புதன், 20 ஏப்ரல், 2016

பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு?இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படும் போன்களில், பத்து லட்சம் போன்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டன என்று மொபைல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து 'சீட்டா மொபைல்' (Cheetah Mobile) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2015 ஆண்டு கணக்கு மட்டுமே.
பன்னாட்டளவில், 56.7 கோடி மொபைல் போன்களை ஆய்வு செய்து, இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சீட்டா மொபைல் நிறுவனத்தின் பயன் தரும் செயலிகளை ஏறத்தாழ 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சிஸ்கோ நிறுவனத்தின் கணிப்புபடி, இந்தியா, பன்னாட்டளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2014ல், 59.3 கோடி பேர் (ஜனத்தொகையில்ல் 47%)மொபைல் பயனாளர்களாக இருந்தனர். 
எனவே தான், பாதிக்கப்பட்ட போன்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆனால், பயனாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்ட போன்களின் எண்ணிக்கை குறைவுதான். இருப்பினும், ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் பரவி வரும் வைரஸ்களின் எண்ணிக்கையினையும் கவனத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. 
2015 ஆம் ஆண்டில், இதன் எண்ணிக்கை 95 லட்சத்தை எட்டிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
App Vigil என்ற வைரஸ் கண்காணிப்பு மையம் இது குறித்து தெரிவிக்கையில், வைரஸ் அபாயம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். 
பல வைரஸ் புரோகிராம்களின் செயல்பாடுகள் அறியப்படாமலேயே உள்ளன என்று அறிவித்துள்ளது. 
மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதும், கிராமப் புறங்களில், ஸ்மார்ட் போன் பயன்பாடு உயர்ந்து வருவதும், வைரஸ் தாக்கத்திற்கான இன்னொரு காரணம் என்று இந்திய மொபைல் அசோசியேஷன் கருத்து தெரிவித்துள்ளது.
கீழே ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை வைரஸ்கள் எந்த வகைகளில் தாக்குகின்றன என்பது குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.
 Stagefright: 
மல்ட்டி மீடியா பைல்களை நிர்வகித்திட ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் டூல். 90 சதவீத ஆண்ட்ராய்ட் போன்களில், வைரஸ் புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தி கெடுதல்களை விளைவிக்கின்றன.
 Homescreen applications
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன்களில், ஹோம் ஸ்கிரீனில் வைத்து இயக்கப்படும் செயலிகளை, வைரஸ்கள் எளிதில் தாக்குவதாக CM Security Research Lab என்ற ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
 Certi-gate: 
ஆண்ட்ராய்ட் சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கும், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்குமான தொடர்பினை இது ஏற்படுத்துகிறது. இந்த இணைப்பினை வைரஸ் எளிதாகப் பயன்படுத்தி நுழைகிறது.
மேலே சொல்லப்பட்டவை தவிர, இணைய தளங்களை, ஸ்மார்ட் போன்களின் மூலம் பார்க்கையில், போன்களில் வைரஸ் செயலிகள் நுழைவது மிக எளிது என்றும் அறியப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்களை அடுத்து, ஸ்மார்ட் போன்களில் தான் இனி அதிக வைரஸ் தாக்குதல் இருக்கும். எனவே, கம்ப்யூட்டர்களில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பதிந்து பயன்படுத்துவது போல, போன்களிலும் பயன்படுத்த வேண்டும்.
32 இணையத்தளங்கள் முடக்கம்.?
மத்திய அரசு 32 இணைய தளங்கள் இயக்கத்தினை முடக்கி வைத்துள்ளது. 
காரணம் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களைப் பரப்பியதற்காக, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் GitHub, Internet Archive, Pastebin, மற்றும் Vimeo ஆகியவை அடங்கும். 
இவற்றை இந்தியாவில் இயங்கும் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. இவற்றை முடக்குவதற்கான ஆணை சென்ற டிசம்பர் 17ல் வெளியிடப்பட்டது. தகவல் தொடர்பு சட்டம், 2000ன் பிரிவு 69 ஏ அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. 
தடை செய்யப்பட்ட 32 தளங்களின் பெயர்கள் பின்வருமாறு: 
justpaste,it, hastebin.com, codepad.org, pastie.org, pastee.org, paste2.org, slexy.org, paste4btc.com, 0bin.net, heypasteit.com, sourceforge.net/projects/phorkie, atnsoft.com/textpaster, archive.org, hpage.com, ipage.com, webs.com, weebly.com, 000webhost.com, freehosting.com, vimeo.com, dailymotion.com, pastebin.com, gist.github.com, ipaste.eu, thesnippetapp.com, snipt.net, tny.cz (Tinypaste), github.com (gist-it), snipplr.com, termbin.com, snippetsource.net, cryptbin.com.
இவற்றில் GitHub என்ற தளத்தை முடக்கியது பலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. 
ஏனென்றால், இந்தியாவில் சாப்ட்வேர் புரோகிராம் வடிவமைப்பவர்கள், இந்த தளத்தை அதிகம் பயன்படுத்தி, பயன்பெற்று வந்தனர். 
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளைத் தடுப்பதே இந்த ஆணையின் முதன்மை நோக்கம் என அரசு அறிவித்துள்ளது.
Vimeo தள நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தாங்கள் தீவிரவாத கருத்துகளை உடனே நீக்கிவிட்டதாகவும், ஆனாலும், அரசு தடை செய்துவிட்டது என்று கூறியுள்ளது. 
தங்களிடம் இது குறித்து முன் கூட்டியே அறிவிக்கவில்லை என்றும் குறை தெரிவித்துள்ளது.

=====================================================================================
இன்று,
ஏப்ரல்-20.
  • திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  • ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  • இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)

=====================================================================================
கோடையை  சமாளிக்கும் முத்திரைகள்.
வெயில் காலம் தொடங்கி விட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்து கட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.

நீர் முத்திரை
: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின் போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.

பலன்கள் : நாவறட்சி, தொண்டைவறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப் போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்து வருவது நல்லது.

வியான முத்திரை10 நிமிடங் கள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும் படி அமர்ந்தோ செய்ய வேண்டும். 

பலன்கள் : சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, அதீதத்தூக்க உணர்வு, வயிற்றுக் கடுப்பு, தலை சுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக் கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.

லபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்யவேண்டும்.

பலன்கள் : கண் சிவந்து போதல், கண்எரிச்சல், வெப்பமான மூச்சுக் காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.

அபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.

பலன்கள் : அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச் சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும். 

                                                                                                                                         நன்றி:தினகரன்.
====================================================================================