ஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி!!!

இரு பெரும் ஊழல்கள்.

1.
போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., யின் விசாரணை பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த ஆண்டு ஜூலை முதல், அமலுக்கு வந்தது. வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் செலுத்திய, மாதாந்திர, ஜி.எஸ்.டி., விபரங்களை, ஜி.எஸ்.டி கவுன்சிலின் தணிக்கைக் குழு ஆய்வு செய்து, உள்ளீட்டு வரி வரவு பயன்பாட்டை, வர்த்தகர்களுக்கும், தொழில் துறையினருக்கும் திரும்பஅளிக்கும்.
இவ்வாறு அளிக்கப்படும் உள்ளீட்டு வரி வரவை, போலியான பில்களைக் கொடுத்து, சில வர்த்தக நிறுவனங்கள் பெற்றுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக, ஜி.எஸ்.டி.,யின் விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், போலி பில்கள் கொடுத்து, 2,000 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு நடந்துஉள்ளதுதெரிய வந்து உள்ளது.
இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு நடந்து உள்ளது; இது ஒரு சிறு துளிதான். இது பற்றிமுழுமையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.இந்த மோசடியால், வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், அதன் பயனும், விற்பனையாளரிடமிருந்து, நுகர்வோருக்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு வர்த்தக நிறுவனத்திடமிருந்து, மற்றொரு வர்த்தக நிறுவனத்துக்குச் சென்றுவிடுகிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரு பெரும் ஊழல்கள்

2.
டி.ஆர்.இ.யூ.,(தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்) துணை பொதுச் செயலர் மனோகரன் கொடுத்த குற்ற சாட்டு;-
"கடந்த, 20 ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வரும் மிகப் பெரிய ஊழல் இது. 
ஊழல் புகார் தெரிவித்தவர்கள், கண்ணையா, 1,500 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருப்பதாகவும், வீரசேனன், 100 கோடி ரூபாய்க்கும், திருச்சி கூட்டுறவு சங்க தலைமை நிர்வாகி ராமலிங்கம், 200 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்து இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.காலிப் பணியிடங்களே இல்லாத சூழலில், ஒரு ஆண்டில் மட்டும், 200க்கும் மேற்பட்டோர், கூட்டுறவு சங்கத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சி.பி.ஐ., உடனடியாக விசாரணையை துவக்க வேண்டும், என்றார்.
ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா மீதான ஊழல் குற்றச்சாட்டில், சி.பி.ஐ., விசாரணை நடத்துமாறு, ரயில்வே வாரியம் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.
சதன் ரயில்வே மஸ்துார் யூனியன் - எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச் செயலர் கண்ணையா, திருச்சி கோட்ட செயலர் வீரசேனன். இவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள ரயில்வே கூட்டுறவு சங்கங்களில், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும், ரயில்வே வாரியத்தின் விஜிலென்ஸ் துறை மூலம், பிரதமர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.இது தொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, ரயில்வே வாரியத்துக்கு, பிரதமர் அலுவலகம்அறிவுறுத்தியது. 
சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்தது.
இதையடுத்து, 13ம் தேதி, ரயில்வே விஜிலென்ஸ் பிரிவு துணை இயக்குனர் ராம், சி.பி.ஐ., இயக்குனர், விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சக இணைச் செயலர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு, இதற்கான பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
==================================================================================
ன்று,
ஜூன்-28.
  • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)
===================================================================================
ஜெயலலிதாவை அல்ல...
இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி!!! எடப்பாடி பழனிசாமி கொள்ளை புறமாக முதலமைச்சர் பதவிக்கு வந்த நாளில் இருந்தே அவரின் மீது பல தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில் மக்களின் மீதான அடக்குமுறையில் ஜெயலலிதாவை மிஞ்சி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா போராட்டங்களை ஒடுக்குவதில் பெரும் மும்முரம் காட்டுபவர். அது மட்டுமல்லாமல் தன் மீதான விமர்சனங்களை பொறுக்காமல் வழக்குகள் தொடுத்துக்கொண்டே இருப்பவர்.
ஆனால் இப்போதைய முதலமைச்சர் பழனிசாமி அதையும் தாண்டி போராட்டக்காரர்களின் மீதும், ஊடங்களின் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்.

சென்னை தமிழர் கடற்கரையில் ஈழ இனப்படுகொலை நினைவாக மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முயன்ற திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது அதற்கு சரியான உதாரணம்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்த மாணவி வளர்மதியை சிறையில் அடைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

காவிரி பிரச்சனையை தொடர்ந்து ஐ.பி.எல்., போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழ் கலைஞர்களின் மீது வன்முறையை ஏவிவிட்டது.
பழனிசாமி தலைமையிலான காவல் துறை. பல உலக விருதுகளையும், தேசிய விருதுகளையும் வாங்கி தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற வெற்றிமாறன் போன்றோர்களின் மீது தடியடி நடத்தியது, காவல் துறை.

இது எல்லாம் பழனிசாமி கவனத்திற்கு செல்லாமல் இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதன் உச்சக்கட்டமாகத்தான் சேலம் பசுமை வழிச்சாலை. அப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ‘இத்திட்டத்தில் பெயரில் மட்டும்தான் பசுமை இருக்கிறது.

மற்றபடி இது எதுக்குமே உதவாத திட்டம். மக்களின் நிலங்களை அபகரித்து, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதே இத்திட்டத்தின் மூலம் நடக்கவிருக்கிறது.
நத்தம்-மதுரை சாலை எப்படி முன்னால் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் மைதானத்திற்காக போடப்படுகிறதோ...! அதே போல்தான் இத்திட்டமும். இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ என்கிறார்.

அவரிடம் நத்தம்-மதுரை சாலை பற்றி கேட்டோம். ‘மதுரை விமான நிலையத்தில் இருந்து நத்தம் நகருக்குள் எவ்வித தடையும் இன்றி வருவதற்காக இச்சாலையை அமைக்கின்றனர்.
 ஆனால் இது பொதுமக்களின் நலனுக்காக என்பது பொய்.
நத்தம் உலுப்பகுடியில் அமைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து விரைவாக வீரர்கள் வருவதற்கே... இதனால் அங்குள்ள இயற்கை சூழலும், 900-க்கும் அதிகமான மரங்களும் அழியப்போகிறது’ என்றார். மேலும் இத்திட்டத்திற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பழனிசாமி அரசால் மிரட்டப்படும் ஊடகங்கள் இதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லை.

அங்கும் வெளியில் தெரியாத அடக்குமுறை நடக்கிறது’ என்றார்.

இது போன்ற செய்திகளை கேட்கும் போது பழனிசாமி ஜெயலலிதாவை அல்ல இடியமின் அரசை மிஞ்சி விடுவாரோ என்றுதான் தோன்றுகிறது.
 நன்றி;ஏசியா நெட்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?