உச்சநீதிமன்ற நியாயம்?

நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் பாதிக்கப்பட்ட தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. 

சிபிஎஸ்இ அமைப்பு செய்த தவறுக்கு மாணவர்களை பலிகடா ஆக்குவது நீதிக்கு எதிரானது ஆகும். இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் சிபிஎஸ்இ பல்வேறு அராஜகங்களை செய்தது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

 தேர்வுமையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டது. 

இதுகுறித்து கேட்டதற்கு போதியகால அவகாசம் இல்லை என பொறுப்பில்ல்லாமல் பதிலளித்தது சிபிஎஸ்இ. 

தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகளில் மொழி பெயர்ப்பு குறைபாடு இருந்ததை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். 

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க முடியாதுஎன உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.சிபிஎஸ்இசெய்த தவறுக்கு மாணவர்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? 

இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.நீட் தேர்வு விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே குழப்பம் செய்து வரும் சிபிஎஸ்இ இப்போது புதிய வாதத்தை முன்வைத்துள்ளது.

மருத்துவக் கல்வி ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
 அவ்வாறு தெரியாமல் இருந்ததுதான் தவறு என சிபிஎஸ்இ கூறுவது முட்டாள்தனம் மட்டுமல்ல, ஆணவத்தின் உச்சமும் ஆகும்.


தன்னுடைய தாய்மொழியை மட்டுமே அறிந்தஒரு மாணவன் மருத்துவம் படிக்கக்கூடாதா? 
அது ஒரு தகுதிக்குறைவா? 
மருத்துவப் படிப்பை அந்தந்த மாநில மாணவர்களின் வசதிக்காக தாய்மொழியில் கொண்டு வருவதால் ஒன்றும் குடிமூழ்கி போய்விடாது.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்பவர்கள் அந்த நாட்டு மொழிகளை படிக்கின்றனர் என்றும் சிபிஎஸ்இ வாதிட்டுள்ளது. 

அப்படியென்றால் தமிழ்நாட்டில்மருத்துவம் படிக்க தமிழ்தானே அடிப்படை. தாய்மொழி வழி பள்ளிக்கல்வியை முற்றாக மறுக்கும் மோடி அரசின் வாதத்தையே சிபிஎஸ்இ முன்வைக்கிறது.வரும் கல்வியாண்டில் தாய்மொழியில் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதை தடுக்கும்வகையில் சிபிஎஸ்இ வாதம் உள்ளது. 

இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, குடிமக்கள் உரிமைக்கு எதிரானது. சிபிஎஸ்இ அமைப்பு தேர்வு நடத்த தகுதியற்றது. 

நீட் தேர்வு முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதாகவே சிபிஎஸ்இ அமைப்பின் வாதம் உள்ளது.
===================================================================================
வோடஃபோன் - ஐடியா இணைப்பு நுகர்வோருக்கு ஆப்பு.

உலகமய யுகத்தில் நுகர்வோரே அரசர்; போட்டிகள் உருவாகும்; மக்களுக்கு நிறையத் தெரிவுகள் இருக்கும்; தரமான பொருட்கள், சேவைகள் கிடைக்கும் என்பதெல்லாம் 1990களில் நமது செவிகளில் விழுந்த வார்த்தைகள்.ஆனால் பெரு மூலதனங்கள் கைகோர்ப்பதும், சிறு சிறு நிறுவனங்களை விழுங்குவதும், முற்றுரிமைக்கோ - சிறு குழு முற்றுரிமைக்கோ இட்டுச் செல்வதுமே நிகழும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகிறது. 

இதோ இன்றையச் செய்தி. வோடாஃபோனும், ஐடியாவும் இணைகிறது. 
தொலைத் தொடர்புத்துறை சந்தையின் முதன்மை நிறுவனமாக உருவெடுக்கிறது.

