கொலை விபரம்.

2017 ஆண்டில் மட்டும் சுமார் 822 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.அவற்றில் குறைந்த அளவு  111 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
கர்நாடகாவில் மொத்தம் 100 கலவரங்கள் நடைபெற்றுள்ளன, இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 229 பேர் காயமடைதுள்ளனர்.

 ராஜஸ்தானில் மொத்தம் நடைபெற்ற 91 கலவரங்களில் 12 பேர் கொலை செய்யப்பட்டு 175 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகாரில் மொத்தம் 85 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.மூன்று பேர் கொல்லப்பட்டு 321 பேர் காயமடைந்துள்ளனர். 
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 60 கலவரங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு 191 பேர் காயமடைந்துள்ளனர். 
மேற்கு வங்கத்தில் 58 கலவரங்களும் குஜராத்தில் 50 கலவரங்கள் நடைபெற்றுள்ளது. 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 355 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கலவரங்களில் அதிகபட்சமாக 195 மதக்கலவரங்களை கொண்டு பாஜகவின் உத்திர பிரதேசம் முதல் இடம்  பெற்றுள்ளது.
 மொத்தம் 44 பேர் கொலை செய்யப்பட்டு 542 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த புள்ளி விபரம்  மத்திய அரசு தெரிவித்ததுதான் .கண்டிப்பாக அரசு விபரங்களுக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் அதிக வேறுபாடு இருக்கும்.
=======================================================================================
மோடியும் ,மம்தாவும் அப்புறம் காரத்தும் .
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் உலுபெரியா மக்களவைத் தொகுதியிலும், நோயாபரா சட்டமன்றத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 
உலுபெரியாவில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், நோயாபராவில் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இவற்றை ஊடகங்கள் “மம்தா அரசாங்கத்தின் வளர்ச்சிக் கொள்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி“ என்று தம்பட்டம் அடிக்கின்றன.
ஆனால் இவ்விரு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஆடியுள்ள வன்முறை வெறியாட்டங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இரு தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளுக்கு வந்த இடது முன்னணி முகவர்கள் துரத்தி அனுப்பப்பட்டுள்ளனர். வாக்களிக்க வந்த வாக்காளர்களும் மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நோயாபரா தொகுதியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வாக்காளர்கள் அடித்துத் துரத்தப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரவே அனுமதிக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக பல தொகுதிகளிலிருந்தும் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதற்காக ‘வாக்காளர்கள்‘ இறக்குமதி செய்யப்பட்டார்கள்.
