பாஜகவின் சதிகளை நடத்தும் களமான ஊடகம்

இங்கு எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. வாங்குபவரைப் பொருத்தில்லாமல், வேடிக்கைப் பார்ப்பவர்களைக் குறிவைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு பேரத்திலும் சில ஆயிரம் கோடிகள் கைமாற்றப்பட்டிருக்கின்றன. நாம் விலைபோகிறோம் என்று தெரியாமலே, வியாபாரிகளின் ஏலத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றனர் சாமான்யர்கள். ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் என்றோ சிதிலமடைந்துவிட்ட நிலையில், பொது சமூகத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த நான்காவது தூணான ஊடகமும் விலைபோயிருக்கிறது.

கோப்ராபோஸ்ட் எனும் நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த மோசமான உண்மை அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊடகங்களான டைம்ஸ் குரூப் முதல் தமிழகத்தின் தினமலர் வரை பல செய்தி ஊடகங்கள் மக்களின் மீது இந்த மோசடியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. 
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்கத்துடிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கோப்ரா போஸ்ட் தன் ஸ்டிங் ஆப்பரேஷனில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நாட்டையே உலுக்கியிருந்தாலும் சாமான்ய மக்களுக்கு இது சென்று சேரவில்லை என்பதே உண்மை. ஒருபுறம் கோப்ரா போஸ்ட் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், எந்த ஊடகமும் அதைப் பற்றி பேசாமலும், பேசியதை தடயமில்லாமல் அழித்துக்கொண்டும் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கின்றன. 

சில தாமாக முன்வந்து தம்மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியில் எதிர்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்றன.

