வாலை நறுக்கிய சைபர் வாரியர்ஸ்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான ஊழல்புகார் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது.
இன்றைய அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் புகாருக்கு ஆளாகாத அமைச்சரே இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்துத் துறைகளிலும் முறைகேடு மலிந்துள்ளது. 
பணி நியமனம் துவங்கி பல்வேறு துறைகளுக்கு ஒப்பந்தங்கள் வரை அனைத்திலும் கமிசன் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் முதல்வரும், துணை முதல்வரும் முதன்மை வகிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
நெடுஞ் சாலைத்துறை தொடர்பான ஐந்து பணிகளை முதல்வரின் உறவினர் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், இதன் திட்ட மதிப்பு3500 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் செய்யாதுரை என்பவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. ஏராளமான பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 
செய்யாதுரை முதல்வ ரின் சம்பந்தியின் பினாமி என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை.
மாறாக தன்னுடைய சம்பந்தியின் நிறுவனம் ஒப்பந்தம்எடுக்கக்கூடாதா என்று வித்தாரம் பேசினார்.
முதல்வரின் உறவினர்களே நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை பணிகளை மேற்கொள்ளும்போது, அதில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் தைரியம் அதிகாரிகளுக்கு வருமா?
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 
இந்தவழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது. 
ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 
ஆனால் அத்துடன் முடிந்துவிட்டது.
சேகர் ரெட்டி விவகாரமும் மர்மமாகவே உள்ளது. 
வருமான வரி சோதனை என்பதை அதிமுகவை மிரட்டும் ஆயுதமாகவே மத்திய பாஜக ஆட்சி பயன்படுத்துகிறது. இன்றைக்கு முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்ததற்கும் கூட ஊழல் மற்றும் முறைகேடே காரணம் என குற்றம்சாட்டுப்பட்டுள்ளது. 
மொத்தத்தில் மாநில ஆட்சியாளர்கள் தமிழ கத்தை திட்டமிட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். 
இவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு. 
ஆட்சியில் நீடிக்கும் அருகதை இவர்களுக்கு இல்லை.
====================================================================================
கலைஞர் நினைவேந்தல் .
சென்னையில் கலைஞர்  இரங்கல் நிகழ்ச்சியில் அமித்ஷாவுடன் பங்கேற்கும் தேசிய தலைவர்களின் பட்டியல் வெளியானது.
திமுக தலைவர் கலைஞர்மு.கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி மரணம் அடைந்தார். 
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக திருச்சியில் பத்திரிகையாளர்களும், மதுரையில் இலக்கியவாதிகளும் பங்கேற்ற இரங்கல் கூட்டங்கள் நடந்தன. 

கோவையில் கலையுலகினரும், திருநெல்வேலியில் தமிழக அரசியல் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருக்கிறது.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆகஸ்ட் 30-ம் தேதி, ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 
திமுக ஏற்பாட்டில் அன்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசுகிறார். இதில் தேசியத் தலைவர்கள் பங்கேற்று ‘கலைஞருக்கு புகழ் வணக்கம்’ செய்கிறார்கள்.
M.Karunanidhi, Amit Sha in Karunanidhi Condolence event, மு.கருணாநிதி, கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா
சென்னையில் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள்
இதற்கான அழைப்பிதழ் வெளியாகியிருக்கிறது. 
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் பெயர் அதில் முதலிடத்தில் உள்ளது. திமுக மேடையில் பாஜக தேசியத் தலைவர் பங்கேற்பது மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதனால் திமுக பாஜக கூட்டணி வரும் என்று ஊடகங்கள் சில வதந்தியை கிளப்பி வருகின்றன.
ஆனால் இந்தியாவின் முக்கிய கட்சிகளுக்கு கலைஞர் நினைவேந்தலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி நிகழ்சியில் கலந்து கொள்ள வரும் அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பெயரை கட்சிகள் அறிவித்தன அதன்படி பாஜக சார்பில் அவர் கலந்து கொள்கிறார்.அவ்வளவுதான்.என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்  தேசிய அரசியல் தலைவர்கள் பட்டியல் :- 
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆஸாத், 
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா,
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா, 
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், 
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 
புதுவை முதல்வர் நாராயணசாமி, 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன், 
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பேசுகிறார்கள்.
இறுதியாக சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.என்று திமுக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா கலந்து கொள்வதால், இதில் இடதுசாரிகள் பங்கேற்பார்களா? என்கிற கேள்வியை சில ஊடகங்கள் கிளப்பியது.இடதுசாரித்தலைவர்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
கலைஞரை அவர் யாரை வாழ்நாள் முழுக்க எதிர்த்து அரசியல் செய்தாரோ அந்த அரசியல்   எதிரிகளும் புகழ்கிறார்கள், என்றால் அது குறிப்பிடத்தகுந்த அஞ்சலிதானே ?
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-25.

