உச்ச நீதிமன்றம் எங்களுடையதுதான்!

உச்ச நீதிமன்றமே எங்கபக்கம்தான், அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியயுள்ளார்.
இப்படி உண்மையை பகிரங்கமாக மேடையில் உளறியதற்காக கூட பாஜக அவரை கண்டிக்கவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில்  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது பாஜக தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா பஹாரெய்ச் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். உச்ச நீதிமன்றமே எங்கள்பக்கம்தான், எங்களுடையதுதான், ஆதலால் கவலையில்லை அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடுவோம்.

உச்ச நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்க(ஆர்.எஸ்.எஸ்.,பாஜக)ளுடையதுதான் என்றும்  
பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.அதில் என்ன பயன் ?
பாஜகவை தாக்கி குரல் எழுப்பினால் மட்டும்தான் கைது,சிறை என்றான நிலைதான் இன்று.
எதிர்க்கட்சிகள் கண்டனத்தை வழக்கம் போல் பாஜக தலைமை கண்டு கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தாலும் உண்மை அதுதானே என்ற எண்ணமாக இருக்கலாம்.
ஓய்வெடுக்கும் அலிபாபா?
அலிபாபா கதைகள் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம். அதன் குகைகளில் தேடக் கிடைக்காத பொக்கிசங்கள் காணக் கிடைக்கும் என்பதே காலகாலமாக நிலவும் நம்பிக்கை.
செஞ்சீனத்தின் மிகப் பெரிய இணையதள நிறுவனத்தின் பெயர் அலிபாபா. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற போது இணையத்தின் பயன்பாடுகளை முதன் முறையாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.
இணையதள பயன்பாடுகளின் நீள, அகலங்களையும் அதன் உயரத்தையும் புரிந்து கொண்ட ஜாக் மா, ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி 1999 வது வருடம் அலிபாபா என்ற இணைய தள விற்பனை நிறுவனத்தினை ஆரம்பித்தார்.

19 வருடங்களில் அலிபாபா மற்றும் ஜாக் மா வின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது.
இந்த காலகட்டத்தில் சீன பொருளாதாரமும் பெரிய அளவில் வளர்ந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளே சீனாவின் வளர்ச்சியை வியந்து பார்த்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு முதலில் சந்தித்த சீனராக ஜாக் மா வும் உயர்ந்து நின்றார்.
1964 ஆவது வருடம் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த ஜாக் மா, தனது 54 ஆவது வயதில் இந்த வருடம் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வந்தன. 420 பில்லியன் டாலர் மதிப்புடைய அலிபாபா நிறுவனத்தில் இருந்து விலகி தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கல்விப் பணிகளில் ஈடுபடப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ தனது வழிகாட்டி என வெவ்வேறு இடங்களில் ஜாக் மா புகழ்ந்துள்ளார், பில் கேட்ஸ் போன்ற பெருந் கொடையாளராக தான் வாழ வேண்டும் என்பது ஜாக் மா வின் ஆசைகளில் ஒன்று. அதற்காக ஜாக் மா பவுண்டேஷனை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி விட்டார்.
கல்வி சார்ந்த நன்கொடை பணிகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது. முதன் முதலாக மாதம் ஒன்றிற்கு 12 டாலர் சம்பளத்தில் பணியில் சேர்ந்த ஜாக் மா, அலிபாபா மற்றும் அலிபே ஆகிய நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள பங்குகளை இன்று வைத்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறை வென்றவர். உலகின் புகழ் பெற்ற வணிக கல்வியகமான ஹார்வர்ட் இவரது விண்ணப்பத்தினை 10 முறை நிராகரித்து உள்ளனர்.
ஆசிரிய பணியை விட்டு விட்டு இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்த மாவின் முதல் இரண்டு முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. நான்கு ஆண்டுகள் கழித்து தனது 17 நண்பர்களை அழைத்து தனது புதிய நிறுவனமான அலிபாபாவில் முதலீடு செய்ய கேட்டுக் கொண்டார்.நிறுவனம் ஓரளவு வளர்ந்த பிறகு சாப்ட் பேங்க், யாஹூ போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்தன.
தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து 2013-ல் மா விலகினார். தற்போது இந்த செப்டம்பர் 10 அன்று அலிபாபா நிறுவனத்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்று கல்வி சார்ந்த சமூக நல பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது பரபரப்பானது.
சீனாவின் பின்தங்கிய மாகாணம் ஒன்றில் எளிய பெற்றோர்களின் பிள்ளையாகப் பிறந்த மா, தன்னை ஒரு சராசரி மாணவன் என்றே குறிப்பிடுகின்றார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி சரியான நேரங்களில் தொழில் முனைவோர் ஆக விரும்பி தெளிவான முடிவுகளால் பெரும் நிறுவனங்களை கட்டி எழுப்பி உலகம் கவனிக்கிற ஆளுமையாக உயர்ந்தார், இப்போது 54 வயதில் ஜாக் மா ஓய்வு வதந்தி உலகம் முழுக்க உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை திகைக்க வைத்துள்ளது.
                                                                                                                                        - அ.பெ.மணி
=====================================================================================
ன்று,