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NATIONAL COMPANY LAW TRIBUNAL),வோடாஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பிற்கான பச்சைக் கொடியை இரண்டு நாட்களுக்கு முன்பாக அசைத்திருக்கிறது.
ஐடியா நிறுவனம் ஆதித்ய பிர்லாவினுடையது. வோடஃ போனின் பூர்வீகம் பிரிட்டனுடன் தொடர்புடையது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம்15 ஆண்டுகளாகத் தொலைத் தொடர்புச் சந்தையில் முதலிடத்தில் இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனத்தைஅந்த இடத்திலிருந்து அகற்றியிருக்கின்றன. 


44 கோடி வாடிக்கையாளர்கள், 34.7 சதவீதம் சந்தை வருமானப் பங்கு, 60,000 கோடிகளுக்கும் அதிகமான வருமானம், 1.15 லட்சம்கோடிகளுக்கு அதிகமான கடன்என்ற அளவில் விஸ்வரூபத்தை எடுத்துள்ளன. 
இதன் சேர்மனாக குமார்மங்கலம் பிர்லா இருப்பார். இதன் புதிய பெயராக ‘‘வோடஃபோன் ஐடியா லிமிட்டெட்’’ என்பது இருக்கும்.

இந்தியப் பெரும் தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரம், இலாபம் என்றே பேசமாட்டார்கள்; எல்லாவற்றையுமே தேசம், தேச நலனுக்காக செய்வதாகவே பேசுவார்கள். இரு நிறுவனங்களின் இணைப்பு பற்றி குமார் மங்கலம் பிர்லா பேசுவதைப் பாருங்களேன்!‘‘நாங்கள் இன்று இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்புநிறுவனத்தை உருவாக்கியிருக்கிறோம். 

இது ஓர் வரலாற்று தருணம்.இது ஓர் பெரிய வணிகம் உருவாகிறது என்பதை விட மேலானதாகும்.இது புது இந்தியாவை நிர்மாணிப்பதும், அதிகாரமளிப்பதும் ஆகும். 

இந்திய இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றுவதுமாகும். இந்தியப்பிரதமர் விவரிப்பது போல பிரம்மாண்டமான தேச நிர்மாணப் பணியான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதாகும்.’

’ கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டுகளை மிஞ்சுகிற நடிகர்களல்லவா இவர்கள்! 
பஞ்ச் டயலாக்குகளை ரசியுங்கள்!

தனியார்களுக்கு கதவு திறப்பு, போட்டி, விழுங்குதல், இணைதல்... என்கிற மியூசிக்கல் சேர்விளையாட்டில் மிஞ்சியிருப்பவர்கள் மூன்று பெரிய நிறுவனங்களே. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகியனவே. 

கடைசியாய் நாற்காலியையும் இழந்து கீழேயும் விழுந்து காயப்பட்டு ‘‘ஏர்செல்’’ வெளியேறியதைப் பார்த்தோம்.100 கோடி வாடிக்கையாளர்களுக்கான சுழல் இசை நாற்காலிப் போட்டியில் மூன்று பேர்கள்மட்டுமே எஞ்சி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 


தற்போது 3 ஜியிலிருந்து 4 ஜிக்கு தொலைத் தொடர்புச் சந்தை முன்னேறிக் கொண்டிருக்கிற நேரமும் ஆகும். இதனுடைய விளைவைக் கடைசியில் பார்ப்போம்.

‘‘டிஜிட்டல் இந்தியா’’ என்று நம்முடைய தேச பக்தி உணர்வுக்கு விசிறி வீசுகிற குமார் மங்கலம் பிர்லாவுக்கு இந்நிறுவனத்தில் 26 சதவீதம் பங்கு. பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட வோடஃபோனுக்கு 45.2 சதவீத பங்கு.

இந்தியாவிற்குள் வருகிற நிறுவனங்களுக்கும், முதலீடுகளுக்கும் “இந்தியா” என்கிற அடைமொழியைச் சேர்த்து விட்டால் இந்திய நிறுவனம் போன்றஃபீல் நமக்கு கிடைத்து விடுமல்லவா. 

