காவிரி வாரியமா? அப்படினா?

அடுத்த வாரமாவது நிலைமை மாறுமா என்பது, கேள்விக்குறிதான்.
காரணம் எந்த  அலுவல்களும் நடக்காமலேயே  ஐந்தாவது நாளாக பாராளும்னத்தின்  இரு அபைகளும்,  ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. 
 தமிழக  உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலம் சிறப்பு தகுதி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பிரச்னையை, காங்கிரஸ், திரிண முல் எம்.பி.,க்கள் தொடர்ந்து எழுப்பி வருவதாலும் அதை மோடி,பாஜக அரசு  கண்டு கொள்ளாத நிலையில்தான் இரு சபைகளிலும் இந்த அமளி.
ஐந்தாவது நாளான நேற்று, இரு சபைகளிலும் ஒரு அலுவல் கூட, நடக்கவில்லை. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காலையில், காந்தி சிலை முன், ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக  அ.தி,மு.க.உறுப்பினர்கள்  சபைக்குள் வந்தும், அதே பிரச்னைக்காக குரல் எழுப்பினர்.

சிறப்பு தகுதி  பிரச்னைக்காக, ஆந்திர, எம்.பி.,க்களும், அதேபோல வெளியில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, சபைக்குள் வந்து, அமளியில் ஈடுபட்டனர்; இதனால், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளுமே, அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. 


 ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்த போதிலும் ஒட்டு மொத்த மாநில கட்சிகளும் ,கம்யூனிஸ்ட் ,காங்கிரசும்  ஒருங்கிணைந்து அமளி யில் ஈடுபடுவதால்  பாஜகவால் பதிலடி கொடுக்க முடியவில்லை.அதற்காக எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விவாதம் நடத்தவும் திராணியில்லை.
கைகளில் பதாகைகளுடன்  வந்து, சபாநாயகர், சபைத்தலைவர் இருக்கைகளை, எம்.பி.,க்கள் முற்றுகையிடுகின்றனர். 
யார், அதிகம் அமளியில் ஈடுபடுவது என்பதில், ஆந்திராவின், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், எம்.பி.,க்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. 
நேற்று முன்தினம் வரை, அமைச்சராக இருந்துவிட்டு, தற்போது விலகிய  அசோக் கஜபதி ராஜும்  அமளி யில் பங்கேற்றார். 

மார்ச்  5ல் துவங்கிய  இந்த கூட்டத் தொடரில், மகளிர் தின விவாதத்தை தவிர  வேறு எந்த அலுவலும் நடக்கவில்லை. 

பல்வேறு முக்கிய மசோதாக்களை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தும், அமளி தொடர்வதால், இவற்றின் கதி என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதில்தான் மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஊதியம்,படிகள் உயர்த்தும் மசோதாவும் நிறைவேற்ற காத்திருக்கிறது.அன்று மட்டும் அவை நடக்க வாய்ப்புள்ளது.
மானிய கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், நிதி மசோதா நிறைவேற்றம் தான், இக்கூட்டத்தொடரின் மிக முக்கியமான அலுவல்; அதற்கு லோக்சபாவில், அமைதியான சூழல் உருவாக வேண்டும். 

சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடுவதை பார்த்து, மற்ற மாநில கட்சிகளின், எம்.பி.,க்களும், தங்கள் கோரிக்கைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். பா.ஜ., வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, அரசியல் நெருக்கடி அளிக்கும் வகையில், பீஹாருக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, வரும் நாட்களில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறங்க முடிவு செய்துள்ளது.

இதனால், பார்லிமென்ட் நடவடிக்கைளில், தற்போதுள்ள முட்டுக்கட்டை விலகி, அடுத்த வாரத்திலாவது, சபை அலுவல்கள்  நடக்குமா என்பது ...?.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 காவிரி வாரியமா? அப்படினா?
மத்திய நீர்வளத்துறை செயலா ளர் உபேந்திர பிரசாத் சிங்: 

"காவிரி நீரை பங்கிட்டு கொள்வதற்கான அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும் என்பது குறித்து  4 மாநில அரசுகளின் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட் கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் தான், காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுஎந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ‘ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண் டும் என்று மட்டுமே கூறியுள்ளது.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுப்பதற்கு மட்டுமே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
 இது தொடர் பாக அடுத்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.
                                                                                           -என்று அறிவித்துள்ளார்.
ஆக மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றம் ஆணையிட்டால் கூட தமிழக மக்களுக்கு பயன்பாடாக கூடிய  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயாரில்லை. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
'நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்': புத்தகம் எழுதியவரை வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டி விருந்தளித்தார்.
=====================================================================================
ன்று,
மார்ச்-10.

  • உலகின்  முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது(1801)
  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
  • ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
  • யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
======================================================================================

பணக்கார கட்சி அதிமுக.
அதிமுகவினர் மட்டும் கோடிகளில் புரளவில்லை.தினந்தோறும் சொத்து மதிப்பை உயர்த்தவில்லை.அவர்கள் கட்சியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்துள்ள தேசிய , மற்றும் மாநில கட்சிகள் தங்களது சொத்து கணக்கு, வரவு செலவு, உள்ளிட்ட கணக்கு வழக்குகளை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.இதில் இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் ரூ. 635 கோடி சொத்து மதிப்புள்ள சமாஜ்வாதி கட்சி பணக்கார கட்சி எனவும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும்  தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் கடந்த 2011-12 மற்றும் 2015-16 ஆகிய நிதி ஆண்டில் தங்களது சொத்து விவரங்கள், வங்கி முதலீடுகள், இதர வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் வாயிலாக கிடைத்தவைகளை தேர்தல் ஆணையத்திடமும், வருமான வரி்த்துறையிடமும் சமர்பித்துள்ளன. 

அதில் உபி.யின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.212.86 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில் ரூ.635 கோடி என 198 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரண்டாவது கட்சியாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கட்சி 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 88.21 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 155 சதவீதம் உயர்ந்து 2015-16-ம் நிதியாண்டில் ரூ. 224.87 கோடியாக அதிகரித்துள்ளது. 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?