  • கலிலியோ  முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
  • உருகுவே விடுதலை தினம்(1825)
  • பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
  • ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)
======================================================================================
வாலை  ஓட்ட நறுக்கிய சைபர் வாரியர்ஸ்
 இந்திய இந்து மகாசபாவின் இணையதளம் முடக்கப்பட்டது. 
முடக்கப்பட்ட இணைய தளத்தில் "கேரள நாட்டுமுறையில்  மாட்டிறைச்சி சமைப்பது எப்படி?"  என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள் கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற ஹேக்கிங் டீம்.

நூறாண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டு 14 மாவட்டமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் 14 லட்சம் நபர்கள் இந்த வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணியும் கட்டுமானப் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அகில பாரதிய இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ராபாணி கேரள வெள்ளம் குறித்து கேவலமான முறையில் 


“மாட்டிறைச்சி உண்பவர்களால் தான் இப்படி மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு அதில் மக்கள் இறந்துவிட்டனர். மாட்டிறைச்சியை உண்பவர்கள் தவிர்த்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.
இதானால் கோபம் கொண்ட கேரள இளைஞர்கள்  கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற பெயரில்  அகில பாரதிய இந்து மகாசபா இணையத்தினை முடக்கி (ஹேக்கிங்)னர்.

மேலும்  அதில் " கேரளா முறையில் சுவையாக  மாட்டிறைச்சி சமைத்து உண்பது எப்படி?' என்று பதிவையும் ஏற்றியுள்ளனர்.

அத்துடன்  மாட்டிறைச்சி உண்பவர்கள் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்ட சக்ரபாணிக்கு மாட்டிறைசியின் பலன்கள் பற்றி விளக்கமும்,புராண காலங்களில் இந்து கடவுள்கள் ,முனிவர்கள் மாட்டிறைச்சி உண்டது,பசுவே,குதிரை போன்றவைகளை யாகசாலைகளில் தீயில் உயிருடன் எரித்துக்கொன்று அதன் மாமிசத்தை தின்றது போன்றவற்றை இடுகைகளாக போட்டுள்ளனர்.
மேலும் கேதார் நாத் ,பத்ரிநாத் புனித பயணம் சென்ற பக்தர்கள் வெள்ளம்,நிலச்சரிவு போன்றவற்றால் நூற்றுக்கணக்கில் பலியாக மாட்டிறைச்சி உண்டது தான் காரணமா என்று பல கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
உயிருக்குப்போராடும் கேரளமக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு சக்ரபாணிக்கு இதெல்லாம் தேவையா?
======================================================================================
காந்தியை கோட்சே கொன்றிருக்காவிட்டாலும்,
 நான் கொன்றிருப்பேன்
த்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில்,‘இந்து நீதிமன்றம்’ என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை,இந்து மகாசபையினர் ஏற்படுத்தி யுள்ளனர். 


“இஸ்லாமியர்களுக்கு இருக்கும்ஷரியத் சட்டத்தைப் போல, இந்துக்களுக்கென்று இந்த நீதிமன்றத்தைத் துவங்கியுள்ளோம், இந்துப் பெண்கள், இந்துத் திருமணம், சொத்து மற்றும் பணம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி ‘இந்து நீதிமன்றம்’ தீர்ப்பு வழங்கும்; அதிகபட்சம் தூக்குத்தண்டனை வரை விதிப்போம்” என்று இந்து மகாசபையினர் சட்டவிரோதமாக அறி வித்துள்ளனர். 

பெண் சாமியாரான பூஜா சாகுன் பாண்டே என்பவரை ‘நீதிபதி’யாகவும் அவர்கள் நியமித்துள்ளனர்.
இது அண்மையில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

ஆனால், இந்த சர்ச்சை அடங்கு வதற்குள், ‘இந்து நீதிமன்றத்தின் நீதிபதி’ என்று அறிவிக்கப்பட்டுள்ள பூஜா பாண்டே ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 

“ காந்தியை கோட்சே கொன்றிருக்காவிட்டாலும், நான் கொன்றிருப்பேன்” என்று பகி ரங்கமாக கூறியுள்ளார். 

“நானும் இந்து மகாசபையும் நாதுராம் கோட்சேவை நினைத்துப் பெருமைப்படுகிறோம்; அவரை வணங்குகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார். 
====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?