அது போன்றதுதான் இவ்வளவு காலம் இருந்த வோடஃபோன் இந்தியா.இணைகிற இரு நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தக்கடன் 1.09 லட்சம் கோடிகள். 
ஆரம்ப ரொக்கக் கையிருப்பிற்காக இன்டஸ் டவரில் உள்ள பங்குகளைரூ. 5100 கோடிகளுக்கு காசாக்கப்போகிறார்கள். 
மொத்த ரொக்கக்கையிருப்பாக ரூ. 19300 கோடிகளைக் கொண்டு தொழிலை நடத்தப்போகிறார்கள். இவ்வளவு டீடெயில்ஸ் நமக்கு எதற்கு? இருந்தாலும் வெற்றிலை பாக்கு, கடலை மிட்டாய் வாங்குவது போன்ற தொகைகள் தான் அவர்களுக்கு இந்த சில ஆயிரம் கோடிகள். ஆனாலும் கடன் தொகை நமக்கு “பகீர்” என்று இருக்கிறது. 

ஏனென்றால் ஏர்செல் வீழ்ந்த போது அதில் சிக்கியதெல்லாம் நமதுவங்கிகளின் பணம்தானே!. நமக்குஇந்த பயம் வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எகானமிக் டைம்ஸ் இதழின் ஆகஸ்ட் 31, 2018செய்தியின் கடைசி வரிகளைப் பாருங்கள் !.

“இணைப்பை நோக்கிய ஐடியா நிறுவனத்தின் பயணம் நிதிச் சிரமங்களைக் கொண்ட வலி தருவதாகவே அமையுமென கிரெடிட் சூசி ஆய்வு நிறுவனத்தினர் கருதுகிறார்கள் ”.

கடைசியில் மேட்டருக்கு வருவோம்! இரண்டு நிறுவனங்களும் இணைவதால் வரும் காலங்களில் இந்திய ரூபாய் மதிப்பில் 70000 கோடிகள் வரை ( மோடி புண்ணியத்தில் டாலருக்கு ரூ.70 ஐ தொட்டுள்ளதால்) அவர்கள் சேமிக்க முடியுமாம். ஒருங்கிணைந்த ஆற்றல் வெளிப்படுமாம். பாரதி ஏர்டெல்லுக்கும், ஜியோவுக்கும் வலுவான எதிரியாக முன்னிற்குமாம். 

எல்லாம் சரி! 
நுகர்வோருக்குஎன்ன லாபம்? அங்குதான் வைக்கிறார்கள் ஆப்பு. 
எகானமிக் டைம்சின்அதே செய்திக்கு தரப்பட்டுள்ள உபதலைப்பு “ விலை அதிகாரம் மீண்டும் துறைக்கே திரும்புகிறது”. என்ன அர்த்தம்? 

இரண்டு ஆண்டு கால விலைச்சண்டை நிறுவனங்களின் வருமானத்தையும், இலாபத்தையும் “கொடூரமாகப் ” பாதித்து விட்டதாம். தற்போது மூன்று நிறுவனங்களே கோலோச்சுகிற துறையாக நிலை பெற்றுவிட்டதால் விலை அதிகாரம் பிர்லா, அம்பானி, மிட்டல்கைகளுக்கே திரும்புகிறதாம்.நுகர்வோர் பாக்கெட்டுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

கீரி,பாம்புச் சண்டையில் பறிபோவது உங்கள் பர்ஸ்களே! 
                                                                                                                                       நன்றி:தீக்கதிர்.
========================================================================================
ன்று,
செப்டம்பர்-02.
  • ஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)
  • வியட்நாம் குடியரசு தினம்(1945)
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)
=========================================================================================

ரூ. 41 ஆயிரம் கோடியான  வங்கி மோசடி.
மோடி ஆட்சியில் சூறையாடப்படும் பொதுத்துறை வங்கிகள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், வருமான வரித் தாக்கல் அதிகரிப்பு என்று மோடி அரசு ஜம்பம் அடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் இவற்றால் சாதாரண ஏழை - எளிய மக்களே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும், பெருமுதலாளிகள், மோசடிப் பேர்வழிகள்.