சில இடங்களில் வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ள வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்ற வாக்குகளையும் பார்த்தால் இதனைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
உலுபெரியா தொகுதியில் பக்னான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில், வாக்குச்சாவடி எண்ணும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் வருமாறு:
வாக்குச் சாவடி எண் 171, திரிணாமுல் காங்கிரஸ் – 549, சிபிஎம் – 1
வாக்குச் சாவடி எண் 113, திரிணாமுல் காங்கிரஸ் – 594, சிபிஎம் – 2
வாக்குச் சாவடி எண் 114, திரிணாமுல் காங்கிரஸ் – 575, சிபிஎம் – 4
வாக்குச் சாவடி எண் 115, திரிணாமுல் காங்கிரஸ் – 882, சிபிஎம் – 5
வாக்குச் சாவடி எண் 123, திரிணாமுல் காங்கிரஸ் – 924, சிபிஎம் – 6
வாக்குச் சாவடி எண் 168, திரிணாமுல் காங்கிரஸ் – 870, சிபிஎம் – 7
உலுபெரியா வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில்,  வாக்குச்சாவடி எண்ணும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் வருமாறு:
வாக்குச் சாவடி எண் 45, திரிணாமுல் காங்கிரஸ் – 494, சிபிஎம் – 1
வாக்குச் சாவடி எண் 43, திரிணாமுல் காங்கிரஸ் – 641, சிபிஎம் – 2
வாக்குச் சாவடி எண் 37, திரிணாமுல் காங்கிரஸ் – 966, சிபிஎம் – 2
வாக்குச் சாவடி எண் 39, திரிணாமுல் காங்கிரஸ் – 804, சிபிஎம் – 3
வாக்குச் சாவடி எண் 40, திரிணாமுல் காங்கிரஸ் – 654, சிபிஎம் – 4
வாக்குச் சாவடி எண் 35, திரிணாமுல் காங்கிரஸ் – 757, சிபிஎம் – 4
உலுபெரியா தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில்,  வாக்குச்சாவடி எண்ணும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் வருமாறு:
வாக்குச் சாவடி எண் 202, திரிணாமுல் காங்கிரஸ் – 131, சிபிஎம் – 1
வாக்குச் சாவடி எண் 175, திரிணாமுல் காங்கிரஸ் – 379, சிபிஎம் – 5
வாக்குச் சாவடி எண் 153, திரிணாமுல் காங்கிரஸ் – 677, சிபிஎம் – 7
வாக்குச் சாவடி எண் 205, திரிணாமுல் காங்கிரஸ் – 214, சிபிஎம் – 5
உதய்நாராயண்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில்,  வாக்குச்சாவடி எண்ணும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் வருமாறு:
வாக்குச் சாவடி எண் 127, திரிணாமுல் காங்கிரஸ் – 879, சிபிஎம் – 1
வாக்குச் சாவடி எண் 153திரிணாமுல் காங்கிரஸ் – 664 சிபிஎம் – 2
வாக்குச் சாவடி எண் 155, திரிணாமுல் காங்கிரஸ் – 822, சிபிஎம் – 3
வாக்குச் சாவடி எண் 145, திரிணாமுல் காங்கிரஸ் – 687, சிபிஎம் – 4
நியோபரா சட்டமன்றத் தொகுதியிலும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதைக் காண முடியும். ஓர் எடுத்துக்காட்டு கீழே தரப்படுகிறது:
வாக்குச் சாவடி எண் 21, திரிணாமுல் காங்கிரஸ் – 979, சிபிஎம் – 4
வாக்குச் சாவடி எண் 22, திரிணாமுல் காங்கிரஸ் – 967, சிபிஎம் – 5
வாக்குச் சாவடி எண் 41, திரிணாமுல் காங்கிரஸ் – 920, சிபிஎம் – 6
வாக்குச் சாவடி எண் 43, திரிணாமுல் காங்கிரஸ் – 651, சிபிஎம் – 2