கோப்ராபோஸ்ட் நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷன் கோப்ராபோஸ்ட் என்ற நிறுவனத்தின் நிருபர் சில ஊடக நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நேரில் சந்திக்கிறார். 
அவர்களிடம் ‘சில செய்திகளை வலிந்து திணித்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது அல்லது ஒற்றைக் கருத்தோடு அவர்களை பயணிக்கச் செய்வது’ குறித்து விளக்குகிறார். 
எங்களுக்கு இதில் விருப்பம் என அந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்ததும், அதற்கான விலை பேசப்படுகிறது. குறிப்பாக இந்துத்துவா போன்ற விஷயங்களை நல்ல நோக்கிலும், ராகுல்காந்தியைப் பற்றிய செய்திகளில் பப்பு, பப்புவா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தவும் வேண்டும் என்பது போன்ற பல டீல்கள் பேசப்படுகின்றன. 
இதை அந்த முக்கியஸ்தர்களும் ஒப்புக்கொள்வது வாக்குமூலமாக நிருபர் வைத்திருக்கும் ரகசிய கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இப்படி பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் இருக்க, டைம்ஸ் குரூப் இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. குறிப்பாக கோப்ராபோஸ்ட் நிருபரின் நோக்கத்தை அறிந்த டைம்ஸ் குரூப்பின் நிர்வாக இயக்குனர் வினீத் ஜெய்ன், அவரை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக ரிவர்ஸ் ஸ்டிங் ஆப்பரேஷன் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
 டைம்ஸ் குரூப் மீது முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வயர் நிறுவனம் தொடர்ந்து நச்சரித்ததன் விளைவாக, தற்போது மேற்கூறிய விளக்கத்தை அந்த நிறுவனம் அளித்திருக்கிறது.
இதுகுறித்து டைம்ஸ் குரூப் நிறுவனத்தின் பொது மேலாளர் வயர் நிறுவத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அளித்துள்ள விளக்கத்தில், கோப்ராபோஸ்ட் முன்வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். 
அவர்கள் விஷயத்தை எங்களுக்கு எதிராகவும், ஒருதலைபட்சமாகவும், எங்கள் நிறுவனத்திற்கு என்று இருக்கும் பெயரைப் பயன்படுத்தி பரபரப்பைக் கிளப்பும் நோக்கத்திலும் எங்கள்மீதான அவதூறுகளை திட்டமிட்டு திரித்து பரப்பியிருக்கிறார்கள்.
எங்கள்மீது குற்றச்சாட்டைத் திணிக்கும் நோக்கத்தில் இந்த வேலையில் ஈடுபட்டதால், நாங்கள் உண்மைக்கு ஆதாரமாக முன்வைத்த எந்த பதிலையும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் இருந்து திட்டமிட்டு நீக்கியிருக்கிறார்கள். இப்படி குறிவைத்து அவதூறுகளைப் பரப்புவதன் மூலமாக, அவர்கள் பத்திரிகை தர்மத்தை சீர்குலைத்திருக்கிறார்கள். 
இவைபோன்றவற்றை நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். அதேபோல், எங்களை தவறானவர்கள் என்று சித்தரிப்பதற்காக வலிந்து திணித்தும், தெரிந்து மறைத்தும் அவர்கள் கையாண்டிருக்கும் வித்தைகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். 
அதேசமயம், இதனை வெறுமனே மறைக்காமல் எங்கள் வழக்கறிஞர்களுக்கும் போதுமான ஆதாரங்களை வழங்கியிருக்கிறோம். இதனால், சட்டரீதியில் எங்கள்மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்பதையும் இங்கு உறுதிபடுத்துகிறோம்.
உண்மையில், எங்கள் நிர்வாகிகள் அந்த நிருபர் யார் என்பதை அறிந்துகொள்ளவும், அவர் வந்திருக்கும் நோக்கம், அவருக்கு பின்னால் இருக்கும் அரசியல் கட்சி அல்லது நிறுவனம் குறித்து கண்டுபிடிப்பதற்காகவே அவரது எல்லா கேள்விகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாக பதிலளித்து இருக்கின்றனர். சொல்லப்போனால், அது ஒரு ரிவர்ஸ் ஸ்டிங் ஆப்பரேஷன்தான். 
அதன்படி வந்திருக்கும் நிருபரின் எண்ணம் அறிந்து அவரைத் தவறு செய்யவைத்து அவரது நோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக எங்கள் நிர்வாகிகள் ஒத்துழைப்பதுபோல் நடித்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது எந்தவிதமான பணப்பரிவர்த்தனையும், பேரமும் நடைபெறவில்லை. அதுகுறித்து எதிரில் இருந்த நிருபர் பேசத் தொடங்கிய போது, எங்கள் நிர்வாகிகள் பணப்பரிவர்த்தனைகள் நிறுவனம் கையாளும் கெடுபிடிகளை விளக்கியுள்ளனர். 
நிருபர் ரொக்கமாக சில நூறு கோடிகளைத் தருவதாக முன்வந்தபோது, டைம்ஸ் குரூப்ஸ் வங்கிகளின் மூலமாகவே பரிவர்த்தனைகளைக் கையாள்வதாக விளக்கியிருக்கின்றனர். ஆனால், அதையும் கோப்ராபோஸ்ட் திட்டமிட்டே ஜோடித்து எங்களுக்கு எதிராக திருப்பிவிட்டது. 
எனவே, கோப்ராபோஸ்ட் பெயரில் எங்களுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளைப் பரப்புவதை விட்டுவிடுங்கள். அந்த நிறுவனத்தின் நிருபர்கள் மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் பலமுறை சிறைசென்று திரும்பிய, ஜாமீனில் இருக்கும் குற்றவாளிகள். 
அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் என்பதை இதுவொன்றே ஆதாரமாகக் கொள்ளலாம்.
அதேபோல், இதுசார்ந்த எங்கள் மீது அவதூறு பரப்பும் செய்திகளை உங்களைப் போன்ற நிறுவனங்களும் பரப்புமாயின் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறோம் என எழுதியிருக்கிறார்.
"வயர் நிறுவனம் இந்த மின்னஞ்சலை அப்படியே தமது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. டைம்ஸ் குரூப்ஸ் ஊழியர்கள் உட்பட பலரும் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உண்மை யார் பக்கம் இருந்தாலும் மக்கள் தெரிந்துகொள்ளட்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. அவிழும் ஒவ்வொரு முடிச்சுகளும் நம் அச்சங்களைப் போக்கலாம். புதிய அச்சங்களை உருவாக்கலாம். உண்மை வரும் என்ற நம்பிக்கையுடன் பொறுத்திருந்து கவனிப்போம்.."
                                                                                                                                                 தமிழில்: அன்புநேசன்
 ======================================================================================

ன்று,
செப்டம்பர்-13.
  • உலக சாக்லேட் தினம்.
  • கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
  • 1896 - 1500 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின.
  • 1898 -ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்.
  • 1947 - திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது. 
  • 1948-ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது.
========================================================================================

ஆபத்தான 328 மருந்துகள் எவை?

தேவை விடை !



2016 ம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. 
பின்னர் மேலும் 5 மருந்துகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. 

இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட் மற்றும் பல ஐகோர்ட்களில் வழக்கு தொடர்ந்தன. 


இவ்வழக்கில் 2017 ம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகம் தடை விதிக்கப்பட்ட மருந்துகளின் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது. 

இதன் படி, மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகம் ஆய்வு மேற்கொண்ட போது 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது.


 இதனையடுத்து தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் சாரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும். 

அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன. 

புகழ்பெற்ற வலி நிவாரணிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. 

இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான மருந்துகள் தடை செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் "புகழ்பெற்ற வலி நிவாரணி மருந்துகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது'.என்று மட்டுமே செய்தியை வெளியிட்டு தங்கள் மக்கள் நல ஊடகதர்மத்தை பாதுகாத்துக்கொண்டன.

அந்த   மேலும் 6 மருந்துகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கு கடும் கட்டுப்பாடு புகழ் பெற்ற வலி நிவாரணிகள் பெயர்களை வெளியிடவே இல்லை.பின் மக்கள் எப்படி தடை செய்யப்பட மருந்துகளை இனங்கண்டு தவிர்ப்பார்கள்.? 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?