க இருசக்கர வாகனம் இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை.

டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக, 50 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகின்றன. 

ஒரு பீர் பெட்டியில், 12 பாட்டில்கள் உள்ளன. ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் விலை என்றால், ஆறு லட்சம் பாட்டிலுக்கு, தினமும், 60 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், தினமும் சராசரியாக, 1.50 லட்சம் பெட்டி, மது வகைகள் விற்பனையாகின்றன.ஒரு பெட்டியில், 48 பாட்டில்கள் உள்ளன. அதன்படி மொத்தம், 72 லட்சம் பாட்டிலுக்கு, தலா, 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதால், 7.20 கோடி ரூபாய் வசூலாகிறது.


இவற்றை மாதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், டாஸ்மாக் ஊழியர்கள், ஒரு ரூபாய் கூட முதலீடு போடாமல், பீர் வாயிலாக, 18 கோடி ரூபாய்; மது வகைகள் வாயிலாக, 216 கோடி ரூபாயை, 'குடி'மகன்களிடம் இருந்து வசூலிக்கின்றனர்.

கடை ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும், 10 ரூபாயில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர்களுக்கு, தலா ஒரு ரூபாய் வழங்குகின்றனர். இதனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பொங்கலை முன்னிட்டு, தற்போது, மதுக் கடைகளில் அதிக கூட்டம் இருக்கும். கூடுதல் விலை வைத்து விற்கும் ஊழியர்களை பிடிக்க, தனி குழு நியமிக்கப்பட்டு உள்ளது. 
கூடுதல் விலை கேட்கும் ஊழியர்களுடன், 'குடி'மகன்கள் கூட்டாக சேர்ந்து, பிரச்னை செய்ய வேண்டும். அப்போது  பிரச்னை ஏற்பட்டு இதன் வாயிலாக, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் போதை எறியதுமே வள்ளலாக மாறிவிடும் குடிமகன்கள் தனக்கு தெரியாதவர்களுக்கு கூட கட்டிங் வாங்கித்தரும் நிலையில் மிதக்கும் போது இப்படி [பிரசினை செய்வார்களா என்ன?

டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை, திருச்சி என, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்குகள் உள்ளன. சாதாரணம், நடுத்தரம், உயர் ரகம் என, மூன்று வகைகளில் மது பானங்கள் விற்கப்படுகின்றன. 
ஒரு கிடங்கில் இருந்து, தினமும் சாரசரியாக, 75 ஆயிரம் பெட்டி, மது வகைகள் அனுப்பப்படுகின்றன. அதில், 'பிரீமியம்' என்ற, உயர் ரக மது, 5,000 பெட்டிகள் கூடவிற்பதில்லை. 

ஆனால், கிடங்குகளில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், மது தயாரிப்பு நிறுவனங்களிடம், ஒரு பாட்டிலுக்கு, 20 ரூபாய் வரை வசூலித்து, கடைகளுக்கு, 20 ஆயிரம் பெட்டிக்கு மேல், பிரீமியம் மது வகைகளை அனுப்புவதாக கூறப்படுகிறது. 
இதனால், கிடங்கு ஊழியர்கள் மாதம், பல லட்சம் ரூபாய் வசூலிப்பதுடன், கடைகளிலும் விற் பனையாகாத மது வகைகள், அதிகளவில் இருப்பு வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆக டாஸ்மாக் கிடங்கிலேயே ஊழல் ஆரம்பிக்கையில் அங்கிருந்து வரும் அதிகாரிகள் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது நடக்கிற செயலாக இருக்காது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?