 எப்போதும்போல கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

அதிலொன்றுதான், வங்கி மோசடி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 2017-18 நிதியாண்டில் ரூ. 41ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அளித்துள்ள அறிக்கையாகும்.
இதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 23 ஆயிரம் கோடியாக இருந்த, மோசடிசெய்யப்பட்ட பணத்தின் மதிப்பு- தற்போது அதைவிட இரண்டு மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதேபோல மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வங்கி மோசடி குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக ‘4 ஆயிரத்து 500 குற்றங்கள்’ என இருந்த நிலையில்,இது கடந்த 2017- 18 நிதியாண்டில் 5 ஆயிரத்து 835 கோடியாக அதி கரித்துள்ளது.

வராக்கடன் அதிகரிப்பால், வங்கிகளில் தணிக்கைகள் மிகவும் கெடு பிடியாக்கப்பட்டு உள்ளன என்று மோடிஅரசால் கூறப்பட்டது. 

ஆனால், இவ்வாறு கூறியதற்குப் பிறகு, மோசடிகள் அதிகரித்துள்ளன. கடந்த நிதியாண்டில் 1 லட்சம்ரூபாய்க்கும் அதிகமான தொகை கொண்ட மோசடிகளில் 92.9 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில்தான் நடந்துள்ளன. 
தனியார் வங்கிகளில் 6 சதவிகிதம் அளவிற்கே மோசடி நடந்துள்ளது. கடந்த மார்ச் 31 புள்ளி விவரப்படி, 85 சதவிகித மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும் 10 சதவிகிதத்துக்கும் மேலான மோசடிகள் தனியார் வங்கிகளிலும் நடந்துள்ளன.
 கடன் மோசடிகளில் பொத்துறை வங்கிகளில் 87 சதவிகிதமும், தனியார் வங்கிகளில் 11 சதவிகிதமும் நடந்துள்ளன. போலி ஆவணங்கள், பண உத்தரவாத கடிதம் போன்றவை மூலம் மோசடிகள் நிகழ்ந்துள்ளன.

இதையடுத்து ‘ஒரே மாதிரியான தணிக்கை முறைகள், மோசடிகளை கண்டுபிடிக்க உதவவில்லை; எனவே, மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே கணித்து. துவக்க நிலையிலேயே இவற்றை கண்டறிய வேண்டும்’ என்று தற்போது ரிசர்வ் வங்கி தெரிவித்துள் ளது. 
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்காகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்று மோடிஅறிவித்தார். ஆனால், மோடி மீட்கப் போவதாக சொன்ன கறுப்புப்பணம் அத்தனையும் வெள்ளையாகிவிட்டது. 

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே கறுப்புப் பணம் இருந்தது; அதுவும் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு விட்டது என்று ரிசர்வ் வங்கி பரிதாப கரமாக கூறியுள்ளது. 

ஆனால், இந்த 10 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை ஒழிக்க, நாட்டு மக்கள் இழந்தது சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதாரம். சூறையாடப்பட்ட மக்க ளின் வரிப்பணம் மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாய். 

ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் தற்போதுவருமான வரித் தாக்கல் அதிகரித்து விட்டது என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால், இதன் பெயரிலும், மோடியின் தாக்குதலுக்கு உள்ளானது சிறு, குறு வர்த்தகர்கள் மற்றும் குடிசைத் தொழிலை நடத்தி வந்தவர்கள்தான். 
ஆனால், மோசடிப் பேர்வழிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. மல்லையா, நீரவ் மோடி என பலரை, மோடி அரசே சத்தமில்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டது. 

உள்நாட்டில் இருப்பவர் களுக்கும், 6 லட்சம் கோடி ரூபாயைஅள்ளிக் கொடுத்துவிட்டு, அவற்றை வராக்கடன் ஆக்கி விட்டது. 
போதென்று பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளுக்கு சூறையாடத் துவங்கியுள்ளது.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?