அமைச்சர் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.

அதிகாரி
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர்பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர்அலுவலகம் செயல்பட்டு வருகிறதுஇங்கு துணை இயக்குனராகசுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்குஅங்கீகாரம் அளித்தல்தொழிற்சாலைகள்நிறுவனங்கள்ரியல் எஸ்டேட்போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்றுவருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்ததுஅதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ்சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் தனிப்படையினர் 
திடீரெனஅலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும்செல்லாத வகையிலும்வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாதவகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இதனால்அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த சோதனையில் சுப்பிரமணியன் உள்பட 11 அலுவலக ஊழியர்களிடம்இருந்து ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார்அதுகுறித்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியது. சுப்பிரமணியன்வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில்வாடகைக்கு 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலகபணிகளை தனியாக மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிசாரணை மேற்கொண்டனர்அந்த வீட்டை சுப்பிரமணியன் தனிஅலுவலகமாக பயன்படுத்தி வந்துள்ளார்அந்த வீட்டில் சிலஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
அந்த அலுவலகத்தில்  படித்த இளைஞர்கள் 37 பேரை வேலைக்குஅமர்த்தி அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம்சம்பளம் கொடுத்துள்ளார்மேலும் ஓய்வு பெற்ற ஒரு அரசுஅதிகாரியையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார்அவருக்கு மாதசம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.

சுப்பிரமணியன் அலுவலக பணிகளை இந்த வீட்டில் முறைகேடாக நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே இது போன்று லஞ்சம் வாங்குவதற்காகவே ஒரு அலுவலகத்தை நடத்தியிருப்பது முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.
எடுபிடி ஊழல் ஆட்சியின் லட்சணம் இது மட்டுமா ,இன்னமும் கொடிகட்டிப்பறக்கலாம்.
அமைச்சர்  எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.
========================================================================================
அமைச்சர்  
குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரிடம் நேரடியாக மோதியிருப்பதாகத் தெரிகிறது.
குட்கா விவகாரம் குறித்த சிபிஐ ரெய்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமைச்சர் விஜயபாஸ்கரையும் டிஜிபியையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திக் குரல் கொடுத்துவருகிறார்கள்.

பணியிலிருக்கும் டிஜிபி வீட்டில் சிபிஐ ரெய்டு செய்தது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத சம்பவம் என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.
அமைச்சர் விஜயபாஸ்கரை எந்த நேரத்திலும் சிபிஐ கைது செய்யப்படலாம் என்றும் ஐ.பி.எஸ். போஸ்டிங் ஆர்டர் குடியரசுத்தலைவரரால், வழங்கப்பட்டிருப்பதால் டிஜிபி டி.கே.இராஜேந்திரனை கைது செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் பேச்சு உலவிக் கொண்டிருக்கிறது.

