விரைவில் புதிய வழக்குகள்

முடிந்து போனது என்று நினைத்திருந்த ஜெ. நினைவிட விவகாரம் மீண்டும் வெடித்துக் கிளம்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


கலைஞரின் உடலை கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யவிடாமல் பார்ப்பனர்கள் பிரதிநிதியாக  கிரிஜா வைத்திய நாதன்,பாஜக மற்றும் அதிமுக கூட்டு சாதி செய்தன.

ஆனால் அவற்றை அவர்கள் கூறிய சட்ட சிக்கலை சட்டத்தின் மூலமாகவே வென்று அண்ணா அருகிலேயே கலைஞரும் துயில் கொண்டார்.

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு சமாதி கட்டக் கூடாது என்று தான் தொடர்ந்த 3 வழக்குகளை ஏன் வாபஸ் பெற்றேன் என்று வழக்கறிஞரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான செ.துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் ஜெயலலிதா உடலை மெரினாவில் இருந்து அகற்ற புதிய வழக்குகள் விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

“அண்ணாவுக்கு நினைவு மண்டபமும், காமராஜருக்குச் சிலையும் இருக்கும் மெரினாவில் ஊழலுக்காக 4 வருடம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் என்பது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கும் என்பதால் வழக்குத் தொடுத்தேன். 
மெரினாவில் இருந்து ஜெயலலிதா உடலை அகற்ற வேண்டும் என்று முதல் வழக்குத் தொடர்ந்தேன்.

மற்ற மூன்று வழக்குகளும் கடற்கரை பராமரிப்பு விதிகளின்படி எந்த நினைவுமண்டபமும் கட்டக் கூடாது. சட்ட விதியின்படி கடலில் இருந்து 500 அடி தொலைவுக்குள் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது. 
ஆனால் ஜெயலலிதா நினைவு மண்டபம் கடலில் இருந்து 300 அடிக்குள் வருகிறது. அத்தோடு கடற்கரையின் அந்த பகுதி கடற்கரை பராமரிப்பு பகுதி -1 என்ற பிரிவுக்குள் வருகிறபடியால், அதில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன. 

இதில் மத்திய அரசு பதில் மனு இன்னும் தாக்கல் செய்யவில்லை. 

வழக்கு நடத்தியிருந்தால் ஜெயலலிதா உடல் மெரினாவை விட்டு அகற்றப்பட்டிருக்கும்.

ஆனால் அண்ணா நினைவிடம் கடற்கரை பராமரிப்புப் பிரிவுக்குள் வராது. 

அண்ணா சமாதி உள்ள இடம் கூவம் நதிக்கரைப் பகுதி. அதோடு அந்தப் பகுதி சமாதியாக அரசுப் பதிவுகளில் மாற்றம் செய்யப்பட்ட இடம். அதனால் தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட எந்த சட்ட சிக்கலும் கிடையாது” என்று சட்ட விவரங்களை எடுத்து சொல்லியிருக்கும் துரைசாமி,
“80 ஆண்டு காலத் தமிழ்த் தொண்டில் தலைவர் கலைஞர் மக்களுக்கு ஆற்றிய சாதனைகள் வரலாற்றில் அழிக்க முடியாதவை. 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது சட்டத்தை உலகு உள்ளவரை யாராலும் மாற்ற முடியாது. 
தமிழ் மொழி உள்ளவரை அதற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததை மறக்க முடியாது. 
இப்படி எத்தனையோ... அதனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அவரது உடலை அண்ணா நினைவிடத்தின் பின் பக்கம் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒருமித்த குரல் கொடுத்தன.
தமிழக அரசுக்கும் இதுபற்றி திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


தமிழ் பற்றோ, பெரியாரின் கொள்கைப் பிடிப்போ, அண்னாவின் லட்சியப் பிடிப்போ இல்லாத, சுய நல, லஞ்ச லாவண்ய பேர்வழிகளிடம் பெருந்தன்மையை எதிர்பார்த்தது தவறு, அதுவும் ஒரு பார்ப்பன பெண் தலைமை செயலாளராக இருக்கும் அரசிடம்!

கலைஞர் குடும்பத்தாரே முதல்வரிடம் நேரில் சென்று கேட்டும், அண்ணா நினைவிடத்துக்குப் பின் பக்கம் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மறுத்து அறிவிப்பு வெளியிட்டனர். 


அதற்குச் சொல்லப்பட்ட காரணம் மெரினாவில் உடல் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்குள் நிலுவையில் உள்ளன, மற்ற சட்ட சிக்கல்களும் உள்ளன என்பதுதான்.

