இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

"ஸ்கீம்" ஆகப்பட்டது.யாதெனில்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம்  தங்கள் தீர்ப்பில் உள்ள "ஸ்கீம் " கும் பொருள் கூறியுள்ளது .
அவர்கள் கூறிய பொருள் மேலும் மத்திய அரசை கால அவகாசம் கேட்க வைக்கும் அளவில் குழப்பம் கொண்டதாகத்தான் உள்ளது.
பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .

எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.


ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம்.பிடிலுக்குப் பதில் ?


 காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல.  பல கோணங்களில் தீர்க்கும் வகையில் பொருள் கொள்ளலாம் என்று  ஆக்ஸ்போர்ட் அகராதியில் உள்ள 'ஸ்கீம்' க்கான அணைத்து  விளக்கத்தையும் கூறி (?) மேலும் குட்டையை குழப்பி விட்டுள்ளது.

"காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். " என்று கூறி வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இதை சொல்லியே மோடி,எடப்பாடி ஆகியோரின் தமிழக விரோத அரசுகள் இன்னும் சில காலம் இளைப்பாறி விடும்.
பள்ளிக்குழந்தைகள் 


பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.

ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காணாமல் போன அமைதியைத்தேடி கோவிலுக்கு செல்கிறோம் அங்கு உள்ள சாமி சிலையே அமெரிக்காவுக்கு விற்பனையானால் நமக்கு மட்டுமல்ல அந்த சாமிக்கும் குறைகளைக்  களைவது யார்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னொரு கண்டம்.

ஆப்ரிக்கா கண்டத் தகடு   பிளவுபட்டு வருகிறது எனத்  ஆய்வில் தெரியவந்துள்ளது .
 கென்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு இதற்கு காரணம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து லண்டன் பல்கலைக் கழகம்  ராயல் ஹாலோவே வெளியிட்டுள்ள  ஆராய்ச்சி கட்டுரையில் "சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தன. இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது.
 இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. 

மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது." இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆசியா ,ஆப்ரிக்கா ,ஆஸ்திரேலிய கண்டங்கள் முன்பு ஒன்றாக இருந்து பிரிந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
=====================================================================================
ன்று,
ஏப்ரல்-03.

  • ஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)
  • மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
  • வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)
  • உலகின் முதலாவது கைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட தினம்(1972)
  • உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)
=====================================================================================
#ஸ்டெர்லைட்டை மூடு #

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி கிராம மக்கள் கடந்த 50- நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவிலும் நடந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன், மின்சோட்டா, உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தர்ணா செய்தனர். 

ஏராளமான தமிழர்கள் இதில் கலந்து கொண்டு கண்டன பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். 
ஏற்கனவே லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளி அணில் அகர்வால் வீட்டின் முன்பு அங்குள்ள தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.