ரஃபேலும் 2ஜி யும்...


ரஃபேல் மோசடி பற்றிய ஊடகச் செய்திகளை கவனிக்கும்போது ஒன்று தெரிகிறது. இதுவரை எந்த பிரதான ஊடகங்களும் ரஃபேல் ஊழல் என்று சொல்லவில்லை. மாறாக ரபேல் விவகாரம் , சர்ச்சை , issue என்று தான் வெளியிடுகிறார்கள். 
இதுவொன்றும் தவறில்லை . 
ஊழல் என்று உறுதிப்படுத்தப்படாத வரையில் ஊழல் என்று அடையாளப்படுத்த வேண்டியதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 

ஆனால் இதே ஊடகங்கள் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் வார்த்தைக்கு வார்த்தை 2G ஊழல், 1.76லட்சம் கோடி ஊழல் என்று எழுதினார்கள். 

ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் என்பதை கூட மறந்து ஒரு டிவியில் ஆ.ராசா வை கோர்ட் கூண்டு போன்ற செட் போட்டு அதில் நிற்கவைத்து விவாதம் செய்தார்கள். 
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி 2G ஊழல் பற்றி கேள்விப்படும்போது தனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாக நீதிமன்றத்தில் வைத்தே கமென்ட் அடித்தார். ஒ
ரு திருடனை நடத்துவது போலவே அன்று அத்தனை ஊடகங்களும் ராசா வை நடத்தினார்கள். இந்தியாவில் வேறெந்த அரசியல்வாதிக்கும் இப்படிப்பட்ட கொடுமை நடந்ததாக தெரியவில்லை. 

இந்திய ஊடகங்களுக்கு துளியேனும் நேர்மையும் அற உணர்ச்சியும் இருக்குமேயானால் ஆ.ராசாவிடமும் திராவிட முன்னேற்றக்கழகத்திடமும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்கவேண்டும்..! 
2ஜியில் பிரதான குற்றச்சாட்டே தனக்கு வேண்டிய கம்பெனிகளுக்கு ராசா .. குறைந்த விலையில் உரிமங்களை கொடுத்தார் , அனுபவம் இல்லாத ரியல் எஸ்டேட் பிசினஸில் இருந்த கம்பெனிகளுக்கு உரிமம் கொடுத்தார்.
 அதன் மூலம் பணத்தை ஊழல் செய்தார் .. 
அதுவும் பிரதமருக்கே தெரியாமல் செய்தார் என்பது தான் ...
ரஃபேல் ஊழலைப் பொருத்தவரை
விமானங்களின் விலை முந்தைய ஒப்பந்தத்தை விட விலை மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்கப்படுகிறது சாதாரணமாக ஒரு பொருளை மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன ?? 
கமிசனுக்கு இல்லாமல் வேறு என்ன ?? 
சாதாரணமாக கான்ட்ராக்டில் வேலை எடுத்து செய்யும் வேலைகளில் தினமும் இந்த கமிசன் அடிக்கும் செயலைப் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம் ...
தொலைத் தொடர்பு துறையைப் பொருத்தவரை கட்டிடங்களும் டவரும் அதை ஒளிபரப்பும் சர்வரும் டெக்னீசியர்களும் தான் முக்கியம் இதை ஆர்கனைஸ் செய்ய கம்ப சூத்திரம் எல்லாம் தேவையில்லை நிர்வாகம் தெரிந்த ஆளிருந்தால் போதும் இதில் பிரச்சனை வந்தால் ஃபோனில் பேசுவது பாதிக்கப்படுமே தவிர உயிர் போகும் ஆபத்து ஏதும் இல்லை அதுவும் உள்நாட்டில் நடந்த ஏலம் .. 
உரிமம் பெற்ற பிறகும் கூட இராணுவம் மற்றும் டிராயின் கண்கானணிப்பிலியே இருக்கும் .. 
அவ்வப்போது டிராய் போடும் நிபந்தனைகளை நிறைவேற்றவும் வேண்டும் .. 
ஒப்பந்தம் அரசுக்கும் தனியாருக்கும் இடையிலே நடந்தது அரசின் கட்டுபாட்டை மீறி எதுவும் செய்ய முடியாது
ஆனால் போர்விமானங்களை செய்ய குறைந்த பட்சம் அந்த நிருவனத்துக்கு காத்தாடியையாவது பறக்கவிட தெரிந்திருக்க வேண்டும் .. ஒப்பந்தம் போடும் வெறும் 5 நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் நிருவனம் சில லட்சங்கள் கோடிகள்கூட இல்லை சில லட்சங்களில் ஒரு லெட்டர்பேட் கம்பெனியை ஆரம்பித்தது ... 
அதற்கு ஒரு தீபாவளி துப்பாக்கியைக் கூட செய்த அனுபவம் இல்லை ... ஆனால் போர்விமானம் செய்ய ஆர்டர் கிடைத்திருக்கிறது ...
 ஒப்பந்தம் அரசுடன் இல்லை பிரான்சின் டசால்ட் எனும் தனியார் நிறுவனத்துக்கும் ரிலையன்சுக்கும் .. இதில் அரசின் கண்காணிப்பே இல்லை . டிராய் போல எந்த ஒரு அவ்வப்போது நிபந்தனைகளோ வழிகாட்டு நெறிமுறைகளோ போட முடியாது ...
ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுத்தப்பிறகு தான் டிரையலுக்கு வரும் அதை ராணுவம் பயன்படுத்த முடியும் .. 
பல நூறு மடங்கு ஆயுத உற்பத்தியில் அனுபவம் கொண்ட ரஷ்யாவிடம் வாங்கிய விமானங்களே அவ்வப்போது விபத்துக்குள்ளாகிறது .. காற்றாடி கூட பறக்கவிடாத ரிலையன்சிடம் இருந்து வாங்கும் விமானம் எப்படி தரமானதாக இருக்க முடியும் ??
2ஜியில் முன் அனுபவம் பற்றி வாய்கிழிய பேசிய ஊடகங்கள் ரஃபேலில் அனுபவமே இல்லாத ரிலையன்சின் 5நாள் கம்பெனி பற்றி பேசாமல் இருப்பது ஏன் ??