 மேற்படி இடங்களில் பிறக்கட்சிகளுக்கு ,நோட்டாவுக்கு வாக்குகளே இல்லை என்பதும் கவனத்திற்குரியது.
இவை சில எடுத்துக்காட்டுகள்தான். 
நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகள் நிலைமைகள் இதுதான். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் எந்த அளவிற்கு காலில்போட்டு மிதித்துத் துவைக்கப்படுகிறது என்பதனை இந்த விவரங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன.
இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கும் , மத்தியில்  ஆளும் மோடிக்கு தெரியாததல்ல.
மேலும் எப்போதும் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் ,சமீபமாக மோடி &அமித்ஷாவும்.மம்தாவும் வெல்ல கையாளும் நடைமுறை இதுதான் என்றாகி விட்டது.
ஆனால் அவைகள் அதை அனுமதிக்கவே செய்யும்,செய்துள்ளன.காரணம் மம்தா இன்று முட்டிக்கொள்வார் ,நாளை பாஜகவை ஆதரிப்பார்.தினம் ஒரு கொள்கை,அடாவடி இதுதான் திரிணாமுல் என்பதை உணர்ந்தவர்கள்தான் மோடி,அமித்ஷா க்கள்.
அவரை மீது  நடவடிக்கை எடுத்தால் வங்கத்தில் வருவது மார்க்சிஸ்ட் கட்சி.
இடது சாரிகள் பாஜகவின் பரம்பரை விரோதிகள்.எனவே எதிரிக்கு எதிரி நண்பன் தேற்றம்தான் பாஜகவுக்கு.
இத்தேர்தலில் திரினாமுலை கட்டுப்படுத்தினால் பாஜக ஒரு நாளும் வர முடியாது வருவது இடது சாரிகள் தான் எனவே கண்டு கொள்ளாமல் இருப்பதே நலம் என்று வாயை மூடிக்கொண்டுள்ளது.
இந்த முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கற்றுக்கொள்ளல் அவசியம்.எதிரியை அழிக்க அவனின் எதிரியுடன் (காங்கிரசுடன்) கூட்டணி வைப்பதுதான் நல்லது.இருவருக்கும் மட்டுமல்ல இந்தியாவின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிரியாக அமைந்துள்ள மதவாத பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் இணைத்து போராட்ட தடை போடும் பிரகாஷ் காரத் நிச்சயம் தவறிழைக்கிறார்.
தற்போது போராட்டம்,வேலை நிறுத்தம் போன்றவைகளை அரசுகள் மதிக்காமல்,நீதிமன்றங்களும்  அதற்கு உரிய பலனை தராமல் இருக்கும் காரணத்தால் பாமரர்கள் நலனுக்கு போராடும்  கம்யூனிஸ்டுகள் போராட்டங்கள் வலுவிழந்து போகவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நேரம் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை அதை எதிர்க்கும் கடசிகளுடன் இணைந்து நடத்திதான் மக்கள்,தொழிலாளர்கள் உரிமையை மீட்டு எடுக்க முடியும்.அப்படி அசாதாரண நிலையில் இந்தியா இருக்கையில் இங்குள்ள சூழல் உணராமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க கூடாது என்று காரத் பிடிவாதமாக இருப்பது எதற்கு?அவருக்கு என்ன உள்நோக்கம் என்று தெரியவில்லை.
ஏற்கனவே பிரகாஷ் காரத் கம்யூனிஸ்ட் கட்சியை பார்ப்பனர் கட்சி போல் நடாத்துகிறார் என்ற பேசசு உள்ளது அதன் வெளிப்பாடுதான் இதுவா?
அல்லது மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்காக பலமுறை பாடுபட்டும் தோல்வியை சந்தித்தது அவர் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
மூன்றாவது அணி என்றால் மாநில அளவில் பலமான கடசிகளான திமுக,திரிணாமுல்,நிதிஷ் குமார் ஆகியோரை இணைக்காமல் முடியுமா?
இதிலும் உறுதியாக இருக்கும் திமுகவை காரத் தள்ளியே வைப்பர் அவர் விருப்பம் ஜெயலலிதாதான்.
திரிணாமுல் கட்சி தலைவியின் தலையாய கொள்கையே மார்க்சிஸ்ட்டை ஒழிப்பதுதான்.
நிதிஷ் குமார் எந்த நேரம் எந்த பக்கம் குட்டிக்கரணம் அடிப்பார் என்று அவருக்கே தெரியாது.
ஆக பிரகாஷ் காரத் விரும்புவதுதான் என்ன?
தற்போது தனது தலைமை இல்லா எச்சுரி தலைமையிலான மார்க்சிஸ்ட் நல்ல முறையில் இயங்கக்  கூடாது என்ற சித்தாந்தம்தான்.வேறு என்ன இருக்கும்.?
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-08.
புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)
  • நாஸ்டாக் பங்கச் சந்தை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)
  • இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)
  • அப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)
  • மரண தண்டனைக்கு நச்சுவாயு.முதலாவதாக  அமெரிக்காவில் அறிமுகம் (1924)
======================================================================================

விஸ்வரூபம்' 5 ஆண்டு சிறப்பு

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?