மற்ற சட்ட சிக்கல் என்பது ஜெயலலிதா புதைக்கப்பட்ட நேரத்தில் நான் எழுப்பிய சட்டச் சிக்கல்தான். நான் தொடர்ந்த வழக்கில் அதுதான் சட்டச் சிக்கல். 
அந்த சட்டச் சிக்கலை நீக்கிவிட்டோம் என நான் தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, ‘மற்ற சட்டச் சிக்கல்கள் உள்ளன’ என்பது தவறான, பொய்யான காரணமாகும். ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று நான் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற மாட்டேன் என்ற தைரியத்தில்தான் என் மீது பழிபோட்டு அனுமதி மறுத்துவிட்டனர்.

“தந்தை பெரியார் சொல்லுவார், ’ஒரு பிரச்னையில் தமிழ் சமூகத்துக்கு
நல்லதா கெட்டதா என்பதற்கு அளவுகோல், அந்தப் பிரச்னையில் பார்ப்பன இயக்கங்கள், பார்ப்பன தலைவர்கள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடு எடுத்தால், அதுதான் தமிழர் நலன் காக்கும் என்பார்.


பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பனத் தலைவர்கள், பார்ப்பன இயக்கங்கள் ஒட்டுமொத்தமாக கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார் சொன்னது போல் அதற்கு நேர் மாறான முடிவுதான் தமிழர் நலன் காக்கும் என்பதால் நான் தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற்றேன்” என்று கூறியுள்ளார்.

வழக்கறிஞர் துரைசாமியின் அறிக்கையில் அதிமுகவையும் தமிழக அரசையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வரிகள் கடைசியில் உள்ளன.
“எனக்குத் தமிழர் நலனை விட பெரிதாக எந்த நலனும் கிடையாது. 

கலைஞருக்காக வழக்கைத் திரும்பப் பெற்றதில் பெருமைப்படுகிறேன்.

 அதனால் தலைவர் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் கிடையாது. நீதிமன்றத்திலும் உத்தரவு வாங்கிவிட்டோம்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்றுவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. 

அதற்கான வழக்குகள் விரைவில் வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வழக்கறிஞர் செ. துரைசாமி.
====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-10.
  • இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)
  • மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)
  • மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)
  • முகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)
=====================================================================================
மாபெரும் அரசியல் சாணக்கியனாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் புகழ் தான் இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. 

அவரை பற்றி அறிந்துகொள்ளாத பல விஷயங்களை அவருடைய தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர். 
அதன் படி கலைஞர் அவர்களுக்கு கருணாநிதி என்ற அடைமொழியை வழங்கியது யார் தெரியுமா?
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். 
கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். 
====================================================================================
”ராஜாஜி, காமராஜர் ஆகியோர் இறந்தபோது, அவர்களுக்குக் கடற்கரையில் இறுதிக் காரியங்கள் செய்து, நினைவிடம் அமைக்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனுமதி அளிக்க கலைஞர் மறுத்துவிட்டார்” என்று ஒரு சர்ச்சை எழுப்பப்பட்டு உள்ளது.
இது பற்றி இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. “ராஜாஜிக்குக் கடற்கரையில் இடம் கேட்கப்படவே இல்லை. அவரது விருப்பப்படியே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது” என்று ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் கூறினார் என்று அந்தச் செய்தியில் உள்ளது. நல்லது. ஆனால் காமராஜர்?
”காமராஜருக்குக் கடற்கரையில் இடம் தர வேண்டும் என்று பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்திக் கேட்டார்கள். ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டார் என்று திண்டிவனம் ராம்மூர்த்தி கூறினார்” என அந்தப் பத்திரிகை  செய்தியில் உள்ளது. 
இதை அந்தப் பத்திரிகை நெடுமாறனிடம் கேட்டு  உண்மை தெரிந்திருக்கலாம்.ஆனால் அதை கவனமுடன் தவிர்த்து விட்டார்கள்.காரணம் கொஞ்சசமாவது சேற்றை பூசலாம் என்ற நல்ல எண்ணம்தான்.
ஆனால்  ’தி நியூஸ் மின்ட்’ இணையதளமும், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய தளமும் காமராஜர் இடம் தொடர்பாக நெடுமாறனிடம் கேட்டு, செய்தி வெளியிட்டுள்ளன. 
“காமராஜருக்குக் கடற்கரையில் இடம் அளிக்குமாறு நாங்கள் கேட்கவே இல்லை. காமராஜர் உடலம் எரியூட்டப்பட்டது,காங்கிரசில் இருந்த நாங்கள் காங்கிரஸ் மைதானத்தில்தான் இறுதிக் காரியங்களைச் செய்ய முடிவு செய்திருந்தோம். சத்தியமூர்த்தி பவனிலேயே நினைவிடம் அமைக்க முடிவு செய்தொம்.
ஆனால் அப்போது முதலமைச்சர் கருணாநிதி, அவராகவே முன்வந்து, காமராஜரைக் கவுரவிக்கும் வகையில், காந்தி மண்டபம் அருகில் இடம் அளித்தார்” என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
இத்துடனாவது இந்த அதிமுக அரசு கிளப்பிய பொய்  சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.
============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?