2 ஜியில் டிராயின் ஆலோசனை , பாதுகாப்பு அண்ணிய செலாவணி துறை , சட்டத்துறை , உள்துறை உட்பட எல்லா துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை பெற்ற பிறகு தான் முடிவானது அதை அமைச்சர் ராசா செயல்படுத்தினார் அது கோர்டில் சாட்சியத்துக்கு வந்த அதிகாரிகள் மூலம் நிரூபணம் ஆனது ...
ரஃபேலில் பிரான்சில் பிரதமர் மோடி ஒப்பந்தம் போடும் போது சம்பந்தப்பட்ட அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவில் மீன் கடை (உண்மையில் தான்) திறப்புவிழாவில் விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தார் ..
பாதுகாப்புத்துறை செயலர், உள்துறை , வெளியுறவுத் துறை செயளர் உட்பட எந்த அதிகாரியிடமும் இதில் ஆலோசணை பெற்றதாக எந்த தகவலும் இல்லை ... பிரதமரே நேரடியாக ரிலையன்ஸ்க்கு ஒப்பந்தம் பெற்று தரவேண்டிய அவசியம் என்ன ? 
ஏன் செய்ய வேண்டும் ? 
அதுவும் அரசு நிறுவனம் HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை விலக்கிவிட்டு ??
8000 கோடி வரி பாக்கி , 100000 கோடி கடன் , 1500 கோடி நட்டத்தில் இருக்கும் ரிலையன்சுக்கு 1.50000 லட்சம் கோடி ஒப்பந்தம் பிரதமர் மோடி பெற்று தந்தது ஊழல் இல்லாமல் வேறு என்ன ??
2ஜியில் ஆன்ரெகார்ட் ஏலம் , கடித போக்குவரத்து , கேபினட் மீட்டீங், நிர்ணய தொகை, அதிகாரிகளின் ஆலோசனை ஆன் தி ரெகார்ட் எல்லாமே காரண காரியத்தோட பக்காவாக இருந்தும் ஊழல் ஊழல் என குதித்தவர்கள்
கேபினட் மீட்டிங் , அமைச்சர்கள் ஆலோசணை, ஏன் தொகை மும்மடங்காக மாறியது , ரிலையன்ஸ் எப்படி உள் நுழைந்தது என்று எதுவுமே வெளிப்படையாக இல்லாமல் மூடுமந்திரமாக மர்மமாக இருக்கும் போதும் ஊழல் என்று பேசாமல் வாய் மூடி இருப்பது போன்ற களவானித்தனம் ஏதுமிருக்கிறதா ??
தேனெடுப்பவன் புறங்கையை நக்குவது இயல்புதான் அப்படித்தான் இந்தியாவில் ஊழல் நடந்திருக்கிறது ... ரஃபேலிலோ தேனெடுக்க போனவன் மொத்த தேன் கூட்டையே ஆட்டையப் போட்டது இதுதான் உலகத்திலியே முதல் முறை.
இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் அன்னா ஹசாரே,கெஜ்ரிவால்,பாபா ராம்தேவ், கிரண்பேடி,வி.கே.சிங் என ஒரு கும்பல் கூத்தாடியது ஊழல் ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என தூய்மையின் சொரூபமான மோடியை பிரதமராக்கி இந்திய துணைக்கண்டத்தை நாசப்படுத்த, 

இப்போது கழிப்பறையிலிருந்து போர்விமானம் வாங்குவது வரை ஊழல், ஆனால் இவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என பார்ப்போமா??? 