மின்னம்பலத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி டிஜிபி ராஜினாமா: தடுக்கும் முதல்வர் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் சிபிஐ ரெய்டுக்குப் பிறகு ராஜினாமா செய்வதாக முதல்வரிடம் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் கூறியதாகவும், ஆனால் டிஜிபி ராஜினாமா செய்தால் அடுத்து விஜயபாஸ்கர், அதற்கடுத்து தான் என்று சீட்டுக் கட்டுபோல அரசு சரியும் அபாயம் இருப்பதால் முதல்வர் மறுத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தோம்.
டி.கே.ராஜேந்திரன் கடந்த 2017 ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் தமிழ்நாடு போலீஸ் சட்டக் கூறுகளின்படியும், ஓய்வு நாளில் இருந்து இரு வருட பணி நீட்டிப்பில் அவர் டிஜிபி ஆக்கப்பட்டார். அவர் 2019 ஜூன் 30ம் தேதி வரை - பணியில் இருக்கலாம். ஆனால், முதல்வரை சந்தித்த பின்னர் இதுகுறித்து தனது நண்பர்களிடம் தீவிரமாக ஆலோசித்த டிஜிபி டி.கே. ராஜேந்திரன், “பணி நீட்டிப்பில் இருக்கும் நான் வி.ஆர்.எஸ். (விருப்ப ஓய்வு) கொடுத்துவிட்டால் என்ன?’’ என்று கேட்டுவருகிறாராம்.
இதற்கிடையே அமைச்சர் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், “அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துவிட்டால் பிரச்சனை பாதி தீர்ந்துவிடும். இல்லையென்றால் ரெய்டு தொடரும்” என்று கூறியுள்ளார்கள். ஆனால் முதல்வர் எதுவும் முடிவெடுக்கவில்லையாம். துணை முதல்வர் ஓ.பன்னீஎசெல்வமும் விஜயபாஸ்கர் ராஜினாமாவை விரும்புவதாக ஒரு தகவல் விஜயபாஸ்கருக்குக் கிடைத்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடும் எதிர் எதிரில்தான் உள்ளது தனக்கு எதிராக அமைச்சர்கள் முதல்வரிடம் பேசியதை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பிற்பகல் எடப்பாடி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது முதல்வரிடம், “என்னை ராஜினாமா செய்ய வைக்க சில அமைச்சர்கள் முயலுகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். வெளிப்படையாகவே கேட்கிறேன். உங்கள் சமூகத்தை சேர்ந்த அமைச்சராக இருந்தால் ராஜினாமா செய்யச் சொல்வீர்களா? ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் அனைத்து அமைச்சர்கள் பெயர்களும் உள்ளன. அதற்காக எல்லா அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட முடியுமா?” என்று கேட்டதாகத் தெரிகிறது.
“உச்ச நீதிமன்றத்தில் எனக்குத் தெரிந்த மூத்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நான் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்கிறேன். இதற்கு மேல் என்னை யாராவது வலியுறுத்தினால் நான் வேறு மாதிரியாக செய்ய வேண்டியதிருக்கும்” என்று காரசாரமாகப் பேசிவிட்டு வெளியேறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
குட்கா விவகாரத்தில் அடுத்து என்ன வெடிக்குமோ என்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது அரசியல் களம்!
======================================================================================
ன்று,
செப்டம்பர்-08.
  • இந்திய  கண் தான தினம்
  • உலக எழுத்தறிவு தினம்
  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
======================================================================================
அடுத்து அமைச்சர் 
வேலுமணி அடித்த ஊழல்மணி.
அமைச்சர் வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுவருவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல், சுகாதாரத் துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் ஊழல் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஊழல் சர்ச்சையில் அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக வேலுமணி உள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் உள்ளாட்சித் துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று (செப்டம்பர் 7) வெளியிட்டுள்ளது. 150 நாட்கள் நடத்திய புலன் விசாரணையில் இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளரும் கோவை இளைஞர் அணி செயலாளருமான ராஜன் சந்திரசேகருக்கு சொந்தமான கே.சி.பி. இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்டுக்கு கோவை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் வேலுமணிக்கு ராஜன் சந்திரசேகர் மிகவும் நெருக்கம் என்றும் அதன் காரணமாகவே ஒப்பந்தங்கள் அனைத்தும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.100 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், 2016-17ல் ரூ.142 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள மற்றொரு நிறுவனமான வரதன் இன்ஃப்ராஸ்டரக்சரின் வருவாய் 2014-15ஆம் ஆண்டில் ரூ. 15.17 கோடியாக இருந்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 339.74 சதவிகிதம் அதிகரித்து 66.71 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. மூன்றாவது நிறுவனமான கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வருவாய் 86 லட்சத்தில் (2014-15) இருந்து 28.55 கோடியாக (2016-17) உயர்ந்துள்ளது. அதாவது 3219.76 சதவிகிதம் வருவாய் உயர்ந்துள்ளது.
அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான பி. செந்தில் அண்ட் கோ நிறுவனத்திற்கு ரூ. 80 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சந்திரபிரகாஷ் என்பவரின் தாயார் சுந்தரி கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான நிறுவனம் வரதன். சந்திரபிரகாஷின் மனைவியின் நிறுவனம் கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா. இந்த நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள 4 நிறுவனங்களுமே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் வழங்கியது மூலம் ரூ.125 கோடிவரை அமைச்சர் வேலுமணி லாபமடைந்துள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அன்பழகன் என்பவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். 4 மாதங்கள் கடந்த நிலையில், இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகம் அமைச்சர் வேலுமணியிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர், “இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளேன். எனக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுவது பொய். நான் விருப்பப்பட்டால் மட்டுமே நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்ப முடியும். மு.க.ஸ்டாலினின் பினாமியாக நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று நான் குற்றம்சாட்ட முடியுமா” என்று பதிலளித்துள்ளார்.


பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய குற்றவாளி இந்த நாய் சேகர் அரசுப்பள்ளியில் பேசுமளவுக்கு தகுதியானவனா?
ஒலிபெருக்கியாலே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?