லட்சக் கணக்கானோருக்கு
தீர்ப்பு எப்போது? தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள், மிகச் சரியாகச் சொன்னால் 471 நாள்கள் சிறை வைக்கப்பட்டு (சிறையில் இருந்த காலத்திலேயே இதய அறுவைச் சிகிச்சையெல்லாமும் நடந்தது), சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை எவ்வளவு காலம் நடைபெறும்? எப்போது தீர்ப்பு வரும்? தொடர்ந்து, ஏதாவதொரு தரப்பின் மேல் முறையீடுகள் எல்லாம் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் எப்போது தண்டிக்கப்படுவார்? அல்லது விடுவிக்கப்படுவார்? ஒருவருக்கும் தெரியாது, ஒருவராலும் உறுதியாகக் கூற முடியாது. வழக்கு விசாரணையில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இவ்வாறு நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டுப் பிணையில் வெளிவருவதில் செந்தில் பாலாஜி ஒன்றும் புதியவரல்ல. இவரைப் போல இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதேபோலத்தான், 2 ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கைது செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியைவிட சில நாள்களே குறைவு – 466 நாள்கள் – சிறையில் இருந்துவிட்டுப் பின்னர் பிணையில...