ஹசாரே - தலைமறைவு 

கெஜ்ரிவால்- காங்கிரஸ் டெல்லியை கைப்பற்றி விடக்கூடாது என உருவாக்கப்பட்ட பாஜகவின் கருவி... 

பாபா ராம்தேவ் - பதஞ்சலி நிறுவன ஹிந்துத்துவ வியாபார பெருமுதலாளி.... 

கிரண்பேடி - பாண்டிச்சேரியின் பாஜக ஆளுநர்.... 

வி.கே.சிங் - ஆளும் பாஜகவின் வெளியுறவுதுறை இணை அமைச்சர்... 

இப்போது புரிகிறதா இந்த ஊழலுக்கெதிரான கூட்டமைப்பை யார் உருவாக்கி இந்த நாட்டில் உலாவ விட்டார்கள் என்பதை??? 

                                                                                                                   
-- Sadhu Sadhath (முகநூலில் ) 
2ஜி  ஊழல் என்று ஆரம்பநாள் முதல் முதற்பக்கத்தில் 8 கால செய்தியாக வெளியிட்டு திமுகவையும் ஆ .ராசா,கனிமொழியை அசிங்கப்படுத்திய தேசிய ஊடகங்கள் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ள மோடி-அம்பானி ரபேல் விமான ஊழலை பற்றி போதிய அளவில் செய்தி வெளியிடவே இல்லை.
2ஜி முறைகேட்டை நடக்கவில்லை என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டபின்னரும் திமுகவைத்தாக்க அதையே பயன்படுத்தும் தேசிய,தமிழக ஊடகங்கள் ,பிரியாணி கடையில் நடந்த சண்டையை மற்றும் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் சண்டைகளையும் கூட  ஏதோ திமுகவின் தலைமை செய்தது போல் கூட்டமாக விவாதித்த தொலைக்காட்சிகள் ,மின்னணு ஊடகங்கள் இப்போது வாயையும் ,அதையும் பொத்திக்கொண்டிருப்பது ஏன்?
தங்களுக்கு படியாளப்பது நின்றுவிடும் என்ற பயமா?அல்லது மோடியை வெளியே தெரியாமல் அனைத்து ஊடக நிர்வாகிகளும்,ஆசிரியர்களும் சந்தித்த போது நடந்த திரைமறைவு ஒப்பந்தத்தின்  வெளிப்பாடா?
ஐம்பெரும் பூதங்களிலும் ஊழல் செய்த  பிஜேபி மோடி (மத்திய) அரசு..
======================================================================================
ன்று,
செப்டம்பர்-25.
  • மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்
  • பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)
  • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
  • அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
=======================================================================================
எங்கள் பிரதமர் திருடர்.

இன்று இந்தியா முழுக்க பரவலான காஷ்டேக் இதுதான்."எங்கள் பிரதமர் திருடர்."
                               இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.
உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது.
2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.
பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.
HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. 2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது. புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.

பின் கதை

2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.
126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர்.
பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதில் ஊழல் எங்கிருந்து வந்தது ? விவரமாகப் பார்க்கலாம்.


1. விலை

— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.
— மோடி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்!

2. உற்பத்தி

— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!

3. தொழில்நுட்பம்

— காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்
— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ்.

4. தனியாருக்கு?

— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி.
— மோடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி!

5. அனுபவம்

— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.
— மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.

6. மோடியின் ஊழல்

— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.
— பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை.
— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா.  ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்.
— இதுபோன்ற விஷயங்களில் போர்விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசு விலையை ரகசியமாக வைக்கவில்லை.
— ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்
— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.

— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல் எப்படிப் போனால் என்ன, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.
— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்?
— எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி – Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016)
— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்?
— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது?  மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். கம்பெனி ரெஜிஸ்டிராரிடம் பதிவு செய்த விவரம் கீழே படத்தில் உள்ளது.
— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோடி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.
— கடைசியாக முக்கியமான ஒரு விஷயம் : 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.
வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார்.
– ஷாஜஹான்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?