செப்டம்பர்-11.
  • மண் கொடை இயக்க அறப்போராளி வினோபா பாவே பிறந்த தினம் (1895)

  • கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவு தினம்(1921)

  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்

  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
======================================================================================
ஓட்டையான புல்லட்.
புல்லட் நாகராஜன் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டான். சிறைத்துறை எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரை மிரட்டிய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
கைதான புல்லட் நாகராஜனிடம் கைத்துப்பாக்கி, கட்டுக்கட்டாக கள்ள நோட்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புல்லட் நாகராஜன், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பெயர்! மதுரை சிறைத்துறை சூப்பிரெண்டு ஊர்மிளாவை மிரட்டி கடந்த 6-ம் தேதி புல்லட் நாகராஜன் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல பெரியகுளம், தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவை மிரட்டி மற்றொரு ஆடியோவும் வெளிவந்தது. 
அதில், ‘நீ என்ன விஜயசாந்தியா?’ என்கிற ரேஞ்சில் புல்லட் நாகராஜன் மிரட்டியிருந்தான்.
புல்லட் நாகராஜனை பிடிக்க பெரியகுளம் தென்கரை போலீஸார் வலை விரித்து வந்தனர். இன்று புல்லட் நாகராஜனை போலீஸார் கைது செய்தனர். 
போலீஸாருக்கு சவால் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் மடக்கப்பட்டதை போலீஸார் சற்றே நிம்மதி பெருமூச்சுடன் பார்க்கிறார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவன் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவனது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.
இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்ததை தம்பியிடம் கூற, உடனே எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினான். ‘அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? அடுத்து, உங்கள் மேல் லாரி ஏறும்’ என மிரட்டல் விடுத்தான். 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டினான்.
பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து பேசிய புல்லட் நாகராஜன், “இனி யாரையும் நீங்க அடிக்கக் கூடாது. 
எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது” என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

போலீஸாருக்கே பெரும் சவாலாக இருந்த புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவை மிரட்டிய வழக்கில் ரவுடி புல்லட் நாகராஜை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை பெரியகுளம் விரைந்தது.
டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான படையினர் இன்று புல்லட் நாகராஜனை துரத்திப் பிடித்தனர். ஒரு பல்சர் பைக்கில் வந்தபோது புல்லட் நாகராஜனை போலீஸார் மடக்கிப் பிடித்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
புல்லட் நாகராஜனின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! அவர் இறந்துவிட்டார். 
அவரது தாயார் பெயர், மாலா! 
புல்லட் நாகராஜன் மனைவி சென்னையில் இருப்பதாக தெரிகிறது.
கைதான புல்லட் நாகராஜனை தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?